நம்மில் கணக்கு - பிணக்கு என்பாருக்கு
இதோ இன்னும் கொஞ்சம் ஆமணக்கு!
இந்த காட்சிப் படத்தில் அதன் விரிவுரையாளர், சதாரண பெருக்கல் கணக்கையும், வகுத்தல் கணக்கையும் எப்படி எல்லாம் வேறு வகையான முறைகளில் சமீபத்திய அமெரிக்க கணித பாட புத்தகங்களில் கற்றுத் தருகிறார்கள் என்பதை விளக்குகிறார். இந்த முறைகளை விடுத்து எல்லோருக்கும் தெரிந்த எளிய முறையை பின்பற்ற வேண்டும் என்றும் கோருகிறார்!
மேலும் சிங்கப்பூர் கணித புத்தகங்கள் எளிமையாகவும், மலிவாகவும் இருப்பதால், அவற்றைக் கூட மாற்றக பயன்படுத்தலாம் என்கிறார்!
என்ன இன்னிக்கு ஒரே கணக்கு மயமாக இருக்கு?
ReplyDeleteதிரு கண்ணன் அப்படி ஒன்றை காண்பித்தார் அங்கு.
பகிர்ந்தமைக்கு நன்றி.
வாங்க வடுவூர் சார் - நா.கண்ணன் சார் பதிவைப் பார்த்துவிட்டுத் தான், இந்த படத்தைப் பிடித்தேன்!
ReplyDeleteகணித ஜோதியில் ஐக்கியமாக!
எங்கே எல்லாரும் ஒரு கணிதப் பதிவு போடறாங்களா பார்க்கலாம் :-)
ஆ!
ReplyDeleteஇத்தனை வழி இருக்கா, இது தெரியாம போச்சே மக்கா!
லாட்டியூஸ் மெதட், பார்க்க அழகாக இருக்கிறது.
ReplyDeleteஆனால், இது அவ்வளவு எளிதாக நாம் கற்று, நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முடியுமா ?
நாம் கற்றதை சொல்லிக் கொடுக்கவே கஷ்டமாக இருக்கிறது ;-)
//, நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முடியுமா ?//
ReplyDeleteஇதே கவலைதான் எல்லோருக்கும்!. கற்றுத் தரும் ஆசிரியர் இருந்தாலும், பெற்றோர்களுக்கும் தெரிந்த வழியாக இருந்தால் நலம் என்ற அளவுக்கு நினைக்கிறார்கள்!