Wednesday, August 20, 2008

வள்ளலார் வழங்கும் இனிப்புக் கட்டி!

ரணி உய்ய அருட்பெரும்ஜோதியின் தனிப்பெரும் கருணையில் செய்ததொரு இனிப்பொன்று இருக்கு!

அது, இப்போதுதான் இளஞ்சூட்டில், இதமாக செய்திருக்கு!

நாவில் வைத்ததும் நற்சுவையில் இளகிடுமாம்,

சுவைக்க வாரும், மெய்யன்பர்களே!

சுருதி சேர்த்து இசைக்க வாரும், இசையன்பர்களே!
சங்கீத கலாநிதி திரு.மதுரை மணி ஐயர் அவர்களின் குரலில்:
தனித்தனி முக்கனி

எண்சீர் ஆசிரிய விருத்தம்:

தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்

சருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே

தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலும் தெங்கின்

தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி

இனித்தநறு நெய்அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்தசுவைக் கட்டியினும் இனிதிடுந்தெள் ளமுதே

அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே!

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே.

- இராமலிங்க வள்ளலார்

இப்படி யெல்லாம் எடுத்துச் சேர்த்துச் சேர்த்துச் செய்த இனிப்பைக் காட்டிலும் பன்மடங்கில் பெரிதாய் இனித்திடும் இனிப்பாய், பேரின்பப் பெரும்பேறாய் விளைந்திருக்கு, எங்கும் நிறைந்திருக்கு, எல்லாமுமாய் தெரிந்தும் தெரியாமல் மறைந்தும் நிறைந்திருக்கு. இப்பெரும் விந்தையை வள்ளல் வள்ளலாரைப்போல் உரை செய்தார் வெகு சிலரே. இவ்வுரையில் இவர் சொல்லும், தெள்ளமுதை, ஈசன் எனப்படும் பேரமுதை, அவனைப் பருகி இன்புற்று உரை செய்ததை, யாம் கேட்பதே என்ன இன்பம்! இதற்கனவே எம் யாக்கை இம்மை பெற்றதுவோ?

தெள்ளமுதே... தெள்....அமுதே... திகட்டா பேரமுதே...
சிற்சபையாம் பொற்சபையில் உலகம் உய்ய பொதுவில் நடம் ஆடும் பொன்னம்பலனே,
என் மயக்கம் அகல, உன் அடி மலரில் என் சொல்லாம், இக்கவியை அணியாய் அணிவித்தே அலங்காரம் செய்து பார்க்கின்றேனே, ஈதே பேரின்பம் தரும் இனிப்புக் கட்டி!

---------------------------------------------
இப்போ ஒரு கூடுதல் இனிப்புக் கட்டியும் கிட்டியிருக்கு!
நம்ம கே.ஆர்.எஸ் அவர்கள் பாட்டின் வரிகளுக்கு வரி வரியாய், விளக்கம் உரைத்திருக்கிறார்:

தனித்தனி முக்கனி பிழிந்து
=அதாச்சும் முக்கனிச் சாறையும் பிழிந்து, உடனே ஒன்னாச் சேத்துறக் கூடாதாம்!

வடித்தொன்றாக் கூட்டிச்
=தனித்தனியாக வடிக்கணும்! வடித்த பின் தான் ஒன்னாச் சேக்கணும்!

மாம்பழத்தில் நார் மிதக்கும், பலாவில் பிசின், இதோடு வாழையை எப்படிக் கலப்பது? நார் ஒட்டிக்கிட்டா உண்ணும் போது நல்லா இருக்காது! உறுத்தும்! அதனால் தனித்தனியா வடித்து, வடிகட்டி, பின்னர் மூனுத்தையும் கூட்டணும்! அதே போல முக்குணங்களையும் தனித்தனியா வடித்துத் தான் இறையருள் கூட்டணும்! ராஜசத்தோடு சத்வம் சேர்த்தால் போரில் வெல்ல முடியாது! அதான் தனித்தனி வடித்தல்!

சருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
=நாட்டுச் சர்க்கரை, வெல்லம் காய்ச்சும் போது எடுப்பது! கற்கண்டு பொடி = தூள் சர்க்கரை

தனித்த நறுந் தேன் பெய்து பசும்பாலும் தெங்கின்
=தனித்த தேன்=கொம்பத் தேன்=இது இனிப்பு மட்டுமல்ல! ருசியின்மை நீக்கும் மருந்தும் கூட, அதோடு கறந்த பசும்பால், தேங்காய்ப்பால்...

தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
=தேங்காய்ப் பால்-ன்ன உடனே அம்மா ஞாபகம் வந்திருச்சி! அம்மா சுடும் அப்பம்/தேங்காய்ப் பால்
பருப்பிடி=இடித்த பாசிப்பருப்பு

இனித்தநறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
=இவை எல்லாம் சேர்த்துக் காய்ச்சி, நெய் அளையணும்! சொல்லைக் கவனிங்க! அளையணும்! ஊத்தக் கூடாது!
தீய விடாமல் இளஞ்சூட்டில் இறக்கினால் தான் ஆறின பின் கெட்டிப்படும்! (மைசூர்பா புகழ் ஷைலஜா அக்கா கிட்ட எதுக்கு இளஞ்சூடு-ன்னு மேல் விளக்கம் கேளுங்க!)

எடுத்த சுவைக் கட்டியினும்
இனிதிடும் தெள் ளமுதே
= இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்து செஞ்ச இனிப்பை, கொஞ்சம் பிசகினாலும் சுவை மாறி, கடினப்பட்டுப் போகும் இனிப்பை..போல் இல்லாமல்

எளியோர்க்கு எளியனாய், அடைய எளியனாய், செய்ய எளிதாய் இருக்கிறான்! இருந்தாலும் அதை விட இனிப்பாயும் இருக்கிறான் இறைவன்!

அனித்தம் அறத் திருப் பொதுவில் விளங்கு நடத் தரசே!
=என் நிலையில்லாப் பிறவிச் சுழலை அறுப்பதற்கு என்றே பொதுவில் நடமிடும் அம்பலவாணப் பெருமான்!

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே
=அவன் ஆடும் குஞ்சிதபாதத்துக்கு, திருவடி மலருக்கே, மலர் சூட்டுகிறேன்! சொல்லால் புனைந்த அலங்கல் மாலையை அணிந்து, அநித்யமான பிறவி நீக்கி அருளே!

அருட்பெருஞ் ஜோதி!
தனிப்பெருங் கருணை!
திருச்சிற்றம்பலம்!
ஹரி ஓம்!

-------------------------------

19 comments:

  1. அடடா. என்ன சுவை.. என்ன இனிமை.. வள்ளலாரின் கவியலங்காரம் அருமை! நன்றி ஜீவா.

    ReplyDelete
  2. பள்ளிப்பருவத்தில் மனப்பாடம் செய்த பாடல். அபோதே வாயில ஜொள்ளு ஊறும்!

    ReplyDelete
  3. வாங்க கவிநயா.
    இனிப்பான காயமதில் எத்தனை சுவை தருவதாய் இருப்பினும் இம்மையின் முடிவே பேரின்பம் அல்லவோ!

    ReplyDelete
  4. வாங்க திவா சார்!
    //அபோதே வாயில ஜொள்ளு ஊறும்!//
    அப்படியா!
    :-)

    ReplyDelete
  5. தெள்ளமுது பருகையில்
    நாவும் இனிக்கிறது.
    நெஞ்சும் இனிக்கிறது.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  6. நான் விதந்து பார்க்கும் இறைப்பற்றாளர்களில் முதன்மையானவர் உயர்திரு வள்ளலார் அவர்கள். அவர்பாடல்களைப் படிக்கும்போது நெஞ்சைப்பிணிக்கிறது. தீந்தமிழில் எத்தனைச் சிறப்போடும் அழகோடும் பாடல்களை அருளியுள்ளார்?! வியப்பே மேலிடுகிறது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்னும் மேன்மைப் பண்பு யாருக்கு வரும்?!

    வாழ்த்துகள் தோழரே!

    ReplyDelete
  7. வருக சுப்புரத்தினம் ஐயா, மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  8. வருக அகரம்.அமுதா,
    //தீந்தமிழில் எத்தனைச் சிறப்போடும் அழகோடும் பாடல்களை அருளியுள்ளார்?!வியப்பே மேலிடுகிறது //
    வியப்போடு, ஊக்கமும் தருகிறது!

    ReplyDelete
  9. அலோ ஜீவா
    எத்தனை வாட்டி இந்தப் பதிவைப் படிக்கிறது? விளையாடறீங்களா? மனப்பாடமே ஆயிருச்சி! சுவைக் கட்டி அப்படியே ஒட்டிக்கிச்சி! கற்கண்டு கூட கொஞ்ச நேரத்துல கரைஞ்சிரும்! இது லேசுல போக மாட்டேங்குது! நாக்குல பாட்டு ஒட்டிக்கிட்டே இருக்கு! :)

    ReplyDelete
  10. பாட்டின் கட்டும் அமைப்பும் சொல்லும் பொருளும் சுவையோ சுவை!

    அப்படியே அதன் பொருளைக் கொஞ்சமா விரிச்சி, பலாப்பழத்தின் ஒரு பகுதியை மட்டும் பிரித்து வைப்பது போல் வைக்க வேணுமே!

