Sunday, December 21, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (2)

சென்ற பகுதியில் திருமதி சௌம்யா அவர்கள், சிலப்பதிகாரப் பாடல்களில் கிரகபேத எடுத்துக்காட்டுகளை எடுத்துரைத்து, பாடிக் காட்டியதைக் கேட்டும் பார்த்தும் இரசித்தோம்.

இந்தப் பகுதியில், சங்க காலத்தில் இருந்து, தேவாரப் பதிகங்களின் காலகட்டத்திற்குச் செல்கிறோம். கிட்டத்தட்ட, இரண்டு முதல் ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சைவ சமயக் குரவர்களின் தமிழிசைப் பாடல்களை பாடக் கேட்கவிருக்கிறோம்.

3. தேவாரம்
நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவையாறு தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)
"களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையது ஊட்டி அமரர்கள் சூழியிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே"

(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)
மூன்றாம் திருமுறை தேவாரப் பாடல் (சீர்காழி தலம்)
இயற்றியவர் : திருஞான சம்பந்தர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
(இது பதிகத்தின் முதல் பாடல் மட்டுமே, இதைப்போல இன்னும் பத்து பாடல்கள் உள. பாடலின் முதலெழுத்தும், கடையெழுத்தும் ஒன்றாக இருப்பதைக் கவனிக்க. இப்படிப்பட்ட பாடலுக்கு என்ன பெயர்?)
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவொற்றியூர் தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
இராகம் : நவ்ரோஜ்
மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

(முடிவில், நம் இசையின் சுர நுணுக்கங்களையும், அவற்றில் தொக்கி நிற்கும் உயர் கணிதத்தினையும், அறிவியலையும் சௌம்யா அவர்கள் தொட்டுப் போவதைப் பார்க்கலாம்.)

ஏழாம் திருமுறை தேவாரப் பாடல் (திருவாரூர் தலம்)
இயற்றியவர் : சுந்தரர்

(விருத்தம்)
ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந்
துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்
தந்தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பண் : பழம் பஞ்சுரம் (இராகம்: சங்கராபரணம்)

பத்திமையும் மடிமையையுங்
கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுஇதனைப்
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாள் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

மேலே குறிப்பிட்ட இரண்டு பாடலும் ஒரே பதிகத்தில் இடம் பெறுபவை. முதல் பாடலின் பொருளை இங்கேயும், இரண்டாம் பாடலின் பொருளை இங்கேயும் பார்க்கலாம்.



சைவம், ஒரு கண்ணென்றால், வைணவம் இன்னொரு கண்ணல்லவா!
இதுவரை சிவனடியார்களின் இசைத் தொண்டினால் தமிழிசை பெற்ற செல்வங்களைப் பார்த்தோம்.
அடுத்து வைணவப் பெருந்தகைகளான, ஆழ்வார்கள் படைத்திடும் அமுதினை அடுத்த பகுதியில் தொடர்வதினை கேட்டு மகிழ்வோம்!

18 comments:

  1. வாங்க கீதாம்மா!

    ReplyDelete
  2. இசைப்பாடல்கள் நல்ல தேர்வு! மிக அழகா செலக்ட் பண்ணி எடுத்துப் பாடி இருக்காங்க!

    //பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)
    பண் : பழம் பஞ்சுரம் (இராகம்: சங்கராபரணம்)//

    இவை எப்படி ஒன்றோடு ஒன்று ரிலேட் செய்யறாங்க?
    ஆரோகண/அவரோகணங்கள் தமிழ்ப் பண்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு இது வரை பார்த்ததில்லை!

    ஏழிசையாய் இசைப்பயனாய் - பாடல் மிகவும் அருமை!

    யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா - இது சூப்பர் பாட்டு! அதுக்குப் பின்னுள்ள கதையும் சூப்பர்!

    ReplyDelete
  3. வாங்க கே.ஆர்.எஸ்,
    //இசைப்பாடல்கள் நல்ல தேர்வு! மிக அழகா செலக்ட் பண்ணி எடுத்துப் பாடி இருக்காங்க!//
    ஆமாம், நல்ல தேர்வு.
    அப்பர், சம்பந்தர், சுந்தரர் என மூவர் பாடலும் இடம் பெற்று இருக்கு!
    திருவாசகமும் சேர்த்திருக்கலாமோ!

    ReplyDelete
  4. /ஏழிசையாய் இசைப்பயனாய் - பாடல் மிகவும் அருமை!//
    ஆரூரார் தோழனின் அருமைப் பாடல்!

    ReplyDelete
  5. //ஆரோகண/அவரோகணங்கள் தமிழ்ப் பண்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு இது வரை பார்த்ததில்லை!//
    ஹீம்! நானும் அப்படி தனியா எழுதிப் பார்த்ததில்லை. ஆனால், இப்போ இருப்பதில் இருந்து வேற மாதிரி இருக்கும்ன்னு நினைச்சு பார்த்ததில்லை. அதனால, சுரங்களின் வரிசையை பண்களுக்கு சொல்ல இயலும்ன்னு நினைக்கறேன்.
    பழந்தமிழில் ஆரோசை, அவரோசை என இவை குறிப்பிடப்பட்டுள்ளன.

    சௌம்யா அவர்களின் குருநாதர் - டாக்டர் எஸ்.ராமநாதன் - இவர் சிலப்பதிகாரத்தில் நிறைய இசை ஆராய்சிகள் செய்திருக்கிறார்.
    முல்லைப்பண் தான் மோகனராகம் என முதலில் ஒப்புமைபடுத்திச் சொன்னவர் அவர் தான்.

