Saturday, January 16, 2010

நாராயணீயம்

குருவாயூரப்பனே அப்பன் என, திருமதி. அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் இயற்றிய பாடலை முன்பொரு பதிவில் பார்த்தோம் அல்லவா, இந்தப்பதிவில், ஸ்ரீகிருஷ்ணன் புகழ் பாடும் நாராயணீயம் பற்றிப் பார்ப்போம். ஸ்ரீமத் பாகவதத்தின் சாரத்தினைப் பொழியும் நாரயணீயமதில் அத்வைத பக்தியில் ஆழ்ந்து திளைத்திடலாம்.

நாராயண பட்டாத்ரி
என்பவரால் பதினாறாம் நூற்றாண்டில் வடமொழியில் இயற்றப்பட்டவை இப்பாடல்கள். தன் உடலைத் தானே சுமந்து அதன் உபாதைச் சுமைகளால் மனம் நொந்து, துயர் தீர வழி யாதெனத் தேடலின் விளைவுகள் இப்பாடல்கள். இப்பாடல்களை பாடியபின் பட்டாத்ரி அவர்களின் துயர் தீர்ந்தது. இப்பாடல்களைப் படிப்போருக்கும் அதுபோல துயரெலாம் களைய குருவாயூரப்பன் துணையிருப்பானாக.

குரு-வாயு இருவரால் இங்கே வந்திறங்கி
குருவாயூர் தலமதில் கோவில் கொண்டு

கலியுகத் துயர்தீர கருணைகொண்டான் கண்ணன்!

மணிகள் முழங்கட்டும்,
மங்களம் பெருகட்டும்,

கலியுக வரதன் கார்மேக வண்ணன்

கமலக் கண்ணன் புகழெங்கும் ஓங்குகவே!


ஸ்ரீமந் நாரயணீயம் சுலோகத் தொகுதிகளை இங்கே படிக்கலாம். அவற்றில் இருந்து முதல் தசகத்தினை இங்கே தமிழில் படித்துப் பார்க்கலாமா?

தசகம் 1: சுலோகம் 1

எல்லா இடத்திலும் நிறைந்தது,
காலம் மற்றும் இடத்தினில் குறுகாதது,
மெய்யான, எல்லையில்லா ஆனந்தம்,
தூய மெய்ஞானம் பரப்பிரம்மம்!

கணக்கிலா மறைகள் உரைசெய்திட்டினும்,
கண்டு தெளிந்திட கடினமானதும், தெளிந்திட
உன்னதக் குறிக்கோளான வீடுபேறாகவே விளைந்தது!

அதுவே, இதோ, நம்கண் முன்னே குருவாயூரினில் திகழ்வது,
ஆகா, என்ன அற்புதம்! இஃதே மனிதரின் பாக்கியமன்றோ!

~~~~
கேட்டதைக் கொடுப்பவனாம் கீதையின் நாயகன் குருவாயூர் கண்ணனை பரப்பிரம்மம் என இப்பாடல் சொல்கிறது. பிரம்மமானது உருவம் என்ற வரையறைக்கு உட்பட்டதா என்கிற கேள்வி எழலாம். பிரம்மம், அதாவது குணங்கள் இல்லாத நிர்குண பிரம்மம், எப்படி நம் கண்முன்னே திகழ முடியும்?

மேலே எப்படி என்கிற கேள்வியினை சற்றே மாற்றிக் கேட்டுப் பார்ப்போம். கண் முதலான புலன்களால் துயத்திடும் பொருளனுபவம், எப்போதும் வரையறைக்கு உட்பட்ட பொருட்களையே துய்த்திட இயலும். இவை சாதாரண, நிலையிலா இன்பத்தினையே தந்திட இயலும். அப்பொருள் இல்லையேல் அவ்வின்பம் இல்லை. நிலையான பேரின்பத்தினைத் தருவது பரப்பிரம்மமாக மட்டுமே இருக்க இயலும். அப்படிப்பட்ட பிரம்மம் குருவாயூரினில் திகழ்ந்திட, அப்பேரின்பத்தினைக் கண்டு களித்திட இவ்விரு கண்களால் மட்டுமே இயன்றிடுமா?

உபநிடதமும் சொல்லும்:
குருவின் துணையுடன் மனதால் மட்டுமே காணக்கூடியது பிரம்மம். அதில் வேற்றுமை என்பதே இல்லை. - பிரஹதாரண்யக உபநிடதம் 4.4.19
~~~~

தசகம் 1: சுலோகம் 2
பிரம்மம், மானிடப்பிறப்பு, பக்தியோகம் மற்றும் ஸ்ரீமத்
பாகவதமென,
கிடைத்தற்கரிய பொருட்கள் நான்கிருப்பினும்
நெய்யிருக்க வெண்ணையைத் தேடி அலைபவர் ஆயிரம்!

