Sunday, December 28, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (5)

இத்தொடரின் இறுதிப் பகுதியினை எட்டி விட்டோம். இந்தப் பகுதியில் சென்ற மூன்று நூற்றாண்டுகளில் தமிழிசைப் பாடல்களை இயற்றிய அருந்தமிழ்க் கவிகளின் பாடல்கள் சிலவற்றை திருமதி. சௌம்யா அவர்கள் பாடிக் காட்டுகிறார்.

9. இராம நாடகம்
இயற்றியவர் : அருணாசலக் கவிராயர் (1711-1779)
பாடல் : ஏன் பள்ளி கொண்டீரய்யா, ஸ்ரீரங்கநாதா!
இராகம் : மோகனம்

அருணாசலக் கவிராயரைப் பற்றி ஏற்கனவே இட்ட பதிவினை இங்கே பார்க்கவும்.

10. மாரிமுத்தாப்பிள்ளை (1712 - 1787)
பாடல் : காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே
இராகம் - யதுகுலகாம்போதி

11. முத்துத்தாண்டவர் (1560(?) - 1640(?))
பாடல் : இத்தனை துலாபாரமாய்
இராகம்: தன்யாசி

பாடல்: ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ!
இராகம் : மயாமாளவகௌளை

மாரிமுத்தாப்பிள்ளை மற்றும் முத்துத்தாண்டவர் அவர்கள் இருவரைப் பற்றிய பதிவினை இங்கே பார்க்கவும்.

இவர்கள் மூவரும் - தமிழ் மூவர் என தமிழ் இசை அறிஞர்களால் பெருமைப்படுத்தப் பட்டவர்கள். தமிழில் கிருதி வடிவினை (பல்லவி - அனுபல்லவி - சரணம் என்ற பாடல் வடிவு) அறிமுகப் படுத்தியவர்கள்.

12. கோபால கிருஷ்ண பாரதி (1811 - 1896)
பாடல் : யாருக்குத்தான் தெரியும், அவர் மகிமை
இராகம் : தேவமனோகரி
இவர் இயற்றிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் மிகவும் பிரசிதம். ஆழ்ந்த தத்துவப் பொருள் நிறைந்தவை இவரது பாடல்கள். மேலும் இரண்டு நாயன்மார்கள் (நீலகண்ட நாயனார், காரைக்கால் அம்மையார்) சரித்திரங்களையும் படைத்துள்ளார்.

13. அண்ணாமலை ரெட்டியார் (1865-1891)
இவரது காவடிச் சிந்து பாடல்கள் மிகவும் பிரபலம். 'காவடிச் சிந்தின் தந்தை' எனவே இவரை அழைக்கலாம்!. 'சென்னிகுளம்' என்ற இவரது ஊர்ப்பெயரை, இவரது பாடல்களில் காணலாம். இவர், தமது, 26ஆவது, வயதிலேயே இறந்தார் என்பது வருத்தத்திற்குரிய இழப்பாகும்.

இசைத்தமிழின் இனிதானதொரு அங்கம் சிந்து. பாடுவதற்கு எளிதானது. இதில் ஐந்து பகுதிகள் அடங்கும் : பல்லவி, அனுபல்லவி, பின்பு மூன்று கண்ணிகள் கொண்ட சரணம். காவடிச் சிந்து, என்பது, சிந்தில் ஒருவகை. இதில் பல்லவியும், அனுபல்லவியும் இல்லாமல், சரண வரிகள் மட்டுமே.

பாடல் : பூமி மெச்சிடும் (காவடிச்சிந்து)
இப்பாடலின் இருந்து மூன்று கண்ணிகள்:
பூமி மெச்சிடும் அண்ணாமலைக்கோர் துணையானவன்
மயில் வாகனன், ஒரு கானவன் - எனப்
புனத்தைக் காக்கும் வள்ளி
தனத்தைப் பார்க்க மெல்லப் போனவன்.

