Wednesday, March 30, 2005

Spring, Summer, Fall, Winter & Spring

தங்கமணியின் சிபாரிசுக்குப்பின் இந்த கொரியப்படத்தைப் பார்த்தேன். (ஆங்கில subtitles உடன்)

மீண்டும் அவருடைய முகவரியைப்படித்தேன். அருமை. படத்தப்பார்த்தபோது விளங்காத சில விஷயங்களும் பின்னர் விளங்கின.
உதாரணத்திற்கு,
//
படம் முழுவது தொடர்ந்து கோர்க்கப்பட்ட குறியீடுகளாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.
அந்த விகாரையில் இருக்கும் ஒரே அறையில் குருவும் சீடனும் படுப்பதற்கு ஒரு பக்கத்தில் இடமும், விருந்தினர்கள் படுப்பதற்கு மறு பக்கத்தில் இடமும் இருக்கும். இந்த இடங்களுக்கு செல்ல ஒரு நிலையும், கதவும் உண்டு;
ஆனால் அதைத்தவிர பக்கத்தடுப்புகள் எதுவுமிருக்காது. (அதாவது அந்த கதவின் வழியன்றியும் அந்த இடத்தையடையலாம்) //
இதற்கென்ன பொருள்?
எனக்குத்தோன்றியது:
பாவமென்னும் கல்லரைக்கு பலவழி, தர்மதேவன் கோவிலுக்கு ஒருவழி என்பதே. ஒரு சமயம் இளம்துறவி இரவில் எழுந்து செல்லும்போது, கதவு இடிக்க, முதிய துறவியை தாண்டிச்செல்வதுபோல் காட்டியிருப்பது இந்தக்குறியீட்டினால் ஆகத்தான் இருக்க வேண்டும்.

படத்தில் குரு எழுதச்சொல்லும் புத்த சூத்திரம் என்ன என்று தேடினேன். மஹாயானத்தைச்சேர்ந்த ப்ரஜ்னபரமிதா என்பவரின் சூத்திரம்:
http://www.wildmind.org/meditation/mantra/gategate.html

சீடன் பெரியவனாக வளர்ந்தபின் குரு முதலில் சேவலையும், பின்னர் ஒரு பூனையையும் வளர்க்கிறார். இவற்றின் பொருள் தெரியவில்லை. இரண்டுமுறை சீடன் பிரியும்போதும், அவன் இந்த வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு செல்கிறான். இதற்கு எதோ பொருள் இருக்க வேண்டும்.

மேலும் படத்தில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண், விஹாரைக்குள் குருவினைக்காண வருவாள். அவள் தன் குழந்தையை யாருக்கும் தெரியாமல் அங்கேயே விட்டுவிட்டு வெளியேரும்போது, கால் தடுக்கி கீழே விழுந்து இறந்து விடுவாள். அவள் சடலத்தை பனிக்குழிக்குள் இருந்து மீட்டபின், குழிக்குள் இருந்து, புத்தர் முகம் போலத்தெரியும். இதன் பின்னணியும் தெரியவில்லை. ஏதாவது ஜென் கதையின் பின்னோட்டமாக இருக்கலாம்.

படத்தைப்பார்த்தேன் என்று செல்லுவதைவிட, படம் பார்ப்பதில் ஈடுபட்டேன் என்று சொல்லும்படி செய்து விட்டார்கள்.
படத்தை அறிமுகப்படுத்திய தங்கமணிக்கும் நன்றி.

6 comments:

  1. Anonymous8:00 PM

    படத்தைப்பார்த்தேன் என்று செல்லுவதைவிட, படம் பார்ப்பதில் ஈடுபட்டேன் என்று சொல்லும்படி செய்து விட்டார்கள்.

    ஏன் ரொம்ப நொந்து போய்டீங்களா? :)

    ReplyDelete
  2. :-)
    அப்படியில்லை பாலாஜி-பாரி.
    படம் பார்ப்பது ஏதோ background process மாதிரி இல்லாமல் சிரத்தையாக படம் பார்ப்பதில் ஈடுபட்டேன் என சொல்ல வந்தேன்!.
    அப்படி, ஒரு முழு ஈடுபாட்டைத்தரும் அளவிற்கு ஈர்த்திருந்தது!

    ReplyDelete
  3. அந்தக் கதவு விசயம் pathless path மாதிரி நான் நினைத்தேன்.

    புத்த சூத்திரத்துக்கு நன்றி!

    ReplyDelete
  4. Anonymous12:39 PM

    என்ன ஜீவா என்னைக் கண்டு கொள்ளவே மாட்டீர்களா? நான் தான் இத்திரைப்படம் பற்றி முதலி;ல் என்னுடைய தளத்தில் எழுதினேன். பின்னர் தான் தங்கமணி எழுதினார். தங்கமணி விமர்சனம் நன்றாகவும் விளக்கமாகவும் அமைந்திருந்தது. ஒத்துக் கொள்கின்றேன் என்றாலும் என் விமர்சனத்தைப் பார்த்த பின் இத்திரைப்படத்தைப் பார்த்தவர்களும் இருக்கின்றார்கள்.
    http://karupu.blogspot.com/2005/02/spring-summer-fall-winterand-spring.html

    ReplyDelete
  5. Anonymous12:43 PM

    Thats me Karupy

    ReplyDelete
  6. கறுப்பி,
    தங்கள் வருகைக்கு நன்றி.
    உங்கள் விமர்சனம் படித்தேன். நன்றாக இருந்தது.
    -ஜீவா

    ReplyDelete