Wednesday, March 23, 2005

யெல்லோஸ்டோன் - பகுதி 2

அமெரிக்காவின் இயற்கை வளங்களில் முக்கியமானதான யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவைப்பற்றிய ஆங்கிலக்கட்டுரையை தமிழில் மொழி பெயர்க்கிறேன். முதலாம் பகுதியின் சுட்டி இங்கே.

இந்த அமெரிக்க நாட்டிலேயே இரண்டு வகை வெவ்வேறு பருவங்களுண்டு. எளிதில் உடையக்கூடிய குளிர்காலம் ஒரு உலகம். எதற்கும் கவலைப்படாத கோடைக்காலம் இன்னோரு உலகம். இந்த இரண்டு உலகங்களுக்கு இடையே பாலமாக இருப்பது, என்றும் மெலிந்து கொண்டிருக்கும் இடமாற்ற வழிகள் - பறவைகளும், விலங்குகளும் வான் வழியாகவும், நிலம் வழியாகவும் கோடையில் இந்த தேசிய பூங்காவிற்குள் நுழைந்து, குளிர்காலமென்னும் அடுத்த உலகை அடையும். ஜேக்ஸனைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் ப்ரான்ஸ் கேமசைந் சொல்கிறார்: "யெல்லோஸ்டோன் & கிராண்ட் டெட்டானின் பல்வேறு வகை உயிரினங்கள் எங்கே போய்ச்சேருகின்றன என்று பார்த்தால் - ஸ்வெய்னின் கழுகளும் சிட்டுக்குருவிகளும் மத்திய மற்றும் தென் அமெரிக்கா வரை சென்றடையும்" என்று.

நீங்கள் நினைக்கக்கூடும் - இந்த இரண்டு பூங்காக்களின் ஈடுபாடு தேசிய எல்லைகளை கடக்கிறதா என்று. நான் சொல்வேன் - இந்த பூங்காக்களின் நிஜ எல்லை மட்டுமே எல்லையாக இருந்தால், இவ்வளவு வியக்கத்தக்க பூங்கா இருந்திடினும், இங்கு வாழும் உயிரினங்களால் தாக்குப்பிடிக்க இயலாது. இயற்கையின் எதிர்பாரா சீண்டுதல்லால்லோ அல்லது மனிதனின் அஜாக்கிரதையோ, இந்த இடத்தில் வாழும் உயிரினங்களை அகற்றிவிட முடியும். அப்படியே இவை அனைத்தும் இங்கு இல்லாமல் போனால், கடினமான உயிரற்ற பொருட்களின் காட்சி (செத்த காலேஜ்?) - இந்த அழகான, இளமையான இடத்தில் ஓர் கொடூரமெனத் தோன்றும். இதை நன்குணர்ந்த நம் முன்னோர்கள், இந்த எழில் கொஞ்சும் வனத்தை உலகின் முதல் தேசிய பூங்காவாக உருவாக்கும் முயர்ச்சியில், 1872-லேயே அமெரிக்க காங்கிரஸில் சட்டம் கொணர வழி வகுத்தார்கள் - "இதன் எழிலை அனுபவிக்கவும், அதனால் வளமடையவும்" என்பதே அவர்களின் தாரக மந்திரம். இன்றய கிராண்ட் டெட்டான் தேசிய பூங்கா 1950-இல் 310,000 ஏக்கர் கொண்ட காட்டு நிலமாக உருவாக்கப்பட்டது. ராக்கி மலைத்தொடர்களின் முதுகுத்தண்டுவடத்தில் தொடங்கி, 'ஜாக்ஸன் ஹோல்' சமவெளிவரை பரவியிருந்தது.

இந்த இரண்டு பூங்காக்களையும் சேர்த்தால் (இவை இரண்டையும் இணைப்பது, ஜான் டி. ராக்கெபெல்லர் ஜூ. மெமோரியல் பார்க்வே) 2.5 மில்லியன் ஏக்ராவிற்கும் மேல் ஆக, அவற்றின் கடைசி ஏக்ராவரை அழகிற்கு பஞ்சமேதும் கிடையாது.