தென்றலான புலி வந்து கோபமொடு சீறுதே
தடுமாறுதே; இதழ் ஊறுதே - மெத்தத்
தீமையாம் இருளினில்
காமலாகிரியும் மீறுதே.

மார வேளினாலே கோர மனகாம் வாதையே
எனும் தீதையே தீரத் தூதையே! - சொல்லி
வாட்டம் தீர் குகனைக்
கூட்டி வாடியடி கோதையே!

(இப்பாடல் 5:40 இல் தொடங்குகிறது)


14. பாபநாசன் சிவன் (1890 - 1973)
'தமிழ் தியாகராஜர்' எனப் போற்றப் படும் பாபநாசம் சிவன் அவர்கள், நிறைய தமிழ்ப் பாடல்களை, மூம்மூர்த்திகள் போல, தமிழுக்கு இயற்றித் தந்தவர்கள். மூம்மூர்த்திகளின் பாதிப்பால், மற்ற திராவிட மொழிப் பாடல்களே, தென்னிந்திய இசையில் பிரபலமாகி இருந்தது. தமிழிலும் அதைப்போன்ற கீர்த்தனைகளைப் பாடிட முடியும் என்பதை நிரூபித்திக் காட்டியவர். கிருதி, வர்ணம், பதம், ஜவளி என பற்பல இசை வடிவங்களிலும், பற்பல இராகங்களிலும் தமிழில் இசைத்துக் காட்டிய பெருமை இவரைச் சாரும்.

பாடல் : கஜவதனா கருணாசதனா
இராகம் : ஸ்ரீரஞ்சனி

எடுப்பு
கஜவதனா கருணா சதனா
சங்கரபாலா லம்போதர சுந்தர -
ஸ்ரீ கஜவதனா கருணா சதனா

தொடுப்பு
அஜனமரேந்திரனும் முனிவரும் பணியும்
பங்கஜ சரணா, சரணம் சரணம்!

முடிப்பு
நீயே மூவுலகிற்கு ஆதாரம்
நீயே சிவாகம மந்திர சாரம்
நீயே வாழ்வில் என் ஜீவாதாரம்
நீயருள்வாய் சுமுகா, ஓம்கார
கஜவதனா கருணா சதனா!

15. மகாகவி பாரதி (1882 - 1921)
பாடல்: வாழிய செந்தமிழ்

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(இதைவிடவும் இனிதாக நிறைவு செய்ய இயலுமோ!, அழகாக திருமதி.சௌம்யா அவர்கள் நிறைவு செய்தார், இவ்வாறாக, 'சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை' என்ற தலைப்பிட்ட இந்நிகழ்ச்சியை.)
இப்படியொரு அருமையான நிகழ்ச்சியை வழங்குவதற்கான மூல காரணம், அவருக்கு அமைந்த அருமையான குரு - டாக்டர் எஸ்.இராமநாதன் அவர்கள் மற்றும் திருமதி.முக்தா, அவர்களை இங்கே குறிப்பிடுகிறார். குறிப்பாக இராமநாதன் அவர்களின் சிலப்பதிகார இசை ஆராய்ச்சிகள், அவற்றில் இருந்து நாம் அறியக் கிடைக்கும் பண்டைத் தமிழரின் இசை நுணுக்கங்கள்.

14 comments:

 1. ஜீவா சிலப்பதிகார பதிவுகள் எல்லாமே படித்தேன்,கேட்டேன்,ரசித்தேன்.மிக்க நன்றி.

  ஏன் பள்ளி கொண்டீரய்யா எனக்கு மிகவும் பிடித்த பாடல். N.C.வசந்தகோகிலம் பாடியது கேட்பது இன்னும் பிடித்தமானது....அப்படி ஒரு குரல் வளம் அவருக்கு.:):)

  ReplyDelete
 2. அருமையான தொகுப்பு ஜீவா!
  செளம்யாவின் உழைப்பு தெரிகிறது!
  அவர் குரு, எஸ்.இராமநாதனின் ஆய்வுகள் இப்படி பொது மேடைக்கு வந்தது மிகவும் சிறப்பு!

  காவடிச் சிந்து சூப்பரோ சூப்பர்! முருகனருள்-100 நாம எல்லாரும் பாடினது நினைவுக்கு வந்து விட்டது! :)

  பாபநாசம் சிவன் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்! அதான் சிலப்பதிகாரத்தில் இருந்து பாபநாசம் "சிவன்" வரை-ன்னு சொல்லிட்டாரே!

  இன்னும் பலப்பல தமிழிசைத் தொண்டர்கள்=நாதமுனிகள், ஊத்துக்காடு, பாரதிதாசன்...என்று அத்தனை பேரையும் ஒரு சிறிய தொடரில் சொல்லி அடக்கி விட முடியாது என்பதால்...
  அத்தனை பேருக்கும் வணங்கங்கள்!
  எந்தரோ மகானுபாவுலு
  அந்தரிகி வந்தனமுலு!

  ஜீவா, உங்க இசைப்பதிவுகளுக்கும் அடியேன் வந்தனம்!

  ReplyDelete
 3. இன்னும் முந்தைய இரு இடுகைகளைப் படிக்கவில்லை/கேட்கவில்லை.இதோ அங்கும் செல்கிறேன்.

  ReplyDelete
 4. வருக ராதாம்மா,
  //ஜீவா சிலப்பதிகார பதிவுகள் எல்லாமே படித்தேன்,கேட்டேன்,ரசித்தேன்.மிக்க நன்றி.//
  ஆகா, மிக்க நன்றி.
  //N.C.வசந்தகோகிலம் பாடியது கேட்பது இன்னும் பிடித்தமானது....அப்படி ஒரு குரல் வளம் அவருக்கு.:):)//
  ஆமாங்க, அருமையான குரல். தமிழிசையை அக்காலத்தில் பிரபலப்படுத்திட அன்னார் பெரும் பங்காற்றினவர்.
  அவங்களைப் பற்றி தனிப்பதிவொண்ணு போடணும்!

  ReplyDelete
 5. வருக KRS,
  //அருமையான தொகுப்பு ஜீவா!//
  மிக்க நன்றி!
  //முருகனருள்-100//
  எனக்கும்!
  //பாபநாசம் சிவன் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்!//
  ஆமாம்.
  //இன்னும் பலப்பல தமிழிசைத் தொண்டர்கள்=நாதமுனிகள், ஊத்துக்காடு, பாரதிதாசன்...//
  இவர்களில் முக்கியமா, வேங்கடகவியை சொல்லி இருக்கணும்மோன்னு தோணியது. ஒருவேளை, அவரது பெயரைக் குறிப்பிட்டு இருக்கலாம், Editingலே மிஸ் ஆகியிருக்கலாம் என தோணுகிறது.
  சுத்தானந்த பாரதி, மற்றும் நீலகண்ட சிவன் - இவர்கள் பெயரையும் சௌம்யா குறிப்பிட்டிருக்கிறார்.

  ReplyDelete
 6. வாங்க மௌலி சார், கேட்டுவிட்டு சொல்லவும்!

  ReplyDelete
 7. >>மூம்மூர்த்திகளின் பாதிப்பால், மற்ற திராவிட மொழிப் பாடல்களே, தென்னிந்திய இசையில் பிரபலமாகி இருந்தது.<<
  Slight correction! Only Telugu (among Dravidian languages) got prominence because of the Trinity. That is because during the Naik and Maratha rule in Thamizhnadu (Madurai and Thanjavur) Telugu was a court language (but not Thamizh) and hence the composers of that time were composing in Telugu. Thyagaraja and Syama Sastri did so because it was the mother tongue of Thyagaraja and Syama Sastri was quite fluent in it (his mother tongue was Thamizh, according to some sources). During the Maratha rule Marathi abhangs came into vogue as a result of sponsorship in the courts. Thamizh did not feature at that time (dark age for Thamizh) in Carnatic music until its resurgence in the 1920's and later thanks to TKC, Kalki, and the Chettinadu family. Malayalam never was a factor since very few songs were composed for carnatic music. In concerts in mid-20th century even Purandaradasar's dEvarnAmAs were relegated to the end just like Thamizh tukkaDas like tiruppugazh, or Bharathi's songs. An occasional kriti from GKB (Sabhapatikku or tiruvaDi saraNam), or Neelakanta Sivan (enRaikku sivakrupai) was an exception. Sivan added much life to the Thamizh isai movement not only with his numerous compositions in Thamizh but also through the devotional songs in Thamizh movies for which he wrote and scored music.

  I am heartened to note that Madurai Mani Iyer, Semmangudi, MS, MLV, DKP, Santhanam and the current day stalwarts such as Sanjay, Sowmya, Nityasri, Sudha, Ranjani & Gayatri, and others had/have the gumption to take a Thamizh kriti for the main piece.

  ReplyDelete
 8. >>இவர்களில் முக்கியமா, வேங்கடகவியை சொல்லி இருக்கணும்மோன்னு தோணியது. ஒருவேளை, அவரது பெயரைக் குறிப்பிட்டு இருக்கலாம்,<<
  Yes, OVK has been denied his place by many. Recall our remorse over Manickavacagar not among the nAyanmArs!
  Ravikiran has been making amends in that regard. I don't know whether he continues to revive OVK's kritis on the concert circuit. For a while his attempts created some waves (some welcome and others turbulent) in the music community.

  ReplyDelete
 9. வாங்க சேதுராமன் சார்,
  Thanks for adding the view that, it was the rulers of that time, which incidentally lead to popularity of Telugu compositions mainly. I think it started before Maratha rule, sometime around Vijayanagar empire expanding towards Tanjore and Madurai - which eventually ended up in Marathas overseen Nayakamars.
  Having said that, marthai Abhangs are my favorites.
  There are some people who think that Abhangs are killers in CM, but not me!
  This was also time, when we had siddars flourishing like Tayumanavar, Ramalinga adigalar, and eventually Bharathi contributing to tamizh music heavily. So I wont call it a dark age entirely!

  ReplyDelete
 10. On ஊத்துக்காடு வேங்கடகவி:
  //Yes, OVK has been denied his place by many. //
  Is there some specific reason for that?, I wonder!
  அருணா சாய்ராம் அவர்கள் வேங்கடகவி பாடல்களை நிறைய பாடி வருகிறார்கள்.

  ReplyDelete
 11. >>think it started before Maratha rule, sometime around Vijayanagar empire expanding towards Tanjore and Madurai -<<
  Yes, I mentioned the Vijayanagar empire as "Naik" rule. That is when Telugu was used as court language. During Maratha rule it continued since a precedent was established.

  >>So I wont call it a dark age entirely!<<
  I meant the period during the Naik and Marath rule as "dark age" for Thamizh in Carnatic Music!

  ReplyDelete
 12. >>Is there some specific reason for that?, I wonder!<<
  Yes, some people in the musical community, even today, feel that OVK didn't exist in reality and that those songs were ghost-written by Needamangalam Krishnamurthy Bhagavatar. In addition, others refused to accept that he preceded Trinity. Chitraveena Ravikiran did his best to establish OVK's due place but there are still some skeptics around. I am a great admirer of OVK. Another reason for the non-acceptance could be that he was a recluse. If you did not read it already see my article on him in chennaionline featuring his "ADAdu asangAdu vA kaNNA..." (madyamAvati).

  Perhaps you can do a blog ( a sequence of 3 blogposts) using OVK's trilogy of songs, starting with tAyE yasOdha (where it features as a court scene with the gopis complaining to Yasodha first, then KaNNan denying the allegations "illai illai iallai ammA..", with Yasodha delivering a judgement at the end "pEsAdE pOngaLaDi.."

  If you need help with the lyrics or some explanations, please send me a note.

  ReplyDelete
 13. Very interesting, Thanks for the inputs Sir.

  ReplyDelete
 14. Thanks for suggestions on the Series, that will be really lovely!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails