Monday, August 25, 2008

தலையங்கம் : ஹலோ ஹலோ சுகமா?

ஹலோ ஹலோ சுகமா?, ஆமா நீங்க நலமா?

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, உங்கள் நலத்தை நாடியே வந்தேன் நானும், சொல்வீர் நலமாய் நன்றேயென என்றும்.

இந்த நட்சத்திர வாரத்தில் *என் வாசகத்தில்* வரும் இடுகைகளை தமிழ்மணம் தன் முன் பக்கத்தில் நிலை நிறுத்தப்போகிறதால் தானுங்க இந்த சிறப்புத் தலையங்கம்!

முன்னிறுத்தும் தமிழ்மணத்திற்கு நன்றிகள்!

மூன்று நாட்களுக்கு முன்னால்தான் இந்த அறிவிப்பு வந்ததால், தயார் செய்து கொள்ள நேரம் அதிகமில்லை. (நாமளும் டிஸ்கி போட்டாச்சு இல்லை!)
ஆதனால் நீண்ட அல்லது ஆழ்ந்து அலசும் பதிவுகள் தர இயலுமா தெரியவில்லை. (இல்லாவிட்டால் மட்டும்... என்றொரு குரல் கேட்கிறது!)
அதனால் என்ன, உங்களுக்குத்தான் இவ்வலையின் முகவரி தெரியுமே, இவ்வாரம் இலாவிடினும் இன்னொருநாள் இருக்கிறதே!. (இன்னொரு நாளுக்கு அப்புறம் இன்னொருநாளும் இருக்கிறதே...)
இவ்வாரம், அவ்வப்போது தோன்றியதை எழுதப்போகிறேன். (தோன்றாததை?)
எப்போதும் போல வாசகராகிய உங்கள் ஆதரவை எதிர்பார்த்து. (ஆஹா!)
இசை, இலக்கியம், அரசியல், அமெரிக்க அனுபவங்கள் போன்றவற்றை தொட்டுப்போகலாம் எனவிருக்கிறேன். (அப்போ மீதியெல்லாம் அடுத்த வாரம்...?)
இந்த வாரம் வளரப்போவது புல்லா, செடியா தெரியவில்லை. எனினும் தாங்களும் வந்து தண்ணீர் விடவும்!

மூன்று ஆண்டுகளாக இந்த தமிழ்ப் பதிவுகளை பதித்து வந்தாலும், பதிவுலக குழுக்களுக்கு எப்போதும் அன்னியனே. அன்றாடம் பதிவர்களின் திறமையைக் கண்டு ஆழும் வியப்பிலிருந்தே இன்னமும் மீளவில்லை. அதே சமயம், சிறு சிறு முயற்சிகளாய், பதிவர்கள் செய்யும் பயனுள்ள பதிவுகள், நாளையை நல்லதொரு பாதையில் இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. பத்திரிக்கை உலகத்தையும், பதிவர் உலகம் வியப்பில் ஆழ்த்தி நின்று, திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது. வியாபார உலகில் ஆழ்ந்துபோன அவர்களும், பதிவர்களின் ஆக்கபூர்வமான படைப்புகளைப் பார்த்துக் கற்றுக் கொண்டால் சரி.

ஐந்து ஆண்டுகளாக நம் நாட்டில், கணிணி மென்பொருள் துறையில் ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்புகளாலும், அதனால் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தாலும், எதோ ஒட்டுமொத்தமாய், நம் நாடே மேலான தரத்திற்கு உயர்ந்து விட்டதாக, நம்மிடம் ஒரு பரவலான எண்ணத்தினைப் பார்க்க முடிந்தது. ஆனால் உண்மையான நிலை என்ன? ஒலிம்பிக் பந்தய முடிவுகளே அதனை பறை சாற்றுகிறது. நமது அண்டை நாடான சீனா அத்தனை பதக்கங்களை அள்ளிக் குவிக்கையில் நம்மால் மூன்றே முடிந்தது. என்றாலும், மூன்று பதக்கங்களை வென்று இந்திய விளையாட்டிற்கு புத்துயிர் ஊட்டியிருக்கும் நமது அணியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

பனிரெண்டு ஆண்டுகளில் - 2020 ஆம் ஆண்டு வந்து விடும். கனவுகளுடன் நல்ல திட்டங்கள் தீட்டப்பட்டு, இந்தியாவை எல்லா துறையிலும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக பார்க்க வேண்டும். வல்லரசாக கோலோச்ச வேண்டிய அவசியமில்லை. நல்லரசாய் நாட்டு மக்கள் மன நிறைவு பெற்று வாழும் நாள் வரை, அந்த முன்னேற்றத்திற்காக எழுதிக் கொண்டே இருப்போம்.