தந்திரங்களையும்
மந்திரங்களையும் தரிசனங்களையும் நம்பித் தம்பொழுதை வீணாக்கியவரே அவரெல்லாம்!
நாமெல்லாம் இங்கே திடமாய் மனதில் முழுதாய்

குருவாயூரப்பனையே நாடிடுவோம்! - அவனே,

எல்லாப் பொருட்களிலும் உறைபவன்,

எல்லாக் குறைகளையும் களைபவன்.

~~~~
இப்படியாகச் சொல்லி, அடுத்த வரும் சுலோகம் குருவாயூரப்பனின் திருஉருவத்தினை எடுத்தியம்புகிறது.
~~~~
தசகம் 1: சுலோகம் 3

சாத்வ குணத்தின் தூய வெளிப்பாடே நின்
திருவுருவமென
வேதவியாசரின் சொற்களும்
பலமுறை ஒலித்திடுமே.

சச்சிதானந்தப் பேரொளியில் திகழும் பரமன்

செவிக்கும் மனதுக்கும் இன் அமுதமேயாம்.

கைக்கொள்ள எளிதாய் கிடைத்ததென்றே

அருள்பெற்ற அடியார் யாரும் உரைப்பரே.


~~~~
ஒப்பிலா பிரம்மத்தினைப் பெருங்கடலுக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறது, அடுத்த சுலோகம்!
இரண்டுக்கும் பொதுவானதை, அழகாகப் பட்டியலிடுகிறது:

தசகம் 1: சுலோகம் 4

பிரம்மம் எனும் ஆழமான பெருங்கடல் செயலற்றதாம்,
எப்போதும் 'நிறை'ந்தாம்,

ஆனந்தம் தரும் அமுதினைக் கொண்டதாம்,

எண்ணிடலடங்கா விடுபெற்ற ஆன்மாக்களை

தன்னிடத்தே முத்துக்களாய் கொண்டதாம்,

தூய சாத்வகுணமே வெள்ளை அலைகளாய் வீச,

எல்லையிலாமல் எல்லாமுமாய் ஆனவனே

தனித்தனியென இல்லாமல்
முழுமையாய் இருப்பதென்னே!


~~~~
தசகம் 1: சுலோகம் 5
ஆதி அந்தமில்லாதவனே,
செயலற்றதாய், பிரம்மமாய் இருப்பினும்,

மாயைதனை எம்மேல் வீசும்

தொழில்கொண்டதேனோ வைகுந்தனே!

தூய அறிவால் இடரேதும் இலாது,
சத்வகுணமே நிறைந்திட, தூய தெளி தேனே!

~~~~~~~~~~~~

செயலே இலாமால் மாயைதனை எப்படி விளைவிக்க இயலும்?
காந்தம் போலவோ? தன்னிடம் எந்த அசைவும் இல்லாமல், தன் வசம் இரும்பை இழுப்பதுபோலவோ!
உபநிடதமும் சொல்லும்:
பிரகிருதி அல்லது இயற்கையினை மாயை அல்லது தோற்றமயக்கம் எனப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அதனை நடத்தி வைக்கும் மாயாவி பரம்பொருளேயாம்.
- ஸ்வேதஷ்வதார உபநிடதம் 4/10.
எனினும் இந்த மாயையினால் பரமனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவன் சத்வ குணத்தினால் நிறைந்தவன். அவனிடம் 'நான், எனது' எனும் எண்ணங்கள் தோன்றுவதில்லை. அவனிடத்தில் இருந்து பிரம்ம சைதன்யம் மறைவுபடாமல் திகழ்கிறது.

