Saturday, January 31, 2009

ப பூ ப வி!

இது என்ன தலைப்பு? ப பூ ப வி!
அதாங்க, பட்டாம் பூச்சி பதிவர் விருது.
கீதாம்மா பாட்டுக்கு, நம்ம பக்கம் தள்ளி விட்டுட்டாங்க....ஞானம் அப்படியெல்லாம் வேற சொல்லிட்டாங்க!
Half knowledge is more dangerous than No knowledge அப்படீங்கற வாசகம் தான் நினைவுக்கு வருது, அதனால பயமாத்தான் இருக்கு!

ப பூ பற்றி முன்னாடி நிறைய கேள்விப்பட்டது இல்லை. யாரோ, ஒண்ணு ரெண்டு பதிவர் பக்கத்துல்ல பார்த்ததா ஞாபகம்! ஆனா, சமீபத்துல, திவா சார் பக்கத்துல பார்த்தா, இதைப் பற்றிப் பெரிய்ய்ய்ய ஆராய்ச்சியே செஞ்சு வைச்சுருக்காரு!

நமக்கு கொடுத்த விருது, நமக்கே இல்லையாம்,
இதை, மூணு பேருக்கு கொடுக்கணுமாம்மே!
ஆனா ஒரு சந்தேகம், ஒரு விருதை எப்படி மூணா பங்கிடுவது? 33.333...% ஆகவா?
இப்படியெல்லாம் சாக்கு சொல்லி, விருதை நம்ப பக்கமே வச்சுக்க தந்திரம் ஏதும் பலிக்காததுனாலே,
ஒருவழியா, மூணு பேரையும் இங்கே(யே) அறிவிச்சிடுறேன்!:

1. தங்கமணி அவர்களின் தங்கமான கவிதைகள்.
மரபில் சிறப்பாகவும் வழுவிலாமலும் அழகான
கவிதைகளை படைக்கும் இவரின் நடை
சுவைக்க சுவைக்க இனிக்கும்!
பதமலர் என்னும் கவிதையில் இவரது இந்த ஒரு சொல்லாடலே சான்றோ!:
'விட அரவும் புலியதளும் விரிசடையில் நதிமதியும் மிளிரும் ஈசன்'

2. அடுத்தது, காற்று வெளிதனில் சகலமும் படைப்பவர், மதுமிதா க்கா.
நிறைய நாளாகவே, இவங்க பதிவுகள், ஆச்சரியமா, அனுபவிச்சு படிச்சு வருகிறேன்.
இலக்கியவாதி, செய்தியாளர், தேசநேசி என பற்பல பரிணாமங்கள், இவரது பதிவுகளில் படங்களுடன் பட்டொளி வீசிப் பறந்திடக் காணலாம்!

3. முடிவா, முத்தாய்ப்பா, ஷைலஜா க்கா.
எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ண வேண்டும் என்று
நல்ல நல்ல விஷயங்களை நாளொரு வண்ணமாய் தருபவர். இவங்க அருமையா புயங்கப் பெருமானின் புஜங்கம் பாடி இருந்தாங்க! சமீபத்தில, இவர் தந்த புத்தகக் கண்காட்சி அனுபவங்களைப் படிக்கையில், நாமும் கண்காட்சியைப் பார்க்கலையே என ஏங்க வைத்தன. கடைசியா நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போய் பத்து வருடங்கள் இருக்கும். அப்போ, என்னென்ன புத்தகங்களைப் பார்த்தேன், என்ன புத்தகங்களை வாங்கினேன் என அசைபோட்டு பார்க்கையில், நினைவுகள் வியந்தன!

விருதைப் பெற்ற மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள்.
அப்புறம், முன்கூட்டியே நன்றியும், எனென்றால்:
இந்த விருது - ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கிட்டு போறது போல - அதனால, பின்பற்றவேண்டிய சில விதி முறைகள் இருக்காம்!: (

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

~~~~
மூணு பேரைப் பாராட்ட வாய்ப்புக் கொடுத்த கீதாம்மாவுக்கு ஒரு நன்றி!
~~~~
அங்கே இருந்து ஒரு சத்தம் கேட்டது: க்கர்ர்ர்ர்ர், ஒண்ணே ஒண்ணு தானா?
~~~~
சரி, சரி, மூன்று நன்றிகள்! :-)
~~~~

22 comments:

 1. பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.......

  தேவா......

  ReplyDelete
 2. நமக்கு கொடுத்த விருது, நமக்கே இல்லையாம்,
  இதை, மூணு பேருக்கு கொடுக்கணுமாம்மே!
  ஆனா ஒரு சந்தேகம், ஒரு விருதை எப்படி மூணா பங்கிடுவது? 33.333...% ஆகவா?
  இப்படியெல்லாம் சாக்கு சொல்லி, விருதை நம்ப பக்கமே வச்சுக்க தந்திரம் ஏதும் பலிக்காததுனாலே,
  ஒருவழியா, மூணு பேரையும் இங்கே(யே) அறிவிச்சிடுறேன்!:
  //

  புதிய மூவரை அறிமுகம் செய்ததற்கு நன்றி..
  நாங்க போய் பாப்பம்ல..

  ReplyDelete
 3. வாங்க தேவன்மையம்!
  முதல் மறுமொழிக்கு நன்றி!
  நல்வரவு!

