Sunday, August 19, 2007

நிழற்படமா, ஒளிப் படமா?ஒளிச்சேர்க்கையில்

வளர்ந்த இலைகள்

இப்போது இங்கே

ஒளியால் மிளிர

ஒளி பிடிப்பானில்

ஒரு நிமிடத்திற்குள்

'பிடித்ததை' பிடித்ததில்

நிழற்படமா, ஒளிப் படமா?நிழலும் ஒளியும்

வெவ்வேறானாலும்

ஒன்றோடு ஒன்று

தொடர்பானதல்லவோ?

ஒளியில்லாமல் நிழலேது?வெற்றியும் தோல்வியும்

உயர்வும் தாழ்வும்

மேன்மையும் சிறுமையும் கூட

நிழலும் ஒளியும் போலத்தான் -

இதை உணராத மனிதர்பால்தான்

எத்தனை மயக்கங்கள்?

Tuesday, August 14, 2007

ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே!

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று!ஆம், ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!

இந்த இனிய சுதந்திர தினத்தில் பாரதியின் பாடல்களில் மலர்ந்த -


ஒரு இனிய இசை நிகழ்ச்சி - மலரும் நினைவுகளாக மலரட்டும்.மா-நிலத்தில் நம் பெருமை உயரட்டும்!MahakaviBharathiSp...


விடுதலை வேள்வியில் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலியாக

பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்!அனைவருக்கும் இனிய விடுதலை நாள் வாழ்த்துக்கள்!

வாஷிங்டன் கவர்னரிடம் இருந்து சுதந்திர தின வாழ்த்துக்கள்!

வாஷிங்டன் மாநில கவர்னர் கிரிஸ்டின் ஓ. கிகோரி - இடம் இருந்து இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்!


மேலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 'இந்தியா தினம்' என அறிவிக்கப்பட்டுள்ளது!

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்.)

Monday, August 13, 2007

கச்சி வரதா, கருணைபொழிவாய்!

பாலாழியில் படுத்துறங்கும் பரமா, பாமர தயாளா,


அர்சவதாரம் போதும், அரச்சனை செய்யும் எனக்கருள்வாய்!


முக்குறும்பு நீங்கிட, முக்தி பெற்றிட அருள்வாய்!


என் பிணிகள் நீக்கிடும் குருவாய் நீ வருவாய்!


கடல் நிற வண்ணா, கொள்வாய் என்மேல் கடலளவு கருணை!


கார்மேக வண்ணா, பொழிவாய் என்மேல் மழைபோல் அருளை!


முக்தி தரும் நகர்களில் முக்கியமாய் கச்சிதனில் அருளும் வரதா,


விசிறி ஏந்தி நிற்கும் கச்சி நம்பி போற்றும் அத்திகிரி வரதா,


வாராதோ உனக்கென்மேல் கருணை,


அடைந்தேன் உன் தாள் தனில் சரணே!

Friday, August 10, 2007

அணுசக்தி ஒப்பந்தம் - பின்னால் யாரோ யார் யாரோ?

முழு வீச்சாக இந்தியாவும் அமெரிக்காவும் 123 ஒப்பந்தம் எனும் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டாலும், இரு நாடுகளும் ஒன்றுக் கொன்று தங்கள் தரப்பு நியாயங்களை முன் நிறுத்தி தங்கள் நலனில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதில் கவனம் செலுத்தியதை பார்க்க முடிந்தது. இப்படிப்பட்ட முக்கியமான ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது!இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாக இரு தரப்பிலும் இதற்கான முக்கிய பணியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று பார்ப்போமா?

இந்திய தரப்பு

எம்.கே.நாராயணன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இந்த ஒப்பந்தத்தில் முக்கியமான முடிவுகளை எடுத்தவர். வாஷிங்டனில் நடந்த நாரயணன்-ஹேட்லி சந்திப்பில் இந்திய தரப்பின் கவலைகளை அமெரிக்கா செவி கொடுக்கத் தொடங்கியது என்பதால், அதற்கான பெருமை எம்.கே.நாராயணனைச் சேரும்!

ரோனென் சென், அமெரிக்காவுக்கான இந்திய தூதர்

துதராக அனைத்து சந்திப்புகளையும் ஒருங்கிணைக்கும் முக்கியமான பொறுப்பை ஏற்றவர்.

ஷ்யாம் சரண், பிரதமரின் சிறப்பு தூதர்
கடைசி கட்டம் வரை, முக்கிய முடிவுகளுக்கு ஆலோசகராக செயல்பட்டார். NSG யின் உறுப்பினர் நாடுகளை சந்தித்து அவர்களுக்கு இந்திய தரப்பினை விளக்கியவர்.

அனில் ககோட்கர், அணுசக்தித் துறை தலைவர்

இவருடைய சம்மதம் இல்லாமல் எந்த அணுசக்தி ஒப்பந்தமும் நிறைவேறாது என்ற நிலையில், எப்போதுமே, இந்த ஒப்பந்தத்தின் முன்னேற்றத்தில் ஒரு சந்தேகக் கண்ணுடனே செயல்பட்டார். இதனாலேயே பல சந்தேகங்கள் எழுத்து பூர்வமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.

சிவ சங்கர் மேனன், வெளியுறவுத் துறை செயலர்

கடைசி நிலையில்தான் இவர் சேர்ந்து கொண்டார். அணுசக்தித் துறையில் பணிபுரிந்தவர் என்பதால், விஞ்ஞானிகளுக்கும் ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்படக் காரணமாய் இருந்தது. அணுசக்தி துறைத்தலைவர் அனில் ககோட்கருக்கு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் விரிவாக விளக்கினார்.

எஸ். ஜெய்சங்கர், தற்போது சிங்கபூருக்கான இந்திய தூதர்
ஒப்பந்தத்தின் எழுத்து பூர்வ வடிவத்திற்கு இவரும், இவருடைய அணியுமே பொறுப்பு. சின்ன சின்ன சந்தேகங்கள், சின்ன சின்ன நெருடல்களானாலும், அவற்றையெல்லாம் நேராக்கியவர். இவருடைய நேர்மையான அணுகுமுறைகள் அமெரிக்க தரப்பில் இவருக்கு பெரியதொரு நன்மதிப்பை ஏற்படுத்தியது.


அமெரிக்க தரப்பு

காண்டலீசா ரைஸ், Secretary of State

ரைஸ் அதிகமாக நேரடியான ஈடுபாட்டில் இறங்காவிட்டாலும், தனக்கு கீழுள்ளவர்கள் சரியாக பணிகளில் ஈடுபடுத்தி, ஒப்பந்தம் நிறைவேறும்படி பார்த்துக்கொண்டார்.

ஸ்டீபன் ஹேட்லீ, NSA
முக்கிய சந்திப்புகளுக்கு தலைமை தாங்கிய இவர், இந்தியாவின் கவலைகளை எடுத்துக்கொண்டு State Department க்கு எடுத்துச் செல்லும் கடினமான பணியை மேற்கொண்டார்.

நிக்கலோஸ் பர்ன்ஸ், Political Affairs, Department of State
ஒப்பந்தம் நிறைவேருவதில் தொய்வு ஏதும் ஏற்படாமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டு அமெரிக்க தரப்பினையும் முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார்.

நிச்சர்ட் ஸ்டார்ட்போர்ட், அணுசக்தித் துறை, Department of State
இந்திய தரப்பில் இருந்து எந்தக் கேள்வி வந்தாலும், அதற்கான பதிலுடன் தயாராக இருந்தார். ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நடப்பும் பயனுள்ளதாக நிறைவேரும் படி பார்த்துக் கொண்டார்.

டேவிட் முல்போர்ட், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்
தூதரக இரண்டு தரப்புக்கும் இடையே பாலமாக திகழ்ந்த இவர், தேவைப்பட்ட நேரத்தில் புஷ் மற்றும் மன்மோகன் சிங் இருவரையும் தொலைபேசியில் பேச வைத்து, ஒப்பந்தத்திற்கான அரசியல் தலையீடுகளை பார்த்துக் கொண்டார்.

ஆஷ்லி டெல்ஸ், Carnegie Endowment of International Peace
எஸ்.ஜெய்சங்கர் இவருடைய நிறுவனத்திற்கு வந்து, இந்தியாவின் தரப்பை விரிவுரையாய் கொடுத்த பின், அதன் சாரத்தை State Department க்கு எடுத்துச் சொன்னவர்.

ஜியோபெரி பயட், முன்னாள் அமெரிக்க தூதரக பணியாளர்
ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு இரண்டு நாள் முன் வரை, இந்திய தூதரகத்தில் செயல்பட்ட இவர், இந்திய தரப்பை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்வதில் பெரும் பங்கு வகித்தவர்.

Thursday, August 09, 2007

பொற்காலமும் போறாத காலமும்

பொற்காலம் என்று ஆளை அடுக்கி வைத்து அடுக்கடுக்காய் செல்லி விட்டால் போதுமா? அழுத்திச் சொன்னாலும், அரையாத மாவு, உதவாது தோசைக்கு!

உருப்படியாய் ஒரு தொழிற்சாலையை கொண்டு வருவதற்குள் எதிர்கட்சி கேள்வி கேட்டால், மக்களிடமே கருத்து கேட்பதென்ன? அப்புறம் எதற்கு அரசு?

மேற்கு வங்கத்தையும், கேரளாவையும் எதற்கிங்கு எடுத்துக்காட்ட? சொந்த சரக்கு ஏதும் இல்லையா?

மன்னராட்சி படங்களுக்கு திரைக்கதை எழுதிய பழைய ஞாபகம் வந்து விட்டதா? அடுத்த வாரிசு அமைக்க?

அத்தனை வழக்குகள் இட்டாலும் அதெல்லாம் வெறும் கண்துடைப்புதானா? ஆட்சியில் இருந்தாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாதா?

பொற்காலமா, போறாத காலமா?

Wednesday, August 08, 2007

கணக்கு...பிணக்கு?

நம்மில் கணக்கு - பிணக்கு என்பாருக்கு
இதோ இன்னும் கொஞ்சம் ஆமணக்கு!இந்த காட்சிப் படத்தில் அதன் விரிவுரையாளர், சதாரண பெருக்கல் கணக்கையும், வகுத்தல் கணக்கையும் எப்படி எல்லாம் வேறு வகையான முறைகளில் சமீபத்திய அமெரிக்க கணித பாட புத்தகங்களில் கற்றுத் தருகிறார்கள் என்பதை விளக்குகிறார். இந்த முறைகளை விடுத்து எல்லோருக்கும் தெரிந்த எளிய முறையை பின்பற்ற வேண்டும் என்றும் கோருகிறார்!

மேலும் சிங்கப்பூர் கணித புத்தகங்கள் எளிமையாகவும், மலிவாகவும் இருப்பதால், அவற்றைக் கூட மாற்றக பயன்படுத்தலாம் என்கிறார்!

Monday, August 06, 2007

அஷ்டபதி - ஓங்கி வளர் முராரி புகழ்!

ஓங்கி வளர் முராரி புகழ்!
குஞ்ச வனம் திரிபவன் எழில்!

அசுரன் மதுவை வதம் செய்த மாதவா,
கருணைக் கடலே, கேசவா
உனக்கென் வணக்கங்கள்!

ரச நடனம் ரசிக்கும் இறையே,
லீலைகள் உன்னிடம்,
மாயைகள் என்னிடம்...

கோபியர் கொஞ்சும் ரமணா,
சாந்த சொரூபியே மதுசூதனா,
உன்னைக்காண அடியவர்
ஒருசில அடிகள் வைத்தாலும்
கருணையுடன் தரிசனம் தருவாயே!

என்றும் இளம் வதனம் கொண்டவா,
சந்திர மலர் முகம் கொண்ட
கோபியர் இதயம் கவர் நாதா,
கோவர்தன மலை தூக்கிய இறைவா,
பிருந்தாவனம் எங்கும் உன் குழலிசை -
எங்கெங்கும் எம் பரம்பொருளின் நிறை.

ராதையின் நாயகன், கம்சனையோ வதைத்தவன்,
நின் பாதத்தில் சரணடைகிறேன்,
தஞ்சம் கிடைக்காதோ அந்த பாத
விரல் நகக் கண்களில்?
உன் பட்டாடை போல்
என்னை சுத்தம் செய்யும் ஜனார்தனா,
உன் பாதமலர் சரணம்.