வாழிய பாரத மணித்திருநாடு!
ஜெய் ஹிந்த்!

41 comments:

 1. அடுத்தடுத்த வாரங்களில் ஆன்மீக செம்மல்கள்... வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. நல்வரவு நட்சத்திரமே!!!!

  ReplyDelete
 3. நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 4. நட்சத்திரமா ஜொலிக்கறவங்களுக்கு புதுசா ஒரு நட்சத்திர அறிமுகம் !
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. ஆன்மிகம் தொடர்பாக நிறைய எதிர்பார்ப்புக்களுடன் காத்திருக்கிறேன் !


  நட்சத்திர வாரத்தில் கலக்கப்போகும் பதிவுகளுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் ஜீவா... :)

  ReplyDelete
 7. அட்டகாசமான ஆரம்பம்.
  எதிர்பார்ப்புகள் கூடுகின்றன.
  தொடருங்கள்.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. நட்சத்திர வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 9. //பதிவுலக குழுக்களுக்கு எப்போதும் அன்னியனே.//

  அப்டியா??!!

  //பதிவர்களின் திறமையைக் கண்டு ழும் வியப்பிலிருந்தே இன்னமும் மீளவில்லை//

  மொதல்ல எழுத்துத் தப்பா வாசிச்சிட்டேன்!

  ReplyDelete
 10. //இனிய வாழ்த்துக்கள்//

  //பனிரெண்டு ஆண்டுகளில் - 2020 ஆம் ஆண்டு வந்து விடும். கனவுகளுடன் நல்ல திட்டங்கள் தீட்டப்பட்டு, இந்தியாவை எல்லா துறையிலும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக பார்க்க வேண்டும். வல்லரசாக கோலோச்ச வேண்டிய அவசியமில்லை. நல்லரசாய் நாட்டு மக்கள் மன நிறைவு பெற்று வாழும் நாள் வரை, அந்த முன்னேற்றத்திற்காக எழுதிக் கொண்டே இருப்போம்.//

  உங்கள் ஆசை நிறைவேறட்டும்.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் ஜீவா!

  @தருமி, நானும்.......!

  ReplyDelete
 13. வாழ்த்துகள் ஜீவா. தோன்றியதை எல்லாம் எழுதுங்கள். :-)

  ReplyDelete
 14. சும்மா அடிச்சி விளையாடுங்க.

  ReplyDelete
 15. எப்போவும் போல் சிறப்பான பதிவுகளையே தருவீர்கள், நட்சத்திர வாரவாழ்த்துகள் ஜீவா.

  ReplyDelete
 16. வாருங்கள் வரவேற்கிறேன் ஜீவா

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் ஜீவா ஐயா. வருக, தமிழ்மண துருவ நட்சத்திரமாக ஜொலிக்க பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 18. தொடர்ந்து கலக்க வாழ்த்துகள் ஜீவா!

  ReplyDelete
 19. அனைவரின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் அன்பு கலந்த நன்றிகள்.

  ReplyDelete
 20. இப்போ காலையில் தான் நட்சத்திரத்தைப் பார்த்தேன்! :)

  நட்சத்திர வாழ்த்த்துக்கள் ஜீவா! கலக்குங்க வாரம் முழுதும்!

  ReplyDelete
 21. ஆன்மீக வாரம் இல்லை! ஆன்மீக Fortnight! ஆன்மீகப் பட்சம்-ன்னு இல்ல ஆயிரிச்சி தமிழ்மணத்துக்கு! அருமை அருமை!

  ReplyDelete
 22. தமிழிசைப் பதிவு ஒன்னு கட்டாயம் தேவை!
  அப்படியே ஆத்ம போதம், பாரதி, முருகன், வள்ளலார்/ரமணர்!
  பட்டியல்-ல மக்கள் வந்து நேயர் விருப்பம் சேருங்கப்பா! ஜீவா-வை அவ்வளவு சுலபமா விட்டுறாதீங்க! :)

  ReplyDelete
 23. //பிறந்த ஊர்: காஞ்சிபுரம்//

  ஆகா...
  நீங்களூம் KTM ஆ?
  காஞ்சித் தலை மகனா?
  கலக்கல்!

  வாருங்க ஊர்ஸே வாருங்க! கீழ ராஜ வீதியில் இருந்து தெய்வா பஸ்ஸைப் பிடிச்சி வாழைப்பந்தல் கிராமம் வந்து சேருங்க! :)

  ReplyDelete
 24. //சமீபத்திய செய்தி : அப்பாவானது//

  சிறப்பு வாழ்த்துக்கள் ஜீவா! :))

  ReplyDelete
 25. //சமீபத்திய செய்தி : அப்பாவானது//

  அப்போ நட்சத்திரம் நீங்க இல்ல! :))
  குட்டி நட்சத்திரம் தான் நட்சத்திரம்!

  ReplyDelete
 26. வாங்க KRS,
  தமிழிசைப் பதிவு ஒன்று கட்டாயம் உண்டு.
  /ஆத்ம போதம், பாரதி, முருகன், வள்ளலார்/ரமணர்!//
  இவையாவும் இப்போது கணக்கில் இல்லை, இருப்பினும் முயல்கிறேன்!

  வாழைப்பந்தல் எந்த மாவட்டம் KRS? செய்யாறும், பாலாறும் சேரும் இடம் என முன்பொருமுறை குறிப்பிட்டது நினைவிருக்கிறது.

  //பட்டியல்-ல மக்கள் வந்து நேயர் விருப்பம் சேருங்கப்பா! //
  நானே வழிமொழிகிறேன்!
  நேரம் கிடைத்தால் நிறைவேற்றுகிறேன்.
  வட ஆற்காடு மாவட்டத்தில் செய்யார் ஊருக்கு அருகே - வாழ்குடை கிராமம் - எங்கள் தாத்தாவின் ஊர்.

  ReplyDelete
 27. //குட்டி நட்சத்திரம் தான் நட்சத்திரம்!//
  ஆம், கே.ஆர்.எஸ்! குட்டியே நட்சத்திரம்.
  அதனாலே, இந்த ஆன்மீகப் பதிவெல்லாம் விட்டுவிட்டு மழலைப் பதிவு இடலாம் என இருக்கிறேன், என்ன சொல்லறீங்க?
  இந்தப் பதிவை நீங்க பார்க்கலையோ?

  ReplyDelete
 28. ஜீவா,

  அருமையான தொடக்கம். நட்சத்திர வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்க.

  ReplyDelete
 29. நட்சத்திர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. @தமிழ்பிரியன்,
  சென்ற வாரம்தான் செம்மல், இந்த வாரம் பொம்மை!

  @ஆயில்யன்,
  ஆன்மீகம் என்று தனியாக இடம் பெறாவிட்ட்டாலும், எல்லாவிற்றிலும் ஆன்மிகம் இருக்கில்லையா!

  @தருமி,
  நெடில், குறிலானால் குழப்பம்!
  அன்னியன் - ஏனெனில் நானாக குழுக்களில் இணைந்து செயலாற்றா சோம்பேறி!

  @மஞ்சூர் ராசா,
  நல்லது, கனவுகளும் நிறைவேறட்டும்.

  @குமரன்,
  தோன்றியும், தோன்றாமல் இருப்பவனையும் எழுதலாமல்லவா!

  @வடுவூர் குமார்,
  நாமளாவது அடிச்சு விளையாடணும், அவங்க சீக்கிரம் அவுட் ஆயிடறாங்க!

  @கீதாம்மா,
  முயல்கிறேன்.

  மற்றும் துளசி மேடம், சுப்பையா வாத்தியார், கபீரன்பன், மதுரையம்பதி, ஜீவி ஐயா, சந்தனமுல்லை, மஞ்சூர் ராசா, திகழ்மிளிர், வடுவூர் குமார், கானா பிரபா, கைலாசி, கவிநயா, சதங்கா, மங்களூர் சிவா ஆகியோரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள் ஜீவா.
  நட்சத்திரம் குட்டியைப் பற்றி இருந்தாலும் பெரும் ஆளைப் பற்றி இருந்தாலும் நன்றாகவே இருக்கும் என்று நம்புகிறேன். புது அப்பாவுக்கு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 32. நட்சத்திர வாழ்த்துகள் ஜீவா!

  குட்டி நட்சத்திரம்(ங்கள்) பற்றி, தமிழிசை (கட்டாயம்), பொதுவான சமய நோக்கு (இன்றைய பதிவு பார்த்தேன்), ஒரு காமெடி பதிவு (முன்னாடியே சொன்னா, கும்மி அடிச்சிடுவோம்ல, இல்ல கீதாம்மா மாதிரி பஜனை தான் செய்யணும்னா, அதுவும் நடத்திடுவோம்!) அப்படின்னு இந்த நேயர் விருப்பம்.

  ReplyDelete
 33. அன்பின் ஜீவா,

  நடசத்திரமானதற்கு நல்வாழ்த்துகள்

  அப்பாவானதற்கு அன்பான வாழ்த்துகள்

  கலக்குக வழக்கம் போல்

  ReplyDelete
 34. //வாழைப்பந்தல் எந்த மாவட்டம் KRS? செய்யாறும், பாலாறும் சேரும் இடம் என முன்பொருமுறை குறிப்பிட்டது நினைவிருக்கிறது//

  வாழைப்பந்தல் இப்போது வேலூர் மாவட்ட ஆட்சிக்கு உட்பட்டு வருகிறது ஜீவா; திமிரி ஒன்றியம்!
  மொதல்ல காஞ்சிபுரம் மாவட்டத்திலும், கொஞ்ச நாள் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டத்திலும் இருந்தது!

  ஆனால் செய்யாறு தான் அருகில் உள்ள பெரிய டவுன். காஞ்சிபுரம், செய்யாறு - இங்கிருந்து தான் பேருந்து வசதிகள் அதிகம்!

  செய்யாறு தலம் தான் திருவத்திபுரம்! சம்பந்தர் ஆண்பனைகளைப் பெண்பனைகளாக மாற்றிய இடம்!

  வாழ்குடையா? வாழ்குடை ஏரி ரொம்ப பெருசு ஆச்சே!

  ReplyDelete
 35. //ஆம், கே.ஆர்.எஸ்! குட்டியே நட்சத்திரம்.
  அதனாலே, இந்த ஆன்மீகப் பதிவெல்லாம் விட்டுவிட்டு மழலைப் பதிவு இடலாம் என இருக்கிறேன், என்ன சொல்லறீங்க?//

  சூப்பர்
  மழலையின் வாரா மந்திரம் உளவோ?
  :)

  நானும் பிள்ளைத் தமிழ் வலைப்பூவில் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு! நல்ல வேளை நினைவுபடுத்துனீங்க!

  //இந்தப் பதிவை நீங்க பார்க்கலையோ?//

  ஹிஹி!

  ஆடியில் உதித்த அமிழ்தே அன்ன ஸ்வேதிகாவுக்கு இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 36. நெடுநாள் கழித்து தங்கள் வாழ்த்துக்களைப் பெற்றதில் மகிழ்ச்சி சீனா ஐயா!

  ReplyDelete
 37. வாழ்த்துக்களுக்கு நன்றி வல்லியம்மா!

  ReplyDelete
 38. வாங்க கெக்கேபிக்குணி மேடம்,
  தங்கள் நேயர் விருப்பம் noted!

  ReplyDelete
 39. செய்யாறு பஸ் நிலையம் நன்றாக ஞாபகம் இருக்கிறது KRS, அங்கே ஒரு சோடா factory இருக்கும் அந்த நாளில்! - இப்ப இருக்க தெரியலை.

  ReplyDelete
 40. வாழ்த்துக்கள்.

  கலக்குங்க.

  ReplyDelete
 41. வாழ்த்துக்களுக்கு நன்றி, விருபாவின் வித்தகரே!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails