Monday, October 13, 2008

ஆ!

ஆ!, அன்பர்களுக்கு இந்த தலைப்பு, பிடித்திருப்பதால்(!), இதனையே வைத்துவிடுகிறேன்!
ஆ! = ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

இந்த அழகான தாலாட்டுப்பாட்டைப் பார்க்கலாமா?

கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே
பூத்த புதுமலரே, பொக்கிஷமே, கண்மணியே, கண்வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

யாரடித்தா நீ அழுதாய், அழுதகண்ணில் நீர் ததும்ப,
பேருரைத்தால் நான், பெருவிலங்கு பூட்டிடுவேன்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

அத்தை அடித்தாளோ, உனக்கு அமுதூட்டும் கையாலே
சற்றே மனம்பொறுத்து சந்திரனே கண் வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

பாட்டி அடித்தாளோ, உனக்கு பால் வார்க்கும் கையாலே
கூப்பிட்டு நான் கேட்பேன், குஞ்சரமே கண் வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

மாமி அடித்தாளோ, உனக்கு மை தீட்டும் கையாலே
சாமி, மனம் பொறுத்து, சண்முகனே கண் வளராய்!
(சாமி, மனம் பொறுத்து, அம்பிகையே கண் வளராய்!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

தமையன் அடித்தானோ, உன்னை தயிரூட்டும் கையாலே
நிமிடம் மனம் பொறுத்து நித்திரை செய் கோமகனே!
(நிமிடம் மனம் பொறுத்து நித்திரை செய் பூமகளே!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

அக்காள் அடித்தாளோ, உன்னை அம்மான்மார் வைதாரோ
விக்கவே தேம்புவதேன் வித்தகனே கண் வளராய்!
(விக்கவே தேம்புவதேன் வித்தகியே கண் வளராய்!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

பெற்றோர் அடித்தாரோ அறியாமல் செய்தாரோ
எங்கள் ஆரமுதே கண்வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

அழாதே, அழாதே! எங்கள் அரசே நீ
தொழுவார் பலர் இருக்க துரையே நீ கண் வளராய்!
(அழாதே ,அழாதே! எங்கள் அரசி நீ
தொழுவார் பலர் இருக்க தூயவளே நீ கண் வளராய்!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

(அடைப்புக் குறியில் இருப்பவை, பெண் குழந்தைக்கான மாற்றங்கள்!)

பாடுபவர்: திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ

25 comments:

 1. :-)))))))))))))
  html ஐ எடிட் பண்ணனும் போல இருக்கு!

  ReplyDelete
 2. என்ன ஆச்சு ஜீவா... நான் சுஜாதாவின் கதையோ என்று நினைத்தேன்...

  ReplyDelete
 3. ஆ!
  இப்படி ஒரு தலைப்பு இட்டிருக்கிறேன் என்பது இப்போதுதான் தெரிகிறது, அன்பர்களே!
  'ஆராரோ, ஆரிரரோ' என்கிற தலைப்பில் தாலாட்டுப்பாடல் தருவதற்காக விழைந்தபோது, எதிர்பாராமல், அது 'ஆ' வோடு நின்றுவிட்டது!
  இடுகை Publish ஆனதையும் நான் கவனிக்கவே இல்லை!. இப்போதுதான் கவனிக்கிறேன்!
  தலைப்பு செய்யும் மாயம்!

  ReplyDelete
 4. ஆ! - இப்போது நிறைவானது!
  ஆ!, அன்பர்களுக்கு இந்த தலைப்பு, பிடித்திருப்பதால்(!), இதனையே வைத்துவிடுகிறேன்!

  ReplyDelete
 5. Jeeva:
  Minor correction:
  yAraDittA ---> yAraDittu
  The gender conversion must be your own design, I guess. Interesting twist!
  Accordingly,
  candiranE ----> candrikaiyE
  kunjaramE ----> cinnap piDiyE (????)
  just kidding!!!!!!!!!!!!!!!!
  kunjaramE can be left as is (gender-neutral)

  ReplyDelete
 6. I also have the CD published by Charsur titled "VAtsalyam". Jayasri falters in a couple of places garbling up the words. It is probably not all her fault (except in one spot). Charsur gave the poorly written lyrics in the jacket sleeve of the CD. They make the mistakes such as "yAraDittAl" (yAraDittu), "niddirai shei po magane" (instead of kOmaganE), "thenguvaden" (tEmbuvadEn).
  The streaming text on the Youtube, however, spells the words correctly.
  Charsur also butchered the lyrics in the same CD on kulasEkara perumAL's "mannupughazh" pAsurams. I had pointed this out to them way back. They should be more careful when they publish these CDs that circulate widely. I hope they improve their performance in the future.
  Earlier they made a goof in the CD's title "AshwattA" featuring Sanjay's rendition of songs of Tyagaraja's disciples. They wrote that ashwatta stands for banyan tree. Big goof! ashwatta stands for peepul tree and the Sanskrit word for banyan tree is "vaTa vruksham". They meant the aerial roots of banyan tree to represent the spread of Tyagaraja's legacy but used an erroneous but high-sounding word ashwatta.

  Well, I did not get a response from Charsur before for this remark. I thought I'd rant a bit here. Sorry!

  ReplyDelete
 7. One more correction:
  It is not "pU maganE". It does not make sense since "flower boy" has no connotation. "pU magaLE' is OK to denote Lakshmi.
  The word is actually "kOmaganE" which means prince aka naresh kumar in Hindi/Sanskrit

  ReplyDelete
 8. Welcome Sethuraman Subramanian Sir!
  I have not published 'thuNai nIyE' today, as this one got published earlier!. I will do that in couple of days.
  //yAraDittA ---> yAraDittu//
  யாரடித்தா(ர்) பொருத்தமாக எனக்குத் தெரிகிறது!
  சந்திரகையே - நானும் அதை நினைத்துப்பார்த்தேன் - ஆனால் நிலவுக்கு என்ன பால்? என விட்டு விட்டேன். ஆனால் சந்திரகையும் சரியாக இருக்கிறது.

  ReplyDelete
 9. //The word is actually "kOmaganE" //
  Yes, that's right Sir. I have changed it.

  ReplyDelete
 10. >>அக்காள் அடித்தானோ<<
  You may want to change it to "aDittALO" to keep proper gender.
  Well, I am going to go out on a limb and say "aDittu" is a better word than "aDittA(r)" in this context. For one thing the streaming text in the video says "aDittu". Secondly, if my high school Thamizh grammar (after so many years) serves me well, "aDittu" is vinaiyeccam (hanging verb) while "aDittAr" is vinaimuRRu ( interrogative finite verb). The hanging verb does not need an object while the interrogative finite verb should be followed by an object such as "unnai" which is absent here. To confound the confusion Charsur text says "yaar adithaal" which is really bad.
  But then shall we say poetic license takes precedence over grammar? If I were to rewrite that lullaby I'd make the change to "aDittu". Isn't this trivial discussion entertaining? (or is it annoying?)

  ReplyDelete
 11. //அக்காள் அடித்தானோ//
  Should be அக்காள் அடித்தாளோ.
  That creeped from my oversight!

  யாரடித்து நீ அழுதாய் - sounds right grammatically.
  But, யாரடித்தா, or even யாரடிச்சா sounds more folkish & பேச்சு வழக்கு - And that adds bit of a natural beauty! And also goes well with பேருரைத்தால்!
  //Isn't this trivial discussion entertaining? (or is it annoying?)//
  Its more than that Sir,
  Its informative!

  ReplyDelete
 12. //Charsur gave the poorly written lyrics in the jacket sleeve of the CD. //
  Oh.Oh. Amudham does a good job with those!

  ReplyDelete
 13. The U-tube streaming text is also messed up in some places. For instance, it says அமுதகண்ணில் instead of அழுதகண்ணில்!

  ReplyDelete
 14. என் ரீடர்ல "ஆ"ன்னு தலைப்பு மட்டும்தான் வந்தது. உள்ள ஒண்ணுமே இல்லை!குட்டிப் பாப்பாவோட சேர்ந்து நீங்களும் தூங்கிட்டீங்க போல :)

  வித்தகனே == வித்தகியே

  பாடல் நல்லாருக்கு :)

  ReplyDelete
 15. //குட்டிப் பாப்பாவோட சேர்ந்து நீங்களும் தூங்கிட்டீங்க போல :)//
  வாங்க கவிநயாக்கா!, அப்படித்தான் போலே!

  //
  வித்தகனே == வித்தகியே//
  அட, எனக்கு தோணலேயே!

  ReplyDelete
 16. Kavinaya:
  I was going to suggest "vittagi", and "shanmugi" a la avvai shanmugi (instead of shanmugan), and "kunjariyE" (deyva yAnai) instead of kunjaramE but I was afraid Jeeva would veto those suggestions!!!!! Just kidding! Jeeva is very reasonable in accommodating suggestions.

  ReplyDelete
 17. வித்தகி இயற்கையாய் தெரிவதுபோலே, சண்முகி இயற்கையாய் தெரியவில்லை. Besides, I didnt like the poor man's remake of Mrs.Doubtfire anyway Sir!

  தேவ குஞ்சரி - நிறைய பேருக்கு தெரியாத வார்த்தை அல்லவா! சுட்டியமைக்கு நன்றிகள்!

  ReplyDelete
 18. எம்.எல்.வி பாடி கேட்டிருக்கேன்..சிலவரிகள் அவர்கள் பாடினதுல இல்லாத புதுவரிகளாக இருக்கிறது.

  ReplyDelete
 19. தமிழ் எழுத்துலகில் முதன் முதலில்
  ஒற்றை எழுத்தில் ஒரு புதினத்திற்கு
  தலைப்பு வைத்தவர் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்கள்.
  அது: "ஓ". இது: "ஆ"--ஒற்றை எழுத்தில் தலைப்பு வைத்த கட்டுரை!
  பாடலும், பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் இனிய குரலும் பரவசமூட்டுகின்றன..
  நல்ல ஒரு பதிவைப் படித்த, பாடிக்
  கேட்ட நிறைவு ஏற்பட்டது..

  ReplyDelete
 20. //எம்.எல்.வி பாடி கேட்டிருக்கேன்.//
  வாங்க மௌலி சார், அப்படியா!
  //சிலவரிகள் அவர்கள் பாடினதுல இல்லாத புதுவரிகளாக இருக்கிறது.//
  ஓ, எல்லா வரிகளையும், அவங்க பாடலை போல இருக்கு!

  ReplyDelete
 21. வாருங்கள், ஜீவி ஐயா,
  எஸ்.ஏ.பி பற்றி அறியாச் செய்தியை அறியத் தந்தமைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 22. Hi jeevan I've put up a blog on The Gita. Please visit when you have time.

  ReplyDelete
 23. நான் அடிக்கடி கேக்குற பாட்டு ஜீவா. அருமையான பாட்டு.

  ReplyDelete
 24. வாங்க குமரன்!
  அழகான, எளிமையான தாலாட்டு!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails