Saturday, January 03, 2009

மார்கழி : ராகம் தானம் பல்லவி

"இராகம்,தானம்,பல்லவி", என்பது நமது பாரம்பரிய இசை வழக்கங்களில் ஒன்று. என்னதான் அது என்று கொஞ்சம் அலசிப் பார்க்கலாமா? இராகம் மற்றும் தானம் பகுதிகளில் பாடல் வரிகள் இருக்காது. பொதுவான ஆலாபனை தான் இருக்கும். இது என்ன 'ததரினஅஆஆஅ..' ன்னு பாடிக்கிட்டு இருக்காங்களேன்னு, முதலில் கேட்பவர்களுக்கு இருப்பவர்களுக்குத் தோன்றும். நானும் அப்படி நினைத்தது உண்டு. ஆனால், நிறையக் கேட்க கேட்க, இந்த இராகம், தானம் பல்லவியில், இராகத்தினை ஆழ்ந்து இரசிக்க லயிக்க இயலும், என்பது புரிகிறது.

RTP - என வழங்கப்படும், "இராகம்,தானம்,பல்லவி" யில்
இராகம் பகுதி :- இராக ஆலாபனை செய்வது போன்றது. ஆனால், சற்றே விரிவாக ஆலாபனை செய்வது. திரு.ஜி.என்.பாலசுப்ரமணியம், இதைச் சிறப்பாகச் செய்து, அதில் முத்திரை பதித்தவர். அவர் RTP பாடுகையில், முதலில் இராகத்தின் சாயலைக் காட்டும் ஆலாபனை, தொடர்ந்து வயலின், பின்னர் நீண்ட, ஆழ்ந்த ஆலாபனை, மீண்டும் வயலின் - எனப் பகுதி பகுதியாக இராகம் பகுதியினை சுவையாகத் தருவார். இப்போதெல்லாம், அதைக் காண்பது அரிது, பாடகர் ஆலாபனையை முழு மூச்சில் முடித்துவிட, வயலினார் ஆலாபனையைத் தொடருவார். இரண்டு அல்லது மூன்று வேகங்களிலும் பாடுவது உண்டு.

தானம் பகுதி :- தாளம் + ஆலாபனை = தானம். தாளத்தோடு சேர்த்த ஆலாபனையான இதை, பொதுவாக மத்தியம காலத்தில் பாடுவார்கள், இந்தப் பகுதியில். இதில் குறிப்பாக 'தா', 'னம்', 'தோம்', 'நொம்' போன்ற சொற்கட்டுக்களால் நிறைந்திருக்கும். பொதுவாக, பாடுபவரும், வயலின் இசைப்பவரும் மாற்றி மாற்றி இசைப்பார்கள். மிருதங்கம் சில சமயங்களில் சேர்ப்பதும் உண்டு.

பல்லவி பகுதி :- இறுதியாக, பல்லவி பகுதியில் தான், பாடலின் வரிகளையும் சேர்த்து பாடப்படும். அதுவும், பொதுவாக ஒரே ஒரு வரிதான் இருக்கும். அந்த ஒரு வரியினையே தங்கள் கற்பனைக்கேற்ப, விரிவாக பலவாறு விரித்துப் பாடுவார்கள். இப்பகுதியினை 'நிரவல்' என அழைப்பர். அதன் பின், பல்லவியை மூன்று முறைப் பாடும், திஸ்ரம் அல்லது திரிகாலம் என்பதைப் பாடுவர். அதன் பின், பல்லவியை, நான்கு முறை பாடுவர். நடையையோ அல்லது தாளத்தையோ வெவ்வேறாக மாற்றி, பல்லவி்யைப் பாடிட, பாடலுக்கு 'வேகம்' சேர்க்கும் அழகினைப் பார்க்கலாம். ஒரு இராகத்தோடு நிற்காமல், பல்லவியை, இராகமாலிகையாகவும் பாடுவர்.

பல்லவி முடிந்தபின், மிருதங்கத்தில் தனி ஆவர்த்தனம் வாசிப்பது வழக்கம்.

பெரும் பாடகர்கள் அனைவரும், தங்களுக்கென ஒரு பாணியைக் கடைப்பிடிப்பதும் வழக்கம். ஜி.என்.பி அவர்களுக்கு, ஆலாபனையில் கவனம் என்றால், அரியக்குடியாரும், செம்மங்குடியாரும் தானம் பகுதியில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். டி.என்.சேஷகோபாலன் அவர்கள் ஒன்றரை மணி நேரம் வரை கூட, ஒரே ராகம் தானம் பல்லவியைப் பாடியிருக்கிறார். அந்த அளவிற்கு, பாடகர் தனது கற்பனைத் திறனை பயன்படுத்தி, விதவிதமான கணக்குகளில் சஞ்சரிக்கும் சங்கதிகளைப் பாடுவதற்கான தளமாக இந்த இராகம்-தானம்-பல்லவி அமைகிறது. இசையின் சுரங்களின் கணக்கில் அமையும் அறிவியலும், அவ்வறிவியலுக்கு அப்பால், அங்கே அது கலையாக பரிமாணிப்பதும், என்ன அழகு, எத்தனை அழகு!

இங்கே, ஒரு இராகம், தானம், பல்லவியினைக் கேட்கலாமா?

இயற்றியவர்: மகா வைத்யநாத சிவன்
பாடுபவர் : செம்பை வைத்யநாத பாகவதர்
இராகம் : தோடி
பல்லவி வரி : உனது பாதம் துணையே, ஓராறு முகனே, உனது பாதம் துணையே!

Ragam Thanam Palla...



(படத்தில் : செம்பை வைத்யநாத பாகவதரும், செம்மங்குடி அவர்களும்; வயலினில் இருப்பது பிடில் சௌதய்யா அவர்கள்)

மேலும், மதுரை மணிஐயர் அவர்கள் பாடிட, பல்லவி பகுதியினை மட்டும் இங்கே கேட்கலாம்:


மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அவர்கள் பாடிட, இராகம் (தானம்) பல்லவியினை இங்கு கேட்கலாம்:


மேலே எப்படி மூன்று இசை விற்பன்னர்கள், மூன்று விதமாக பாடியுள்ளார்கள் என்பதைக் கேட்கையில், நமது பாரம்பரிய இசையிலும் கற்பனைக்கேற்ப பாடுவதற்கு இடமும், கட்டமைப்பும் இருக்கத்தான் செய்கிறது என்பது தெளிவாகிறது. சமீபத்தில், டி.எம்.கிருஷ்ணா அவர்கள், மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெற்ற கச்சேரி ஒன்றில், சற்றே மாறுதலாக, ராகம், தானம் முடிந்தபின், பல்லவிக்கு பதிலாக, வர்ணம் பாடி, வர்ணத்தின் வரிகளைக் கொண்டு நிரவல், திரிகாலம் மற்றும் ஸ்வரம் ஆகியவற்றைப் பாடினார். இதுபோல், அவ்வப்போது, பாரம்பரியத்திற்கு இழுக்கு வராமல், அதே சமயம், புதுமைகளையும் படைத்தவாறு வீறுநடை போடும் இசைக் கலைஞர்களைப் பார்க்கையில் வியப்பாகவும், இருக்கிறது!

24 comments:

  1. யப்பாடா! இப்ப கொஞ்சம் புரியுது. ஆமா புரியுதுன்னு நினைக்கிரப்ப திடீர்னு வர்ணம் என்கிறீங்க! அது என்ன?

