அப்போதெல்லாம் நாங்கள் ப்ரான்ஸில் பாரிஸ் நகரத்தில் வசித்து வந்தோம். பாரிஸில் வசிப்பதில் என்ன சிறப்பு என்றால், ஐரோப்பிய நண்பர்கள் பலரும் அந்த வழியாக பயணிப்பதால், தங்கள் பயணத்தின் இடையே, எங்களை வந்து பார்த்த வண்ணம் இருந்தனர். அப்படித்தான் அன்று ஒரு நண்பன், என்னைப் பார்க்க வந்திருந்தான் - கையில் ஒரு ப்ளாஸ்டிக் பையுடன்!
அப்போது, இப்போதைக் காட்டிலும், அறிவியல் முன்னேற்றங்கள் மிகையாய் மிகுந்த காலம். செயற்கைக் கருத்தரிப்பு வேகமாய் வளர்ந்திருந்தது. மக்கள் தொகையும் வெகுவாகக் குறைந்து, செயற்கையாக கருவினை வளர்ப்பதும், அதன் மூலமாக, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும், சகஜமாய் இருந்தது. நண்பன் கையில் கொண்டு வந்திருந்த பையில் அப்படியொரு செயற்கை கரு இருந்தது!. அவனுக்கு ஒரு வாரத்திற்கு, பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதினால், அக்கருவினை என்னால் கவனித்துக் கொள்ள இயலுமா எனக் கேட்க வந்திருந்தான்.
எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும்? என்ற கேள்விக்கு அவனே விடை பயின்றான். "தினமும், இரண்டு வேளே, குளிர் சாதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து, அதைச் சுற்றி தேங்கி இருந்த தண்ணீரை விலக்கி விட்டு, புதிய தண்ணீரில் நிரப்பி, மீண்டும், குளிர் சாதனப் பெட்டியிலேயே வைத்து விட வேண்டும். அவ்வளவுதான்." என்றான் நண்பன். அவ்வளவுதானே என்று மனம் சொன்னாலும், அதை வெளிக்காட்டுவதில் தயக்கம் இருந்தது. "உடனேயே மாற்றி விட வேண்டுமா?, சற்று தாமதமானால், ஆபத்தில்லையே?" என்று கேட்டு வைத்தேன். "நிறைய நேரம் ஆக்கலாகாது. ஒரு முப்பது நொடிக்குள் மாற்றி விட வேண்டும்" என்றான். என் தயக்கம் அவ்வளவாகத் தெளியா விட்டாலும், நண்பனின் வற்புறுத்தலுக்கு இணங்கி, பொறுப்பினை ஏற்றுக் கொள்ளும் படியாகி விட்டது, இறுதியில்.
இரண்டு நாட்களுக்கு, மிகவும் கவனமாக, பக்கத்தில் ஸ்டாப் வாட்ச் எல்லாம் வைத்துக் கொண்டு, பத்து நொடிக்குள் தண்ணீரை மாற்றி விட்டு, மீண்டும் குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்து விட்டேன். ஆனால் அதற்கப்புறம், அந்த செயற்கைக் கரு எப்படி இருக்கிறது, எப்படி வளர்கிறது, அன்றாடம் என்னென்ன மாற்றங்கள் அடைகிறது என்பதெல்லாம் கவனிக்கலானேன். எனது அறிவியல் ஆர்வம், என்ன வந்து பிடித்துக்கொள்ள, அதன் பின்னரெல்லாம், தண்ணீரை மாற்ற, முப்பது நொடிகள் வரை கூட ஆகத் தொடங்கியது. கூடவே, அறிவியலின் ஆக்கமும், அதைச் சார்ந்த பெருமையும் வந்து ஒட்டிக் கொண்டது. நான் ஏதோ, ஆராய்சியாளன் போல முதலில் உணர்த் தொடங்கினேன். பின்னால் ஏதோ, நானே ஆக்குபவன் போலவும், இறுமாப்புகள் வந்து ஆக்ரமித்துக் கொண்டன. இப்போதெல்லாம், தண்ணீர் மாற்றுவதையும் ஒரு ஸ்டெயிலாகச் செய்து வருகிறேன் என்றால் பாருங்களேன்.
இப்படியாக ஒரு வாரமும் ஆனது. நண்பனோ திரும்பி வரக் காணோம்! ஆனால், அவனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இன்னும் ஒரு வாரகாலம், அவனது பயணம் நீடிக்கிறதாம், அடுத்த வாரம் திரும்பி விடுவானாம். எனக்கோ உள்ளூர மகிழ்ச்சி! இன்னொரு வாரம், நமக்கு தண்ணீர் மாற்றும் வேலை, என்பதைவிட, இன்னொரு வாரம், நான் இந்த உயிரை வளர்க்கப் போகிறேன், என்ற எண்ணமே, ஓங்கி இருந்தது. என்னவோ தெரியவில்லை, மற்ற செயல்களைக் காட்டிலும், இச்செயலில் இப்படியொரு தற்பெருமை வந்து ஒட்டிக்கொள்கிறது! இது ஆக்கும் வேலை என்பதாலோ!.
அன்றொருநாள், தண்ணீரை மாற்றுகையில், அந்தப் பையுனுள் ஏதோ அசைந்ததுபோல இருக்க, சற்றே அதிர்ந்து பின் வாங்கினேன். அது நிஜமாகவே அசைந்ததா, அல்லது மனப் பிரமையா என்பதும் சந்தேகம். மெதுவாக, அதன் அருகினில் சென்று, உன்னித்துக் கவனிக்க, அதில் அசைவேதும் இருப்பதாகத் தெரியவில்லை. பின்னர் மிகுந்த கவனத்துடன் தண்ணீரை மாற்றினேன். மீண்டும் குளிர் சாதனப் பெட்டிக்குள் வைப்பதற்குச் செல்லுமுன்தான் கவனித்தேன், கிட்டதட்ட, இரண்டு நிமிடங்கள் கடந்து விட்டதை. அடடா, என்ற நினைப்புடன், இன்னொரு சந்தேகமும் வந்து ஒட்டிக் கொண்டது. குளிர் நீரை மாற்றினேனா, அல்லது, வெது வெதுப்பான நீரை, தவறாக மாற்றி விட்டேனா என்று. தண்ணீரை லேசாக தொட்டுப்பார்க்க, அது சுட்டது, என்னை. அவசரத்தில், ஒரு வேளை, வென்னீர் குழாயில் எடுத்துவிட்டேனோ என்ற சந்தேகம் பிடித்துக்கொள்ள, மீண்டும் தண்ணீரை மாற்றலானேன்.
அடுத்த முறை தண்ணீர் மாற்றியபின், ஏதோ ஒரு மாற்றம் அதில் நிகழ்வது போலிருந்தது. திரவமாய் நிறைந்திருந்த அந்தப்பையே, கடினப் பட்டது போலத் தெரிந்தது. அந்தப் பை, வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை, சற்றே, அசைத்துப்பார்க்க, அந்தப் பையில் இருந்து, ஏதோ ஊதா நிறத்தில், தண்ணீரில் கலப்பது போல் இருந்தது. நான் என்ன செய்கிறேன் என்பதை என்னாலாயே சரியாய்ச் சொல்ல இயலாதவனாய் அதிர்ந்தேன். அவ்வளவுதான், ஏதோ நிகழ்ந்து விட்டது. ஒரு உயிரைக் கொன்று விட்டேன், என்ற எண்ணம் எழுந்தது. அந்த எண்ணத்தில் பதற்றத்தின் ஆக்ரமிப்பு, வேறேதும் எண்ணத் தோணாமால், ஆக்ரமித்துக் கொண்டது.
