Saturday, August 04, 2007

இரட்டை ரோஜா



பச்சை வெளிதனில்
பகலவன் அருளினில்
அச்சம் இல்லாமல்
நித்தம் மலரும்
ரோஜா மலரும்

என்னைப் பார்த்து சொன்னது
அருளின்றி மலராது அகம்
அதனாலே நீசெய் தவம்
உன் அறிவே சிவம்
அதை நீநாடு தினம், என்று!

ஆன்றோர் வாக்கின் துணையில்
அம்புலி புனை பெருமான்
என்னுள்ளே என்னுள்ளே
எங்கிருக்கிறான் எனத்தேடி
எங்கும் இருக்கிறான்
என அறியும் நாள் எந்நாளோ?

4 comments:

  1. எந்நாளோ?

    அத்திருநாள் வந்தவுடன் சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. //அத்திருநாள் வந்தவுடன் சொல்லுங்கள்.//
    :-)

    ReplyDelete
  3. படத்துக்கு சம்மந்தம் இல்லாத கவிதை. ஏதோபடிப்பதற்கு நன்றாக உள்ளது.

    ReplyDelete
  4. //படத்துக்கு சம்மந்தம் இல்லாத கவிதை.//
    :-)
    'இரட்டை' ரோஜாவில் இன்னொன்று என்ன ஆச்சு என்றுதானே குழப்பம்?

    ஒரு ரோஜாதான் இன்னொரு ரோஜாவுடன் பேசுகிறது!

    ரோஜா மனிதனுடம் பேசுவது போல் உருவகம் செய்யாமல், ரோஜா ரோஜாவுடனே பேசுவதாக சொல்வதற்காக இரண்டாவது ரோஜா.

    இரண்டு ரோஜாக்களில் ஒன்று சற்றே உயரமாயும், பெரிதாகவும் உள்ளது - உருவகத்தில் அது ஞானத்தில் உயர்ந்துள்ளது!

    :-)

    ReplyDelete