பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும்
சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தமை உய்ய வாங்கிப்
பிறப்பறுக்கும் பிரானிடம்
வாசமாமலர் நாறுவார் பொழில்
சூழ் தரும் உலகுக்கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலை
திருவேங்கடம் அடை நெஞ்சமே
சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தமை உய்ய வாங்கிப்
பிறப்பறுக்கும் பிரானிடம்
வாசமாமலர் நாறுவார் பொழில்
சூழ் தரும் உலகுக்கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலை
திருவேங்கடம் அடை நெஞ்சமே
- திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி.
திரு நீராட்டு முடிந்து, அடுத்து அலங்காரம் செய்யலாமா. நம்ம தமிழ்த்தியாகய்யா, பாபநாசம் சிவன் ஹம்சாநந்தியில் அழகான கீர்த்தனை வடிச்சிருக்காரே, அதைக் கேட்டவாரு, அலங்காரப் பிரியனை, அலங்கரித்து, அகமகிழ்வோமா!
முன்னம், இங்கு ரஞ்சனி&காயத்ரி அவர்கள் பாடிட, குலசேகர ஆழ்வார் திருமொழிகளில் இருந்து மூன்று பாசுரங்களைக் கேட்டோம் அல்லவா, அதில் மூன்றாவது பாசுரம் ஹம்சாநந்தி இராகமாக அமைந்திருந்தது. விருத்தம் பாடிய பின்னர், தொடர்ந்து இந்தக் கிருதியினை, அதே ஹம்சாநந்தி இராகத்தில் இங்கே தொடருகிறார்கள், கேட்கவும்:
எடுப்பு
ஸ்ரீநிவாச திருவேங்கடம் உடையாய்
ஜெய கோவிந்த முகுந்த அனந்த
(ஸ்ரீநிவாச...)
தொடுப்பு:
தீன சரண்யன் எனும் பெயர் கொண்டாய்
தீனன் எனைப்போல் வேறெவர் கண்டாய்
(ஸ்ரீநிவாச...)
முடிப்பு:
ஜகம் புகழும் ஏழு மலை மாயவனே
திருமகள் அலர்மேல்மங்கை மனாளனே
ஜகன்நாதா........
ஜகன்நாதா, சங்கு சக்ர தரனே
திருவடிக்கு அபயம்... - உன்
திருவடிக்கு அபயம், அபயம் ஐயா!
(ஸ்ரீநிவாச...)
இங்கே திருமதி.சௌம்யா அவர்கள் பாடிட இப்பாடலைக் கேட்கலாம்.
அருமையான தொகுப்பை அடுத்தடுத்து அளித்து வருகின்றீர்கள். நன்றி.
ReplyDeleteநீராட்டமும் அலங்காரமும் மிக அழகு ஜீவா!
ReplyDelete//உலகுக்கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலை
திருவேங்கடம்//
உலகுக்கு எல்லாம் தேசமா?
//அடை நெஞ்சமே//
அடைவீரே-ன்னா விமான டிக்கெட் வாங்கிக்கிட்டுப் போகணும்!
அடை "நெஞ்சமே"-ன்னு சொல்லியதால், உங்க பதிவின் வழியாகக் கூட எளிதா போயிட்டு வரலாம் ஜீவா! :)
வாங்க கீதாம்மா,
ReplyDeleteதங்கள் பாராட்டுக்கு நன்றி.
வாங்க கே.ஆர்.எஸ்,
ReplyDelete//உலகுக்கு எல்லாம் தேசமா?//
நான் பொருள் சொல்ல நீங்கள் விழைவதால்:
தேசமாய் : தேசு : தேஜஸ் : ஒளி
உலகுக்கெல்லாம் ஒளியாய், திலகமாய் திகழும் திருவேங்கடமலை!
ஆண்டாளும் திருப்பாவையில் இதே சொல்லைப் பயப்படுத்துகிறார் அல்லவா:
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!
இப்போதானே மாதவிப்பந்தல்லே, தேஜஸ்வனீ அப்படின்னுகூட சொன்னதால, மறக்கலை!
தேசு என்னும் சொல் வரும் திருநாவுக்கரசர் தேவாரமும் நினைவுக்கு வரும்:
ReplyDeleteஓசை யொலியெலாம் ஆனாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ!
தேசவிளக்கு: ஒளி விளக்கு.
இங்கே பன்மையில், தேச விளக்கு எல்லாமும் ஆனாய் என்கிறார் அப்பர்.
உலகத்தில் ஒளி தரும் எல்லாப் பொருளுமாய் ஆனாய் என்கிற பொருளில்!
எல்லாப் பொருளிலும் ஆனவன், மிகவும் கருணைகொண்டு, ஒளிவீசி, இதோபார், கண்டுகொள், ஒளி வீசும் பொருட்களில் நான் இருப்பதை, என திருவுளம் கனிந்தான் போலும்!
//அடை "நெஞ்சமே"-ன்னு சொல்லியதால், உங்க பதிவின் வழியாகக் கூட எளிதா போயிட்டு வரலாம் ஜீவா! :)//
ReplyDeleteதாங்கள் வழி காட்டுவதற்கு நன்றி கே.ஆர்.எஸ்!