மேலெழுதிய வரிகளின் மூலம் ஜெயதேவரின் 'அஷ்டபதி' யில் ஒன்றாகும்.
சமஸ்கிருதத்தில் அவருடைய கீத கோவிந்தம், கோகுலக் கண்ணன் கோபால கிருஷ்ணன் புகழ் பாடும் உன்னத காவியம்.

'ஏஹி முராரே குஞ்ச பிஹாரே' என்று தொடங்கும் இந்த பாடலை பாம்பே ஜெயஸ்ரீயின் மனம் உருக்கும் குரலில் கேட்டு மகிழலாம் இங்கே.

B._Jayasree_-_Saal...


முன்பே பார்த்த அஷ்டபதி - 'சந்தன சர்சித நீல களேபர...'

Saturday, August 04, 2007

ஜாவா நோட்ஸ்

ஜாவா கற்பவர் மற்றும் பயனர்களுக்காக - இந்த நோட்ஸ். ஜாவா என்பது விலாசமான - மிக அதிக பரப்பளவுப் பகுதி. ஜாவாவில் நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வோ, அல்லது தொலைபேசித் தேர்வோ எழுதுபவர் - ஜாவாவின் அனைத்துப் பகுதிகளையும் ஒருமுறையாவது புரட்டிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. அவர்களின் பயனுக்காக நான் சேமித்து வைத்த ஜாவா நோட்ஸை இங்கு தருகிறேன்.
இது ஆங்காங்கே, அந்தந்த தலைப்புகளுக்கான அம்புக்குறியாகவே பயன்படுத்தவே. அந்த அம்புக்குறிகளைக் கொண்டு, நீங்கள் ஏற்கனேவே கற்றவற்றையோ அல்லது அனுபவத்தில் கண்டவற்றையோ நினைவு படுத்திக் கொள்ளவும்!. அல்லது புதிதான பகுதியாகவோ இருப்பின், ஆர்வம் இருப்பின், கூகிளில் தேடிப்பார்க்கவும். அல்லது மறுமொழியில் விசாரிக்கவும். இயன்றவரை விளக்குகிறேன்.

J2EE Tier ---> Web Tier, Business Tier

J2EE Components ---> Application client, Applets (Client)
Sevlet, JSP (Web)
EJB (Business)

J2EE Container services
• The J2EE security model
• The J2EE transaction model
• JNDI lookup to access naming and directory services.
• The J2EE remote connectivity model.


Web Modules
----------------
WEB-INF/ under the document root contains:
web.xml -> the web application deployment descriptor
Tag library descriptor files
classes
tas
libs

JAXP : Java API for XML Processing:
--------------------------------------------
provides SAX and DOM API,
Also included are XSLT (Extensible Stylesheet Language Transformation) API for transforming to xml or other file formats.


Java Design Patterns :
--> Creational, Structural or Behavioral
-->Class or Object


Common Design Patterns
--------------------------
Observer Pattern
Decorator Pattern : Composition
Factory Pattern
Singleton Pattern
Command Pattern
Facade Pattern
Template Method Pattern
Iterator and Composite Pattern
State Pattern
Proxy Pattern


Model View Controller is a compound pattern consisting of Observer, Strategy and Composite patterns.


Why would you prefer code reuse via composition over inheritance? Both the approaches make use of polymorphism and gives code reuse (in different ways) to achieve the same results but:


Answer:The advantage of class inheritance is that it is done statically at compile-time and is easy to use. The disadvantage of class inheritance is that because it is static, implementation inherited from a parent class cannot be changed at run-time. In object composition, functionality is acquired dynamically at run-time by objects collecting references to other
objects. The advantage of this approach is that implementations can be replaced at run-time. This is possible because objects are accessed only through their interfaces, so one object can be replaced with another just as long as they have the same type.

Another problem with class inheritance is that the subclass becomes dependent on the parent class implementation. This makes it harder to reuse the subclass, especially if part of the inherited implementation is no longer desirable and hence can break encapsulation. Also a change to a superclass can not only ripple down the inheritance hierarchy to subclasses, but can also ripple out to code that uses just the subclasses making the design fragile by tightly couplinthe subclasses with the super class. But it is easier to change the interface/implementation of the composed class.


Encapsulation – refers to keeping all the related members (variables and methods) together in an object. Specifying member variables as private can hide the variables and methods. Objects should hide their inner workings from the outside view. Good encapsulation improves code modularity by preventing objects interacting with each other in an unexpected way, which in turn makes future development and refactoring efforts easy.

Exception throwing:
------------------------
Throw an exception early and catch an exception late but do not sweep an exception under the carpet by catching it and not doing anything with it. This will hide problems and it will be hard to debug and fix.

இரட்டை ரோஜாபச்சை வெளிதனில்
பகலவன் அருளினில்
அச்சம் இல்லாமல்
நித்தம் மலரும்
ரோஜா மலரும்

என்னைப் பார்த்து சொன்னது
அருளின்றி மலராது அகம்
அதனாலே நீசெய் தவம்
உன் அறிவே சிவம்
அதை நீநாடு தினம், என்று!

ஆன்றோர் வாக்கின் துணையில்
அம்புலி புனை பெருமான்
என்னுள்ளே என்னுள்ளே
எங்கிருக்கிறான் எனத்தேடி
எங்கும் இருக்கிறான்
என அறியும் நாள் எந்நாளோ?

Friday, August 03, 2007

நல்ல API எழுதுவது எப்படி?

நல்ல ப்ரோக்ராம் எழுதுவது எப்படி என்பதை ஒரு விளக்கப்படமாக கூகிள் விடியோவில் கேட்க/பார்க்க கிடைக்கிறது.

கேட்டுப் பயனடையுங்கள்!

ப்ரோக்ராம் எழுதுவது எப்படி பல நிலைகளைக் கடந்து இப்போது இன்றைய நிலையை அடைந்திருக்கிறது என்பதை இந்த காட்சிப் படத்தில் உணரலாம்!

ப்ரோக்ராம் என்பது ஒரு Service என்பதாக பார்க்கப்படும் நிலையில் அதன் பயன்பாட்டார்களுக்கானதாக, எளிமையாக எழுதப் பட வேண்டிய அவசியம் இன்றைய நிலையில் மிகுதியாக இருக்கிறது!

இதோ, நல்ல API எழுதுவது எப்படி?

Thursday, August 02, 2007

விப்ரோ அட்லாண்டாவுக்கு வாராங்களாமே?

இரண்டு பேரோ, அல்லது ஒரு குழுவோ ஒரு தலைப்பைப் பற்றி விவாதிக்கும் போது, அதில் கலந்து கொள்ளாமல், எட்ட நின்று வேடிக்கைப் பார்ப்பதிலும் ஒரு தனி சுவை இருக்கத்தான் செய்கிறது. அதிலும் அவர்களுக்குள் முட்டிக்கொண்டால், கேட்கவே வேண்டாம். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு அல்லவா கொண்டாட்டம்!, நாமும் பல சமயம், பின்னூட்டங்களை (பதிவைக் காட்டிலும்) மிக சுவாரஸ்யமாக படிக்கிறோமோ தவிர, நாமாக முன் வந்து பின்னூட்டம் இடுவது எப்போதாவதுதான். ஏதோமொக்கைப் பதிவுகளாக இருக்கும் பட்சத்தில், கொஞ்சம் தாராளம்! :-)

தலைப்பு என்னவோ இருக்கேன்னு பார்க்கறீங்களா, மேட்டருக்கு வரேன்!

இன்றைக்கு அட்லாண்டா ஜாவா பயனர் மின்மடல் குழுமத்தில் ஒரு புது மடல் வந்திருந்தது - "விப்ரோ அட்லாண்டாவுக்கு வாராங்க" என்ற தலைப்பில்!. ப்ரெயின் என்ற பெயர் கொண்ட அவர், இந்தியாவில் இருந்து, விப்ரோ ஜாவா ப்ரோக்ராமர்களை இங்கே கொண்டு வந்தால், தங்கள் வேலைக்கு உலை என்ற ரீதியில் எழுதி, தாங்கள் மகாண Congress உறுப்பினருக்கு மின்மடலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும், மற்ற உறுப்பினர்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என்றும் வலியுருத்தி இருந்தார்.

