Monday, August 13, 2007

கச்சி வரதா, கருணைபொழிவாய்!





பாலாழியில் படுத்துறங்கும் பரமா, பாமர தயாளா,


அர்சவதாரம் போதும், அரச்சனை செய்யும் எனக்கருள்வாய்!


முக்குறும்பு நீங்கிட, முக்தி பெற்றிட அருள்வாய்!


என் பிணிகள் நீக்கிடும் குருவாய் நீ வருவாய்!


கடல் நிற வண்ணா, கொள்வாய் என்மேல் கடலளவு கருணை!


கார்மேக வண்ணா, பொழிவாய் என்மேல் மழைபோல் அருளை!


முக்தி தரும் நகர்களில் முக்கியமாய் கச்சிதனில் அருளும் வரதா,


விசிறி ஏந்தி நிற்கும் கச்சி நம்பி போற்றும் அத்திகிரி வரதா,


வாராதோ உனக்கென்மேல் கருணை,


அடைந்தேன் உன் தாள் தனில் சரணே!

4 comments:

  1. Anonymous11:08 PM

    இது நீங்களே எழுதினதா, நல்லா இருக்குங்க!

    ReplyDelete
  2. ஆமாங்க முகுந்த், வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  3. அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஜீவா! எனக்கு “பச்சை மா மலைபோல் மேனி” பாடல் ஞாபகத்திற்கு வருகிறது. நான் பிறந்த ஊர் காஞ்சிபுரம்! அந்த ஊரின் பெயரைக் கேட்டாலே உள்ளத்தில் சந்தோஷமும் நிம்மதியும் நிலவுகிறது! நான் செய்த புண்ணியம்!

    ReplyDelete
  4. வாங்க ஷ்ருதி!
    நான் பிறந்த ஊரும் காஞ்சிபுரம்தான்! :-)
    'அத்தி வரதர்' என்கிற பேரைக் கேட்டலே இன்னமும் பெருமையாய் இருக்கிறது. சின்ன வயதில் ஒருமுறை அத்தி வரதரை பார்க்கக் கிடைத்தது. இன்னுமொருமுறை கிட்டுமோ தெரியாது!
    'காஞ்சிபுரம்' என்கிற லேபிளை சொடுக்கிப் பார்க்கவும். இன்னொரு பதிவும் இருக்கும்!

    ReplyDelete