Thursday, July 31, 2008

அல்லல் வினைத் தொலைக்கும் தில்லைப்பதிக்கு நேரோ?

ந்த இடுகையில் தமிழிசையின் மும்மூர்த்திகள் என நாம் பெருமையுடன் அழைக்கும் மூவரில் ஒருவர், மாரிமுத்தாப்பிள்ளை அவர்களின் பாடலில் ஒன்று பார்க்கவிருக்கிறோம். 'தமிழ் மூவர்' என்றும் 'தமிழிசை மும்மூர்த்திகள்' என்றும் வழங்கப்படுவோர் :
முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவியார் - ஆகியோராவர். இவர்களோடு, பாபவினாசம் முதலியார் அவர்களையும் சேர்த்து 'தமிழிசை நால்வர்' எனவும் வழங்குவதுண்டு.

முத்துத்தாண்டவர் தில்லை சிதம்பரநாதனை ஏராளமான பாடல்களில் பாடி இருக்கிறார். இன்றைக்கும் நம் பாடல்களில் வழங்கி வரும் 'பல்லவி - அனுபல்லவி - சரணம்', என்கிற முறையை முதன்முதனில் தமிழில் இவர் இயற்றிய பாடல்களில் பார்க்கிறபடியால், இவரே 'கிருதி' முறைக்கு முன்னோடி என்பர். குறிப்பிட்ட தாளத்தில் பாடல்களை இசைப்பதும் இவர் காலத்தில், வழக்கில் நிலைத்தது. தமிழிசைத் தலைநகரான 'சீர்காழி' யில் வாழ்ந்தவர் இவர்.

முத்துத்தாண்டவரின் பாடல்களில் நான் கேட்டுச் சுவைத்தவையில் சில:
சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் - ஆந்தோளிகா
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை - மாயாமாளவகௌளை
ஈசனே கோடி சூரிய பிராகசனே - நளினகாந்தி
தரிசித்தளவில் - லதாங்கி

மாரிமுத்தாப்பிள்ளை அவர்களும் தில்லை நடராஜப் பெருமான் மீது பல பாடல்களை இயற்றியுள்ளார். இவரது காலம் 1712 முதல் 1787 வரையாகும். இவரது தில்லைப் பாடல் தொகுதிக்குப் பெயர் 'புலியூர் வெண்பா' ஆகும்.

இவர் இயற்றிய பாடல்களில் சில:
காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே - யதுகுல காம்போஜி
இன்னமும் ஒரு தலம் இருக்கும் - சுருட்டி

இந்த இடுகையில் நாம் கேட்கப்போகும் 'இன்னமும் ஒரு தலம்' பாடலில், சிதம்பரத் தலத்தின் பெருமையை எங்கனம் எடுத்துரைக்கிறார் பார்ப்போம். எத்தனைத் தலம் இருந்தாலும், சிவகாமி அன்பில் உறை சிற்சபை வாசனின் தில்லைத் தலத்திற்கு ஈடான தலமுண்டோ என வினா எழுப்பி, அதற்கான விடையும் தருகிறார். வெண்மதியும், தாமரையும், கற்பக மரமும் எப்படித் தனித்துவம் வாய்ந்ததாய் அவனியிலே திகழ்கிறதோ, அப்படியே, புண்டரீகபுரம் எனச்சொல்லப்படும் தில்லைச் சிதம்பரம் என்கிறார்.

விருத்தம்:
கற்பூரமும்....

உப்பும் கற்பூரமும் ஒன்றைப்போல் இருந்தாலும்

ஊரெங்கும் பெரிதாய் கற்பூரம் தனைச் சொல்வாரே...!

அப்படிப்போல அனேகத்தலம் இருந்தாலும், அந்த

அல்லல் வினைத் தொலைக்கும் தில்லைப்பதிக்கு நேரோ...?

எடுப்பு:
இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே,

ஏன் மலைக்கிறாய் மனமே?


தொடுப்பு:

சொன்ன சொன்ன தலங்கள் எங்கும் ஓடிக்களைத்து

சோதித்தறிந்தால், இந்த ஆதிசிதம்பரம் போல்

(இன்னமும் ஒரு தலம்...)

முடிப்பு:
விண்ணுலகத்தில் நீ(ள்)நிலமெலாம் கூடினும்

வெண்ணிறமாம் ஒரு தண்மதி முன்னில்லாது

தண்ணுலவிய அல்லித் திரளாய்ப் பூத்தாலும்

ஒருதாமரைக்கு ஒவ்வாது

மண்ணுலகத்தில் உள்ள தருக்கள் அனைத்தும் கூடி

மருவுலவும் கற்பகத் தருவுக்கு இணை வராது

புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்

புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?
(இன்னமும் ஒரு தலம்...)


இங்கே இந்தப் பாடலை இசைப்பேரொளி திரு.சஞ்சய் சுப்ரமணியம் பாடிடக் கேட்கலாம்:அந்த கடைசி இரண்டு வரிகளை சஞ்சய் பாடிட எப்படியெல்லாம் மனம் இளகுகிறது! Hats off Sanjay!
*கண்டுசொல்ல வேறேது?* கண்ணுக்கினியனாய், கண் கண்ட தெய்வமாய் காலைத்தூக்கி ஆடும் கனகசபாபதிக்கு நேர் ஏதுவென நேர்ந்திடும் நம் மனம் நெகிழ்ந்திடுதே இப்பாடல் கேட்டு!

உசாத்துணை:
* திரு. வி. சுப்ரமணியம் - சுருதி இதழ்
* திரு.சேதுராமன் சுப்ரமணியன் - சென்னை ஆன்லைன்

19 comments:

 1. //உப்பும் கற்பூரமும் ஒன்றாய் இருந்தாலும்//

  உப்பும் கற்பூரமும் ஒன்றைப் போல் இருந்தாலும்

  ReplyDelete
 2. திருத்தியமைக்கு நன்றி சிபி, சரி செய்து விட்டேன்.

  ReplyDelete
 3. ஒவ்வொரு வரியும் அருமை. சஞ்சய் அவர்களின் குரல் இனிமை. பாடல் வரிகளின் பொருளுணர்ந்து குழைகிறது. நன்றி ஜீவா.

  ReplyDelete
 4. ஆமாங்க கவிநயா, வரிகளும், வாசிப்பும் தேனில் குழைத்தெடுத்தாற்போல் உள்ளது!

  ReplyDelete
 5. புண்டரீகபுரம்?
  அட தெரியாதே இதுவரை!

  ReplyDelete
 6. வெண்மதியும், தாமரையும், கற்பக மரமும் எப்படித் தனித்துவம் வாய்ந்ததாய் அவனியிலே திகழ்கிறதோ, அப்படியே, புண்டரீகபுரம் எனச்சொல்லப்படும் தில்லைச் சிதம்பரம் என்ற முத்துத் தாண்டவரின் அருமையான தமிழ் பாடலை பதிவிட்டதற்க்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 7. I think this song was composed by MarimuttA piLLai, which is what Sanjay announced in his mini-speech too. As Lakshman indicated in the yahoo group, the song by MMP has more caraNams. I don't think the same lines could have been used by both MT and MMP. It is a pity such gems got the light of the day only in the last few years.

  In the viruttam, I think the line should read "appaDippOla ettalam irundAlum" meaning "any other place" not "Ekattalam" which means "one place"

  As an aside, Cidambaram is known by numerous names and SIrgAzhi is known by 12 names (which you can find in the first 3 tirumuRais by tirugnAnasambhandar). I am giving some of the names below.

