Tuesday, October 07, 2008

நவராத்ரி : அருள் மழை பொழி அலைமகள்

ஹிரண்மயிம் லக்ஷிமீம் பஜாமி எனத் தொடங்கும் முத்துசாமி தீக்ஷிதரின் கிருதி ஏற்பட்ட கதை இது:

ஒருமுறை தீக்ஷிதரின் சிஷ்யர் ஒருவர், அவரிடம் வந்து, ஐயா, நீங்கள் மகாராஜாவைப் போய் சந்திக்கலாமே, உங்கள் வரவுக்காக காத்திருக்கிறார் அவர். நீங்கள் போய் சந்தித்தாலே போதும், உங்களுக்கு அவர் பொன்னும் பொருளும் வாரி வழங்கிடுவார் என்று. அந்த சிஷ்யருக்குத் தெரியும் தீக்ஷிதரைப் பற்றி. இருப்பினும் தீக்ஷிதரின் மனைவியார் சில தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டாராம். அப்போது, அந்த சமயத்தில் குறிப்பாக, மகாராஜாவைப்பற்றிய செய்தியை காதில் போட்டு வைக்கலாமே என நினைத்தார் போலும்.

தீக்ஷிதரோ, இந்த ஆசைக்கு வளைந்தாரில்லை. ஸ்ரீவித்யா உபாசகரான அவர், சாட்சாத் இறைவனைப் பாடும் இந்த நாவால், சாமன்யர்களைத் துதிப்பதா, இயலாது என மறுத்துவிட்டார். அப்போது, தங்க விக்ரகமாக மஹாலஷ்மியே தன் இருதயத்தில் நிறைந்திருக்க, அவளே இதுபோன்ற நிலையில்லா உலகில் இருந்தென்னைக் காப்பாள், என்று பாடுகிறார். நிலையான செல்வம், இறையருள் மட்டுமே என்கிறார். அன்றிரவே, அவரது துணைவியாரின் கனவில் மஹாலஷ்மி தோன்றி, தங்க மழையாய் கனவில் பொழிவது போலவும், இது போதுமா, எனக் கேட்பது போலவும் கனாக் கண்டாராம். அப்போதுதான் அவருக்கு, சாட்சாத் திருமகளே அருள் பாலித்திடும்போது, இதைவிடவும் செல்வம் வேறுண்டோ என உணர்ந்தாராம்.

இராகம் : லலிதா
தாளம் : ரூபகம்
பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்


hiranmayeem_lakshm...


பல்லவி
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஸதா3 ப4ஜாமி
ஹீன மானவாஸ்1ரயம் த்யஜாமி

அனுபல்லவி
சிர-தர ஸம்பத்ப்ரதா3ம்
க்ஷீராம்பு3தி4 தனயாம்
(மத்யம கால ஸாஹித்யம்)
ஹரி வக்ஷ:ஸ்த2லாலயாம்
ஹரிணீம் சரண கிஸலயாம்
கர கமல த்4ரு2த குவலயாம்
மரகத மணி-மய வலயாம்

சரணம்
ஸ்1வேத த்3வீப வாஸினீம்
ஸ்ரீ கமலாம்பி3காம் பராம்
பூ4த ப4வ்ய விலாஸினீம்
பூ4-ஸுர பூஜிதாம் வராம்
மாதரம் அப்3ஜ மாலினீம்
மாணிக்யாப4ரண த4ராம்
கீ3த வாத்3ய வினோதி3னீம்
கி3ரிஜாம் தாம் இந்தி3ராம்
(மத்யம கால ஸாஹித்யம்)
ஸீ1த கிரண நிப4 வத3னாம்
ஸ்1ரித சிந்தாமணி ஸத3னாம்
பீத வஸனாம் கு3ரு கு3ஹ -
மாதுல காந்தாம் லலிதாம்


பொருள்:
பல்லவி:
எப்போதும் என் இதயத்தில் கொலுவிருக்கும் தங்கமே, திருமகளே,
துணை நீ தானே, நிலையிலா மானிடர் தொடர்பினை அறுப்பாயே.

