தில்லையில் ஆனந்த நடம் ஆடும் ஈசன், கூத்தன், விரிசடை விண்ணவன், எப்போதும் ஒரு காலைத் தூக்கி நின்றாடுகிறான் அல்லவா! எதனால்? அவன் ஒரு காலைத் தூக்கி நின்றாடுவதன் மறைபொருள் ஒருபுறம் இருக்க, அவன் காலைத் தூக்கி நிற்பதால், அவன் முடமாகி நிற்கிறானோ, என்பதுபோல பலவற்றைச் சுவைபடச் சொல்லுகிறார் பாடலாசிரியர் இப்பாடலில். கவி காளமேகப் புலவரின் இந்த வெண்பா போல:
வாதக்கால் ஆம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவுஆம்
பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! - ஓதக்கேள்!
வந்தவினை தீர்க்க வகை அறியார் வேற்றூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்?
பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! - ஓதக்கேள்!
வந்தவினை தீர்க்க வகை அறியார் வேற்றூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்?
சிவன் காலைத் தூக்கி நிற்க, அவருக்கு வாத நோயாம். அவர் மைத்துணர் திருமாலுக்கோ, நீரிலியே படுத்திருப்பதால், நீரிழிவு நோயாம். பிள்ளையாருக்கோ, பெருத்த வயிராம்! ஆமாங்க, இவிங்க குடும்பமே நோய்வாய்ப்பட்ட குடும்பம் போல! இவிங்க நோய்களையே தீர்த்துக்கக் காணும், எங்கே நம்ப வினையை தீர்க்கறது?!!!
வாதம் - சீதம் என வருகிற மாதிரி, ஒரு நீண்ட பாடலே இயற்றி இருக்காரு, பாபவிநாசம் முதலியார் அவர்கள். இவர், நிறைய தமிழ்ப் பாடல்களை இயற்றி இருக்கிறார்கள். இவர் இயற்றிய பெரும்பாலுமான பாடல்கள், இந்த வகையைச் சார்ந்த இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இப்பாடலில் பாருங்கள் எப்படி அருமையா எதுகை அமைச்சிருக்காரு! :
நடம் - முடம் - திடம் - சடை
எடுப்பும், தொடுப்பும் என்னமா துடிக்குது!
இராகம் : காம்போதி
இயற்றியவர் : பாபவிநாச முதலியார் (1650-1725)
எடுப்பு
நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல்
முடமானதேன் என்று சொல்லுவீரய்யா!
தொடுப்பு
திடமேவும் தில்லைநகர் மருவு பேரானந்த
சடைவிரித்தாடினவா தேவ சிற்சபை அறிய
(நடமாடித்..)
முடிப்பு
1. திருநீறைச் சுமந்தீரோ! நெருப்பான மேனிதனில்
சீதத்தினால் மிகுந்த வாதகுணமோ!
ஒருமையுடன் மார்கண்டர்க்கு உதவியாய் மரலி விழ
உதைக்க சுளிக்கேறியுண்ட குணமோ!
பரவைதன் தெருவாசற்படி இடறிற்றோ, எந்தன்
பாவமோ, என் சிவனே, மூவர்க்கும் முதல்வன் என்று
(நடமாடித்..)
2. தனஞ்செய மஹிபனுடன் சமரில் அடிபட்டு விழ
சந்திலே முடி பிசகி நொந்ததுவோ?
இனம் புரியும் தாருகா வனமெங்கும் திரிந்ததில்
முள்ளேறுண்டதோ சொல்லும்? - முறிந்ததுவோ?
கனகசபை தனில் நடனம் கண்டோர்கள் அதிசயிக்க
கண்ணெண்றுண்டதோ சொல்லும்?
விண்ணவர்க்கும் முதல்வன் என்று
(நடமாடித்..)
3. பக்தி செய்யும் பெரியோர்கள் பாபநாசமாகும்
பரமபதம் இதுவென்று தூக்கி நின்றதுவோ?
சக்தி சிவகாமவல்லி தன்பாதம் நோகுமென்றே
தரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ?
சத்யலோக அதிபதி தாளத்திற்கேற்ப நடம்
தாங்கியே ஒரு காலைத் தூக்கி நின்றதுவோ?
(நடமாடித்..)
இந்தப் பாடலை டி.எம்.கிருஷ்ணா அவர்கள் பாடிடக் கேட்கலாம். அவர் முடிப்பில் முதல் சரணத்தை மட்டுமே பாடுகிறார். சில புத்தகங்களில், இரண்டாவது சரணம் இடம் பெறுவதில்லை. மேலும், சில புத்தகங்களில், இப்பாடல், கோபால கிருஷ்ண பாரதி அவர்களால் இயற்றப்பட்டதென தவறாக குறிக்கப்படுவதும் உண்டு.
பாடலைக் கேட்டவாறு, அதன் பொருளை மேயலாமா?
நடம் - நடனம் ஆடித் திரியும்
இதர கவிகளால், இப்படியெல்லாம், சிவன் நடம் ஆடுவதைப் பாடிவார்:
* ஆனந்த நடம் ஆடுவார் தில்லை, அம்பலம் தன்னில் ஆனந்த நடம் ஆடுவார் தில்லை (நீலகண்ட சிவன் : பூர்வி கல்யாணி)
* ஞான சபையில் தில்லை, ஆனந்த நடமாடும், ஆனந்த நடராஜனே (பாபநாசம் சிவன் : சாரங்கா)
* நடனம் ஆடினார், வெகு நாகரீகமாகவே, கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார் (கோபால கிருஷ்ண பாரதி : வசந்தா)
* ஆடிக்கொண்டார், அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ (முத்துத்தாண்டவர் : மாயமாளவகௌளை)
இடதுகால் முடம் :
இடதுகாலைத் தூக்கி நிற்பதால், இவருக்கு கால் முடமோ?, இவரால் காலை ஊன்றி நிற்க இயலாததன் காரணம் என்னவோ என வினவுகிறார்!
இதர கவிகள் இப்படியெல்லாம் 'காலை தூக்கி நின்றாடுவதை' பாடுவார்கள்:
* இடது பதம் தூக்கி ஆடும் நடராஜன் அடி பணிவையே, நெஞ்சே (பாபநாசம் சிவன் - கமாஸ்)
* காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே, எனை கைதூக்கி ஆள் தெய்வமே! (மாரிமுத்தாப்பிள்ளை - காம்போதி)
இவரோ, இடது கால் தூக்கி நிற்பதை 'முடம்' என்கிறார்.
ஐந்தெழுத்து மந்திரமாம் 'நமசிவாய' தனில் தொடக்கமாம் 'ந' வெனும் எழுத்தும், உனைப்போல் தூக்கிய காலுடன் நிற்பதுவே!
திடமேவும் தில்லை நகர்
தில்லைத் தலம் என்று சொல்லத் தொடங்கினால், இல்லை பிறவி, பிணியும் பாவமும்! (கோபாலகிருஷ்ண பாரதி - சாமா)
அப்படிப்பட்ட தில்லைநகரில், "திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்", சடைதனை விரித்த வண்ணம், பேரானந்தம் தரும் சத்-சித்-ஆனந்தம். எங்கெங்கும், எல்லாமுமாய் ஆகாசத்தில் பரந்து விரிந்து நிறைந்திருக்கும் பரப்பிரம்மம்.
சீதமும் வாதமும்
சுடலைப்பொடி பூசும், உள்ளம் கவர் கள்வனே, திரு-நீறை உடலில் பூசியதால், சீதமாகியதோ, அதனால், வாத குணமும் வந்து, இடது காலைக் கீழே வைக்க இயலாமல் தவிக்கிறீரோ? நமக்கெல்லாம், திருநீறைப் பூசினால், நமது நீர் குறையும். ஆனால், இங்கே எதிர்மறையா சொல்லுகிறாரே!. ஒருவேளை, திருநீறை நாம் பூசி, நம் சீதம் குறைந்து, அதெல்லாம் அவனுக்குப் போய்விட்டதோ! ஹ ஹா!
காலனை ஒரு காலால் உதைத்த 'ஒரு-காலன்':
நீரோ ஒற்றைக் காலில் ஆடுபவன்! மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, உன் காலால், காலனை உதைத்க, அப்போது, உம் காலில் தான் சுளுக்கு ஏறியதோ? அதனால் தான், ஒற்றைக் காலை எப்போதும் தூக்கியவாறே நிற்கிறீரோ?
வாசல் படி இடறிற்றோ?
ஈசனே, உமது 'நண்பர்' சுந்தரமூர்த்தி நாயனார், அவரது மனைவி பரவையாரை மீண்டும் சேருவதற்காக தூது போனீரோ!. அப்படி அவசர அவசரமாக அவரது வீட்டுக்குள் நுழையும்போதுதான், பரவையாரின் வீட்டு வாசற்படித் தடுக்கி கீழே விழுந்து, அதனால் முடமாகிப் போனீரோ?
எந்தன் பாவமோ?
ஒருவேளே, நான் செய்த பாவங்களால், அதனால் உனக்கு குறைவு வந்ததோ, அதனால் தான், நீர் முடமாகிப் போனீரோ?
இப்படியாக மற்ற இரண்டு சரணங்களிலும், ஒவ்வொரு கதையினைச் சொல்லி, அதில் தன் கற்பனையைப் புகுத்தி, இதனால் தான் சிவன் முடமாகிப் போனதுவோ, என்பதுபோல பாட்டினை வடிவமைத்திருக்கிறார் பாபவிநாசம் முதலியார்!
* சிவன் வேடனாக, தனஞ்செயன்(அர்ஜூனன்) உடன் போரில் நீர் அடிபட்டு விழ, அப்போது, உமது இடுப்பு எலும்பு இணைப்புகளில் வலி ஏற்பட்டு, அதனால், உம்காலைத் தூக்க இயலவில்லையோ? (சந்து: இடுப்பு; முடி:முடிச்சு:எலும்பு இணைப்புகள்; சமர்:போர்)
* தாருகா வனத்தில் பிச்சை எடுப்பவன் போல் திரிந்ததில், முள்ளும் உன்காலைத் தைத்ததுவோ?
* கனகசபை தன்னில், உமது ஆனந்த நடனம் கண்டு அதிசயத்தவர்களில் கண்பட்டுத்தான் இவ்வாறு நேரிட்டதோ?
* உன் இடது பாகத்தில் இருக்கும் சக்தி சிவகாமவல்லி, தன் பிஞ்சுப்பாதம் நோகுமென்று தரையில் கால் வைக்க தயங்கினாளோ?
* சத்தியலோக அதிபதியாம், பிரம்மனின் வேகமான தாளத்திற்கு ஏற்ப, நடமாடினீரே! அந்நடனமதில், உமக்குப் பிடித்த, அருமையான நடன முத்திரை இதுவென, ஒருகாலைத் தூக்கிக் காட்டுகிறீரோ எமக்கு!
ஏனையா, நடராஜனே, எனிப்படி ஒற்றைக் காலை தூக்கி நிற்கிறீர்?
ஆணவம், மற்றும் மாயை ஆகியவற்றில் இருந்து விடுபட, "இந்தா என் அருள்" என வழங்கிடும் வண்ணம்தனைக் குறிக்கத்தான், இப்படித் தூக்கிய காலுடன் நின்றீரோ, ஐயா!. பக்தி செய்பவர்களின் பாவமெல்லாம் நாசம் செய்யும், "பரமபதம் இதுவென" உன் பாதம் தனைக் காட்டும் கருணையுள்ளம் கொண்ட பெருமானே, வந்தனம் செய்வேன் உம்மை!.
பி.கு:
* அடைப்புக்குறியில் () குறிக்கப்பட்டவை பாடலை இயற்றியவர் பெயரும், பாடலின் இராகமும்.
* திரு.சேதுராமன் சுப்ரமணியன் அவர்கள் சென்னை ஆன்லைன் தளத்தில் இப்பாடலைப்பற்றி, தந்துள்ளவற்றை இங்கே பார்க்கவும்.
* இப்பாடலின் வரிகளுக்கு விளக்கம் தந்துதவிய திரு.ஸ்ரீநிவாசன் சபாரத்தினம், திரு.சேதுராமன் சுப்ரமணியன் ஆகியோருக்கு நன்றிகள்.
Jeeva:
ReplyDeleteJust arrived from rasikapriya,net.
Nice integrated assembly of different kritis on naTarAja and comprehensive background explanation for the kriti itself. PApanAsa mudaliyAr is one veritable composer. Besides, he compresses so much information (including anatomy I'd say) in so few words.
You may need to edit the text at a few places.
>>பேதப் பெருவயிறு<<
You have to check with others whether it is bEdam ( which means alteration, as in sruti bEdam) or bOdam (which means voluminous).
>> அறிவார் வேறூரார்<<
It should be "aRiyAr" (does not know) rather than "aRivAr (one who knows).
Also it is "vELUrAr". VaidIswaran koyil is known as "puL irukku vELUr"
>>இனம் புரியும்<<
Is it "hInam"? Refer to Lakshman's version. He is pretty good at tarnsliteration fidelity. hInam or Inam means "base" or "low". "inam" means group. In the context of the dhArukA forest, the sages were jealous of Siva (wandering naked) attracting their wives which resulted in their efforts to destroy Siva by sending flame, tiger, axe etc.
>>முள்ளெறு<<
muLLERu.
I am sure it escaped your attention. Typing it Thamizh requires extra care since more strokes are required,
>>இடது பதம் தூக்கி நின்றாடும்<<
There is no "ninRu". Just "ADum" only.
>>சக்தி சிவகாமவல்லி, தன் பிஞ்சுப்பாதம் நோகுமென்று தரையில் கால் வைக்க தயங்கினாளோ?<<
Although technically the left leg belongs to the goddess by virtue of her sharing the left side of Siva, it is still governed by Siva and hence here the last word should be "tayanginIrO" rather than "tayanginALO". The paDarkkai "tan" should be taken as "sivakama valliyin". It is Siva's compassion not to let the foot of the goddess stay grounded for fear of hurting it. However, physiologically speaking, resting the foot on the ground rather than suspending it in the air is more comfortable. But here PM is using nindAstuti and wants to embellish his points.
வருக சேதுராமன் சார்!
ReplyDeleteதிருத்தங்களுக்கு நன்றிகள். சிலவற்றை செய்து விட்டேன்.
செய்யாமல் விட்டவை:
*பேதப் பெருவயிறு* - பேதமாக, வேறுபாடாக பெரிய வயிறு என்பர்ஹு ஒரு பொருள். சித்த மருத்துவத்தில் 'பேதம்' என்ற சொல்லும், சிலவகையான மாறுபாடுகளைக் குறிக்கிறது.
* இனம் புரியும்/ஈனம் புரியும் - எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. வேறு யாராவது மேலும் இதற்கு விளக்கம் சொல்கிறார்களா பார்ப்போம்.
* சக்தி சிவகாமவல்லி, தன் பிஞ்சுப்பாதம் - சிவகாமவல்லி, *தன்* பாதம் - என்று சொல்லுவதால் - நேரடியான அப்பொருளையே கொண்டேன். நீங்கள் சொல்லும் பொருளும் சுவையாக உள்ளது!
காம்போதியில் நடமாடித் திரிந்த எனும் பாபனாசம் பாடல்
ReplyDeleteஎன் அன்னையில் ஃபேவரிட் ஆகும். என் அம்மாவும் 2 அடி யும் பாடக்
கேட்டிருக்கிறேன். மூன்றாவதி அடி கேட்டதில்லை. இப்பொழுது தான்
சரணத்தில் 3வது அடி இருக்கிறது எனத்த்தெரிகிறது. தகவலுக்கு நன்றி.
டி.எம். க்ருஷ்ணா காம்போதியில் எடுத்த எடுப்பிலேயே களை கட்டுகிறார்.
சுகம். சுந்தரம். சுவர்க்கம்.
நிற்க. எனது சொந்தக்காரர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பாயசம் ஒரு கப்பில்
தந்தார்கள். சுவைத்துக்கொண்டே, ஆகா ! பிரமாதம் என்றேன்.