    ReplyDelete
  2. வாங்க திவா சார்,
    நல்லது, வர்ணம் - கடைசியிலே தானே சொன்னேன் - சிலர் இதுபோல பாடியது - RTP இல்லை - அது RTV (ராகம்-தானம்-வர்ணம்) ன்னு சொல்லறாங்க!
    வர்ணம் - எப்பவும் பாடுகிற கிருதி வடிவில் - இருக்கும்; பல்லவி - அனுபல்லவி - சரணம் என்று - ஆனால் சரணத்தில் ஒரே ஒரு வரி இருக்கும் - அதை வெவ்வேறு நடைகளில் (வேகத்தில்) பாடுவார்கள்.
    RTP இல் பல்லவிக்கும் ஒரே ஒரு வரி அல்லவா.
    டி.எம்.கிருஷ்ணா என்ன செய்தார்ன்னா, RTP இல், பல்லவிக்கு பதிலா, வர்ணத்தைப் பாட ஆரம்பித்து, அதை பல்லவி போல முடித்தார்!
    வர்ணம் என்பது பொதுவாக கச்சேரியின் தொடக்கப் பாடலாகப் பாடுவது வழக்கம். அந்த வழக்கம் எல்லோராலும் பின்பற்றப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஆனா இங்கே, இவரு இந்த விரிபோணி வர்ணத்தினை கச்சேரியின் முக்கியமான பகுதியில் பாடியிருக்கார்.
    பலர் இதை வரவேற்றாலும், சிலருக்கு இவர் இப்படிச் செய்தது - ஏற்றுக் கொள்ள இயலாததாகவே இருக்கிறது!

    ReplyDelete
  3. தோடியை க்கேட்டுக்கொண்டே மெய்மறந்து போன எனக்கு
    B.P. மாத்திரை சாப்பிட்டேனா இல்லையா என்று கூட
    நினைவு இல்லை.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  4. வாங்க சுப்புரத்தினம் ஐயா,
    அடடா,
    பரவாயில்லை,
    இன்றைக்கு தோடியே மாத்திரையாகி இருக்கும்!

    ReplyDelete
  5. இரா.தா.ப. பற்றி யாரோ பதிவெழுதிவிட்டாற்போல நினைவு. மூன்று முத்தான எடுத்துக்காட்டுகளோடு சொன்னதற்கு மிக்க நன்றி!!! அளவாக, கோர்வையாகக் கொடுத்தமைக்கும். எப்பவும் ஏதாவது புதிசா கத்துக்கறதுக்கு வச்சிருக்கீங்க!

    ReplyDelete
  6. வாங்க கேபியக்கா,
    பாராட்டுக்களுக்கு நன்றி.
    //எப்பவும் ஏதாவது புதிசா கத்துக்கறதுக்கு வச்சிருக்கீங்க!//
    எதோ கத்துக்கிட்டு இருக்கேன் போலும்!

    ReplyDelete
  7. //எப்பவும் ஏதாவது புதிசா கத்துக்கறதுக்கு வச்சிருக்கீங்க!//

    ரிப்பீட்டே!

    அப்பாடா...ரொம்ப நாளாச்சி அடியேன் ரிப்பீட்டே சொல்லி! :)

    ReplyDelete
  8. //பொதுவாக, பாடுபவரும், வயலின் இசைப்பவரும் மாற்றி மாற்றி இசைப்பார்கள். மிருதங்கம் சில சமயங்களில் சேர்ப்பதும் உண்டு//

    நானே கேக்கணும் நினைச்சேன்! ராகம்-ஆலாபனையில் ஓக்கே! தானத்தில் கூட ஏன் பெரும்பாலும் மிருதங்கம் சேர்த்துக் கொள்ள மாட்டேங்கறாங்க ஜீவா?

    ReplyDelete
  9. வாங்க KRS,
    //தானத்தில் கூட ஏன் பெரும்பாலும் மிருதங்கம் சேர்த்துக் கொள்ள மாட்டேங்கறாங்க ஜீவா?//
    மாட்டோம் என்றில்லை. அப்படி வழக்கமில்லை என்றும் இல்லை. இது ஒரு வழங்கும் முறை, அவ்வளவு தான். ஏன் அப்படி என்றால், எனக்குத் தோன்றுவது - Its's probably a Progressive Presentation Style!
    அதாவது படிப்படியாக, தாளத்தை சேர்ப்பதாக இருக்கலாம். ஆலாபனை : முதலில் தாளமே இல்லாமல், அடுத்து தானம் : தாளக்கருவி இல்லாதமல் தாளம், இறுதியில், பல்லவி: தாளக்கருவியுடன் சேர்ந்து தாளம்;
    இப்படியாக the Progression seems to show an evolution of percussion!