அவரது மடலுக்கு முதல் பதில் - எதிர்பாகவே வந்தது. (இதுவே நம்ம ஊராக இருந்தால் அடுத்த நிமிடமே ஆயிரம் பேர் கும்மி அடிச்சி இருப்பாங்க!)
இருக்கட்டும், டீன் என்ற பெயர் கொண்ட அவரோ, "ப்ரெயின், உலகச் சந்தையில் உங்களால் போட்டியிட முடியாவிட்டால் ஒதுங்கி வேறு வேலை பார்க்கலாமே" என்று சொல்லி விட்டு, "எதனால் எதிர்க்க வேண்டும் என்று ஒரு காரணம் சொல்லாமே" என்று கேட்டிருந்தார்.

ப்ரெயின் தன் பதிலில்: "காரணம் பல உண்டு - எனினும் அவற்றில் பெரிதானது - திடீரென அட்லாண்டாவில் நூற்றுக்கணக்கான ஜாவா ப்ரோக்ராமர்கள் வந்திறங்கினால் - வேலைகளெல்லாம் அவர்களுக்கு போய் விடும்"

இதற்கு டீன் பதில் சொல்வதற்கு முன்னால், ஜான் என்பவர் முந்திக் கொண்டு சொல்கிறார்: "உங்கள் பயம் தேவையற்றது. அவர்கள் அதிகமாக இங்கு வந்தால் - நம் ஊரில் ஜாவா வில் நிறைய வேலைகள் முடிவடையும், அதே போல் புதிய வேலைத் தேவைகளும் பல மடங்கு நம்மைத் தேடி வரும். அதனால் எல்லோருக்குமே நல்லதுதான். அவர்களுக்கு கிடைக்கும் அதிக வருமானம் போல நமக்கும் கிடைக்கும்" என்றாரே பார்க்கலாம்!. தொடர்ந்து டீன் அடுத்த மடலில் "சரியாக சொன்னீர்கள்!. அவர்கள் அதிகமாக வருமானம் ஈட்டுவதற்கு ஏற்றாற்போல் அதிக வேலைகளும் செய்கிறார்கள்" என்றார்!.

இவர்கள் இப்படிச் சொன்னதுதான் போதும் - இந்த மூன்று மடல்களைத் தொடர்ந்து, வெள்ளமாக தொடர்ந்து மடல்கள் பலரிடம் இருந்த்தும்! அவற்றில் சுவராஸ்யமான சிலவற்றில் இருந்து: (யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்! ;-))

வாசு(அ)வசு என்ற இந்தியர்: "நான் இந்தியன் என்றாலும், இங்கேயே தங்கி விட்டேன். இது போன்று H1-இல் வருபவர்களுக்கு குறைந்த சம்பளமே தரப்படுகிறது. அவர்களுக்கு தரப்படும் சம்பளம், இங்குள்ள அமெரிக்கர்களுக்கு தந்தால், அதை வைத்து வாழ்க்கையை ஓட்ட முடியாது. அதானால், அவர்களை வைத்துக் கொண்டே காலம் தள்ளி விடுவார்கள் - நமக்கெல்லாம் ஒன்றும் மிஞ்சாது. ஆதாலால், இதனை எதிர்க்கவேண்டும்" என்ற ரீதியில் Same-side Goal போட்டார். அல்லது அந்தப் பக்கம் சென்று விட்டார்!

அலெக்ஸ்: "வாசு/வசு, நீங்கள் சொல்வது புரிகிறது. எனக்குத் தெரிந்த இந்திய நண்பர்களும் இப்படித்தான். அவர்கள் குடும்பம் இங்கே இல்லாததால், அவர்களால் நிறைய சேமிக்க முடிகிறது. அவர்கள் ஒன்றாக சேர்ந்து தங்கிக் கொண்டு பணத்தை மிச்சம் செய்கிறார்கள். மேலும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களோ, அவர்களுக்கு சேர வேண்டியதில் கணிசமானதை பிடுங்கிக் கொள்கிறார்கள்."