  //நாங்க போய் பாப்பம்ல..//
  அவசியம் பார்க்கணும்!
  அது க்குத்தானே இது!

  ReplyDelete
 4. ஜீவா! என்னையும் பறக்கவச்சாச்சா:) அச்சா ஹை! நீங்க சொன்னபடி பறக்கறேன்! நன்றி நன்றீ!

  ஷைலஜா

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் ஜீவா. :-)

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் பட்டர்பிளை ஜீவா!

  வாழ்த்துக்கள் பட்டர்பிளை ஷைல்ஸ் அக்கா! பட்டர்பிளை மதுமிதா அக்கா! & சந்தக் கவி தங்கமணி! :)

  ReplyDelete
 7. வாங்க ஷைலஜாக்கா!

  வாங்க மௌலி சார்!
  வாழ்த்துக்களுக்கு நன்றி!

  வாங்க KRS!
  தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 8. வாழ்த்துகள் விருது பெற்ற மூவருக்கும், அதிலும் தங்கமணியை எனக்கு இன்று வரை தெரியாது. அறிமுகத்துக்கு நன்றியும். அருமையான தேர்வுகளுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. அன்புள்ள ஜீவா!
  வணக்கம்.பட்டாம்பூச்சி விருது எனக்கு
  அளித்திருக்கும் உங்களுக்கு என் மனமுவந்த
  நன்றி!மகிழ்ச்சி!!
  ஷைலஜா பாடிய (சிவசிவாவின்) புஜங்கம் பாடலை
  கேட்டு மகிழ்ந்தேன்.உச்சரிப்புத் துல்லியமாக இருந்தது.
  அன்புள்ள ஷைலஜா!வாழ்த்துகள்!
  மற்றும்கண்ணபிரான்,ரவி, சங்கர்,கீதாசாம்பசிவம்,
  சூரி,திவா அனைவருக்கும் என் நன்றி!

  அன்புடன்,
  தங்கமணி.

  ReplyDelete
 10. வாங்க தங்கமணியம்மா,
  மிக்க மகிழ்ச்சி!
  ஷைலஜாக்கா நல்லா பாடி இருந்தாங்க, மற்றும்

  சிவசிவா அவர்களும், அருமையா புஜங்கப் பாடலை எழுதி இருந்தாரு.
  அன்றாடம் வாசிக்க அருமையான தமிழ் வாழ்த்துப்பா!

  ReplyDelete
 11. பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துகள். 33.33%க்கும் மேலாக பொன்/ண் விருதுகளாகத் தந்திருக்கீங்க:-) ஈயம் பித்தளைன்னு யாரும் குறை சொல்லிட முடியாத தேர்வு:-) தங்கமணியம்மா பதிவு அறிமுகத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 12. ஜீவா, மற்றும் தங்கமணி அம்மா, மதுமிதா, ஷையக்கா, அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ஜீவா...

  ReplyDelete
 14. முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஜீவா.

  தங்கமணி, ஷைலுக்கு வாழ்த்துகள்.

  நீங்கள் அனுப்பிய இன்றுவரை பட்டாம் பூச்சி பதிவர் விருது குறித்து எதுவும் தெரியாது. கொஞ்ச‌ம் அவகாசம் கொடுங்க‌ள்.

  (இது வ‌ரைக்கும் விருது வாங்கிய‌தில்லைன்னு நான் சொல்ற‌து, சொல்லிக்கிட்டிருக்கிறது உங்க‌ளுக்கு எப்படி தெரிஞ்ச‌து:)))) )

  வாழ்த்திய‌ ந‌ல்லுள்ள‌ங்க‌ளுக்கு ந‌ன்றி.

  ReplyDelete
 15. pls visit and give your feedback
  http://www.peacetrain1.blogspot.com/

  ReplyDelete
 16. வாங்க மதுமிதாக்கா,
  இப்பவாது பார்த்தீங்களே!
  அவகாசமா! நேரம் கிடைக்கும்போது செய்யுங்க!
  மிக்க நன்றி!

  ReplyDelete
 17. வாங்க அமைதி ரயில்,
  அமைதியும், நல்லெண்ணமும், நல்லுறவும் எங்கெங்கும் தழைக்கட்டும்.

  ReplyDelete
 18. வாங்க கேபி, கிருத்திகா மற்றும் கவிநயா,
  தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 19. http://jeevagv.blogspot.com/2009/01/blog-post_31.html

  ஜீவா! நீங்க அனுப்பிய பட்டாம்பூச்சி பறந்து தமிழ்மலர்ல தேன் எடுத்து
  தன் பட்டு சிறகுகளில் என் வலைப்பூவினை வருடிப்போயிருக்கிறது நேரமிருந்தால் வருகைதரவும் நன்றி

  ReplyDelete
 20. ஆகா, வருகிறேன் ஷைலஜாக்கா!

  ReplyDelete
 21. நன்றி ஜீவா. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  இதோ நீங்கள் அளித்த விருது சிறகடித்து மேலும் மூவருக்கு செல்கிறது.

  http://madhumithaa.blogspot.com/2009/03/blog-post.html

  ReplyDelete
 22. நன்றி ஜீவா. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  இதோ நீங்கள் அளித்த விருது சிறகடித்து மேலும் மூவருக்கு செல்கிறது.

  http://madhumithaa.blogspot.com/2009/03/blog-post.html

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails