Sunday, March 06, 2005

விளக்கு ஒன்று...

'அடைக்கலம்' திரைப்பட பாடல்
-----------------------------

விளக்கு ஒன்று அணைந்துபோனால் வீடு மட்டும் இருள்கிறது
வீதி விளக்கு அணைந்துபோனால் சாலை மட்டும் இருள்கிறது
மேற்கே சூரியன் மறைந்துபோனால் பாதி உலகம் இருள்கிறது
பெத்த தாயவள் செத்துப்போனால் மொத்த உலகமும் இருள்கிறது
(விளக்கு ஒன்று....)
இன்பத்துபால் வூட்டுகையில் மனைவியாகிறாள் தாய்
தன் இதயபாலை வூட்டுகையில் அன்னையாகிறாள் தாய்
அள்ளி எடுத்து கொஞ்சுகையில் பிள்ளையாகிறாள் தாய்
துன்பத்தில் தலை கோதுகையில் தோழியாகிறாள் தாய்
தர்மத்தை நிலை நாட்டுகையில் தலைவியாகிறாள் தாய்
நாட்டுவைத்தியம் புரிகையில் பாட்டியாகிறாள் தாய்
ஓ.. வேலைக்காரி வடிவத்தில் கடவுளாகிறாள் தாய்
காலமெல்லாம் கடவுளுக்கு மொத்தம் பத்து அவதாரம்
பெத்த தாய்க்குமட்டும் தாய்க்குமட்டும்
நித்தம் பத்து அவதாரம்...நித்தம் பத்து அவதாரம்...

அன்னை இறந்து போகையிலே அன்பிறந்து போகும்
அவள் ஆக்கி வைத்த நாவோடு ருசி இழந்த்துபோகும்
தாலி தந்த கணவருக்கு சபை இழந்துபொகும்
தாவி வந்த உறவுக்கு வழி இழந்துபொகும்
பார்த்து நிற்கும் மகனுக்கு பாசம் இறந்துபொகும்
கனிந்து நிற்கும் மகளுக்கு காவல் இறந்துபொகும்
ஓ...ஓசை கேட்கும் வீட்டுக்குள் ஒலி இழந்துபோகும்
காலமெல்லாம் கடவுளுக்கு மொத்தம் பத்து அவதாரம்
பெத்த தாய்க்குமட்டும் தாய்க்குமட்டும்
நித்தம் பத்து அவதாரம்...நித்தம் பத்து அவதாரம்...
(விளக்கு ஒன்று....)

No comments:

Post a Comment