    ReplyDelete
  6. ஆஹா! அருமை. இனிக்கிறது :)

    ReplyDelete
  7. //யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
    காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
    (. பாடலின் முதலெழுத்தும், கடையெழுத்தும் ஒன்றாக இருப்பதைக் கவனிக்க//

    அது மட்டும் இல்லை. அது ஒரு palindrome கூட! என்ன ஒரு சாமர்த்தியம்!

    ReplyDelete
  8. வாங்க கவிநயக்கா!

    ReplyDelete
  9. வாங்க திவா சார்,
    //அது ஒரு palindrome கூட! //
    அட ஆமாம்!
    அற்புதம்!

    ReplyDelete
  10. //அது ஒரு palindrome கூட! //

    வாவ்!!

    ReplyDelete
  11. >>அப்பர், சம்பந்தர், சுந்தரர் என மூவர் பாடலும் இடம் பெற்று இருக்கு!
    திருவாசகமும் சேர்த்திருக்கலாமோ!<<
    Yes, could have! But the theme seems to be tEvAram trinity wherein unfortunately MANickavAcagar does not come in. It is a shame that SEkkizhAr did not include him among the nAyanmArs although the time frame difference between Sundarar and MANickavAcagar (who came later) was not that much. It is because of such segregation that tiruvAcagam did not get included in tEvAram. However, it gained a place of its own in the tirumuRais.

    ReplyDelete
  12. முனியே நான்முகனே முக்கண்ணப்பா என்று நம்மாழ்வார் சொன்னார். மாமாயா நீ மாமாயா என்கிறார் சம்பந்தப்பெருமான்.

    ReplyDelete
  13. வாங்க சேதுராமன் சுப்ரமணியன் சார்!
    //But the theme seems to be tEvAram //
    சரியாச் சொன்னீங்க - இங்கே தலைப்பு 'தேவாரம்' மட்டும் ஆதலால், இவர்களோடு சேர்த்து மணிவாசகர் பாடலைச் சொல்லவில்லை.
    சௌம்யா அவர்கள் திருவாசகப் பாடலையும், பின்னால் பாடறாங்க - கம்பராமாயணப் பாடலுக்கு அடுத்ததாக!
    So he is not missed!

    ஆனால், மணிவாசகரின் காலம் சரியா எது என்ன என்று அறுதியிட்டு சொல்ல இயலவில்லை. அவர் வாழ்ந்தது, சமயக்குரவர் மூவருக்கும் முன்னாலும் இருக்கலாம் எனச் சொல்கிறார்கள். முக்கியமான வாதம் - அப்பரே, தன் பாடலில், நரியைப் பரியாக்கிய நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார்.

    எப்படியோ, நாயன்மார்களில் அப்போது விட்டுப்போனாலும், இப்போது நாம் சேர்க்கலாமே, எனக் கேட்கிறார் இங்கே கே.ஆர்.எஸ்.

    ReplyDelete
  14. >>ஆனால், மணிவாசகரின் காலம் சரியா எது என்ன என்று அறுதியிட்டு சொல்ல இயலவில்லை. அவர் வாழ்ந்தது, சமயக்குரவர் மூவருக்கும் முன்னாலும் இருக்கலாம் எனச் சொல்கிறார்கள். முக்கியமான வாதம் - அப்பரே, தன் பாடலில், நரியைப் பரியாக்கிய நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார்.<<
    I have not seen that song where appar mentions transformation of nari to pari. If he did it could very well be some other incidence not related to MANickavAcagar. That is my guess.
    If at all MaNickavAcagar predated Sundarar, there was no reason why Sundarar would leave him out of the 60 nAyanmArs in his "tillaivAzh andaNar tam ..." who lived before him. SEkkizhAr took Sundarar's 60 and added Sundarar, and his parents to make 63. Whatever made SEkkizhAr do that is a mystery. In one of my articles I made him (MANickavAcagar) the 64th nAyanmAr to remedy that deficiency.

    ReplyDelete
  15. //If at all MaNickavAcagar predated Sundarar, there was no reason why Sundarar would leave him out of the 60 nAyanmArs//
    Yes Sir, That's true.
    The only reason I could think of is that - At that point of time, it was probably not known that, MaNickavAcagar was not associated with that!, And We found this only later... But that's purely my guess!

    எல்லா நாயன்மாரைக் காட்டிலும் மாணிக்கவாசகர் உயர்ந்தவர் - அவர் உமையன்னைக்கே சமமானவர் எனக் கருதுவாரும் உண்டு!

    //In one of my articles I made him (MANickavAcagar) the 64th nAyanmAr
    //
    Thank you!

    ReplyDelete
  16. //I have not seen that song where appar mentions transformation of nari to pari.//
    இவ்வாறு சொல்லப்படுகிறது என கேள்விப்பட்டது மட்டுமே உண்டு. இந்தப்பாடலை நானும் அறியேன் ஐயா.
    இந்த கட்டுரை மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனவே சுட்டுகிறது.
    I think I will go that.

    ReplyDelete
  17. குமரன்,
    //முனியே நான்முகனே முக்கண்ணப்பா என்று நம்மாழ்வார் சொன்னார். மாமாயா நீ மாமாயா என்கிறார் சம்பந்தப்பெருமான்.//
    இரண்டையும் ஒப்புமைப்படுத்துக் கொஞ்சம் சொல்ல வேண்டும்!

    ReplyDelete