    தெங்கின் பால், அனித்தமற, அலங்கல்-னு எல்லாம் வருதே!
    என்னை மாதிரி தமிழ்ப் பயிற்சி அதிகமில்லா ஆளுங்களுக்கு எல்லாம் பொருள் புரிய அருள் புரிய மாட்டிங்களா? :)

    ReplyDelete
  11. வாங்க ரவி,
    //சுவைக் கட்டி அப்படியே ஒட்டிக்கிச்சி!//
    :-)
    அடடா, ஏற்கனவே இனிசொலால் இனிப்பான நா கொண்டவருக்கு, இனிப்புக்கு இனிப்பாய், சுவையும் ஒட்டிக்கொண்டாதா!
    //என்னை மாதிரி தமிழ்ப் பயிற்சி அதிகமில்லா //
    அறுஞ்சொற்பொருள் என்னைச் சொல்ல வைக்க வேண்டும் என்பதற்காக, இல்லாததைச் சொன்னால், யாரும் நம்பமாட்டார்கள் ரவி!
    எப்படியோ, தங்கள் ஆணைப்படி:
    தெங்கின் பால் - தேங்காய்ப்பால்
    அனித்தம் அற - மயக்கம் விலக

    அலங்கல் - அலங்கு - அலங்காரம்
    என்பன நான் கொண்ட பொருள், சரியாய் இருக்கா கந்தனுக்கு அலங்காரம் செய்பவரே?

    ReplyDelete
  12. //அலங்கல் - அலங்கு - அலங்காரம்
    என்பன நான் கொண்ட பொருள், சரியாய் இருக்கா கந்தனுக்கு அலங்காரம் செய்பவரே//

    ஆகா! கந்தரலங்காரம் நாம எல்லாரும் சேர்ந்து செய்யறோம்! :)

    அனித்தம், தெங்கு சரி தான் ஜீவா!
    அனித்தம்=அ+நித்யம் மோ??
    நித்யம் இல்லாதது! நிலை இல்லாதது!அதான் அனித்தம் ஆச்சோ?

    அலங்கல்=அலங்காரம் என்ற பொதுப் பொருள் இருந்தாலும்,
    மாலை அதுவும் சூடும் வட்ட வடிவ மாலை என்பது தான் பொருள்! தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் என்று தேவாரம் !

    ReplyDelete
  13. தனித்தனி முக்கனி பிழிந்து
    =அதாச்சும் முக்கனிச் சாறையும் பிழிந்து, உடனே ஒன்னாச் சேத்துறக் கூடாதாம்!

    வடித்தொன்றாக் கூட்டிச்
    =தனித்தனியாக வடிக்கணும்! வடித்த பின் தான் ஒன்னாச் சேக்கணும்!

    மாம்பழத்தில் நார் மிதக்கும், பலாவில் பிசின், இதோடு வாழையை எப்படிக் கலப்பது? நார் ஒட்டிக்கிட்டா உண்ணும் போது நல்லா இருக்காது! உறுத்தும்! அதனால் தனித்தனியா வடித்து, வடிகட்டி, பின்னர் மூனுத்தையும் கூட்டணும்! அதே போல முக்குணங்களையும் தனித்தனியா வடித்துத் தான் இறையருள் கூட்டணும்! ராஜசத்தோடு சத்வம் சேர்த்தால் போரில் வெல்ல முடியாது! அதான் தனித்தனி வடித்தல்!

    சருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
    =நாட்டுச் சர்க்கரை, வெல்லம் காய்ச்சும் போது எடுப்பது! கற்கண்டு பொடி = தூள் சர்க்கரை

    தனித்த நறுந் தேன் பெய்து பசும்பாலும் தெங்கின்
    =தனித்த தேன்=கொம்பத் தேன்=இது இனிப்பு மட்டுமல்ல! ருசியின்மை நீக்கும் மருந்தும் கூட, அதோடு கறந்த பசும்பால், தேங்காய்ப்பால்...

    தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
    =தேங்காய்ப் பால்-ன்ன உடனே அம்மா ஞாபகம் வந்திருச்சி! அம்மா சுடும் அப்பம்/தேங்காய்ப் பால்
    பருப்பிடி=இடித்த பாசிப்பருப்பு

    ReplyDelete
  14. இனித்தநறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
    =இவை எல்லாம் சேர்த்துக் காய்ச்சி, நெய் அளையணும்! சொல்லைக் கவனிங்க! அளையணும்! ஊத்தக் கூடாது!
    தீய விடாமல் இளஞ்சூட்டில் இறக்கினால் தான் ஆறின பின் கெட்டிப்படும்! (மைசூர்பா புகழ் ஷைலஜா அக்கா கிட்ட எதுக்கு இளஞ்சூடு-ன்னு மேல் விளக்கம் கேளுங்க!)

