Friday, May 30, 2008

நற்சிந்தனை: ஆன்மீக அரிச்சுவடி

யாழ்பாணத்து சுவாமிகளும், நந்திநாத சம்பிரதாயத்தின் கைலாச பரம்பரையின் 161ஆவது குருவுமான சிவயோக சுவாமிகளின் பாடல்களான "நற்சிந்தனை" என்கிற தொகுப்புலிருந்து ஒரு பாடல்:

ன்பு சிவமென்ற ஆன்றோர் திருவாக்கை

இன்பமுடன் போற்றியிருப்பது எக்காலம்?

தி அந்தமில்லாத ஆன்மாவை நாமென்ற

சேதி அறிந்து தெரிவிப்பது எக்காலம்?

ம்மையிலும் மறுமையிலும் எம்மைவிட்டு நீங்காத

செம்மலர் தாள்கண்டு சீவிப்பது எக்காலம்?

சன் திருவடியை என்றும் மறவாமல்

வாச மலர்கொண்டு வணங்குவது எக்காலம்?

ருகி யுருகி உணர்விழந்து நின்று

பெருகி வருமமிழ்தைப் பருகுவது எக்காலம்?

ரும் பேருமல்லா ஒருவன் திருவடியை

நீரும் பூவும்போட்டு நெக்குநிற்ப தெக்காலம்?

ல்லா உயிரினும் நில்லாமல் நிற்பவனை

நினைந்து நினைத்துருகி நிற்பதுவு மெக்காலம்?

க னேக னிறைவனடி வாழ்கவெனும்

மோக மறுக்குமொழி கண்டுய்வ தெக்காலம்?

ந்து புலன்வென்ற ஆன்றோர் திருவடிகீழ்

நைந்துருகி நின்று பெறுவதெக்காலம்?

ன்றென் றிருதெய்வம் உண்டென் றிருவென்று

அன்றுசொன்ன பட்டினத்தா ரடிபணிவ தெக்காலம்?

மெனு மெழுத்தினுள்ளே ஒளியதாய் விளங்குகின்ற

சோமசுந் தரத்தின் அடிதொழுவ தெக்காலம்?

20 comments:

  1. மிக்க நன்றி ஜீவா

    தெரிந்தோ தெரியாமலோ பொருத்தமான வேளை இட்டிருக்கின்றீர்கள் நேற்றுதான் யோக சுவாமிகள் ஜனன தினம்.

    ReplyDelete
  2. அப்படியா பிரபா,
    அந்தச் செய்தி அறியேன், பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. //எல்லா உயிரினும் நில்லாமல் நிற்பவனை
    நினைந்து நினைத்துருகி நிற்பதுவு மெக்காலம்?//

    எக்காலமோ? :( அருமையான பாடல் ஜீவா. இப்படி அரும்பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் உங்கள் பணி சிறக்கட்டும்!

    ReplyDelete
  4. நன்றி கவிநயா,
    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.

    ReplyDelete
  5. //ஐந்து புலன்வென்ற ஆன்றோர் திருவடிகீழ்

    நைந்துருகி நின்று பெறுவதெக்காலம்?

    ஒன்றென் றிருதெய்வம் உண்டென் றிருவென்று

    அன்றுசொன்ன பட்டினத்தா ரடிபணிவ தெக்காலம்?

    ஓமெனு மெழுத்தினுள்ளே ஒளியதாய் விளங்குகின்ற

    சோமசுந் தரத்தின் அடிதொழுவ தெக்காலம்?//

    மிக எளிமையாக அதே சமயத்தில் ஆழ்ந்த கருத்துக்களுடன் நன்றாக இருக்கிறது பாடல்கள்..

    மேல் சொன்ன வரிகள் அருமை...
    புலன் வென்ற ஆன்றோர் திருவடிக்கும், பட்டினத்தார் திருவடிக்கும், அடிபணிவத்தைச் சொல்லி அதன்பின் ப்ரணவத்தில் எல்லாம் ஒடுக்கம் என்பதை அழகாக சுந்தரேசனைச் சொல்லி முடிக்கிறார்.

    இங்கு சுந்தரேசன் அன்பது மதுரையழகன் என்பதால் மட்டும் சிறப்பல்ல. ப்ரளய காலத்தில் எல்லாம் ஈசனிடம் ஒடுங்கும் என்பார்கள்...மந்த்ர சாஸ்த்ரத்தில் ப்ரணவத்தில் எல்லாம் அடக்கம் என்பார்கள். ஈசனின் ஒரு ரூபமே ருத்ரன்..அந்த ருத்ரன் கோபமானவன், அழிவுக்கதிபதி என்றெல்லாம் இருப்பதால் அவனைப் பாடலில் சொல்லாது அவனது சுந்தர ரூபமான சுந்தரேசனை-சதாசிவனைச் சொல்லியது...அருமை.
    நான் சொல்லியது சரிதானே ஜீவா?

    ReplyDelete
  6. அழகாக, மறைபொருளையும் எடுத்துரைத்தீர்கள்,
    மௌலி. ஆழ்ந்த, உயர்ந்த கருத்தெல்லாமே எளியதுதானே!

    ReplyDelete
  7. எளிமையான ஆத்திச்சூடி ஜீவா. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள். இந்த வரிகளைப் படிக்கும் போது தோன்றும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

    ReplyDelete
  8. வருக குமரன்,
    ஆத்திச்சூடி எனவும் பெயரிட்டிருக்கலாம் அல்லவா, எனக்குத் தோன்றவில்லை!
    கடலில் மூழ்கினால் மட்டும் போதாது, முத்தெடுக்கவும் வேண்டும் என்கிறீர்கள்!
    எளிய வரிகள் எத்தனை எத்தனை சிந்தனைகளை தூண்டி விடுகின்றன!
    மேலெழுந்தவாறு பார்க்கும்போது:
    * எம்மைவிட்டு நீங்காத தாள் - அதுவே வந்து ஒட்டிக்கொண்டு நீங்க மறுக்கிறதாம் - என்ன பேறு!
    * செம்மலர் தாள்,ஈசன் திருவடி, திருவடி மேல் நீரும் பூவும் என்று சொல்லி வந்தவர், ஆன்றோர் திருவடி, பட்டினத்தார் திருவடி எனச் சொல்லி, அடியார் பெருமையை கட்டியமிடுகிறார்!

    உங்களுக்குத் தோன்றியவை?

    ReplyDelete
  9. http://www.youtube.com/watch?v=PvTCFm78mWA

    subbu
    thanjai.

    ReplyDelete
  10. ஆசியாய் பாடல்தனை வழங்கியதற்கு நன்றிகள், சுப்புரத்தினம் ஐயா!

    ReplyDelete
  11. யாழ்ப்பாணத்து சுவாமிகளின் நற்சிந்தனை தொகுப்புகள் கூகுள் வழியே
    படித்தேன். ஏறத்தாழ 500 பாடல்கள் உள்ளன . அத்தனையும்
    சமய தமிழ் இலக்கியத்தில் ஓர் தங்கச் சுரங்கம்.
    கானா ப்ரபா சொல்லியது போல சுவாமிகளின் நினைவு நாளும்
    நீங்கள் பதிவு இட்ட நாளன்று தான் வந்துள்ளது.
    அவன் அருள் அவன்பால் தங்களை இழுத்துள்ளது.

    சகுண உபாசகர் எல்லா இக வாழ்வினையும் துறந்து
    அவன் அடிசேர இருக்கும் நேரத்தை நோக்கி
    ஏக்கமுடன் காத்திருக்கும் காலம் ...

    சகுணத்திற்கும் நிர்குண உபாசனைக்கும் இடையே உள்ள வினாப் பொழுது.
    ஒரு வினாடியில் அந்த ஒளி அந்த பிரகாசம் அந்த ஜோதி
    அந்த பிரும்ம ஞானம். அந்தத் தெளிவு என்னே என்னே !!!
    பிரும்மனைத் தன் இதயாகாசத்தில் உணர்ந்தவர் காலத்தையும்
    கடந்து நிற்பர்.

    சகுண உபாசனைக்கு இங்கு இன்னொரு நிகழ்ச்சி பாருங்கள்.
    http://movieraghas.blogspot.com

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  12. அப்படியே யாழ்ப்பாணத்து சுவாமிகள் பற்றியும் ஒரு சிறு குறிப்பு கொடுங்க ஜீவா!

    அடிக்கு அடி அடிகளின் பெருமையைப் பாடியிருக்கார் யாழ்ப்பாணத்து சுவாமிகள்!

    //ஏகன் அனேகன் இறைவனடி வாழ்கவெனும்
    மோகம் அறுக்குமொழி கண்டுய்வ தெக்காலம்?//

    மோகம் அறுக்கும் மொழி எது?
    இறைவன் அடி வாழ்க - என்னும் மொழி தான் மோகம் அறுக்குமாம்!

    பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!

    பற்றுக பற்றற்றான் பற்றினை! அப்பற்றைப் பற்றுக!
    எதற்கு? பற்று விடற்கு! என்று ஐயனும் இதையே சொல்கிறார்!

    இப்படி எளிதாய் வழி காட்டி இருக்கிறார்கள் வழி வழி வந்த ஞானிகள்!