;-)
//இப்போதானே மாதவிப்பந்தல்லே, தேஜஸ்வனீ அப்படின்னுகூட சொன்னதால, மறக்கலை!//
ReplyDeleteஹிஹி! நான் எப்பவோ சொன்ன பொருளை எல்லாம் மறக்கலீயா நீங்க? நானே மறந்துட்டேன்!:)
சும்மா அறி-வினாவாகத் தான் கேட்டேன் ஜீவா! :)
அடியேனே எப்போதும் சொல்வதை விட, நீங்களும் சொன்னா நல்லா இருக்கும் இல்லையா? வினாடி-வினாவாக இருந்தால் மற்ற அன்பர்களும் பொருள் தேடப் புகுவார்கள் இல்லையா? அதான்!
தேசு=தேஜு=தேஜஸ்=ஒளி! நீங்கள் சொன்னது மிகவும் சரி!
எனக்கு மாணிக்கவாசகர் தான் ஞாபகம் வருவாரு!
"தேசன்" அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
ஈசன் அடி போற்றி! எந்தையடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
(அதென்னமோ தெரியலை, மணிவாசகர் ரொம்பவே ஒட்டிக்கிட்டாரு, அதான் அவருக்கு ரொம்பவே வரிஞ்சு கட்டுறேன்! :)))
//தாங்கள் வழி காட்டுவதற்கு நன்றி கே.ஆர்.எஸ்!//
ஆகா! அடியேன் அடிப்பொடி தான்! வழி எல்லாம் ஒன்னும் தெரியாது!
அடை "நெஞ்சமே"-ன்னு சொன்னதால, இந்தப் பதிவைப் படிச்சி, மனசாலயே போய் வரலாம் போலத் தோனியது!
//"தேசன்" அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!//
ReplyDeleteஅட, ஆமாம்! இப்பதான் நினைவுக்கு வருது!
//அடை "நெஞ்சமே"-ன்னு சொன்னதால, இந்தப் பதிவைப் படிச்சி, மனசாலயே போய் வரலாம் போலத் தோனியது!
//
மிக்க நல்லது!
//வினாடி-வினாவாக இருந்தால் மற்ற அன்பர்களும் பொருள் தேடப் புகுவார்கள் இல்லையா? அதான்!
ReplyDelete//
அப்படியே செய்யவும்!
அழகான எண்ணம். அழகான படங்கள். அழகான பாட்டு.
ReplyDeleteவாங்க குமரன்,
ReplyDeleteதங்கள் இரசிப்பிற்கு நன்றி!
>>...உலகுக்கெல்லாம்
ReplyDeleteதேசமாய்த் திகழும் மலை
திருவேங்கடம்....<<
A slokham in varAha purANam says the same thing in different words.
venkaTAdri samam sthanam
brahmANDE nAsti kinjcana
venkaTEsa samO devO
na bhUto na bhavishyati
// உலகுக்கெல்லாம்
ReplyDeleteதேசமாய்த் திகழும் மலை
திருவேங்கடம் அடை நெஞ்சமே //
திருவேங்கடத்துக்கே அழைத்துச் சென்றதற்கு நன்றி. தரவிறக்கம் செய்து கொண்டேன் மீண்டும் மீண்டும் ருசித்து மகிழ !:)
தொகுப்பு எல்லாமே நன்றாக இருந்தது.
நன்றி
வாங்க சேதுராமன் சார்!
ReplyDeleteகுறிப்புக்கு நன்றி.
வாங்க கபீரன்பன் ஐயா,
ReplyDeleteவருகைக்கு நன்றி!
//தரவிறக்கம் செய்து கொண்டேன்//
மிக்க மகிழ்ச்சி!
அடடா என்னே பாக்கியம் !
ReplyDeleteஅமெரிக்காவில்
அடியெடுத்து வைத்த
அடுத்த கணமென் பெருமான்
திரு வேங்கடமுடையான்
தரிசனமா !!
கோவிந்தா ! கோவிந்தா !
சுப்பு ரத்தினம்.
ஆகா, வருக சுப்புரத்தினம் ஐயா,
ReplyDeleteதங்கள் வரவு, நல்வரவாகுக!. அனைத்தும் இனிதே நடந்தேற வேங்கடவன் அருள் புரியட்டும்.
Welcome Mr. Subburattinam!
ReplyDeleteI am sure you will enjoy your grandkids to your heart's delight. If you are in New Jersey you can visit the Balaji temple in Bridgewater. If you are in Connecticut there is a beautiful Satyanarayana temple in Middletown. When the weather warms up you can visit those temples. In the mean time throw snowballs at the grandkids.
படங்கள் வெகு அழகு!
ReplyDelete//தீன சரண்யன் எனும் பெயர் கொண்டாய்
தீனன் எனைப்போல் வேறெவர் கண்டாய்//
பாடலும்தான்! நன்றி ஜீவா.
வாங்க கவிநயாக்கா,
ReplyDeleteதங்களுக்குப் பிடித்த வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள் போலும்!