Saturday, October 11, 2008

இவ்வுலகம் எப்படிப்பட்டது : கபீர்

ன்றாடம், இந்த உலகத்தில் நாம் நிற்பதும், நடப்பதும், தூங்குவதும், சாப்பிடுவதும், வேலை செய்வதும், இன்ன பிறவற்றையும் செய்வதும், வழக்கமாகி விடவே, இவ்வுலகத்தைப் பற்றிய நம் கண்ணோட்டம் இயல்பாகி விடுகிறது. நிற்பதும், நடப்பதும், இன்னபிறவும் அற்ப மாயை என்பதை அறியா மனம், இந்த அன்றாட நிகழ்வுகளைத் தாண்டிய ஆழ்ந்த பொருளை எண்ணாது, மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறது.
இவ்வுலகம் எப்படிப்பட்டது என்பதனை, இக்கவியில் எளிதாகச் சொல்கிறார், மகான் கபீர்தாஸ். துன்பத்தில் சிக்க வைக்கும் இவ்வுலகத்தில் இருந்து சுதந்தரம் பெறுவதெப்படி என்பதனையும் அவரே சொல்கிறார், கேளுங்கள்:

புகழ் பெற்ற கசல் பாடகர் ஜக்ஜீத் சிங் அவர்கள் பாடிட, இந்த பாடலை இங்கு கேட்கலாம்.

ரெஹ்னா நஹி தேஸூ பிரானா ஹை

யே சன்சார் காஹது கி புடியா பூண்ட் படே
குலு ஜானா ஹை
ரெஹ்னா நஹி தேஸூ பிரானா ஹை

யே சன்சார் ஜாடு அவுர் ஜாகடு
ஆகு லகே பர் ஜானா ஹை
ரெஹ்னா நஹி தேஸூ பிரானா ஹை

யே சன்சார் காடோ கீ பாடி
உல்ஜ் புல்ஜ் மர் ஜானா ஹை
ரெஹ்னா நஹி தேஸூ பிரானா ஹை

கெஹத்து கபீரு சுனோ பாய் சாதோ
சத் குரு நாம் டிகானா ஹை
ரெஹ்னா நஹி தேஸூ பிரானா ஹை

(உச்சரிப்பில் பிழைகள் இருக்கலாம், பொறுத்தருள்க!)

இப்போ, இக்கவியை தமிழாக்கிப் பார்க்கலாமா?

இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே... அன்னியமான
இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே...

இவ்வுலகம் காகித உருண்டைபோலே - ஒருவாளி
நீரிரைத்தால், கூழாகிடுமே...
(இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே...)

இவ்வுலகம் முட்புதர் போலே - அதில் சிக்கித்
தம்மைத் தொலைக்கச் செய்யுமே...
(இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே...)

இவ்வுலகம் வெறும் மரங்களும், புதர்களுமே - அதில்
சிறுதீ பற்றினாலும், பாழாகிடுமே...
(இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே...)

கபீரன் சொல்வதைக் கேளும் - சாதுக்களே,
சத் குருநாதரின் நாமமே, நமது ஒரே இலக்கு!
(இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே...)

உருது கவிஞர் ஒருவரைப் பற்றிய இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில்,
இப்பாடலை தெருவில் பாடி வருவதுபோல அமைத்திருக்கிறார்கள்.
கீழே இருக்கும் அசைபடத்தில், இப்பாடலையும், அப்படத்தின் இதர காட்சிகளையும் காணலாம்:

8 comments:

  1. Anonymous9:02 AM

    நிலையில்லா உலகில் நிலைக்க வேண்டும் மனிதர் - என்ற பாடல் நினைவுக்கு வந்தது!
    -ஹரி.

    ReplyDelete
  2. அப்படியா ஹரி, வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  3. ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்லுவார்- மாயை அகன்று வழி விட வேண்டுமெனில் அதற்கும் (மாயா)தேவியின் அருள் வேண்டும் என்று. அதுவரை இப்படி அலைக்கழிய வேண்டியதுதான் போலும்.

    ReplyDelete
  4. வாங்க கவிநயாக்கா,
    ஆமாம், தேவியின் திருவருள் கிடைக்க வேண்டும். அவ்வருள் கிடைக்க சத்குருவின் குருவருள் கிடைக்க வேண்டும்!

    ReplyDelete
  5. இணைப்புக்கு நன்றி ஜீவா

    மிர்ஜா காலிப் மிகவும் புகழ் பெற்ற உருது கவி. அவரைப் பற்றிய தொலைக் காட்சி தொடர் தூர்தர்ஷனில் ஒளி பரப்பானபோது ஹிந்தி ஞானம் சூன்யம். மனம் ஒட்டவில்லை. இப்போது சுமாராகப் புரிகிறது.

    கபீரின் பல பாடல்கள் ஒலிநாடாவில் என்னிடம் உள்ளன. அவற்றை எவ்வளவு தூரம் தமிழ் வாசகர்கள் ரசிக்க முடியும் என்பது புரியாததால் வலையேற்றம் செய்யாமல் இருக்கிறேன். இனி நேரம் கிடைக்கும் பொழுது செய்கிறேன்.

    ReplyDelete
  6. அவசியம் செய்ய வேண்டும் கபீரன்பன் ஐயா,
    தமிழ் ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள். என்ன அங்காங்கே, நம்மவரையும் கொஞ்சம் ஒப்புமைப்படுத்த வேண்டும், அவ்வளவே!

    ReplyDelete
  7. Anonymous10:29 PM

    இப்போதுதான் பார்த்தேன் - நல்ல பாடலை வழங்கியமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  8. வருக சுகா!, வருகைக்கு நன்றி!

    ReplyDelete