    எடுத்த சுவைக் கட்டியினும்
    இனிதிடும் தெள் ளமுதே
    = இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்து செஞ்ச இனிப்பை, கொஞ்சம் பிசகினாலும் சுவை மாறி, கடினப்பட்டுப் போகும் இனிப்பை..போல் இல்லாமல்

    எளியோர்க்கு எளியனாய், அடைய எளியனாய், செய்ய எளிதாய் இருக்கிறான்! இருந்தாலும் அதை விட இனிப்பாயும் இருக்கிறான் இறைவன்!

    அனித்தம் அறத் திருப் பொதுவில் விளங்கு நடத் தரசே!
    =என் நிலையில்லாப் பிறவிச் சுழலை அறுப்பதற்கு என்றே பொதுவில் நடமிடும் அம்பலவாணப் பெருமான்!

    அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே
    =அவன் ஆடும் குஞ்சிதபாதத்துக்கு, திருவடி மலருக்கே, மலர் சூட்டுகிறேன்! சொல்லால் புனைந்த அலங்கல் மாலையை அணிந்து, அநித்யமான பிறவி நீக்கி அருளே!

    அருட்பெருஞ் ஜோதி!
    தனிப்பெருங் கருணை!
    திருச்சிற்றம்பலம்!
    ஹரி ஓம்!

    ReplyDelete
  15. பாட்டில் இன்னொரு முக்கிய விடயம், வினைச்சொற் கலவை!

    பிழிந்து
    கூட்டி
    கலந்தே
    பெய்து
    சேர்த்து
    விரவி
    அளைந்தே
    இறக்கி
    அணிந்து
    அருளே!

    முடிந்தால், பதிவில் பொருளுரையைச் சேர்த்து விடுங்கள் ஜீவா!

    என் வாசகத்துக்குப் பொருளுரையாம் அடியேன் அலங்கல் அணிந்தருளே! :))

    ReplyDelete
  16. //அலங்கல்=அலங்காரம் என்ற பொதுப் பொருள் இருந்தாலும்,
    மாலை அதுவும் சூடும் வட்ட வடிவ மாலை என்பது தான் பொருள்! தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் என்று தேவாரம் !//
    அப்படியா இரவி, அருமை.
    சமீபத்தில் தான் கண்ணி விளக்கம் சொல்லியிருதீங்க - மாதர் பிறைக் கண்ணியானில்! That must be still fresh!
    மலர் மாலைக்கான சந்தேகங்களுக்கு இனிமே நீங்கதான் அத்தாரிடி!

    ReplyDelete
  17. //முடிந்தால், பதிவில் பொருளுரையைச் சேர்த்து விடுங்கள் ஜீவா!//
    அப்படியே ஆகட்டும் அரசே!
    //என் வாசகத்துக்குப் பொருளுரையாம் அடியேன் அலங்கல் அணிந்தருளே! :))//
    ஆகா, அலங்கல் அருமை!

    கூடவே எனக்குத் தோன்றிய இன்னபிற:
    கற்கண்டின் பொடி - எதுக்கு பொடிக்கணும்? - பொடித்தல் - உடைத்தல் - ஆணவம் தனை பொடிக்கணும் என்கிறதைக் காட்டுகிறது.

    இளஞ்சூட்டில் இறக்கி வைக்கும் போது கட்டிப்படாமால் இளகி இருக்கும் - அதுபோல மனமும், இளகி, உருகி இருக்கும் நிலையில் இறைவனை அடைவதற்கு வழிவகுத்திடும்!

    ReplyDelete
  18. ஓய் கேஆர்எஸ்! சும்மா இருக்கமுடியாது உம்மால்? டயபெடிஸ் ஆசாமிக்கு ஏனய்யா இப்படி ஆசையை கிளப்பி விடுறீர்? சின்ன வயசிலேயே இந்த பாட்டை படிச்சு ஜொள்ளு விட்டதா சொல்லி இருக்கேன். நீர் மேலும்..... சரி சரி எனக்கு சுவைக்கட்டியெல்லாம் வேண்டாம். பகவானே போதும்!
    :-)))

    ReplyDelete
  19. அமபலத்தாடுவான் எவ்வளவு இனிமை, எளிமை என்பதைக் காட்டும் சொல்மாலை
    வள்ளலாரின் வாக்கு= வள்ளுவரின் வேண்டுதல் வேண்டாமை இவலான்அடிக்கு ஒப்பானதே

    ReplyDelete