அனுபல்லவி:
நிலையான செல்வமாம், வீடுபேறுதனை வழங்குவாயே, பாற்கடலின் குமாரியே.
ஹரியின் ஹிருதயத்திலுருப்பாயே - மான் போலும், இளம்பாதம் கொண்டவளே.
தாமரை போன்ற கரங்களில் அல்லி மலரைத் தரித்தவளே,
மரகத வளை அணிந்தவளே.

சரணம் :
வெள்ளைத் தீவினில் வசிப்பவளே, கமலாம்பாள் நீதானே.
கணங்களும் தேவரும் தொழுதிட, தாமரைமாலை அணிந்தவளே.
நவரத்தின ஆபரணம் சூடி, ஒளி விடுபவளே.
இசைக் கருவிகளின் நாத இன்பத்தை இரசிப்பவளே.
குளிர் நிலவின் பொலிவே.
ஸ்ரீசக்ர சிந்தாமணியில் வீற்றிருந்து,
பக்தர்க்கு வேண்டியதை அளிக்கும் தேவ லோகத்து இரத்தினமே.
பட்டு பீதாம்பரம் அணிந்தவளே.
குருகுஹனின் மாமன் மனைவியே, லலிதாம்.

(குருகுஹ என்பது, தீக்ஷிதரின் முத்திரை; குஹன் என்பது இங்கு முருகனையும் குறிக்கிறது!. 'லலிதா' என இராக முத்திரையும் வருகிறது.)

16 comments:

  1. //தங்க விக்ரமான மஹாலஷ்மியே தன் இருதயத்தில் நிறைந்திருக்க, அவளே இதுபோன்ற நிலையில்லா உலகில் இருந்தென்னைக் காப்பாள், என்று பாடுகிறார். நிலையான செல்வம், இறையருள் மட்டுமே என்கிறார்.//

    அன்னை இருக்கும் போது மற்ற கவலை எதற்காக?

    அருமை, அருமை.

    ReplyDelete
  2. நல்ல க்ருதியை, பொருளுடன் தந்தமைக்கு முதற்கண் நன்றி ஜீவா.

    காசியில் தீக்ஷதருக்கு குருமுலமாக ஸ்ரீவித்யை உபதேசம் ஆனாலும், அவருக்கு முருகன் பிரத்தியக்ஷமாகி உபதேசம் செய்ததாக படித்த நினைவு.

    ReplyDelete
  3. Among the great Trinity of Carnatic Music, Thyagaraja and MD (Muttuswamy Dikshitar) lived in abject poverty but it did not deter them in their quest for seeking divinity through their immortal compositions. Shyama Sastri, on the other hand, escaped such poverty due to ancestral property and income from priestly services to the Kamakshi amman temple in Thanjavur.

    MD was known for his splendor of diction in all his compositions (all Sanskrit except 3 which are in maNipravALam). In that respect he can be compared to Subramanya Bharathi. Bharathi too was agonizing about the misery of the sugar plantation workers in Fiji and their indentured status, while his family was looking eagerly for their next meal.

    MD had the Tanjore Quartet learning from him. Also Kamalam (sister of the quartet??) who was a bharatnatyam dancer used to learn from MD. Once there was not a measure of rice in MD's household. Kamalam, knowing that situation too well, took 2 of her bangles and gave them to MD to buy some provisions. MD refused, although he could have accepted them as guru dakshiNai. Such a great soul!

    Incidentally MD visited Ettayapuram, when it was experiencing a huge drought. He sang "AnanthAmritakarshiNi" in amritavarshiNi rAgam after which it supposedly rained to the delight of the denizens of Ettayapuram.

    LaithA rAgam conveys heavy pathos, not unlike mukhAri. By the way, the last word "lalithAm" in the "hiraNmayIm.." kriti refers to the rAgam and does not address mahAlakshmi as lalithA. The name "lalithA" is reserved for PArvati (as in lalithA sahasranAmam). MD uses his composer mudrai "guruguha" and the rAga mudrai in all his kritis. Here the rAga mudrai is "lalithA"

    ReplyDelete
  4. வாருங்கள் கைலாசி ஐயா,
    தங்கள் மறுமொழில் இருந்துதான் - விக்ரகத்தில் ஒரு க விட்டி விட்டது தெரிந்தது - சரி செய்து விட்டேன் இப்போது.

    ReplyDelete
  5. வாங்க மௌலி சார்,
    //காசியில் தீக்ஷதருக்கு குருமுலமாக ஸ்ரீவித்யை உபதேசம் ஆனாலும், அவருக்கு முருகன் பிரத்தியக்ஷமாகி உபதேசம் செய்ததாக படித்த நினைவு.//
    நினைவு படுத்தியமைக்கு நன்றி.
    அவ்விடம் திருத்தணியாம்.

    ReplyDelete
  6. Welcome Sethuraman Sir,
    //By the way, the last word "lalithAm" in the "hiraNmayIm.." kriti refers to the rAgam and does not address mahAlakshmi as lalithA.//
    Ah, Thanks for the correction!

    ReplyDelete
  7. Sethuraman Sir,
    Thanks for mentioning those historical notes on Muthusamy Diksihithar.

    ReplyDelete
  8. //பொருளுடன் தந்தமைக்கு முதற்கண் நன்றி ஜீவா.//

    ரீப்பிட்டு :)

    அன்னையின் அன்பே நிலையான செல்வம். அருமையான பாடலுக்கு நன்றி ஜீவா.

    ReplyDelete
  9. அனுபவித்து எழுதுவதால், வெறும் சொற்பிரயோக அர்த்தங்களை மீறிய
    உணர்வு படிப்பவர்க்கும் உண்டாகிறது.
    லோகத்தின் ஷேமத்திற்காக எழுதும் அத்தனையும் நன்றி சொல்லதக்கவை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வருக கவிநயாக்கா!
    தங்கள் நன்றிக்கு நன்றி!

    ReplyDelete
  11. வருக திரு.ஜீவி,
    தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  12. ////By the way, the last word "lalithAm" in the "hiraNmayIm.." kriti refers to the rAgam //

    ஆம், முத்திரை மட்டுமல்லாது ராகத்தின் பெயரையும் பாடலில் கொண்டுவந்துவிடுவார் தீக்ஷதர். ஆனால் பல ராகங்களின் பெயர்கள் அவர் காலத்தில் இருந்ததுக்கும் இப்போதும் வேறாக இருப்பதால் நம்மால் சுலபமாக அறிய முடிவதில்லை என்று சொல்லிக் கேட்டிருக்கேன்.

    ReplyDelete
  13. நல்லதொரு பாடலை தமிழ் அர்த்தத்துடன் தந்தமைக்கு மிக்க நன்றி ஜீவா...

    ReplyDelete
  14. மௌலி சார்,
    இன்றைக்கும் அந்த இராகங்களின் பெயரிலும் அழைக்கிறோம். - அவர் வழங்கிய அந்த முறையை தீக்ஷிதர் சம்பிரதாயம் என்ற பெயரில்.
    உதாரணத்திற்கு, பூர்விகல்யாணி தீக்ஷிதர் சம்பிரதாயத்தில் - கமகப்பிரியா.

    ReplyDelete
  15. ஒரு நல்ல கீர்த்தனையை அறிமுகம் செய்ததற்கு நன்றி ஜீவா. இன்னொரு முறை படிக்க வேண்டும்.

    ReplyDelete
  16. வாங்க குமரன்,
    நிதானமாக வந்து படிக்கவும்.
    எனக்குத் தெரிந்த வரை பொருள் சொல்லியிருக்கிறேன். ஓரிரு இடங்களில் விட்டும் இருக்கிறேன். சரி பார்க்கவும், சேர்க்கவும்.

    ReplyDelete