    //இம்மையிலும் மறுமையிலும் எம்மைவிட்டு நீங்காத
    செம்மலர் தாள்//

    நாம் நீக்கினாலும் தாம் நீங்காத திருவடிகள் எப்பவும் நம்முடன் ஒட்டிக் கொண்டு தான் இருக்கு போல!

    //கண்டு சீவிப்பது எக்காலம்//

    நாம் தான் காண்பதில்லை!
    அதான் "கண்டு" சீவிப்பது எக்காலம் என்று கேட்கிறார்!

    ReplyDelete
  13. வருக சுப்புரத்தினம் ஐயா,
    ஆம், யோகசுவாமிகளின் நற்சிந்தனை ஒரு தங்கச் சுரங்கம்!
    சகுண உபசானையின் பெருமையை எடுத்துரைத்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. வாங்க KRS,
    யோகசுவாமிகள் பற்றி நிறைய இணைய அன்பர்கள் சொல்லி இருக்கிறார்கள்:
    தமிழ் விக்கியில் இங்கு. வேதாந்த-சித்தாந்த சமரச சன்மார்கப் பாதைக்கு இலங்கையில் இருந்த உரமிட்டவர் சுவாமிகள்!

    ReplyDelete
  15. அன்பு எனும் சொல்லுக்குத்தான் எத்துணை வலிமை.
    இறையின் பால் கொண்ட அன்பு ஏக்கத்திற்கும் இழுத்துச்செல்லும் நிலை
    ஜீவாத்மா தன்னுள் சோதியை எப்போது காண்பேன் என ஏங்கி நிற்கும் நிலை .
    கவி நயா காணும் அன்பிற்கும், ஜீவா மேற்கோள் எடுத்துச்சொல்லும் யாழ்ப்பாண சுவாமிகள் இறையின் பால் உணர்ந்த ஏக்கமும் வெவ்வேறா ? அன்பு என்பது ஒன்றா இரண்டா பலவா ?
    சுப்பு ரத்தினம்
    வருக.
    http://arthamullavalaipathivugal.blogspot.com

    ReplyDelete
  16. //அன்பு எனும் சொல்லுக்குத்தான் எத்துணை வலிமை.
    இறையின் பால் கொண்ட அன்பு ஏக்கத்திற்கும் இழுத்துச்செல்லும் நிலை
    ஜீவாத்மா தன்னுள் சோதியை எப்போது காண்பேன் என ஏங்கி நிற்கும் நிலை .//
    நல்லது சுப்புரத்தினம் ஐயா.
    "The Road Less Travelled" புத்தகத்தில், Dr.Scott Peck சொல்லுவார் - "The essence of the phenomenon of falling in love is a sudden colapse of a section of an individual's ego boundaries, permitting one to merge his or her identity with that of another person. The sudden release of oneself from oneself, the explosive pouring out of oneself into the beloved, and the dramatic surcease of loneliness accompanying this collapse of ego boundaries is experienced by most of us as ecstatic. We and our beloved are one! Loneliness is no more!"
    ஆக, இப்படி எந்த அன்பு ஏற்படுவதற்கும், வளர்வதற்குமான காரணமும், அதன் இயல்பும், இயல்கூறுகளும் ஒன்றுபோல் இருக்கிறது!

    ReplyDelete
  17. சுப்புரத்தினம் ஐயா நல்ல கேள்வி கேட்டார். என் சிற்றறிவுக்கு எட்டியது இதுதான் - ஜீவா சொன்னது போல அன்புக்கு அடிப்படை ஒன்று; ஆனால் பரிமாணங்கள் நிறைய... கருணை சார்ந்தது, பக்தி சார்ந்தது, காதல் சார்ந்தது, தாய்மை சார்ந்தது,... இப்படி... ஜீவா எடுத்துக் காட்டியிருக்கும் பத்தி எனக்கு மிகப் பிடித்திருக்கிறது..

    //We and our beloved are one! Loneliness is no more!//

    ReplyDelete
  18. எளிய அருமையான பாடல் ஜீவா. யாழ்ப்பானத்து சுவாமிகள் பற்றிய தகவல்கள் இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். தொடர்ந்து இது போன்று எளிய அறிய பாடல்களைத் தாருங்கள்.

    ReplyDelete
  19. வாங்க சதங்கா,
    பெரியவர்கள் பலர் மிகப்பெரியவை எல்லாம் மிக எளியவை என்று சொல்லியிருக்கிறார்கள் (Greatest Truth are always the Simplest!)
    எளியவற்றை எப்போதுமே என் வாசகத்தில் எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
  20. //
    எளியவற்றை எப்போதுமே என் வாசகத்தில் எதிர்பார்க்கலாம்.//

    நானும் உங்கள் கட்சி :)

    ReplyDelete