Friday, March 25, 2005

யெல்லோஸ்டோன் - பகுதி 4 (நிறைவுப்பகுதி)

குளிர்காலம் முற்றுப்பெற்ற மறுநாளே, நானும், பெர்கெரும் க்ரேண்ட் டெட்டான் தேசிய பூங்காவின் தென் முனைய நோக்கி, நடைபயணமாய் கிளம்பினோம். கழுத்தைச்சுற்றி வளையம் போன்ற பட்டையுடன் மூஸ் மாடொன்றும், நான்கு எருதுகளும், மேலும் ஒரு மாடும் வெண்பச்சை நிற புல்வெளியில் அமர்ந்திருந்தன. நாங்கள் அதன் அருகாமையை அடைந்தவுடன், பெர்கெர் திடீரென, தன் கைகளை வாயில் குவித்துக்கோண்டு ராவென் பறவையப்போல் ஒலி எழுப்பினார். மூஸ் மாடோ அதில் கவனம் இழ்ந்ததாகக்கூடத் தெரியவில்லை. பின் நரியைப்போலவும் ஊளையிட்டார். மூஸ் மாடோ அவரைப்பார்த்து என்னை ஏன் இப்பட் போரடிக்கிறீர்கள் என்று கேட்பதுபோல் தோன்றியது.
பின்னர் பெர்கெர் என்னிடம் சொல்கிறார். ஒருகாலத்தில், நரிகள் மூஸ் கன்றுகளுக்கு ஆபத்து விளைவித்ததால், நரிகளின் ஊளைச்சப்தமே மூஸ் மாடுகளை பயமுறுத்தி வந்தது. ஆனால் இப்போதோ, அது பழங்கதையாகி விட்டது. இந்த மூஸ் மாடுகளுக்கு, இவற்றின் மூதாதாயரின் பய உணர்வு தொடரவில்லை போலும். மூஸ் மாடு அவருக்கு 'சாம்பிள்' ஒன்றை 'ஈந்த'உடன், அதை கவனமாக ஒரு ஜிப்லாக் பையில் போட்டுக்கொண்டார். பின்னர் நடைபாதைக்கு திரும்புகையில் அவர் சொல்கிறார். "நான் இதை எனக்கு நினவு தெரிந்த் காலம் முதல் செய்து வருகிறேன். ஏனெனில், வனம் மற்றும் இயற்க்கையின் மீது நம்மவர்களின் தாக்கம் எவ்வளவு என்பதை அறிவதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு" என்று. தொடர்ந்து, புன்னகையுடன் "அதே சமயத்தில் வனம் மற்றும் இயற்க்கையினால், மனிதர்களின்மேல் எவ்வளவு தாக்கம் உண்டு என்றறிவதிலும் ஆர்வம் உண்டு. ஆனால் அதை எண்களால் வரையருப்பது கடினம்" என்று.
எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தனிமையில் நீண்ட குளிர்காலத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டு இருப்பது எவ்வளவு கடினம் என்று - மூஸ் மாடுகள், க்யோட்டே நரிகள், மேக்பை வகை பறவைகள் மற்றும் அன்னம் ஆகியவற்றின் நிர்ணயக்கத்தக்க துணையில்லாமல். சப்தம் மிகுந்த வசந்தகாலத்தின் வருகயைப்பற்றி தன் ரிங்காரத்தினால் முன் அறிவிப்பு செய்யும் (சிவப்பு இறக்கை கொண்ட) கறுப்பு பறவையோ, அல்லது மலர்களில் தித்திக்கும் தேன் சுவையை கண்டுகொண்டு, அந்தரத்தில் ஊசாலடிக்கொண்டே தன் சிறகுகளை வியக்கவைக்கும் வேகத்தில் வீசவைக்கும் ஹம்மிங் பறவைகளோ, அல்லது நீர்வெளிகளில் படபடவென தன் சிறகுகளை அடித்துக்கொள்ளும் வாத்துக்களையோ, அல்லது விழுந்துபோன ஆஸ்பன் மரத்தைச்சுற்றி வரும் எல்க் மானின் இளம் குட்டியையோ, இவற்றில் எதை ஒன்றையையும் விடுவது என்பது மனதிற்கு மிக மிகக் கடினமேயாகும்.

எல்க் மான்

Elk Posted by Hello

அன்னம்

Swan Posted by Hello

உறைபனிக்கு நடுவே நீர்வீழ்ச்சி

Falls Posted by Hello

முற்றும்.

இதுவரை 'நேஷனல் ஜியோகிராபிக்' பத்திரிக்கையில் அலெக்ஸ்ஸாண்டர் ஃபுல்லர் என்பவர் 'அளவிடமுடியா பரிசுகள்' என்ற தலைப்பில் எழுதி வெளிவந்த ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கம் படித்தீர்.
இது குளிர்காலத்தின் இறுதியில் யெல்லோஸ்டோனைப்பற்றிய கட்டுரை. மற்ற காலங்களில் யோல்லோஸ்டோன் போனீர்கள்லானால், இந்தக்கட்டுரையில் விளக்கியதைக்காட்டிலும் வேறு உலகததைக்காண்பீர்!

கடந்த பகுதிகளின் சுட்டிகள்
பகுதி 1
பகுதி 2
பகுதி 3

3 comments:

  1. ஜீவா,
    நிழற்படங்கள் மிக அருமை, நீங்கள் எடுத்ததா ?

    ReplyDelete
  2. முத்து,
    படங்கள் என்னுடயதில்லை. படங்களும (கடைசி ஒன்றைத் தவிர) மூலக்கட்டுரையைச் சார்ந்தவை.
    உண்மையில், யெல்லோஸ்டோனுக்கு நான் நேரில் சென்றதில்லை.
    எல்லாவற்றுக்கும் ஒரு காலம் வர வேண்டாமா?

    கட்டுரை ஆசிரியர் சொல்வதுபோல் எழுதப்பட்ட கட்டுரையை மொழிபெயர்ப்பதில் ஒரு சுகம் என்னவென்றால் - அவர் 'நான்' என்று சொல்லும் இடத்தில் நாமும் 'நான்' போட்டுக்கொள்ளலாம்!

    ReplyDelete
  3. ///மொழிபெயர்ப்பதில் ஒரு சுகம் என்னவென்றால் - அவர் 'நான்' என்று சொல்லும் இடத்தில் நாமும் 'நான்' போட்டுக்கொள்ளலாம்!//

    :-) :-)

    ReplyDelete