Monday, March 21, 2005

விட்டு விடுதலை...

என்னுடைய முந்தைய பதிவான பாரதியாரின் 'விட்டு விடுதலை...' கவிதையை படித்திருப்பீர்கள்.
படிக்காதவர்களுக்கு சுட்டி இங்கே.

அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை ஒரு ஆமெரிக்க சுவாமியிடம் (துறவி) காட்டி, அவரிடன் ஒரு கேள்வி கேட்டேன்: (அவர் இந்தியாவில் தீக்க்ஷை பெற்றவர்)
இப்படி பறவைகளும், விலங்குகளும் தங்கள் கடமையை செவ்வனே செய்யுமாயின், மனிதர்களை விட, அவற்றுக்கு கர்ம யோகத்தினால், பிறவி என்னும் பெருங்கடலைக் கடந்து முக்தி அடைய வாய்ப்பு அதிகமாக இருக்கிறாதா? என்று.

அதற்கு அவர், விவேகானந்தரை மேற்கோள் காட்டி சொன்னார்.
கர்ம யோகம், செவ்வனே பக்குவப்படுத்தும். ஆனால் மனதர்களுக்கு மட்டுமே பக்குவப்பட்டு சூட்சுமத்தை புரிந்து கொண்டு உயரிய முக்தி நிலையை அடைய முடியும் என்று.

ஒளவ்வையாரும், மானிடராய்ப்பிறத்தல் அரிது, அரிதிலும் பெரிது என்பார்.

நாமோ ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், இன்றைய பொழுதை எப்படி செலவு செய்யலாம் என்று யோசிப்பதிலையே, வாழ்நாளை கடத்திக்கொண்டு இருக்கிறோம்.

கர்ம யோகத்தினைப்பற்றி படிக்க விரும்புவர்களுக்கு, விவேகானந்தரின் 'கர்ம யோகம்' புத்தகம் நல்லதொரு முன்னோடி.
அதன் ஒரு சில பகுதிகள் இங்கே.

2 comments:

  1. ராஜயோக பற்றி விரிவாக படித்துள்ளேன். கர்மா பற்றி விரிவான விளக்கங்கள் பல நண்பர்களுடன் விவாதிக்கும் போது அறிந்திருக்கிறேன்.

    ஆனால் கர்மயோக பற்றி இன்னும் விரிவாக படிக்கவில்லை. விரைவில் படிக்க முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  2. வருக கங்கா, எங்க ரொம்ப நாளாக ஆளைக் காணோம்?

    ReplyDelete