வாய்ப்பாட்டு : எஸ். சௌம்யா
வயலின் : எம்பார் எஸ். கண்ணன்
மிருதங்கம் : நெய்வேலி ஆர். நாராயணன்
சௌம்யா அவர்கள் பாடிய பாடல்களும், நிகழ்வில் அவர் சொன்ன முக்கிய குறிப்புகளும்:
1. அகநானூறு பாடல் : ஆடமைக் குயின்ற...
இயற்றியவர் : கபிலர்
ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை யாக
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுரல் ஆக
கோடை அவ்வளி குழலிசை யாக
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுரல் ஆக
2. சிலப்பதிகாரம் : கன்று குணிலாக்... (ஆய்ச்சியர் குரவை)
இயற்றியவர் : இளங்கோ அடிகள்
இராகம் : மோகனம்
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;
(மோகனத்தின் சுரஸ்தானங்களை கிரகபேதம் செய்ய வரும் மத்யமாவதி, அதற்கு எடுத்துக்காட்டு போல, சிலம்பின் இன்னொரு பாடலை காட்டினார்.)இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;
இராகம் : மத்யமாவதி
இறுமென் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்
அறுவை யொளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகமென் கோயாம்;
வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;
(மோகன இராகத்திலிருந்து கிரக பேதம் செய்து ஹிந்தோளாம் இராகத்தினை அடைவதை இன்னொரு சிலப்பதிகாரப் பாடலைப் பாடுகிறார்.)அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்
அறுவை யொளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகமென் கோயாம்;
வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;
இராகம் : ஹிந்தோளம்
கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள்
மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்;
மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள்
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்;
மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்;
மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள்
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்;
சிலப்பதிகாரத்தில் அன்றைக்கே, கிரக பேதத்தினை விளக்கிடும் எடுத்துக்காட்டாக, பாடலை இயற்றி இருக்கிறார்கள்! பாடல்களும் இயைபு தரும் பண்களைப் பற்றி நன்கு அறிந்து பாடல்களை இயற்றி இருக்கிறார்கள்! இவையெல்லாம் நமது தமிழிசை எத்தனை உன்னதமான நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பதனை நினைத்துப் பார்க்க, பெருமையாக இருக்கிறது.
பிற்சேர்க்கை:
கச்சேரியில் - சிலம்பில் இருந்து இன்னும் இரண்டு பாடல்கள் - நேரடி நிகழ்சியில் "வடவரையை மத்தாக்கி" பாடலையும், "மூவலகம் ஈரடியான் பாடலையும்" பாடியுள்ளார்.
வடவரையை மத்தாக்கி (சுத்த சாவேரி - ஹிந்தோளத்தில் இருந்து கிரக பேதம்)
மூவுலகம் ஈரடியான் (சுத்த தன்யாசி - சுத்த சாவேரியில் இருந்து கிரக பேதம்.)
(இவ்விரண்டும் , ஜெயா டி.வி யின் ஒளிபரப்பில் இடம்பெறவில்லையென்பது வருத்தமானதே.)
(அடுத்த பகுதியில் தேவாரப் பாடல்களின் கால கட்டத்தில் தமிழிசை வரலாறு தொடர்வதினைப் பார்க்கலாம்...)
செளம்யாவின் உழைப்புக்குச் சற்றும் குறையாத உங்கள் விமரிசனம் அருமை! தொடரட்டும். வாழ்த்துகள்.
ReplyDeleteவாருங்கள் கீதாம்மா, வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!
ReplyDeleteஅன்புடையீர்,எனது பதிவிற்கு வருகை தர வேண்டுகிறேன்.
ReplyDeletewww.onruparamporul.blogspot.com
வாருங்கள் ஹரி ஓம்!
ReplyDeleteமிகுந்த ஈடுபாட்டுடன் விவரங்களை முனைப்புடன் சேகரித்து எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள்.
பாராட்டுக்களுக்கு நன்றி திரு.ஜீவி ஐயா!
ReplyDeleteஜீவா
ReplyDeleteரொம்ப நல்ல பதிவு! சின்னப் பதிவு-ன்னாலும் ரசிச்சிப் படிச்சேன்!
அதுவும் சிலம்பின் வரிகள் அவ்வளவு தமிழ் இனிமை! ரொம்பவும் தேர்ந்து எடுத்திருக்காங்க செளம்யா...
//சிலப்பதிகாரத்தில் அன்றைக்கே, கிரக பேதத்தினை விளக்கிடும் எடுத்துக்காட்டாக//
கிரக பேதம்-ன்னா என்ன?
என்னைப் போல் இசை அறியாப் பாமரர்க்கும் விளங்குமாறு ஓரிரு வரிகளில் சொல்லுங்களேன்!
//கடல்வண்ணன் இடத்துளாள்
ReplyDeleteதம்முனோன் வலத்துளாள்
மாயவன் வலத்துளாள்
தம்முனோன் வலத்துளாள்//
இசைப் பதிவு என்றாலும் இயல் வரிகள் கூட எத்தனை அழகு! இசைக்காகவே எழுதப்பட்ட வரிகள் போலவே இருக்கு!
//ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை யாக//
புல்லாங்குழலின் தோற்றத்தை எப்படிக் காட்டுறாரு பாருங்க! பாடலின் பொருளைப் பிரிச்சி மேய கை பரபரக்குது! :))
வாங்க கே.ஆர்.எஸ்,
ReplyDelete//சின்னப் பதிவு-ன்னாலும் ரசிச்சிப் படிச்சேன்!//
மாயோன் தமிழாச்சே!
//ரொம்பவும் தேர்ந்து எடுத்திருக்காங்க செளம்யா...//
நல்ல தேர்வுகள்!
உங்களுக்குத் தெரியாததா!
ReplyDelete//கிரக பேதம்-ன்னா என்ன?//
ஒரு இராகத்தில் இருந்து இன்னொரு இராகத்திற்கு மாறுவது:
கிரகம் : வீடு: தொடங்கும் இடம்;
பேதம் : மாற்றம்
/வேற்றுமை
சரிகபத - மோகனம் பாடத் தொடங்கி,
அப்புறம் ரி தொடங்கற ஸ்வரஸ்தானத்திலே,
ஸ-வை
துவங்கினா,
அது அப்புறம் மோகனம் இல்லாம, மத்யமாவதி வாகிடும். (சரிமபநி)
இப்படி ஷட்ஜமத்தோட இடத்தை மாற்றி ஒரு இராகத்தில் இருந்து இன்னொரு இராகத்திற்குப் போவது கிரக பேதமாம்.
இப்படியே மோகனம் - மத்யமாவதி - ஹிந்தோளாம் - சுத்த சாவேரி - சுத்த தன்யாசி - அப்படின்னு ஒரு இராகத்தில் இருந்து இன்னொரு இராகத்திற்கு ஜம்ப் பண்ணுறாங்க!
//பாடலின் பொருளைப் பிரிச்சி மேய கை பரபரக்குது! :))//
ReplyDeleteஇல்லாமல பின்னே! :-)
அத்தனை அருமையான செய்திகளை சொல்லும் சிலம்பு!
அறிமுகத்திற்கு ரொம்ப நன்றி ஜீவா.
ReplyDeleteவாங்க குமரன்!
ReplyDeleteஅறிமுகமா!? உங்களுக்கா?!
உங்களுக்கு இப்பாடல்கள் பரிச்சியமாயிருக்கும் என்றல்லவா எண்ணினேன்!
கீதாம்மாவுடைய பதிவு ஆவலைத் தூண்டிவிட்டிருந்தது. அதனைத் தோடர்ந்து சௌம்யா அவர்களைக் கேட்கும் வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி ஜீவா.
ReplyDeleteஆம், கவிநயாக்கா,
ReplyDeleteதொடர்ந்து சஞ்சய் சுப்ரமணியனும், நித்யஸ்ரீ மஹாதேவனும் கூட தமிழிசைப் பாடல்களை வழங்கி கலக்கி இருக்கிறார்கள்!
பிற்சேர்க்கை:
ReplyDeleteகச்சேரியில் - சிலம்பில் இருந்து இன்னும் இரண்டு பாடல்கள் - நேரடி நிகழ்சியில் "வடவரையை மத்தாக்கி" பாடலையும், "மூவலகம் ஈரடியான் பாடலையும்" பாடியுள்ளார்.
வடவரையை மத்தாக்கி (சுத்த சாவேரி - ஹிந்தோளத்தில் இருந்து கிரக பேதம்)
மூவுலகம் ஈரடியான் (சுத்த தன்யாசி - சுத்த சாவேரியில் இருந்து கிரக பேதம்.)
Hi Jeeva:
ReplyDeleteNice write-up. Your commentary and the correct text adds luster to Sowmya's rendition.
I notice Sowmya keeps the song written down in a sheet which she looks down as she sings. Perhaps there was not enough time for her to memorize the songs. It is alright since it is a novel attempt.
She said "ADamaik kuyinRa" is aganAnUru. I guess you did some research to find out it is puranAnUru (you also gave the authorship of Kabilar). Sowmya perhaps slipped there.
She made couple of more slips. 1. She said the Aycciyar Kuravai was watched by Kovalan and KaNNagi. Not so! Kovalan had gone to Madurai to sell the anklet. KaNNagi stayed behind with MAdari and Iyai. There were bad omens. Hence MAdari gathers her cowherdesses and stages the show.
2. She also mispronounced tozhunai as tOzhanai. She wrote it wrong, I guess. tozhunai is yamunai and punal is water, which she failed to grasp. Although such slips can be ignored, in the interest of sAhitya purity the singers should pay more attention.
//கடல்வண்ணன் இடத்துளாள்
தம்முனோன் வலத்துளாள்
மாயவன் வலத்துளாள்
தம்முனோன் வலத்துளாள்//
There seems to be a graha bEdam (lateral transposition of nappinnai) in these lines too.
In the first stanza nappinnai stands to the left of Krishna (mAyavan) and to the right of Balaraman (tam munnOn). In the second stanza iLangO transposes Krishna and Balaraman leaving nappinnai still in the middle. I wonder why he did that?
//I guess you did some research to find out it is puranAnUru//
ReplyDeleteSir, Actually, It was my mistake, and it should be அகநானூறு!
//There seems to be a graha bEdam (lateral transposition of nappinnai) in these lines too.//
ReplyDelete:-)
வார்த்தை விளையாட்டு!
:-)