Thursday, March 24, 2005

யெல்லோஸ்டோன் - பகுதி 3

க்ராண்ட் டெட்டான் மற்றும் யெல்லோஸ்டோன் பூங்காவின் எல்லைகளாக முதலில் அதன் பார்வைக்கு அழகு தரும் இடங்கள் வரை இருந்தது. இதனால், சென்ற அரை நூற்றாண்டில், அது மட்டும் போதாதென்றும், இங்கு வாழும் வனவிலங்குகளுக்கு தேவையான இடத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென உணர்ந்துள்ளனர். 1970களில், ஜான் மற்றும் பிரான்க் கிரைக்ஹெட் என்போர், க்ராண்ட் டெட்டான் மற்றும் யெல்லோ ஸ்டோன் பூங்காவின் முழுமையை கணக்கிட வெறும் நிலப்பரப்பின் அளவுகளையும், வேலிகளையும் கொள்ளாது, கரடிகள் போன்ற விலங்கினங்கள் தங்களுக்கென்று தனி விதிகளை ஏற்படித்திக்கொண்டு உலவி வருவதையும், அதனோடு மனித அருகாமையின் விளைவுகளையும் கணக்கில் கொண்டனர். அவர்கள்தான் முதன்முதலில், இங்கு வாழும் விலங்கினங்களின் எண்ணிக்கையும், வகைகளும் இந்த நூற்றாண்டையும் தாண்டி வளருமென்றும், குறிப்பிட்ட விலங்கினங்களை எடுத்துக்கொண்டு, இவற்றை மட்டும் தனியாக காப்பாற்றி விட முடியாது என்றும் சொன்னார். ஏனெனில், அவ்விலங்குகளை காப்பாற்றும் திட்டத்தில் அவை சார்ந்திருக்கும் சுற்றுசூழலை மேலாண்மை செய்வதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

யொல்லோஸ்டோன் மற்றும் கிரேண்ட் டெட்டானில், நரைத்தமுடிக் கரடியையும், (இவை சுதந்திரத்திற்கு மட்டுமல்ல, அவற்றின் முன் கோபத்திற்கும் எடுத்துக்காட்டு), ப்ராங்ஹார்ன் எனப்படும் ஒருவகை கொம்புமானையும் சேர்த்துக்கொண்டால், இந்த பூங்காவின் எல்லைகள் முழுவதும் ஓட்டைகள் இருப்பதாகத்தான் கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு, பூங்காவின் உள்ளிருந்து வெளியேவும், வெளியிருந்து உள்ளேயும் இந்த விலங்குகள் இடம்பெயர்ந்தவாறு இருக்கும்.

கோடைக்ககாலத்திற்கும் குளிர்காலத்திற்கும் மிக முக்கியமான பாலமாகத்திகழ்வது யல்லோஸ்டோனைச் சுற்றி இருக்கும் நிலப்பகுதியானது - இப்போது இவை 'புற யல்லோஸ்டோன் சுற்றுசூழல் பகுதி' (GYE) என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சூழலுக்கு நெருக்கமான எவரும், அதன் எல்லைகளை தோராயமானதுதான் என்று ஒத்துக்கொள்வார்கள். உதாரணத்திற்கு, ஹம்மிங் பறவைகளை எடுத்துக்கொண்டால், GYE - னது, மத்திய மற்றும் தென் அமெரிக்காவரை நீளக்கூடும்!. னால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை. ஃப்ரான்ஸ் கேமன்ஜிந்த் எனும் உயிரியல் வல்லுனர் என்னிடம் சொன்னார் "கடைசியாக, வேறுவழியில்லாமல், பொருள்படவேண்டி, யெல்லோஸ்டோனின் வனப்பகுதியை பூங்காவாக அறிவித்தோம்" என்று.

என்னுடைய கேபினிலிருந்து, எந்த திசையில் சென்றாலும், GYE-க்குள் செல்லலாம். கேமன்ஜிந்த் சொல்லுவதுபோல், அமெரிக்காவில் காப்பாற்றப்பட்ட இயற்கை வனச்சூழலில் இதுவே மிகப்பெரியதாகும். ஆனால், வரைபடத்தில் பார்த்தாலோ, இதன் மேல் பறந்துபோனாலோ, அவ்வளவு பெரிதானதல்ல என்று தேன்றும். சரிதான், ஆனாலும், அமெரிக்காவில் இருப்பதில் இதுவே மிகப்பெரியது.
குறைந்துவரும் அளவினால், GYE தாக்குப்பிடிப்பதற்கு, நட்சத்திர அந்தஸ்து பெற்ற (நரைமுடிக் கரடிகள், நரிகள், பைசன் எருதுகள்) விலங்குகளை கவனிப்பது மட்டுமல்லாமல், நமது எதிர்பார்ப்புகளில் ஏற்படும் திடீர் மாறுதல்களை தணிக்கவும் வேண்டும். நாம் நம்முடன் வாழ எதிர்பார்க்கும் விலங்குகளின் வலிகளை புரிந்துகொள்ளவேண்டும்.

ஜோயல் பெர்ஜர் என்பவர் (பார்ப்பதற்கு ஒல்லியான, வெள்ளையடித்த நபர்), இரண்டு மொழி கற்றவர். இதென்ன பிரமாதம் என்கிறிறீர்களா? நான் சொன்னதில் இரண்டாவது மொழி, விலங்கின மொழி. சென்ற ஒன்பது வருடங்களில் அவர் சந்தித்தவை – அதிர ஓடி வரும் மூஸ் மாடுகளையும், திடீரெனத் தோன்றும் கரடிகளையும் மட்டுமல்ல – ராக்கி மலைதொடர்களின் கடுங்குளிரையும், கால்களைப் படரும் காட்டுப்புதர்களின் நடுவே மூஸ் மாடுகளின் சமீபத்தைய சாணம் தேடும் (அய்யே) வெட்டையயும்தான்!. மூஸ் மாடுகளின் சமீபத்திய தலைமுறைகள் காட்டு நரிகளை பார்த்திருக்காது. இந்த சூழ்நிலையில், இந்த காட்டு நரிகள், இங்கே மீண்டும் அனுமதிக்கப்பட்டவுடன், அவற்றால், மூஸ் மாடுகளில் எதேனும் மாறுதல் உள்ளதா என்றரியும் ஆராய்சியில் ஈடுபட்டுள்ளார், வன பாராமரிப்பு இயக்கத்தைச் சேர்ந்த இந்த உயிரியியல் வல்லுனர். இவர், மூஸ் மாடுகளின் கருவுரும் விகிதங்களையும் (சாணம் தேடிப்போனது இதற்காகத்தான் – சாணத்தில் இருக்கும் ஹார்மோன்கள் – கருவுரும் தன்மைக்கு அளவுகோல்), மாட்டின் கன்றுகள் எவ்வளவுநாள் தாக்குப்பிடிக்கின்றன என்ற விகிதத்தையும், காட்டு நரியின் ஊளை மற்றும், மற்ற இயற்க்கை சப்தங்களினால் மூஸ் மாடுகளின் போக்கு போன்றவற்றையும் கூட பதிவு செய்துள்ளார். இந்த ஆய்வுகளினால், எல்லோரும் பயந்த்ததுபோல் அல்லாமல், மூஸ் மாடுகளின் எண்ணிக்கை குறைவிற்கு, காட்டு நரிகளின் மறு அனுமதி காரணமில்லை என கண்டறிந்துள்ளார். கடினமான கோடக்காலத்தின் இறுதியில், குறைவான மாடுகளே கருத்தரிப்பதும், குறைவான கன்றுகளே தாக்குப்பிடிப்பதாலுமே காரணம் என்கிறார்.

யெல்லோஸ்டோன் மற்றும் க்ராண்ட் டெட்டான் - நிலப்படம்


Map of Yellowstone & Grand Tetton Park Posted by Hello

(அடுத்த பகுதியில் முடிப்பேன்)

பகுதி 1 பகுதி 2

No comments:

Post a Comment