    ReplyDelete
  10. >>இப்படியாக the Progression seems to show an evolution of percussion!<<

    Yes, evolution is everywhere from species to language to music, to culture, to philosophy, and even religion for that matter. As I mentioned elsewhere sometimes evolution is given a jolt (called "punctuation") by a revolution. But revolutions cannot be sustained unless it continues the previous course of progressive evolution. You can cite the experimentation in RTP for this. Long back Balamuralikrishna did it with a KRTP (kriti--rAgam--tAnan-pallavi) which did not take hold. Recently T M Krishna did it with an RTV (rAgam-tAnam-varNam). I guess you need the name "krishna" to do such experiments!!!!!!
    However, even "Krishna" is not immune to criticism

    ReplyDelete
  11. Q: What is the difference between Bhairavi and Anandabhairavi?

    A: The same as that between "karaNDi" and "pAtALak karaNDi" !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  12. With MVI, I am only hearing the end of the rAgam (but no tAnam) and the pallavi. What gives?

    ReplyDelete
  13. http://wikipasanga.blogspot.com/2006/12/rtp.html

    ஒரு ரெண்டு சீசனுக்கு முன்னாடி நான் எழுதிப் போட்டது!! அதில் நான் தந்த உதாரணமும் தோடி!! :))

    ReplyDelete
  14. வாங்க சேதுராமன் சார்,
    //I guess you need the name "krishna" to do such experiments!!!!!!//
    :-)

    ReplyDelete
  15. //Long back Balamuralikrishna did it with a KRTP (kriti--rAgam--tAnan-pallavi) which did not take hold.//
    I think I like that format of expanding from a Krithi.
    Its likely to get too long though.

    ReplyDelete
  16. //pAtALak karaNDi//
    I don't think those who dwell in cites - would even know what பாதாளக் கரண்டி is/was!!!

    ReplyDelete
  17. //With MVI, I am only hearing the end of the rAgam (but no tAnam) and the pallavi. //
    You are right sir!

    ReplyDelete
  18. வாங்க ராஜேஷ்,
    //ஒரு ரெண்டு சீசனுக்கு முன்னாடி நான் எழுதிப் போட்டது!!//
    பார்த்தேன்.
    அதிலும் தோடியா! ஜேசுதாஸ் அல்லவா!

    ReplyDelete
  19. அருமையான ரசனையான பதிவு.
    ரொம்பவும் அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.

    மேதை ஜி.என்.பி அவர்கள் தமிழகத்து கூடலூரில் 6-1-1910 அன்று பிறந்தவர்.

    கர்நாடக சங்கீத்தின் கலங்கரை விளக்கத்திற்கு புகழ் சேர்க்கும்
    பதிவாக அமைந்திருக்கிறது.

    ReplyDelete
  20. வருகைக்கு மிக்க நன்றி ஜீவி ஐயா,
    ஜி.என்.பி, அவர்களைப் பற்றி நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  21. >>மேதை ஜி.என்.பி அவர்கள் தமிழகத்து கூடலூரில் 6-1-1910 அன்று பிறந்தவர்.<<
    Very close to where I (was born and) grew up in Mayuram (currently known as mayilADutuRai).
    By the way GNB's family (fans and friends) are celebrating GNB's birth centenary starting Jan 6 2009 till Jan 6, 2010. The website to visit (where you will see a cornucopia of biography, accomplishments, music, and quite a few audio and video clips of current year-long celebrations) is:
    http://gnbalasubramaniam.com

    ReplyDelete
  22. Just today I listened to a TNS's RTP. The rAga AlApanai included three rAgams: vasanthA, bhairavi, and vasanthabhairavi. The thanam was also done in the three rAgams. Finally the pallavi line "srutilayabhAvasangeetham en vasantha bhairavi pAhimAm" incorporating the three rAgam names is quite imaginative and he sings the pallavi line in the 3 rAgams as well as the swarams in the three rAgams. Other people are also experimenting in this manner. This is a departure from the old days when only one rAgam was elaborated throughout which later gave rise to one rAgam during AlApanai, and the pallavi line with further swaras in rAgamAligai. Evolution is the name of the game!

    ReplyDelete
  23. Yes Sir, Thanks for the information. I will try to listen that RTP!

    ReplyDelete
  24. sir. i am new to this field. can you please tell me some tamil cine songs in todi.

    ReplyDelete