  சிதம்பரம்

  புலியூர், பெரும்பற்றப்புலியூர், தென்புலியூர், புலீச்சுரம், மன்று, அம்பலம், பொன்னம்பலம், இரண்மயகோசம், கோவில், தில்லைவனம், புண்டரீகம், சபா, புரம்  சீர்காழி

  காழி, புகலி, சண்பை, வேணுபுரம், சிரபுரம், தோணிபுரம், பிரமாபுரம், பூந்தராய், கழுமலம்

  ReplyDelete
 8. Thanks for the corrections, Sethuraman Sir, I will update the post accordingly, soon.

  ReplyDelete
 9. வாங்க திவா மற்றும் கைலாசி.
  ஒரு திருத்தம் - பாடலை இயற்றியது மாரிமுத்தாப்பிள்ளை எனத்தெரிகிறது, அதன்படி இடுகையை மாற்றி அமைத்துள்ளேன்.

  ReplyDelete
 10. சேதுராமன் சார்,
  இடுகையை மாற்றி அமைத்துள்ளேன்.
  தலத்தின் இதர் பெயர்களையும் வழங்கியமைக்கு நன்றி.

  ReplyDelete
 11. Lakshmanan Sir has provided the complete lines for this song:

  P: innamum oru sthalam irukkumenrorukkAlE En malaikkirAi manadE
  A: shonna shonna stalangaL engum ODik-kaLaittu shOdittadarindAl inda
  Adi cidambaram pOl
  C1: sharkkaraiyum tEn pAghum sariyAi niram peTrAlum sharkkarai ruci
  mAviliruppadu prayAsam
  murukkam shem-parattaiyum niram enrAlum nada murukkunil uNDO vAsam
  2: tarikkum vajrak-kallum tarippum ottirundAlum tarippait-taLLi
  vajram tanait-tarippadullAsam
  uraikkum sthala anantam taraikkuL irundiTTAlum umbar vandu tozhum
  ponnambalamE kailAsam
  3: uppum karpUramum onraip-pOlirundAlum Urengum periyadAik-
  karpUram tanai shollArO
  ib-bhuviyil evarkkum yOgyam tarum kAvikkErppadu saNNArO
  4: oppAri tAi viLangum deivIka gangai Atruk-kuvamai
  eDutturaippadu varkkazhiyATru nIrO
  appaDi pOl anEkam stalamirundAlum anda valla vinai tolaikkum tillai
  patikku nErO
  5: viNNulagattilum IninamellAm kUDi veNkai niramAm oru kaNmati
  munnillAdu
  taNNUlaviya valli tiraLAip-pUttAlum oru tAmaraik-kovvAdu
  6: maNNulagattiluLLa tarukkaLanaittum kUDimaruvulavum karpakat-
  taruvukkiNai varAdu
  puNNiya sthalangaL palavirundu naTEsan vAzhum puNDarIkapuram pOl
  kaNDu sholla vErEdu

  ReplyDelete
 12. Lakshman's version needs several word corrections. Some of the words don't make sense. For example:
  kaNamti ---> taNmathi (cool moon)
  saNNArO ----> ???
  Also: the line should read:
  viNNulakattu mIninamellAm kUDinum
  veNkai (?) niramAm oru taNmati mun nillAdu
  (All the stars in the skies together will not match the cool white moon in beauty and brightness)
  The "mIn inam" here stands for the cluster of stars.
  In the absence of the authentic Thamizh text it is difficult to get some of the words to mean what the composer intended.

  ReplyDelete
 13. I agree Sir,
  I wish dedicated researchers or the government takes up the job of excavating more authentic sources of revealing the original lyrics.
  Over years, they just get manifested to so many versions.
  I best we can do, is to keep writing about it and try to analyze further.
  Thanks for your efforts.

  ReplyDelete
 14. //mIninamellAm//

  "விண்ணுலகத்து நீநிலமெலாம் கூடினும்"
  என்பதற்கு பதிலாக
  "விண்ணுலகத்துமீன் நிலமெலாம் கூடினும்" - என்கிற பிரயோகம் நன்றாகத் தான் இருக்கிறது.
  ஆனால் எதற்கு விண்மீன் நிலத்தில் கூடுவதாக சொல்ல வேண்டும்? இத்தனைக்கும் அவர் வானத்தில் இருக்கும் வெண்மதியோடுதான் அதை ஒப்பிடுகிறார்.

  //ஒருதாமரைக்கு ஒவ்வாது//
  என்கிற வரிகளில்
  "தாமலரைக்கு ஒவ்வாது" என்பதாக சஞ்சய் பாடுகையில் கேட்கிறது. "தாமலர்" என்கிற சொல் திருப்புகழிலும் வருகிறது. ஆனால் விளக்கங்களைப் பார்த்தால், அவ்விடத்தில் தாமரையைக் குறிப்பதாகத் தெரியவில்லை. அங்கே ...தா மலர்... எனப்பிரித்திருக்கிறார்கள்.

  /appaDi pOl anEkam stalamirundAlum //
  அப்படிப்போல் "அனேகத்தலம்" இருந்தாலும்...
  இந்த இடம் சரியாக வருகிறது.

  ReplyDelete
 15. //புண்டரீகபுரம்?//
  சிதம்பரம் ஆலயத்தில் (கள்ளக்குறிச்சியிலும்), கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் தாயாருக்குப் பெயர் 'புண்டரீகவல்லித் தாயார்'!

  ReplyDelete
 16. >>விண்ணுலகத்துமீன் நிலமெலாம் கூடினும்" - என்கிற பிரயோகம் நன்றாகத் தான் இருக்கிறது.
  ஆனால் எதற்கு விண்மீன் நிலத்தில் கூடுவதாக சொல்ல வேண்டும்? இத்தனைக்கும் அவர் வானத்தில் இருக்கும் வெண்மதியோடுதான் அதை ஒப்பிடுகிறார்.<<

  I used the words "mIn inam ellAm" (mIn = stars; inam = group; ellam =all). What the composer implies here is that all the stars in the skies together would not equal the brightness and beauty of the moon. I don't imply the composer means the gathering of the stars on earth.

  >>//ஒருதாமரைக்கு ஒவ்வாது//
  என்கிற வரிகளில்
  "தாமலரைக்கு ஒவ்வாது" என்பதாக சஞ்சய் பாடுகையில் கேட்கிறது. "தாமலர்" என்கிற சொல் திருப்புகழிலும் வருகிறது. ஆனால் விளக்கங்களைப் பார்த்தால், அவ்விடத்தில் தாமரையைக் குறிப்பதாகத் தெரியவில்லை. அங்கே ...தா மலர்... எனப்பிரித்திருக்கிறார்கள்.<<

  I think Sanjay garbled the word here. It should be "tAmarai" only because the comparison is between "alli" (lilly in English) and "tAmarai" (lotus). While lilly is also pretty to look at it is just a distant and less glorious but more fecund (prolific) cousin of lotus.

  >>அப்படிப்போல அனேகத்தலம் இருந்தாலும்<<

  Here again my take is not "anEkattalam" but only "ettalam" for two reasons.
  1. If it is anEkattalam it is grammatically incorrect. It should be "anEkattalangaL" to denote plurality., poetic license not withstanding. Notice in the muDippu you find "talangaL pala" to denote plurality.
  2. Again there are only two items compared here. uppu and kaRpUram. Hence it should be "any other place" (ettalam)as opposed to tillaiyampadi.

  Sorry for being picky. Perhaps the words used by the composer were quite unrealted to what we are talking about here.

  ReplyDelete
 17. Thanks for explaining those Sethuraman Sir, It helps to understand alternative point of views.
  Now i see what you mean.

  ReplyDelete
 18. Since the composer's name has been corrected, an article about MMP can be read here: (The song "ennEramum oru kalait tUkki..." (tODi rAgam) is featured here).
  http://chennaionline.com/music/Thamizhsongs/2004/song27.asp

  ReplyDelete
 19. ஆகா, மாரிமுத்தாப்பிள்ளையின் இந்தப் பாடலைக் கேட்டதில்லையே, சுட்டிக்கு நன்றி சேதுராமன் சார்.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails