குழந்தைக்கு 'சுவேதிகா' எனப் பெயர் சூட்டியுள்ளோம்.
சுவேதம் என்னும் சொல்லுக்கு, 'வெண்மை', 'தூய்மை' என்பன பொருள். ஒளிரும் வெண்மையான பாதரசம், என்ற பொருளில் திருமந்திரச் செய்யுள் ஒன்றிலும் குறிப்பிருக்கிறது.
திரு'வெண்'காட்டில் உறையும் ஈசன் சுவேதாரண்யேஸ்வரர் பெயரை நினைவூட்டும் வண்ணம் பெயர் அமைந்துள்ளது.
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினைவுஎன்னும் திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகப்பாடல் எம்வாய் மொழிந்து,
ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே
எல்லாம் வல்ல ஈசன் கருணையினால் குழந்தையும் எல்லா நிறைகளுடன் பிறந்துள்ளது.
என்னே ஈசன் கருணை, அவனுக்கு எத்துணை நன்றி நவில்வேன்?
ஆடி முதல்நாளில் ஆடிய பாதத்தான்
ஆதி சிதம்பர நாதன் அருளில்
உதித்திட்ட நித்திலம் ஈதென் மதியம்
நிதிஸ்ரீ சுவேதிகா வாம்.
கருணை மழைபொழி வெண்காட்டு ஈசன்
அருணோத யம்போல் சுவேத அருள்பொழிந்து
அன்பனுக்கு ஆடி முதல்நாளில் ஈந்துவந்த
என்செல்வம் வெண்மதி யாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
திருச்சிற்றம்பலம்.
தொடர்புடைய இடுகை:
திருவெண்காட்டு தேவாரப் பதிகம்
வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் செல்வத்திருநாயகி(நிதிஷ்ரி) நல்ல ஆயுளும் ஆரோக்யமும் கடவுள் அருளும் பெற்று வாழ வாழ்த்துக்கள்
ReplyDelete//முன்பெல்லாம் நாமகரணமும் புண்ணியாவாசனமும் தனித்தனியே நடந்ததாகத் தெரிகிறது. இப்போது இரண்டையும் ஒரே நாளில் முடிக்கிறோம்!
ReplyDeleteஎனக்கு நல்ல தோதான நேரத்தில் தான் இந்த இடுகைகள் வருகின்றன//
வாழ்த்துகள் ஜீவா, இப்போத் தான் திவாவின் பதிவிலே உங்க பின்னூட்டத்தைப் பார்த்தேன், இங்கே வந்தால் நல்ல விஷயம் காதிலே விழுகின்றது. ஸ்வேதாவிற்கு எங்கள் ஆசிகளும், வாழ்த்துகளும். உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் வாழ்த்துகள், ஆசிகள். தாயும், சேயும் பூரண ஆரோக்கியத்துடன் இருக்கப் பிரார்த்திக்கின்றேன்.
HAPPY BIRTHDAY SWETHIKA.
ReplyDeleteCONGRATS TO YOUR POUD PARENTS
வாழ்த்துகள் ஜீவா!
ReplyDeleteஅன்பின் ஜீவா,
ReplyDeleteபால் வெண்ணீறு அணியும் பரமனின் அருள் என்றும் தங்கள் புத்ரி சுவேதிகாவிற்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அருள வேண்டும் என்று சிவசக்தியிடம் பிரார்த்திக்கின்றோம்.
வாழ்த்துக்கள்.
சு.முருகானந்தம்
வாழ்த்துக்கள் ஜீவா! குழந்தைக்கு மனப்பூர்வ ஆசீர்வாதங்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜீவா, நிதிஸ்ரீ சுவேதிகா.. குருவருளும் திருவருளும் பெற்று எல்லா நலன்களோடும் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் மகளுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதலில் எங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளுங்கள் ஜீவா. முதல் குழந்தையா இரண்டாம் குழந்தையா?
ReplyDeleteசுவேதிகா என்றால் வெண்மை, தூய்மை என்றாற் போல் புனிதமான வேள்விகளின் இருப்பிடம், புனிதமான வேதங்களின் இருப்பிடம் என்றும் பொருள் வரும். நல்ல பெயர்.
வாழ்த்துக்கள் ஜீவா!
ReplyDeleteதிருவெண்காடு திருத்தல அருள்மிகு பிரம்மவித்யா நாயகி சமேத சுவேதாரண்யேஸ்வரர் அருளால் உங்கள் திருச்செல்வி ஸ்ரீநிதி சுவேதிகாவும், குடும்பத்தினரும் எல்லா நலன்களும் பெற்று நீடுவாழ ஆசிர்வதிக்கிறோம்.
குழந்தை பிறந்ததும், உங்களிடமிருந்து பிறந்த வெண்பாக்களும் மிகச் சிறப்பு.
வாழ்த்துக்கள்.
உங்கள் வீட்டில் புதிதாய்ப் பிறந்துள்ள பூங்குவியல், இறையருள் என்றும் பெற்று, வாழ்வெலாம் இன்பம் உற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன்!
ReplyDeleteஅன்பர்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், ஆசிகளும் பலப்பல நன்றிகள்.
ReplyDeleteஸ்ரீநிதி - தங்கள் பேத்திக்கு, எங்கள் பெற்றோர் வைத்த பெயர். நாங்கள் வைத்த பெயர் சுவேதிகா.
ஆங்கிலத்திலும் Suvethika என்றே வழங்குகிறோம். (Swethika அல்ல)
@குமரன்:
இதுவே எங்கள் முதல் குழந்தை!. கூடுதல் பெயர் விளக்கங்களுக்கு நன்றிகள்.
வாழ்த்துகள் ஜீவா! தங்கள் புதுவரவாகிய மகளுக்கும் வெண்பாக்களுக்கும்.
ReplyDeleteஅன்புள்ள ஜீவா
ReplyDeleteவாழ்த்துகள்.
//.... நிதிஸ்ரீ சுவேதிகா.. குருவருளும் திருவருளும் பெற்று எல்லா நலன்களோடும் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள். //
கிருத்திகா சொன்னதுக்கு ஒரு ரிபீட்.
வாங்க அமுதா மற்றும் கபீரன்பன்,
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
நல்வாழ்த்துக்கள் ஜீவா. குட்டி பாப்பா சுவேதிகாவிற்கு என் அன்பு முத்தங்கள். பிரார்த்தனைகளும்.
ReplyDeleteமுதற்கண், முதல் வரவுக்கு எங்கள் ஆசிகள்.
ReplyDeleteஸ்வேதம் என்றால் வெண்மை.
சுவேதிகா என்னும் பெயர் இன்னமும் பொருள் உடைத்து.
சு என்னும் சொல் நல்ல என்னும் பொருள் கொள்ளும்.
வேதிகா என்ற சொல் வேதங்களை உள்ளடக்கிய அல்லது வேதங்களை அறிந்த என்றும்
பொருள் கொள்ளலாம்.
நல்லதோர் நான்மறைகளையும் அறிபவள் .
அழகான பெயர். அதிருஷ்டமான பெயர்.
எங்கள் இதய பூர்வமான ஆசிகள்.
www.youtube.com/PichuPeran
இன்று "ஆடி முதல் நாளில் " எனும் துவங்கும் உங்களது வெண்பா
அடாணா ராகத்தில் அமைந்துள்ளது.
Please wait for a couple of hours
சுப்பு தாத்தா
மீ. பாட்டி.
http://meenasury.blogspot.com
@ரமேஷ், தங்கள் அன்புக்கு நன்றி.
ReplyDelete@சுப்புரத்தினம் ஐயா,
/சு என்னும் சொல் நல்ல என்னும் பொருள் கொள்ளும்.//
இதைக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றிகள். இதனாலேயே, ஸ்வேதிகா, என்பதை விட சுவேதிகா எனக் கொண்டோம். தங்கள் ஆசிகளுக்கும் மிக்க நன்றிகள்.
தாத்தாவிற்கு சுவேதிகாவின் பிரியமான நன்றிகள். தாத்தா அருமையாக பாட்டு படித்திருக்கிறாராம், அடாணா ராகத்தில்.
சூரி சாரின் பாடல் பதிவுக்கான நேரடி சுட்டி இங்கே:
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=BGZHBXU4IN8
நான்மறைகளையும் அறிந்த நல்லவளுக்கு நல்லாசிகள். பெற்றோருக்கு வாழ்த்துக்களும்!
ReplyDeleteஜீவா அவர்கள் அதிருஷ்டக்காரர்.
ReplyDeleteசரஸ்வதி தேவியே அவர் வீட்டில் ஜனித்திருக்கிறார்.
முதல் பின்னூட்டம் இட்ட பின் நினைவு வந்தது.
சம்ஸ்கிருத வ்யாக்ருண கர்த்தா பண்டர்கர் பிரகாரம்
vidh vEdh to know
வித் என்னும் சொல்லிருந்து வேத் எனும் சொல் வந்திருக்கிறது.
வித் என்பதற்கு முதற்பொருள் அறிதல்.
ஸு என்பதற்கு " நல்லவை " (noun ) அல்லது " நல்ல " ( adjective )
என்றால்,
ஸுவேதிகா என்றால்
நல்லவற்றை அறிந்தவள் என்னும்
அப்படி ஆனவளான நான்முகிதனையும்
குறிக்கும் எனத் தெளிந்தேன்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
@ கெக்கேபிக்குணி மேடம்,
ReplyDeleteநல்லாசிகளுக்கு நன்றிகள்!
@சுப்புரத்தினம் ஐயா,
ReplyDeleteவேத விளக்கங்களை தாங்கள் சொல்லிக் கேட்டு அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
இன்றைக்கு சரஸ்வதி தேவி எங்கள் வீட்டில், உன்னி கிருஷ்ணனின் சாருகேசி ஆலாபனையைக் கேட்டவாறே உறங்கி விட்டார்!
ஜீவா,
ReplyDeleteவாழ்வில் எல்லாம் பெற்று அனைவரும் போற்றும்படி வர சுவேதிக்காவிற்கு வாழ்த்துக்கள். பெற்றோர் உங்களுக்கும் சேர்த்து தான்.
நன்றி சதங்கா!
ReplyDeleteஅன்பின் ஜீவா
ReplyDeleteஅருமை மகள் ஸ்ரீநிதி என்ற சுவேதிகா விற்கு எங்களது நல்லாசிகளும் நல்வாழ்த்துகளும். வாழ்வில் எல்லா நலனும் பெற்று பெற்றோரின் நல்லாசிகளுடன் நல்வாழ்வு வாழ நல்வாழ்த்துகள்.
அன்பின் ஜீவா
ReplyDeleteஅருமை மகள் ஸ்ரீநிதி என்ற சுவேதிகா விற்கு எங்களது நல்லாசிகளும் நல்வாழ்த்துகளும். வாழ்வில் எல்லா நலனும் பெற்று பெற்றோரின் நல்லாசிகளுடன் நல்வாழ்வு வாழ நல்வாழ்த்துகள்.
எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteகிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பு இந்தப் பதிவினைப் பார்த்தவுடன், வாழ்த்துச் சொல்ல எண்ணினேன். எப்படியோ மறந்துவிட்டது.
மீண்டும் வாழ்த்துக்களுடன், சிமுலேஷன்
ஆடியில் உதித்த அமிழ்தே அன்ன ஸ்வேதிகாவுக்கு இனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் திருமதி & திரு ஜீவா!
பதிவு இனிது பின்னூட்டம் இனிது என்ப...மழலை சொல் கேளாதவர்-னு மாத்திருவமா? :)))
ஜீவா,
ReplyDeleteஎப்படியோ இந்த இடுகையை பார்க்காது விட்டிருக்கிறேன்.
உங்களுக்கும், உங்கள் துணைவியாருக்கும் வாழ்த்துக்கள். குழந்தை ஸ்வேதாவுக்கு ஆசிகள் :)
பலநாட்கள் முன்பு சாடில் பேசிக்கொண்டிருந்த போது சொன்னது நினைவில் வந்தது...பெயரும் கொஞ்சம் மாறியிருக்கிறது.. :)
ஸ்வேதிகா அப்படிங்கறதை ஸ்வேதான்னு முந்தைய பின்னூட்டத்தில் சொல்லிட்டேன் மன்னிக்கவும் :)
ReplyDeleteவாங்க மௌலி சார்,
ReplyDeleteநான் அப்போதே தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் தட்டிவிட வேண்டும் என எண்ணியிருந்தேன் - கை ஒழியாமலே போய்விட்டது, மன்னிக்கவும்.
அப்புறம் பெயரும் அப்போதிலிருந்து மாறி விட்டது. இறுதியில் இந்தப்பெயரையே முடிவு செய்து விட்டோம்.
தங்கள் வாழ்த்துக்களுக்க்ய் நன்றிகள்.