அமெரிக்க வரை படத்தில், ஒரு விரல் வைத்தாலே மறைந்துபோகும் இடத்தில், காடுகளும், மலைத்தொடர்களும், வெந்நீர் ஊற்றுகளும், மண் பானைகளும், நதிநீர் சமவெளிகளும் கலந்தவாறு காட்சியளிக்கின்றன. அமெரிக்காவின் மத்தியமேற்கின் தலை சுற்ற வைக்கும் தட்டை நிலங்களை ஈடுகட்டுவதுபோல இந்த பசுமை நிறைந்த சமவெளிகள் இனிமை தருகின்றன.

இப்படியொரு நிலப்பரப்பு ஏற்பட்ட காரணமென்ன தெரியுமா?. ஏறக்குறைய 13 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் (அம்மாடி!), அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களின் காரணத்தால் ஏற்பட்ட நிலநகர்வுகளால், தற்போது டெட்டான் மலைத்தொடர்களும் சமவெளிகளும் அருகருகே அமைந்தன. 12,000 வருடங்களுக்குமுன் நகரும் பனிமலைகளால் செதுக்கப்பட்டு நீள்செங்குன்றுகளாக கிராண்ட் டெட்டானில் தோன்றின. யெல்லோஸ்டோனின் மத்திய சமவெளியோ, வெகு முன்பாகவே, ஏறக்குறைய 600,000 ண்டுகளுக்கு முன் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்த எரிமலை வெடிப்புகளின் விளைவாக பிறந்ததாகும்.

இது மிக அழகான இடம். ஆனால் அதே சமயம் இது அமைதியான இடமென்று யாரும் குறை கூற முடியாது. இங்கே நிலம் பொறுமையின் சின்னம் இல்லை. அது யெல்லோஸ்டோனின் வென்னீர் ஊற்றுகளில் வெளிவறும் சாம்பல் புகைகளில் மட்டுமல்ல, புல்வெளிகளின் வீறல்களில் உற்றுப்பார்த்தாலும் பூமி விம்மிக்கொண்டுதான் இருப்பது தெரியும். எரிமலை நிகழ்வுகளால் ஏற்பட்ட மண்ணானது, யெல்லோஸ்டோனின் உயரமான இடங்களிலும், கிராண்ட் டெட்டானின் சரிவுகளிலும் வெளிப்படையாகவே உள்ளது. இங்கு 'வளரும் பருவம்' என்று சொல்லப்போனால், ஆல்பைன் மரக்காடுகளில் இரண்டு மாதம்முதல், பள்ளத்தக்குகளில் மூன்று முதல் நான்கு மாதம் வரைதான். செப்டம்பர் மாதம் வந்தால் போதும். காற்றுக்கே வேலி வந்துவிடும். கசப்பான காற்று அமைதியை நிரந்தரமாக தந்துவிடும். இருந்தும், வனவிலங்குகள் மற்ற இடங்களில் எல்லாம் மனித நடமாட்டம் இருப்பதால், இந்த இடத்தை தங்கள் வீடாக கொள்ள வேண்டியுள்ளது. இருந்தும், வனவிலங்குகள்தான் இந்த இடத்திற்கு உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது. புல்வெளிகளில் விலங்குகள் மேய்ந்தும், பறவைகள் கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சு பொறித்தும், மாமிச உண்ணிகள் மற்ற விலங்குகளை வேட்டையாடியும், புல்வெளிகளுக்கும், நீரோடைகளுக்கும், இவை தினம்தினம் ஒவ்வோர் வடிவத்தை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. ஏதாவது ஒரு விலங்கின் பழக்கத்தை லேசாக பிடித்து நிறுத்தினாலும், மொத்த சூழ்நிலை மண்டலமும் இடிந்து விழுவதுபோலாகி விடும். ஜான் முயிர் சொல்வதுபோல், இந்த உலகத்தில் ஒவ்வொன்றும் மற்றொன்றோடு கொண்ட தொடர்பினால், எந்த ஒரு தொடர்பினை அறுத்தாலும், மற்ற எல்லாம் உடைந்துபோகும்.

போவோமா ஊர்கோலம்? - பைசன் எருதுகள்


Bison Posted by Hello

செந்நரி


RedFox Posted by Hello

(அடுத்த பகுதியில் தொடர்கிறேன்...)

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails