Saturday, March 19, 2005

வெள்ளைப் பூக்கள்

மார்ச் மாதமாகிவிட்டது. குளிர் காலத்தின் கடைசி மாதம். குளிர் இன்னமும் முழுதாய் விட்டபாடில்லை.
சூரியன் மேகங்களுடன் கண்ணாம்பூச்சி விளையாடிக்கொண்டிருக்கும். பகலில் ஒரு சில சமயம் சூரியன் எட்டிப்பார்த்தால் மட்டுமே வெப்பம்.
நாங்கள் வசிக்கும் அட்லாண்டாவில், மேலை அமெரிக்காவைப்போல் வாட்டி எடுக்கும் குளிர் இல்லாவிட்டாலும், குளிரானாலும், வெய்யிலானாலும் சரி மிதமானதகவே இருக்கும்.

மார்ச் மாதத்தின் தொடக்கதிலேயே, காய்ந்து போன மரங்கள் துளிர் விடத்தொடங்கிடும். ஒரு சில வகையான மரங்கள் பூ வைக்கத்துவங்கிவிடும். இவற்றில் ஒன்று, வெள்ளை பூக்களை கொண்டிருக்கும். இம்மரத்தை, நகரெங்கிலும் பார்க்கலாம். இந்த மரத்தில் என்ன விசேஷம் என்றால், இந்த மாததில், மரத்தில் இலைகளே கிடயாது. மரம் முழுதும் வெள்ளை பூக்கள் தான். நிறத்தை சரியாகச்சொல்ல வேண்டுமெனால், வெளிர் பச்சை நிற பூக்கள் இவை. தூரத்தில் இருந்து பார்ப்பதற்க்கு வெள்ளை பூக்கள் போலத்தோன்றும். நவம்பர் மாதத்தில் இதே மரம் பழுப்பு நிற இலைகளை கொண்டு அழகாகக் காட்சி அளித்தது. இலையுதிர் காலத்திற்குப்பின், அனைத்து இலைகளையும் இழந்து மொட்டையாக மூன்று மாதங்கள்.
இப்போதும், இலைகளில்லை, அனால், பூக்களுண்டு.

இயற்கையின் சீரான மாற்றங்களில்தான் எத்தனை வினோதம்!


Vellai pookal Posted by Hello

4 comments:

  1. தென் இந்தியாவில் இருந்த வரை தெரிந்தது மார்கழிக் குளிர், நல்ல கோடை, மழைக்காலம், எப்பொழுதாவது வசந்த காலம். ஆனால் அமெரிக்காவில் அனைத்து பருவ காலங்களையும் காண முடியும். பருவ காலங்கள் மாறுவதை பார்ப்பதே ஒரு அழகு தான். இப்பொழுதான் என்னுடைய புகைப் பட நண்பனின் ஞாபகம் வருகிறது. அவன் இங்கிருந்த போது ஒரே மரத்தினை எல்லா பருவ காலங்களிலும் எடுத்து வைத்திருந்தான். அதனைப் பார்க்கும் போது இயற்கையை வியக்காமலும் இருக்க முடியாது. மொட்டையான மரம் கொடுக்கும் ஞாபகமும், மஞ்சள் சிவப்பு கலந்த வசந்த காலம் கொடுக்கும் ஞாபகமும் வேறு வேறானதாக இருக்கும். அந்த புகைப் படங்களை இரசித்து பார்த்தது இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது.

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது சரிதான், கங்கா.

    ReplyDelete
  3. தற்போதைய மாற்றம்:
    இந்த மரத்தில் இருந்த வேள்ளைப் பூக்கள் எல்லாம் கொட்டி விட்டது.
    அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாக இலைகளும் முளைத்துவிட்டன.
    வெள்ளைப்பூக்கள் கொட்டி தரையெல்லாம் வெள்ளை, ஊரெங்கும், பட்டாசு வெடித்ததுபோல்.

    ReplyDelete
  4. வெள்ளைப்பூக்கள் கொட்டி தரையெல்லாம் வெள்ளை, ஊரெங்கும், பட்டாசு வெடித்ததுபோல்.//

    அழகான காட்சி.

    ReplyDelete