ஸ்காட்: நாம் அவர்களை வரவேற்கிறோமோ, இல்லையோ, அவர்கள் வரத்தான் போகிறார்கள். நம்மைக் காட்டிலும் குறைந்த சம்பளத்திற்கு அதிக வேலை செய்பவர்கள், உலகத்தின் பல பகுதிகளில் இருக்கத்தான் செய்கிறார்கள். நம் அரசாங்கத்தை பின்வாங்கச் சொல்வதோ, தடுக்கச் சொல்வதோ - சிறுபிள்ளைத் தனமாகத்தான் உள்ளது."

ஜஸ்டின்: இந்தியாவிலும் இப்போது விலைவாசி கிடுகிடுவென உயரத் துவங்கி விட்டது. ஒவ்வொரு நாளும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கான விலையும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போதே, இந்தியாவை அடுத்து மற்ற நாடுகளில் எங்கு ஆட்களைப் பிடிக்கலாம் என்று பார்க்கிறார்கள். உலகச் சந்தை நம் தலைக்கு மேல், நாம் அதனை புறந்தள்ள முடியாது!"

பர் சட்டர்: விப்ரோவிற்கு அக்சென்சர், யுனிசிஸ், ஐ.பி.எம் போன்ற பெரிய நிறுவனங்களுடன் தான் போட்டி. நம்மைப்போல சிறிய நிறுவனங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை!

மார்டி: விப்ரோ அட்லாண்டா வருவதை தடை செய்தால், அவர்கள் வேறு ஊருக்கு செல்லப் போகிறார்கள், அதனால் நமக்கு கொஞ்சம் நஞ்சம் கிடைக்கக்கூடிய வேலையும் கிடைக்காமல் போய்விடும். ஜாவா டெவலப்பாராக இருப்பது எதிர்காலத்திற்கு நல்லதாகப் படவில்லை. விரைவில் நாம் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டு பிடிக்க வேண்டும், கற்றுக் கொள்ள வேண்டும், அப்போதுதான் பிழைக்க முடியும்!

டீன்: "உலகம் தட்டையானது" என்ற இந்த கட்டுரையை படித்துப் பாருங்கள். விப்ரோ இங்கு வருகிறதா, அல்லது கலிஃபோர்நியா விற்கு செல்கிறதா என்பது ஒரு பொருட்டல்ல. நாம் தான் அவர்களுடன் போட்டி போட்டு எப்படி வெல்வது என்ற கலையை கற்றுக் கொள்ள வேண்டும்.

பில்: ஆமாம் நண்பர்களே, தயாராகுங்கள்.
1) உங்கள் துறையில் சிறந்த விற்பன்னர் ஆக வேண்டும். பல ஓபன் சோர்ஸ் மென்பொருட்களை அறிந்திருப்பதோடு, அவற்றை ஒருங்கிணைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
2) AJAX போன்ற Web 2.0 தொழில்நுட்பம் கற்றுக் கொள்ளவும்.
3) உங்கள் காலில் நிற்க கற்றுக் கொள்ளவும் - நீங்கள் பணி புரியும் நிறுவனத்திற்கு அப்பால் அல்ல.
4) பொதுவாக - ஒரு தொழிலுக்கு, என்ன மென்பொருள் தீர்வு என்பதை அதிகமாக தெரிந்து கொள்ளவும், தொழில்நுட்பம் மட்டும் போதாது.
5) இந்தியாவுக்கு (அல்லது சீனா அல்லது ரஷ்யா) எப்படி வேலைகளை அனுப்பி சாதித்துக் கொள்ளலாம் என்பதில் விரிவுரியாளரவது எப்படி என்று கூட பார்க்கலாம் :-) ஆனால், அது எனக்கு சரிப்படாது!

கீத்: அடப்பாவிகளா, H-1 மற்றும் L-1 நபர்கள் இங்கு வருவதால் என்ன பாதிப்பு என்று உங்களுக்கு புரியவே இல்லையே? இந்தியாவின் 'NASCOM' என்ற அமைப்பு சொல்கிறது - நாம் அங்கிருந்து ஒரு மில்லியன் மென்பொருளாளர்கள் இங்கு வருவதை தடை செய்கிறோமாம்! ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள், இங்கு ஏற்கனவே இருப்பவர்களின் எண்ணிக்கை 600,000!

(பதில் மடல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, முடியவில்லை!)

LinkWithin

Related Posts with Thumbnails