கூட வந்திரு ந்த என் தம்பி ( அவன் ஃபிலாசஃபி ப்ரொஃபஸர்) பாயசம் மி ந்திரியோடு
கூட சற்று பாதாம் கல ந்திரு ந்தால் இன்னும் பேஷ் என்றான். வீட்டுக்காரர், சரியே என்றார். உடன் என் தம்பி, அச்சு வெல்லம் போட்டீர்கள் போல் இருக்கிறது. உருண்டை
வெல்லம் போட்டிரு ந்தால் இன்னமும் பேஷாக இரு ந்திருக்கும் என்றான். வீட்டுக்காரர்:
அதற்கென்ன அடுத்த முறை போட்டிடுவோம் என்றார். அது சரி ! பால் பசும்பாலுக்குப்
பதிலாக எருமைப்பால் காய்ச்சி சுண்டவைச்சபின் ஒன்றுக்கு கால் என்ற வீதத்தில் கலன்திருன்தால் நல்லது. வீட்டுக்காரர் முகம் சற்று வித்தியாசப்பட்டது. ஏன் பாயசம்
நன்றாகத்தானே இருக்கிறது என்றார்.
இதை எதற்காகச் சொல்லவேண்டுமெனத் துவங்கினேன் ? மற ந்துவிட்டேனே !
சுப்பு ரத்தினம்.
வாங்க சுப்புரத்தினம் ஐயா,
ReplyDeleteகாம்போதி டி.எம்.கிருஷ்ணாவுக்கு கைவந்த கலை!
முன்பொருமுறை, 'காணக் கண் கோடி வேண்டும்' பாடக் கேட்டது, இன்னமும் நினைவில் இருந்து அகலவில்லை!
பால் ஆராய்ச்சி: புரியுது, அனுபவிக்கணும், ஆராயக்கூடாது - இனிப்பை,
இனிப்பான இசையையும்!
அதானே!
>>பாயசம் ஒரு கப்பில்
ReplyDeleteதந்தார்கள்.<<
I am dying to know what pAyasam it is. I don't care about mundiri/bAdAm, accu vellam/uruNDai vellam, or even erumai/pasum pAl.
What is the matrixk for the pAyasam?
aval, sEmiA, paruppu, javvarisi.........?
Make it aval. That is what I like. I like real pasumpAl, whole jumbO cashews split into halves and fried in ghee to a golden brown (pon vaRuval) color, and California raisins too fried separately in ghee to plump sizes, ElakkAy powdered well, and a dash of kungumappU, all dumped into the aval pAyasam. By the way I make it the way I described here.
Sury:
Your brother must be from Mayavaram, I guess, to have such pristine taste buds.
பெற்ற தந்தை தாய் இருந்தால் உமக்கிந்த கதி தான் வருமோ ஐயா???
ReplyDeleteaval, sEmiA, paruppu, javvarisi.........?
ReplyDeleteஅவல் வேண்டுமானால் வெல்லப் பாயாசம் பண்ணினால் நல்லா இருக்கும், சேமியா, ஜவ்வரிசி பால் பாயாசம் தான் சாய்ஸ்! மத்தது ம்ஹூம்! நோ வே! பருப்புப் பாயாசம், முழுக்க முழுக்கப் பசும்பாலிலே கரைய விட்டுப் பாகுவெல்லம் போட்டால் ஒரு தரம் சாப்பிட்டுப் பாருங்க. அதிலே நீங்க சொன்ன மாதிரி முந்திரி, கிஸ்மிஸ் எல்லாம் போட்டால் ஆஹா!
அது சரி, போஸ்ட் பாட்டுப் பத்தியா? பாயாசம் பத்தியா? :))))))
ஜீவா
ReplyDeleteஇந்த பாடலின் கோப்பு என்னுடைய மெயிலுக்கு அனுப்ப இயலுமா? அல்லது எதேனும் ஒரு தளத்தில் இருந்து தரவிறக்கிக்கொள்ள முடியுமா?
நன்றி.
ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை
ReplyDeleteசத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழை
நிஜார் போட்ட மனிதனின் பேஜார்
ilavasak kottanAr:
ReplyDeleteI don't know what "kOppu" is. If you are referring to the lyrics for the song, I can send you the full text with textual fidelity if you post your email address.
If by "kOppu" you mean notation then you send a request to shalak@rogers.com. He will be happy to oblige.
ReplyDeleteI like Kalamegam very much!
ReplyDeleteஎன்னமா கலாய்க்கிறாரு! :)
அவர் வழியில் பாபவிநாச முதலியார் இன்னும் பிரிச்சி மேய்கிறார்! :)
//திருநீரைச் சுமந்தீரோ!// = திருநீறைச் சுமந்தீரோ!
//மரளி விழ// = மறலி விழ
மறலி=எமன்
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி-ன்னு அபிராமி அந்தாதியும் பேசும்!
சரி...
எருமைப் பால் தனி டேஸ்ட்! நல்லா மெதப்பா இருக்கும்! அதுல பாயசம்-ன்னா அடுத்து ஆயாசம் தான்! :)
வெல்லம் தட்டி போட்ட பாயசம் மாதிரி வருமா? சர்க்கரை வேலைக்காவாது! வெல்லக் கலப்பில் அவல் கலர் மாறியும் மாறாமலும் மிதக்கும் பாருங்க! ஆகா!
அவல்+வெல்லப் பாயசம் - மூனு கப் - டு நியூயார்க்! பார்சேல்ல்ல்ல்!..
சூப்பர் பாட்டு! :) பாயசமும் :)
ReplyDeleteரொம்ப நல்ல தொகுப்பு ஜீவா,
ReplyDeleteபாடலைக் கேட்டுக்கொண்டே பின்னூட்டமிடுகிறேன். :) ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைக் காண என்ற பாட்டும் எனக்கு பிடித்த ஒன்று.
//திருநீரைச் சுமந்தீரோ //
கங்கையை குறிப்பதோ ??
திருநீறை (சுடலைப்பொடி)பூசுவார்கள்; சுமப்பாரோ !!
just for discussion :)
வாங்க கீதாம்மா!
ReplyDelete/பெற்ற தந்தை தாய் இருந்தால் உமக்கிந்த கதி தான் வருமோ ஐயா???//
?!
பிறப்பு இல்லாதவனுக்கு தாய் தந்தைக்கு எங்கே போறது, பாவம் இல்லையா?!
தாய் தந்தை இருந்தும் ஒருத்தரு, மலைமேல ஆண்டியா நிக்கறாரு!
//அது சரி, போஸ்ட் பாட்டுப் பத்தியா? பாயாசம் பத்தியா?//
ReplyDeleteகீதம்மா,
இந்த சங்கீத இரசனையாளர்களுக்கு, இசையப்பற்றி பேசச்சொன்னா,
உடனே இனிப்பைப் பத்தியோ, சாப்பாடைப் பற்றியோ தவறாம சொல்லுவாங்க!
இரண்டுக்கும் அப்படியொரு ஒட்டுதல்!
வாங்க இலவசக்கொத்தனார்,
ReplyDeleteMP3 தரவிறக்கிக்கொள்ள சுட்டியினை விரைவில் சேர்க்கிறேன்.
வாங்க புதுகைத்தென்றல்,
ReplyDeleteஇதுவென்ன, ஹைகூவா?
வாங்க கே.ஆர்.எஸ்,
ReplyDelete//அவர் வழியில் பாபவிநாச முதலியார் இன்னும் பிரிச்சி மேய்கிறார்! :)
//
இருந்தாலும் உங்களை மாதிரி பிரிச்சி மேய முடியாது!
பதிவிலே, இருக்கும் எழுத்துப்பிழைகளை சுட்டியமைக்கு டாங்கீஸ்!
வாங்க கவிநயாக்கா,
ReplyDeleteபாட்டும் பாயசமும் ஒண்ணுதானே!
என்ன பாட்டு இல்லாவிட்டாலும்,
பாயசம் மட்டும்....ஹி..ஹி!
வாங்க கபீரன்பன் ஐயா!
ReplyDelete//திருநீறை (சுடலைப்பொடி)பூசுவார்கள்; சுமப்பாரோ !!//
ஆகா,
அப்படிக்கூட இருக்கலாம்!
இலவசக் கொத்தனார்,
ReplyDeleteஇங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்!
கபீரன்பன் ஐயா,
ReplyDeleteபாடலின் குறிப்புகளைப் பார்க்கையில், திருநீறு என்றுதான் குறிப்புகள் இருக்கு!
சுடலைப் பொடி - குளிர்ந்த சுடலை வனத்தில் இருந்து வருவதால் - சீதமானதோ!
>>பாட்டும் பாயசமும் ஒண்ணுதானே!<<
ReplyDeletepATTum nAnE pAyasamum nAnE
pADum unai nAn paruga vaittEnE
>>ஞான சபையில் தில்லை, ஆனந்த நடமாடும், ஆனந்த நடராஜனே (பாபநாசம் சிவன் : சாரங்கா)<<
ReplyDeleteThe two "Ananda" look redundant.
The book of Papanasan Sivan that I have has the song # 72 wherein the first line of pallavi reads as:
"gnAna sabhaiyil tillaik kAnand tannil ninRADum Ananda naTarajanE"
Sivan refers to tillai as the forest (kAnam)
ஜீவா
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தரவிறக்கிக் கொண்டேன்,
நாரதா
கோப்பு = file
//"gnAna sabhaiyil tillaik kAnand tannil ninRADum Ananda naTarajanE"//
ReplyDeleteநீங்க சொல்லுவது சரிதான் சார்,
சுதா ரகுநாதன் பாடிடய பாட்டைக் கேட்டுப் பார்த்தேன்.
கானம் தன்னில் - க் ஆனம்த..=ஆனந்த என்று எடுத்துக் கொண்டு விட்டேன் போலும்!
கானம் என்பதற்கு சரியான பொருள் என்னவோ?
எனக்கு - இரண்டு பொருள் தெரிகிறது !!
நல்லது இ.கொ!
ReplyDelete//கோப்பு = file//
ஆனால் அவருக்கு என்னகோப்பு என்கிற வினா!
ஒலிக்கோப்பு என்றிருந்திருக்க வேண்டும்!
>>கானம் என்பதற்கு சரியான பொருள் என்னவோ?
ReplyDeleteஎனக்கு - இரண்டு பொருள் தெரிகிறது <<
In the context of the song "kAnam" means forest. Cidambaram was a forest area.
My dictionary gives the following meanings for kAnam: forest, flower garden, fragrance.
kAna mayilADak kaNDirunda vAnkOzhi...
kAdaliyaik kAriruLil kAnagattE kaitiTTa..
(kAnam and kAnagam are used interchangeably).
However, as you know, Thamizh does not distinguish between "kA" and "gA" in the script from (only in the context it will do so).
The dictionary gives two other meanings: song, and skylark. These two would be applicable only for "gAnam".
Why is it not to be construed "tillai gAnam"? --because after the tillai there is the letter "k" in the text so that the next word can only be "kAnam" and not :gAnam"
Also if you read the whole line "gAnam" would not fit there.
>.ஆனால் அவருக்கு என்னகோப்பு என்கிற வினா!<<
ReplyDeleteI am way out in the outfield. The Thamizh terminologies in computerese and net language are quite foreign to me.
"ஞான சபையில் - தில்லை
ReplyDeleteகானம் தன்னில் நின்றாடும்
ஆனந்த நடராஜனே!"
ன-வில் எதுகை வருவதால் - கானம் எனப்போட்டார் போலும்!
//In the context of the song "kAnam" means forest.//
Yes Sir, that's one possible explanation.
The other explanation - கானம் - பாடல் - seems applicable only if disconnect தில்லை & கானம்!
இன்னொரு பொருள் - கானம்: தேர்!
தேரினில் பவனி வரும் ஆடவல்லான்?
இவை ஏதுமே எனக்கு திருப்தி அளிக்கவில்லை.
அம்பலம், ஆகாயம் அல்லது
மஹாம்புஜ பீடம்
- இவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடாதோ என எதிர்பார்ப்பதால்!
:-)
http://sivamgss.blogspot.com/2009/01/blog-post_29.html
ReplyDeleteவிருது கொடுத்திருக்கேன், நீங்களும் கொடுங்க, பதிலுக்கு. தொந்திரவாய் இருக்குமோ??? இருக்காதுனு நம்பறேன்!