~~~~~~~~~~~~~
நாம் தியானிப்பதற்காக குருவாயூரப்பனின் வடிவழகை எடுத்தியம்புகிறது அடுத்த வரும் சுலோகங்கள்:

தசகம் 1: சுலோகம் 6

புதிய மழை மேகங்கள் போலும்
புதிதாய் பூத்த காசாம்பூ மலர்கள் போலும்
அழகாய்த் திகழும் குருவாயூரப்பனே,
நல்லவைகளின்
முழுவடிவமாம்,
இலக்குமியின் இருப்பிடமாம்.

அழிபொழியாய் இதயமதில் அருள்பொழிபவனே,
நின்னுருவை எப்போதும் தியானித்திடுவோமே.

தசகம் 1: சுலோகம் 7
மாயைகளைத் தாண்டிய மாயவனே,
முன்னம் நினைத்தேன் புரியாத புதிர் உன் செயலென்று.

மாந்தர் மாயையில் சிக்க துயர் பல ஏன்பட வேண்டும்?

மானிடராய் பிறப்பதன் பயன் இப்போது அறிந்தேன்.
இல்லாமல் எப்படி எல்லையில்லா இன்பத்தைப் பருகிப்பின்
அவ்வின்பத்தினை வெளிப்படுத்ததான் இயலும்?
இத்தலத்தில் இவ்வடிவில் அந்த பிரம்மானந்தம்
இருப்பது,
இனி எல்லாம் இன்பமயமன்றோ!தசகம் 1: சுலோகம் 8
உன்னை வணங்கியவருக்கு
உன் வடிவினைக் காட்டுபவன்
நீ.
கேட்காமலே வாழ்வின்
குறிக்கோளினை அடையக் கொடுப்பவன்.

இந்திரலோக சுகங்களை ஏங்கும் வீணர்கள்
அறியார்
எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும்
பாரிஜாதம்
எம்தலைவன் ஹரியென்று.
கணக்கிலா
பரிசுகளைத் தருபவன் நீயன்றோ.


தசகம் 1: சுலோகம் 9
கருணையை மட்டும் தரும் தெய்வங்கள் இருக்க,
தன்னையே தருபவன் தனித்துவமான குருவாயூரப்பன்!
உன்னருகே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
தன்னொளியில் திளைப்பவர் கொடுத்து வைத்தவரே!
நின்னொளியில் திளைப்பது நீயுமல்லவோ!
கணக்கிலா நன்னெறிகளின் இருப்பிடமே,
சுரசேனையின் தலைவனே, உனக்கு வணக்கங்கள்!

தசகம் 1: சுலோகம் 10
உயர்தலைவா, முரனை வதம் செய்தவனே,
சங்கரன் முதல் எல்லா தெய்வங்களையும் ஆள்பவனே,
எல்லா வலிமைகளையும் விட வலிவானவான் நீ.
குறையற்ற நின்புகழை துறந்தோரும் பாடுவர்.
திருமகளை எப்போதும் நின்திருமார்பில் கொண்டவனே,
எல்லாம் அறிந்தவனே, பற்றுகளற்ற குருவாயூரப்பனே,
பகவன் என்ற போற்றுதலுக்கு உரிய முதல்வன் நீ மட்டுமே.Wednesday, January 13, 2010

விஷ்ணு மாயா ஸ்தோத்திரம்

விஷ்ணு மாயா ஸ்தோத்திரம்

1. நமோ தேவ்யை மஹாதேவ்யை சிவாயை தைதம் நம :|
நம: ப்ரக்ருத்யை பத்ராயை நியதா: ப்ரணதா: ஸ்மதாம் ||

(தேவிக்கு வணக்கம். பெருந்தேவிக்கு வணக்கம். எப்போதும் மங்களகரமாய் இருப்பவளுக்கு வணக்கம். இயற்கை வடிவினவளுக்கு வணக்கம். இனிமையானவளுக்கு வணக்கம்.
தேவியே உன்னை நியமப்படி வணங்குகிறோம்.)

2. ரௌத்ராய நமோ நித்யாயை கௌர்யை தாத்ர்யை நமோ நம:|
ஜ்யோத்ஸ்னாயை சேந்துரூபிண்யை ஸூகாயை ஸததம் நம:||

(கோப வடிவினவளும் நிலையானவளும் அனைத்தையும் தாங்குபவளும் பாதுகாப்பவளும் ஆகிய தேவிக்கு வணக்கம். நிலவு போன்ற ஒளி வீசும் அழகிய முகத்தை உடையவளும் எப்போதும் ஆனந்தமாக இருப்பவளுமான அன்னைக்கு நமஸ்காரம்.)

3. கல்யாண்யை ப்ரணதாம் வ்ருத்யை ஸித்யை குர்மோ நமோ நம:|
நைர்ருத்யை பூப்ருதாம் லக்ஷ்ம்யை ஸர்வாண்யை தே நமோ நம:||

(பணிந்திடுவோர்க்கு எப்போதும் நல்லதையே கொடுப்பவளும் உயர்வான குணங்களை உடையவளும், சித்தியளிப்பவளுமான தேவிக்கு வணக்கம். அலக்ஷ்மி என்கிற மூதேவிக்கும், மண்ணாளும் ஸ்ரீதேவிக்கும், துர்க்கைக்கும் வணக்கம். (அலக்ஷ்மியை வேண்டுவது விலகிச்செல்வதற்காக.) )

4. துர்காயை துர்கபாராயை ஸாராயை ஸர்வ காரிண்யை:|
க்யாத்யை ததைவ கிருஷ்ணாயை தும்ராயை ஸததம் நம:||

(தடையாக வரும் இன்னல்களைத் தாண்ட உதவும் துர்கைக்கும் எல்லா உயர்வுகளையும் அடையக் காரணமாய் இருப்பவளுக்கும், எல்லாச் செயல்களையும் செய்பவளுக்கும், அனைத்திலும் அறிவாய் வியாபித்து இருப்பவளுக்கும், கருவண்ணம் உடையவளுக்கும், புகை வண்ணத்தினளாய் இருப்பவளுக்கும் வணக்கம்.)

5. அதி ஸௌம்யாதி ரௌத்ராய நதாஸ் தஸ்யை நமோ நம:|
நமோ ஜகத் ப்ரதிஷ்டாயை தேவ்யை க்ருத்யை நமோ நம:||

(மிகவும் அழகானவளாகவும், கொடியோர்க்கு மிகவும் கோரமான உருவிலும் காட்சி அளிப்பவளுக்கு வணக்கம். உலகை நிலையாக நிறுத்தியவளுக்கும் செயல் திறனாய் வியாபித்து இருப்பவளுக்கும் வணக்கம்.)

----------------------
இனி வரும் 21 ஸ்லோகங்கள் ஒவ்வொன்றையும் 3 தடவை சொல்ல வேண்டும்.
-----------------------

6. யாதேவீ ஸர்வபூதேஷூ விஷ்ணு மாயேதி ஸப்ததா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி உயிர்கள் அனைத்திலும் திருமாலின் மாயை என அழைக்கப்படுகிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

7. யாதேவீ ஸர்வபூதேஷூ சேதநேத்யபிதீயதே:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எல்லா உயிர்களிடத்திலும் உணர்வு என எந்த தேவி அழைக்கப்படுகிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

8. யாதேவீ ஸர்வபூதேஷூ புத்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எல்லா உயிர்களிடத்திலும் புத்தி வடிவாய் எந்த தேவி நிலைபெற்றிருக்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

9. யாதேவீ ஸர்வபூதேஷூ நித்ராரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி ப்ராணிகள் அனைத்திலும் நித்திரை உருவாய் அமைந்துள்ளாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

10. யாதேவீ ஸர்வபூதேஷூ க்ஷீதாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா ஜீவன்களிலும் பசி என்ற உணர்வாய் இருக்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)


11. யாதேவீ ஸர்வபூதேஷூ சாயாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிரினங்களின் நிழலாகவும் நிலை பெற்றிருக்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

12. யாதேவீ ஸர்வபூதேஷூ சக்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எவள் உயிர்கள் அனைத்திலும் ஆற்றல் உருவாய் நிலை பெற்றிருக்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

13. யாதேவீ ஸர்வபூதேஷூ த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி ப்ராணிகள் அனைத்திலும் வேட்கை உருவாய் அமைந்துள்ளாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

14. யாதேவீ ஸர்வபூதேஷூ க்ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி உயிர்கள் அனைத்திலும் பொறுமையின் உருவாய் நிற்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

15. யாதேவீ ஸர்வபூதேஷூ ஜாதிரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் ஜாதி உருவாய் நிற்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

16. யாதேவீ ஸர்வபூதேஷூ லஜ்ஜாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் ஞானம் என்கின்ற உருவாய் நிற்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

17. யாதேவீ ஸர்வபூதேஷூ ஸாந்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் சாந்தி வடிவினளாய் இருக்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

18. யாதேவீ ஸர்வபூதேஷூ ஸ்ரத்தாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் அக்கறை உருவத்தில் நிலைபெற்று இருக்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

19. யாதேவீ ஸர்வபூதேஷூ காந்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் விளங்கும் ஒளிப்பிழம்பாய் நிற்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)20.யாதேவீ ஸர்வபூதேஷூ லக்ஷ்மிரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் மங்கள வடிவாய் அமைந்துள்ளாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

21. யாதேவீ ஸர்வபூதேஷூ வ்ருத்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் செயல் வடிவாய் நிற்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

22. யாதேவீ ஸர்வபூதேஷூ ஸம்ருதிரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் நினைவு உருவாய் நிற்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

23. யாதேவீ ஸர்வபூதேஷூ தயாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் இரக்கம் என்கின்ற ஊற்றாய் இருகின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

24. யாதேவீ ஸர்வபூதேஷூ துஷ்டிரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் திருப்தி என்கின்ற உருவாய் இருகின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

25. யாதேவீ ஸர்வபூதேஷூ மாத்ரூரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் அன்னை உருவாய் இருகின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

26. யாதேவீ ஸர்வபூதேஷூ ப்ராந்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(எந்த தேவி எல்லா உயிர்களிலும் மருள் உருக்கொண்டு இருகின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

27. இந்த்ரியாணா மதிஷ்டாத்ரி பூதானாம் சாகிலே ஷூயா:|
பூதேஷூ ஸததம் தஸ்யை வ்யாப்த்யை தேவ்யை நமோ நம:||

(இந்த்ரியங்களுக்கும் தலைமையில் நின்று எவள் உயிரினங்கள் அனைத்திலும் ஊடுருவி எப்பொழுதும் எங்கும் எல்லாமுமான சக்தியாய் நிற்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

28. சிதி ரூபேண யா க்ருத்ஸ்னம் ஏதத்வ்யாப்ய ஸ்திதா ஜகத்:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||
(உணர்வு உருவாய் நின்று எவள் அகிலம் முழுவதும் வியாபித்து நிற்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

பலச்சுருதி (பலன்கள்)
-----------------------------
29. ஸ்துதா ஸூரை: பூர்வ மபீஷ்ட ஸம்ஸச்சாத் ததா ஸூரந்த்ரேண தினேஷூ ஸேவிதா :|
கரோது ஸா ந: ஸூபஹேதுரீஸ்வரி ஸூபானி பத்ராண்ய பிஹந்து சாபத:||

(முன்பு மனோரதம் ஈடேற தேவர்களால் துதிக்கப்பட்டு, பின்னர் அவ்வாறே வானவர் வேந்தனால் தினந்தோறும் தொழப்பட்ட அந்த இறைவிதான், நன்மைகள் அபைத்துக்கும் காரணமானவள். அவள் நமக்கு சுபங்களையும், மங்களங்களையும், ஏற்படுத்தட்டும். ஆபத்துக்களை அழிக்கட்டும்.)

30. யா ஸாம்ப்ரதம் ஸோத்தத தைத்ய தாபிதை: அஸ்மாபிபிரீஸா ச ஸூரைர் நமஸ்யதே:|
யா ச ஸ்ம்ருதா தத்க்ஷணவே மேவ ஹந்திந: ஸர்வாபதோ பக்தி விநம்ர மூர்த்திபி:||

(வீறுகொண்ட அசுரர்களால் அல்லல் பட்ட தேவர்கூட்டம் இறைவியைப் பணிந்தது. பணிந்தவரைக் காத்திட்டாள் தேவி. நாமும் ஆபத்துக் காலங்களில் பக்தியால் நெக்குருகி பணிந்து இறைவியை நினைத்தால், அக்கணமே அவள் நம் ஆபத்துக்களையெல்லாம் தொலைத்து நம்மைக் காப்பாள்.)

------
(தேவி மஹாத்மியம், ஐந்தாவது அத்தியாயம் அத உத்தம சரித்திரம். இது மார்க்கண்ட முனிவரால் உலகிற்கு அளிக்கப்பட்டது. விஷ்ணு மாயையான மகாலஷ்மியை தேவர்கள் துதித்த அற்புதத் துதி இதுவாகும்.)
------

LinkWithin

Related Posts with Thumbnails