ஐயகோ, நண்பன் வந்து கேட்டால், என் செய்வேன்?. யானே கள்வன், யானே அழிவின் காரணம், யானே அழித்தேன். என்னால் ஏதும் ஆக்க இயலுமோ? ஆனால், அழிக்க மட்டும் இயல்கிறதே? இப்படியும் ஒரு பிறவியோ? என் செய்வேன், என்ன செய்தாலும், சரி செய்ய இயலுமோ, அந்தக் கருவை மீண்டும், முன்பிருந்த நிலைக்கே கொண்டு செல்ல இயலுமோ? என ஓயாமல் பிதற்றினேன், அரற்றினேன், ஓலமிட்டேன். அழகாக வளர்ந்த கருவில், ஆலமிட்டது எப்படி? இது அவன் ஜாலமோ? இல்லை என் கோலமோ? ஏதும் அறிந்திலேன் என அழுதேன். ஒருவேளை, நான், எனது செயல் என்கிற அகந்தை வந்து ஆட்கொண்டதோ? எனவெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தபோது - தொலைபேசியோ மணியடித்திட, அதையும் பொருட்படுத்த இயலவில்லை. ஒரு வேளை, அது நண்பனாய் இருந்தால், என்ன பதில் சொல்வேன்? என்னை நம்பி ஒப்படைத்த செயலை, பொறுப்பில்லாமல், கெடுத்தேனே. தொலைத்தேனே.
ஆற்றாமையில் நான் அழுது புலம்பிட, அச்சத்தம் கேட்டு, அம்மா அங்கே வந்தார். நடந்ததை அறிந்து கொண்டு ஆறுதல் சொல்லலானார். "அப்பா, ஆக்கலும், அழித்தலும், நம் கரத்தில் இல்லை. எல்லாம் அவன் செயல். நாம் வெறும் கருவி மட்டுமே. எய்தவன் அங்கிருக்க, இங்கே அம்பை நொந்து என்ன பயன்?." என்றார். என்ன இருந்தாலும், அத்தண்ணீர் மாற்றும் செயலுடன், அந்த அளவிற்கு நான் ஒன்றியிருக்கக் கூடாது. அதன் மேல், என் விருப்புகளை ஆழ்த்தினேன் அல்லவோ. அதனால்தான் இப்படியானதோ? செயலைச் செய்கையில், எதற்காக, "செய்வது நான், செய்வது நான்" - என்கிற எண்ண ஓட்டங்கள். அம்மா சொல்வது சரிதான், செய்வதெல்லாம் அவன் என்றிருக்க, எங்கிருந்து வந்தது நான் என்கிற எண்ணம்? எப்போதும் செயல் நடந்து முடிந்தபின், 'அப்படி நடந்திருக்கக் கூடாது' எனச் சொல்வது எத்தனை எளிதாக இருக்கிறது!. செயலை அழித்து, பொருளின் முந்தைய நிலைக்கு, எப்போதும் கொண்டு செல்ல இயன்றால், எவ்வளவு நன்றாக இருக்கும், கனவுபோல? ஓ, ஒருவேளை இது கனவு தானோ, என்கிற வினவலின் விளைவில், கனவும் கலைந்தது. நல்லவேளை, இது கனவுதான் என்ற பெருமூச்சும் வந்திட, எல்லாமும் இயல்பானது.
//செய்வதெல்லாம் அவன் என்றிருக்க, எங்கிருந்து வந்தது நான் என்கிற எண்ணம்? //
ReplyDeleteஎல்லாம் அவன் செயல் என்பதற்க்கு அருமையான கதை ஜீவா ஐயா.
வருகை கைலாஷி ஐயா,
ReplyDeleteகதையை இரசித்தமைக்கு நன்றிகள்!
அருமையான கதைக்களன் ஜீவா! ரசித்தேன்! தத்துவத்தைப் பொட்டில் அறைந்தாற் போல் சொல்லும் கதை!
ReplyDeleteஇந்த எந்த நாயன்மாரை நினைவுபடுத்தும் கதை, சொல்லுங்க பார்ப்போம்? :)
நல்லது கே.ஆர்.எஸ்,
ReplyDeleteஇரசித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
நாயன்மாரை நினைவுபடுத்தியதா! அருமை! யாரோ? அவர் யாரோ? என்ன பேரோ?
ஒருவேளை - துவைக்க கந்தை ஆடையை பெற்றுக் கொண்டு, பின்னர் அதை துவைத்துக் காய வைப்பதற்குள், எம்பெருமானின் திருவிளையாடலில் சிக்கிய திருக்குறிப்புத் தொண்டரோ?
//செய்வது நான், செய்வது நான்" - என்கிற எண்ண ஓட்டங்கள். அம்மா சொல்வது சரிதான், செய்வதெல்லாம் அவன் என்றிருக்க, எங்கிருந்து வந்தது நான் என்கிற எண்ணம்?//
ReplyDeleteஉண்மைதான், ஆனால் நம்மால் விடமுடியலை. வேத காலத்து மைத்ரேயியே விட முடியுமா என யோசித்த ஒன்று. இன்றும் யோசிக்க வைக்கிறது. :(((( அருமையான கதைக்கு நன்றி.
வாங்க கீதாம்மா.
ReplyDeleteஅழகாகச் சொன்னீர்கள்.
அன்று தொட்டு இன்று வரை - சங்கிலியாய் தொடருகிறது. சங்கிலியான டி.என்.ஏ வில் பதிந்து போன சங்கதிகள் :-(
தாங்கள் எழுதும் பல கனவுக்கதைகள் போன்று இதுவும் ஒன்று என்று சொல்ல முடியாமல், ஒரு
ReplyDeletemetaphysical rather than a psychiatric angle
உடன் கதையை கண்முன்னே நடப்பது போல் சொல்லி பிரமிக்க வைத்திருக்கிறீர்கள்.
கனவுகள் ஏன் ஏற்படுகின்றன என்பது பற்றியும் அவற்றிற்கு ஒரு பொருளைக் கற்பிப்பதில்
எத்துணை கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பது பற்றியும் தங்களது பதிவு ஒன்றில் விரிவாக நாம்
விவாதித்திருப்பதால் திரும்பவும் எடுத்துச் சொல்லப்போவதில்லை.
ஆயினும் கண்ட கனவுகள், விழித்துக் கொண்டபின்னும் வெகு நேரத்திற்கு அல்லது வெகு நாட்களுக்கு
மனதை விட்டு நீங்காது அவரை ஏதேனும் ஒரு வகையில் துன்புறுத்துவதாக இருப்பின், கனவு காண்பவர்
அணுகவேண்டிய இடம் கண்டிப்பாக தத்துவ விசாரப் பலகை அல்ல. தாம் கண்ட கனவுக்கு ஒரு பொருள்
இருக்கத்தான் வேண்டும் என நம்புவது கூட ஒரு வகை phobia
என மன நல மருத்துவர் கூறுவர்.
கண்ட கனவுகள் எல்லாவற்றிற்கும் ஒரு பொருள் இருக்கிறது, இருக்கும் என நம்புவோர் கீழ்க்காணும்
சுட்டிகளில் சுவாரசியமான தகவல்களைப் பெறலாம்.
http://www.dreammoods.com/
இல்லை. உளயியல் படி கனவினை அணுக நினைப்போர் இங்கு செல்லலாம்.
http://www.dmoz.org/Science/Social_Sciences/Psychology/Dreams/Interpretation/
இதெல்லாமே எதுக்கு ஸார். கனவைப் பத்தி ஒரு பாட்டு அந்தக்காலத்துலே
கண்டசாலா பாடுகிறார் பாருங்க. அதைக் கேட்டுக்கிட்டே ஆனந்தமா
இருக்கலாம்னு நினைப்பவர்கள் இங்கு:
http://www.musicindiaonline.com/p/x/BJXgoFoIit.As1NMvHdW/?done_detect
பாவம் அப்துல் கலாம் ஸார் . கனவு காணுங்கள் என்று இந்தியர்களைக் கூவி அழைத்திருக்கிறார்.
அவர் காணச்சொல்லும் கனவு, அதன் பொருள் எல்லாம் பற்றி ஒரு பதிவு ஜீவா போடக்கூடாதா ?
இக்கால இளைஞர் சமுதாயத்தை வழி நடத்திச் செல்லக்கூடாதா ?
ஹூம் ! அதுவே ஒரு கனவு தான். கானல் நீர் தான். நமக்கெல்லாம் இந்தக் கனவே யதேஷ்டம்.
சுப்பு ரத்தினம்.
ஆளாளுக்கு என்ன என்னவோ கனவு காண்கிறாங்க! உங்களுதோ தத்துவமாவே இருக்கு! மனசில என்ன ஊறி இருக்குன்னு காட்டுது போல!
ReplyDeleteவாங்க சுப்புரத்தினம் ஐயா,
ReplyDeleteதங்கள் சுட்டிகளுக்கு நன்றிகள். சுவையான செய்திகளை சுவைத்து அறியலாம்.
//னவைப் பத்தி ஒரு பாட்டு அந்தக்காலத்துலே
கண்டசாலா பாடுகிறார் பாருங்க. அதைக் கேட்டுக்கிட்டே ஆனந்தமா
இருக்கலாம்னு///
அப்படியே ஆனந்தமா இருக்கலாம், அதுதான் இலக்கு!
//கனவு காணுங்கள் என்று இந்தியர்களைக் கூவி அழைத்திருக்கிறார்.//
இதைப்பற்றி நிறைய பேர் எழுதி விட்டார்கள், போற்றியும், தூற்றியும்!!!
வாங்க திவாய்யா,
ReplyDeleteநீங்க சொல்வது சரிதான், Subconscious மனசில வந்து எப்பவோ தேங்கின பற்பல சங்கதிகளின் கலவைதான் கனவு. இவற்றை நமக்கு பயன் தரும் வகையில் நாம பயன்படுத்திக்கலாம்ன்னு நினைக்கிறேன். அவற்றின் விளைவே இக்கதைகள்!
suppara ezhutirai machan
ReplyDeleteAs you know dreams are just random events (like evolutionary developments). You must have read some article on stem cells in the recent past or heard some news items on TV on that subject. The mind, being a curious animal, put on a strange garb and played a movie for you.
ReplyDeleteI have had similar dreams before when I was working at the National Institutes of Health (NIH) in Bethesda, Maryland on the structure-function relationships of proteins. Briefly, I was working with binding a dye to a protein. I was working on the mechanism of such binding. One day, in my dream, there was a big TV screen wherein the dye molecule appeared as a giant and the enzyme molecule was cowering in a corner. The dye molecule was threatening to smother the enzyme (in reality the enzyme molecule is huge compared to the dye molecule). At the end, after the collision between the two, I saw blood oozing all over the TV screen. Imagine that, given the dye molecule was blue, to begin with. Yes, you can dream in color too! Did the enzyme finally get to smother the dye and squeeze its life out? The next day I managed to write the paper for publication but without the benefit of the denouement of the dream. It was a scary dream like the one you mentioned.
:-)
ReplyDeleteVery interesting Story Sir!
இப்போது தான் இப்பக்கம் வர முடிந்தது.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்.
அருமையா கதை வடிவில் 'நான்' பற்றிச் சொல்லிட்டீங்க ஜீவா.....
வாங்க மௌலியண்ணா,
ReplyDeleteதங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
கனவுதான் ஆனாலும் பல உண்மைகளை விளக்கும் பதிவு...
ReplyDeleteவாங்க கிருத்திகா மேடம்,
ReplyDeleteவருகைக்கு நன்றிகள்!