பாபநாசம் சிவன் அவர்களைப்போல்,
அம்பா எனது அறிவு வந்த நாள் முதலாய்
அகமகிழ்ந்து, ஆலயம்தோறும் வந்து
செம்பொன் அடிவணங்கி...
அம்பா உனது பாத மலரே தஞ்சம்
என்று கேதார இராக கிருதியில்,
சிவராஜதானி நகர் வாழும் நாயகியை இராஜேஸ்வரி, பரமேஸ்வரி என்கிற பெயர்களால் அழைத்துப் பாடுவேனோ!
அல்லது,
பக்தர்கோடிகளை பரிந்து காக்கும் பரதேவதையும் நீயன்றோ, உனக்கு பாரபட்சம், ஓரவஞ்சனையும் உண்டோ, நான் என் செய்வேன்
முக்திமுக்தி சகல போகபாக்கியமும் பரிந்தருளும்
புவனேஸ்வரி
பூமகள், நாமகள் பணி
மயிலாபுரி கற்பகமே,
எளிய இராமதாசன் என்னைக் காத்தருள் அம்மா
என, 'என்னைக் காத்தருள்வாய் அம்மா' என்கிற சரஸ்வதி இராகக் கிருதியில் பாடுவேனோ!
------------------------------------------------------------------
தண்டபாணி தேசிகரைப் போல்,
அருள வேண்டும் தாயே
என்னும் சாரமதி இராகக் கிருதியில் சொல்லுவது போல்
பொருளும், புகழும் பொருந்தி வாழ
புவியின் நாதனை நினைந்து வாழ
கலைகள் கற்கவும் கற்பனை செய்யவும்
காலம் கடவாமல் கருத்தை திரட்டவும்
உலகிலே நல்ல உண்மைகள் பேசவும் உனை நினைக்கவும், உறுதியாய் வாழவும்
அருள வேண்டும் தாயே,
அங்கயர்கண்ணி
நீயே!
என பட்டியல் வைத்திட இயலுமோ!
---------------------------------------------------------------------
பெரியசாமித் தூரனைப்போல்,
தேயாத புகழ் மேவும் திருவான்மியூர் வளர்
தேனார் மொழி வள்ளி - ஜகமெல்லாம் படைத்த
தாயே திரிபுரசுந்தரி,
உமா மகேஸ்வரி
சியாமள சௌந்தரி, உன் தாளிணை மலரே சரணம்!
என்ற சுத்த சாவேரி இராகப் பாடலைப் பாடி உன்னை நாடிட வேண்டுமோ!
---------------------------------------------------------------
கனம் கிருஷ்ணயரைப்போல,
ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி
சுக ஸ்வரூபணி மதுர வாணி
சொக்கநாதர் மனம் மகிழும்
மீனாட்சி
என்ற ரதிபதிப்ரியா இராகக் கிருதியில் பாடி மகிழ்வேனோ!
பாடலின் சுட்டி இங்கே.
-------------------------------------------------------------------------
மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் போலத்தான்,
ஷ்யாம கிருஷ்ண சகோதரி,
சிவசங்கரி, பரமேஸ்வரி,
காமாக்ஷி அம்பா,
அனுதினமும் மறவேனே என்கிற பைரவி இராக ஸ்வரஜதியில்தான் பாடிட இயலுமோ!
-----------------------------------------------------------------------
அன்ன பூர்ணே விசாலாட்சி அகில புவன சாட்சி, கடாக்ஷி!
எனும் மும்மூர்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதரின் சாமா கிருதியைத் தான் பாடி உன் அருளை நாடிட வேண்டிடுவேனோ! : பாடலின் சுட்டி இங்கே.
----------------------------------------------------------------------
கும்பிட்ட நேரமும் "சக்தி"யென்றால்
உனைக் கும்பிடுவேன் மனமே!
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்!
என்று மகாகவி சுப்ரமணிய பாரதி போல், பராசக்தியே உனை வேண்டி ஓம்கார சக்தி முழக்கமிடுவேனோ!
------------------------------------------------------------------
அடியேன், எளியேன், இப்பெரிய மகான்களெல்லாம் உன்னை உபாசித்தது போல், என்னால் இயலுமா எனத் தெரியவில்லை. இவ்வடியார்களின் அடியனாய், நின் கடைக்கண் பார்வைக்கு காத்திருக்கும், என்னையும் நீ காத்து ரட்சி!. அருட்பிச்சை இட்டு என்னை ஆதரி!
புதுமையாய் ஒரு பிரசண்டேஷன்;
ReplyDeleteஉருக்கமாக உன்னதமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
இப்படியெல்லாம் என்னால பாட நிச்சயமா முடியாது. தாயே பாத்துக்கம்மா!
ReplyDeleteநல்லாருக்கு :)
ReplyDeleteஉள்ளத்தில் அன்பிருந் தால் போதும்
இல்லை யென்னாது அருள்வாள் நம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்!
வாருங்கள் திரு.ஜீவி, வாழ்த்துக்கு நன்றி.
ReplyDeleteவாருங்கள் திரு.திவா.
ReplyDeleteதாயே பார்த்துக்கங்க, திவா சாரையும்!
//நல்லாருக்கு :)//
ReplyDeleteநல்லது கவிநயாக்கா!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்!
பாடவே வராத நானெல்லாம் என்ன சொல்றது?? :((((
ReplyDeleteஅம்பாள் அனைவரையும் காப்பாள். நல்லதொரு அருமையான பாடல்களின் தொகுப்பைக் கொடுத்ததுக்கு பல அருமையான பாட்டுக்களை நினைவு கூர வைத்தமைக்கு நன்றி.
பாடவே வராத நானெல்லாம் என்ன சொல்றது?? :((((
ReplyDeleteஅம்பாள் அனைவரையும் காப்பாள். நல்லதொரு அருமையான பாடல்களின் தொகுப்பைக் கொடுத்ததுக்கு பல அருமையான பாட்டுக்களை நினைவு கூர வைத்தமைக்கு நன்றி.
இப்போதான் பார்த்தேன் ஜீவா.
ReplyDeleteமிக அருமையான பாடல்களைக் கொண்ட மாலையாக அன்னைக்கு அமைந்திருக்கு இந்த இடுகை. நன்றி...
சொல்லிலடங்கா சுகம்.
ReplyDeleteநில்லாத உலகில்
நிலைத்திருப்பது இசைதானோ !
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://menakasury.blogspot.com
வாங்க கீதம்மா,
ReplyDeleteநல்ல பாடல்களை இரசித்தமைக்கு நன்றிகள் அம்மா.
வாங்க மௌலி சார்,
ReplyDeleteஅன்னைக்கு பாமாலை சூட்டிப் பார்ப்பது பேரின்பம் மட்டுமல்ல, பெரும்பேறும்.
வாங்க சூரி சார்,
ReplyDelete/சொல்லிலடங்கா சுகம்.//
ஆகா, அல்லவோ!
நவராத்திரிக்கு அன்னைக்கு பத்து நாட்கள் பத்து வித அலங்காரம் என்ற விதத்தில் கொலு இருக்கும் அம்பிகைக்கு பாடல் கொலு அருமை.
ReplyDeleteவாங்க கைலாஷி சார்,
ReplyDeleteபாடல் கொலு என அழைத்த பாங்கு அருமை!
Nice compilation, Jeeva!
ReplyDeleteFitting tribute to those composers during the navarAtri season.
வாருங்கள் சேதுராமன் சார்,
ReplyDeleteபாராட்டுக்களுக்கு நன்றிகள்.