Sunday, August 19, 2007

நிழற்படமா, ஒளிப் படமா?



ஒளிச்சேர்க்கையில்

வளர்ந்த இலைகள்

இப்போது இங்கே

ஒளியால் மிளிர

ஒளி பிடிப்பானில்

ஒரு நிமிடத்திற்குள்

'பிடித்ததை' பிடித்ததில்

நிழற்படமா, ஒளிப் படமா?



நிழலும் ஒளியும்

வெவ்வேறானாலும்

ஒன்றோடு ஒன்று

தொடர்பானதல்லவோ?

ஒளியில்லாமல் நிழலேது?



வெற்றியும் தோல்வியும்

உயர்வும் தாழ்வும்

மேன்மையும் சிறுமையும் கூட

நிழலும் ஒளியும் போலத்தான் -

இதை உணராத மனிதர்பால்தான்

எத்தனை மயக்கங்கள்?

4 comments:

  1. //ஒளிச்சேர்க்கையில் வளர்ந்த இலைகள் //

    அதனால்தான் சக்தியை மரகதவல்லி என்றும் அவள் அண்ணன் திருமாலை "பச்சை மாமலை போல் மேனி " என்றும் போற்றுகின்றனர் போலும்!

    கபீரின் மொழிகளில்தான் உங்களுக்கு எவ்வளவு ஈடுபாடு. அவரருள் என்றும் இருக்கட்டும்

    ReplyDelete
  2. பார்க்கும் இடமெல்லாம் பச்சை நிறம் தானே!

    மறுமொழிக்கு நன்றி கபீரன்பன்!

    ReplyDelete
  3. கவித நல்லா இருக்கு!

    அப்போ புகைப்படம்னு ஒன்னு சொல்றாங்களே அது என்னங்க :-)

    ReplyDelete
  4. வாங்க வவ்வால்!



    இந்த கவிதையையும் நல்லா இருக்குன்னு சொல்ல எனக்கு ஆள் கிடைத்ததே!



    புகைப்படம், புகைவண்டி...

    புகை மேல் சொல்லாளர்களுக்குத்தான் என்ன ஆர்வம்!

    ReplyDelete