Friday, October 24, 2008

இயல் இசையில் : திருப்புகழ்

இராகம் : ஹூசைனி
தலம் : திருச்செந்தூர்

தன தனன தனன தந்தத் தனதான

இயல் இசையில் உசித வஞ்சிக் கயர்வாகி

இரவுபகல் மனது சிந்தித் துழலாதே

உயர்கருணை புரியும் இன்பக் கடல்மூழ்கி

உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே


மயில் தகர்கலிடையர் அந்தத் தினைக் காவல்

வனஜகுற மகளை வந்தித் தணைவோனே
கயிலை மலை யனைய செந்திற் பதிவாழ்வே

கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளே.

-----------------------------------
தகர் : ஆடு - முருகனின் மூன்று (மயில், ஆடு, யானை) வாகனங்களுள் ஒன்று; மூன்றையும் வாகனங்களாக கொண்டதற்கு பொருள் மூன்று மலங்களையும் (ஆணவம், மாயை, கன்மம்) அடக்கி ஆளுதலைக் குறித்தலாம்.
வனஜ : தாமரை/திருமகள் (வனஜம் - தாமரை ; தாமரையில் வீற்றிருப்பவள் திருமகள்- ஆகுபெயர்) (பூவெனப் படுவது பொறிவாழ் பூவே)
---------------------------
இந்த திருப்புகழ் பாடலை திரு.ஜேசுதாஸ் பாடிட இங்கு கேட்கலாம்: (PopUp விண்டோவில்)
(பிற்சேர்க்கை : இங்கு ஜேசுதாஸ் பாடுவது, ஹிந்தோளம் போல இருக்கிறது)
[play]
இந்தச் சுட்டியில் இருந்து உங்கள் கணிணிக்கு இறக்கிக் கொள்ளலாம்:


---------------------------

அருணகிரியார் சொல்கிறார்:
யலிசையில் சிறந்து விளங்கும் பெண்டிரின் நினைவில், இரவு பகலெல்லாம், வேறொரு நினைவும் இல்லாமல் அலைந்தேனே. அப்படிப்பட்ட எனக்கும், நீயும் கருணை புரிந்தாயே கந்தா. உன் கருணைக்கு நிலையான பாத்திரமாக நான் என் செய்வேன்?. அந்த நிலையான, உண்மையான, பேரின்பம் தரும் கருணைக்கடலில், நான் மூழ்கிடுவேன். அவ்வாறு மூழ்கிடுகையில், அப்பா முருகா, உன்னை, எந்தன் இதயத்தில், அறியும் அன்பைத் தருவாயே.
அன்பு, அன்பு - என்பார் எல்லோரும். இறையை அறிய அன்பு இருக்க வேண்டுமாம். இதயம் முழுதும் நிரம்பி வழியும் அன்பு வேண்டுமாம். முருகைய்யா, அந்த அன்பினை நீயே எனக்குத் தருவாய். உன்னை அறியும் அன்பை, எனக்கு நீயே தருவாய். அதற்காக, உன் நினைவிலே மூழ்குகிறேன். உன்னைப் பாடுகிறேன். நீயன்றி வேறொன்றும் அறியா நிலையில், உன் கருணை என்னும் சாகரத்தில் மூழ்குகிறேன்.
யில்களும், ஆடுகளும் நிறை மலைப்புறத்தில் தினைகள் விளையும் வேடர் நிலைத்தினை காவல் காக்கும், குறத்தி மகளாம் வள்ளி, இலக்குமிபோலவே அழகாக இருக்கிறாள். தாயைப்போலவே பிள்ளை! அவளுக்கு வணக்கம் செலுத்தி (கொடியிடையாள் வள்ளி - கொடிபோல் சுற்றிக் கொண்டிருக்கக் கூடிய வள்ளி எனும் குண்டலினி), அவளை உன்பால் அணைத்தவனே (மூலாதாரத்தில் இருந்து மேலெழுப்பி, உன் நிலைக்கு உயர்த்தியவனே)
கயிலைமலைபோல் புகழ்பெற்று நிற்கும் புனித செந்தில் மாநகர் வாழ் பதியே, வேலா,
கரிமுகத்தான் கணபதிக்கு இளையவனே, கந்தப் பெருமானே.

16 comments:

 1. காழியூராரின் விளக்கத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டு அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகள், நல்லதொரு பணி மேலும் சிறக்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நல்லா இருக்கு. அப்பப்ப இசையை தவிரவும் சிலது பதிஞ்சா என்னை மாதிரி மக்களுக்கு நல்லா இருக்கும்!
  :-))

  ReplyDelete
 3. வாங்க கீதாம்மா,
  காழியூராரின் குருவருளில் ஏதோ கொஞ்ஞமாவது கிடைக்கப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சியே.
  தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. வாங்க திவாய்யா,
  நல்லாருக்கா, மிக்க மகிழ்ச்சி!
  இசையைத் தவிர மற்றசையும், அவசியம் பதிவு செய்கிறேன். இந்தப் பதிவும் இசையில் சேர்த்திதானே!, நான் தான் 'இசை' லேபிள் போட மறந்துவிட்டேன், போட்டுடறேன். தொடர் பதிவுகளான, ஆத்ம போதமும், விவேகானந்தரும் தொடர வேண்டும். அதற்கு தங்களைப் போன்ற பெரியவர்களின் அருளும் வேண்டும்.
  என்ன எழுதினாலும், அது எனக்குத் தான் புதிதாக கற்றவை, பெரியவர்களுக்கு புதிதான ஏதையும் நான் சொல்லிவடப்போவதில்லை!

  ReplyDelete
 5. பாடல் சுவையான மாங்கனி என்றால்
  அதைப் பாடும் குரலோ
  சுகமான தென்றல் .

  இருப்பினும் ஒரு வார்த்தை.

  ஜேசுதாஸ் பாடுவது ஹுசேனி போல் தோன்றவில்லையே.
  முடிக்கும்போது ஹிந்தோளம் போல் இருக்கிறதோ ?

  இன்னொரு முறை நன்றாக கேட்டுவிட்டு
  சொல்கிறேன்.

  சுப்பு ரத்தினம்

  ReplyDelete
 6. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. வாருங்கள் சுப்புரத்தினம் ஐயா,
  //பாடல் சுவையான மாங்கனி என்றால்
  அதைப் பாடும் குரலோ
  சுகமான தென்றல் . //
  அழகாகச் சொன்னீர்கள்!
  //இன்னொரு முறை நன்றாக கேட்டுவிட்டு
  சொல்கிறேன். //
  சொல்லவும்!

  ReplyDelete
 8. வாருங்கள் திரு.வேளராசி!
  தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. >>தாயைப்போலவே பிள்ளை!<<
  Yes, and No!
  I am just quibbling here. Amudavalli (A) and Sundaravalli (S) were the two daughters of Vishnu born from His eyes, according to legend. In that sense technically they are not Lakshmi's daughters. Both of them wanted to marry Murugan. To make a long story short, they were reborn as deivayAnai and vaLLi, the latter born to a sage in a deer's abdomen and raised by nambirajan, the hunter king. Hence she is called kuRamagaL.I am not sure if deivayAnai and vaLLi claim Lakshmi as their mother. In a broader sense we all can claim Lakshmi as our mother.

  ReplyDelete
 10. வருக சேதுராமன் சுப்ரமணியன் ஐயா,
  வள்ளி பிறந்த அந்த மான் - இலக்குமியின் அம்சமாக கருதப் படுகிறது. இந்த சுட்டியில் உள்ளதுபோல், (சிவ)முனியார் திருமாலின் அம்சமாகவும், மான் திருமகளின் அம்சமாகவும் சொல்லப்படுகிறது! - ஆக, திருமகளின் வயிற்றில் இருந்து பிறந்த மான்மகள்(?!), வள்ளி!

  ReplyDelete
 11. அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.

  ReplyDelete
 12. my scholar friend confirms that Dr.Jesudas sings a light away from Hindolam.

  You may listen here what is Husaini, though not in good quality standards.


  http://uk.youtube.com/watch?v=vYNr1-ptLN4

  ReplyDelete
 13. மிக்க நன்றி சூரி ஐயா, முழுதுமாக ஹூசைனியில் பாடிக் காட்டியமைக்கு. நீங்கள் சொல்லுவதுபோல், கடைசியில், இராகம் மாறுவதுபோல் தான் இருக்கிறது - ஜேசுதாஸ் அவர்கள் பாடுகையில்.
  இந்தப் பாடலை நாதஸ்வரத்திலும் இங்கு வாசிக்கக் கேட்கலாம்.

  ReplyDelete
 14. அருணாசலக் கவியாரின் ஹூசைனியும், ஹிந்தோளத்தையும் ஒப்பிட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்;
  எப்படி மனம் துணிந்ததோ, என் சுவாமி - ஹூசைனி;
  இராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே - ஹிந்தோளம்;

  ReplyDelete
 15. //காழியூரரின் விளக்கத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டு அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்.//

  ஆமாம் ஜீவா. நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 16. வாங்க கவிநயாக்கா,
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
  தங்களுக்கும், குடும்பத்தினருக்கும்,
  அனைத்து ரிச்மண்ட் இந்தியர்களுக்கும்!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails