குஞ்ச வனம் திரிபவன் எழில்!
அசுரன் மதுவை வதம் செய்த மாதவா,
கருணைக் கடலே, கேசவா
உனக்கென் வணக்கங்கள்!
ரச நடனம் ரசிக்கும் இறையே,
லீலைகள் உன்னிடம்,
மாயைகள் என்னிடம்...
கோபியர் கொஞ்சும் ரமணா,
சாந்த சொரூபியே மதுசூதனா,
உன்னைக்காண அடியவர்
ஒருசில அடிகள் வைத்தாலும்
கருணையுடன் தரிசனம் தருவாயே!
என்றும் இளம் வதனம் கொண்டவா,
சந்திர மலர் முகம் கொண்ட
கோபியர் இதயம் கவர் நாதா,
கோவர்தன மலை தூக்கிய இறைவா,
பிருந்தாவனம் எங்கும் உன் குழலிசை -
எங்கெங்கும் எம் பரம்பொருளின் நிறை.
ராதையின் நாயகன், கம்சனையோ வதைத்தவன்,
நின் பாதத்தில் சரணடைகிறேன்,
தஞ்சம் கிடைக்காதோ அந்த பாத
விரல் நகக் கண்களில்?
உன் பட்டாடை போல்
என்னை சுத்தம் செய்யும் ஜனார்தனா,
உன் பாதமலர் சரணம்.
மேலெழுதிய வரிகளின் மூலம் ஜெயதேவரின் 'அஷ்டபதி' யில் ஒன்றாகும்.
சமஸ்கிருதத்தில் அவருடைய கீத கோவிந்தம், கோகுலக் கண்ணன் கோபால கிருஷ்ணன் புகழ் பாடும் உன்னத காவியம்.
'ஏஹி முராரே குஞ்ச பிஹாரே' என்று தொடங்கும் இந்த பாடலை பாம்பே ஜெயஸ்ரீயின் மனம் உருக்கும் குரலில் கேட்டு மகிழலாம் இங்கே.
B._Jayasree_-_Saal... |
முன்பே பார்த்த அஷ்டபதி - 'சந்தன சர்சித நீல களேபர...'
உன்னி கிருஷ்ணன் பாடிய 'ப்ரியே' என்று தொடங்கும்
ReplyDeleteபாடல் ஒன்று இருக்கிறது. மனமுருகி அவர் பாடியிருக்கும் பாடல் ஒன்று. எல்லா பாடல்களும் எல்லாப் பாடகராலும் மனமுருகிப் பாட
முடிவதில்லை என்று நினைக்கிறேன்!
ஆம், உன்னி கிருஷ்ணன் பாடிய இனிய பாடல்களை கேட்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன 'ப்ரியே' பாடலை கேட்டதில்லை என நினைக்கிறேன். சுட்டி ஏதேனும் இருந்தால் தரவும்!
ReplyDeletehttp://www.inrhind.in/inreco/albumInfo.asp?lId=23&AId=797
ReplyDeleteமேலே உள்ள தளத்தில், முதல் இரண்டு வரிகளைத்தான் கேட்க முடிகிறது. என்னிடம் இருப்பது ஒலி நாடா என்பதால் வலையேற்ற முடியவில்லை! தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால்
சொல்கிறேன்!
ஆ, இந்த பாடலும் அஷ்டபதி பாடல்தான் போலிருக்கிறது...
ReplyDeleteப்ரியே சாரு ஷீலே...
உன்னியின் சந்தன சர்சித பாடலை கேட்டீகளா? அந்த பாடலும் உங்களுக்கு பிடித்திருக்கும் என நினைக்கிறேன்!
காலத்தைக்கடந்து நிற்கும் சில அற்புத படைப்புகளில் ஒன்றாம்
ReplyDeleteஅஷ்டபதி. ஜெயதேவரின் பரிபூரண அனுபூதியின்
ecsatic creation
இந்த பாசுரங்கள்.
இதில் உள்ள வார்த்தைகளின் மென்மையான பொருளா
அல்லது பாம்பே ஜெயஸ்ரீ யின் குரல் வளமா
அல்லது அவர்தம் சாஹித்யத்தை ஸ்பஷ்டமாகச் சொல்லும் முறையா
அல்லது இது எல்லாமே கலந்து பரிமாரப்பட்டு
பக்குவமாக சாதிக்கப்படுவதுதான் காரணமா ?
ஜீவனின் பரிமாணங்கள் ஈர்க்கின்றன்.
திருமதி மீனாக்ஷி
தஞ்சை.
பி.கு. நேரம் கிடைத்தால் எனது வலைப்பதிவுக்கு செல்லவும்.
http://movieraghas.blogspot.com
ஜீவா. இந்தப் பாடலை உன்னிகிருஷ்ணன் பாடி அண்மையில் கேட்டேன். உருகுவதற்கு நிறைய இந்தப் பாடலில் இருப்பதை அப்போது உணர்ந்தேன். பல முறை கேட்டு வருகிறேன்.
ReplyDelete//இதில் உள்ள வார்த்தைகளின் மென்மையான பொருளா
ReplyDeleteஅல்லது பாம்பே ஜெயஸ்ரீ யின் குரல் வளமா
அல்லது அவர்தம் சாஹித்யத்தை ஸ்பஷ்டமாகச் சொல்லும் முறையா
அல்லது இது எல்லாமே கலந்து பரிமாரப்பட்டு
பக்குவமாக சாதிக்கப்படுவதுதான் காரணமா ?//
நிச்சயமாக இரண்டும்தான் திருமதி.மீனாக்ஷி, வருகைக்கு நன்றி!
அப்படியா குமரன், மிக்க நன்று.
ReplyDeleteசமஸ்கிருதத்தில் முதலில் மொழி புரியாவிட்டாலும், மிகவும் ஈர்கின்றன. புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியதால் இங்கே தமிழில் தந்திருக்கிறேன்.