Wednesday, October 08, 2008

நவராத்ரி : வாணி வாகதீஸ்வரி

சகலகலா வல்லி வாணி நின் அடிபோற்றி வணங்கியே பாடிட ஓர் பாட்டு.
இராக தாள சந்தி சேர்த்து, தூய கானம் பாடிடவே, நீ அருள்வாயே, வேதரூபிணி, வித்யாதேவி.

"ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை
தூய உருப்பளிங்கு போல்வாள் என்
உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராது இடர்

படிகநிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரைபோற் கையும் துடியிடையும்
அல்லும் பகலும் நவரத முந்ததித்தாற்
கல்லுஞ் சொல்லாதோ கவி"

குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலையின் பத்து பாடல்களும், அவற்றின் பொருளும் படிக்க குமரன் அவர்களின் பதிவை இங்கே நாடிடவும்.

வாணி வாகதீஸ்வரி!
---------------
பாடலை இயற்றியது : B.A.சிதம்பரநாத்
இராகம் : வாகதீஸ்வரி
பாடுபவர் : கே.ஜே.யேசுதாஸ்

எடுப்பு
வாணி வாகதீஸ்வரி
வரம் அருள்வாய், இசைவாய் நீ வாகதீஸ்வரி!
வரம் அருள்வாய், இசைவாய் கலைவாணி, வாகதீஸ்வரி!

தொடுப்பு
வேணி, வேத புத்தக வாணி
வினைகள் அகற்றும் வித்யாரூப
(வாணி வாகதீஸ்வரி)

முடிப்பு
எத்தனை ஜென்மம் நீ எனக்களித்தாலும்
இசைஞானமும் நல்லொழுக்கமும் வேணும்!
அத்தனையும் நீ எனக்களித்தாலும்
என்னருகில் இருந்து ஆண்டிட வேண்டும்!
(வாணி வாகதீஸ்வரி)

Vaani
[play]

15 comments:

  1. அருமையான பாடல் அதுவும் ஜேசுதாஸின் குரலில் வழிந்தோடும் செந்தேன் அருவிபோல் இருக்கும் இந்தப்பாடல்... வாணி..... என்று ஆரம்பித்த்ததுமே நம்முள் வாணி வந்தமர்ந்து வீணை மீட்டிடுவாள்....
    இப்போது இந்த பதிவில் இருந்து ஏனோ பாட்டு கேட்க முடியவில்லை!!!!
    என் இணைய தொடர்பில் தகராறா என்றும் புரியவில்லை...

    ReplyDelete
  2. வாங்க கிருத்திகா மேடம்,
    யேசுதாஸின் தேன்மதுரக் குரலில் தெவிட்டாமல் வழிந்தோடும் தெள்ளமுது, இப்பாடல்!
    பாடல் நீளமாக இருப்பதால், துவங்கிட நேரமாகிறது போலும். சரி செய்யப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. esnips - இல் எந்தப் பாடலையும் ப்ளே செய்வதில் தாமதமாகிறது. வேறு ஒரு வழியில் தருவிக்க முயல்கிறேன்.

    ReplyDelete
  4. இப்போது, பாடலைக் கேட்க இயலும் - esnips-இல் இருந்து gcast–க்கு மாற்றி விட்டேன்.
    தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  5. அருமையான பாடல், சரியான நேரத்தில் அளித்தமைக்கு நன்றி ஜீவா.

    நானும் ஒருமுறை பாடிக் கொள்கிறேன் (மனசுக்குள்ள தான் :))

    ReplyDelete
  6. மிக இனிமையான பாடல். யேசுதாஸ் அவர்களின் குழைந்துருகும் குரல் மேலும் இனிமை சேர்க்கிறது. நன்றி ஜீவா.

    ReplyDelete
  7. சரியான நேரமா, நல்லது மௌலி சார்!
    மனசுகுள்ளே பாடினாலும் வாணிக்கு கேட்கும்!

    ReplyDelete
  8. வாங்க கவிநயாக்கா,
    இனிமையான பாடல் மனதுக்கு இதம் தருகிறது.

    ReplyDelete
  9. இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. ஆசிரியர் யாரென்று தெரியாமல் இருந்தது. இப்போது பெயர் தெரிந்து கொண்டேன். நன்றி.
    சரஸ்வதியின் கடாட்சம் பெருகட்டும்.

    ReplyDelete
  10. வாருங்கள் கபீரன்பன்,
    இந்தப் பாடலை கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மேலாக அறிந்திருந்தாலும், இரண்டு நாட்களுக்கு முன்னால் இப்பாடலை இயற்றையவரை அடியேனும் அறியேன். நேற்று நீண்ட முயற்சிக்குப்பின் கிட்டியது!
    B.A.சிதம்பரநாத் - இவர் தனது இளமைக் காலத்தில் M.M.தண்டபாணி தேசிகர், மதுரை மணி ஐயர் போன்றோர்க்கு வயலின் வாசித்துள்ளார். பின்னாளில் மலையாளத் திரையில் இசையும் அமைத்துள்ளார்.

    ReplyDelete
  11. எங்கோ புதரிடை இருப்பினும் காற்றில் அரிய மணம் பரப்பும் பூவைப்போல மனதில் இடம் பிடித்த பாடலின் அறியப் படாத பாடலாசிரியர் பற்றி முயற்சி எடுத்து தகவல் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  12. >>இருப்பளிங்கு<<
    My memory tells me that this word should be "uruppaLingu" and not "iruppaLingu". paLingu means crystal. uru = idol or shape. I reckon that here the description refers to goddess Saraswati as looking like "pure beautiful crystal idol"
    Any thoughts?

    ReplyDelete
  13. You are right Sethuraman Sir,
    It should be 'உருப்பளிங்கு'.
    I will correct it.

    ReplyDelete
  14. அருமையான பாடல் ஜீவா. இரண்டு முறை அடுத்தடுத்து கேட்டேன்.

    ReplyDelete
  15. வாங்க குமரன்,
    ஆமாம், அருமையான பாடல்.
    சின்ன வயதில், முதன்முதனில் ஒலிநாடா வாங்கி கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. நமது இசை மீது, இதுவரை தணியா ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் ஏற்படுத்தியவை இதுபோன்ற பாடல்கள்தான்!

    ReplyDelete