இராமனுக்கு தாலாட்டுப்பாடும் ஸ்ரீஇராம ஹிருதயம் நிறையும் தியாகராஜர் தாலாட்டுகிறார்!
தன் நெஞ்சம் முழுதும் நிறையும் அன்பின் நிறைவில் தாலாட்டு பாடுகிறார்!
கேட்போமா இந்த இதயம் இனிக்கும் தாலேலோவை!
பல்லவி
ஜோ ஜோ ராமா ஆனந்த
கன ஜோ ஜோ ராமா ராமா
(ஆனந்த வடிவோனே தாலேலோ...)
சரணம்
(1)
ஜோ ஜோ தசரத பால ராமா
(தசரத மைந்தா தாலேலோ...)
ஜோ ஜோ பூஜா லோல ராமா
(நிலமகள் காதலா தாலேலோ...)
(2)
ஜோ ஜோ ரகு குல திலக ராமா
(ரகுகுல திலகனே தாலோலோ...)
ஜோ ஜோ குடில தராலக ராமா
(சுருள் முடியானே தாலேலோ...)
(3)
ஜோ ஜோ நிர்குண ரூப ராமா
(குணங்களுக்கு அப்பாற்பட்டவனே தாலேலோ...)
ஜோ ஜோ சுகுண கலாப ராமா
(எல்லா நற்குணங்களும் நிறைந்தவனே தாலேலோ...)
(4)
ஜோ ஜோ ரவி சசி நயன ராமா
(சூரியனும் சந்திரனும் கண்ணானவனே தாலேலோ...)
ஜோ ஜோ பணி வர ஸயன ராமா
(அரவணையில் சயனித்தருப்பவனே தாலேலோ...)
(5)
ஜோ ஜோ ம்ருது தர பாஷ ராமா
(இன்மொழியானே தாலேலோ...)
ஜோ ஜோ மஞ்சுள வேஷ ராமா
(இனிய திரு உருவத்தானே தாலேலோ...)
(6)
ஜோ ஜோ த்யாகராஜார்சித ராமா
(தியாகராஜன் அர்சிக்கும் ராமனே தாலேலோ...)
ஜோ ஜோ பக்த ஸமாஜ ராமா ஜோ ஜோ!
(பக்தர்கள் குழுமத்தில் நிறை ராமனே தாலேலோ...)
இராகம் : ரீதி கௌளை (இந்த ராகம் ஞாபகம் இருக்கா, 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்...' என Dr. பாலமுரளி கிருஷ்ணா பாடுவாரே!, அதே ராகம்.)
அருணா சாய்ராம் அவர்கள் இங்கே பாடியிருப்பதைக் கேட்கலாம்.
அருமையான பாடல் ஜீவா. நீங்க தமிழ்ல எழுதியிருக்கதும் சிறப்பா இருக்கு. ஆனா என்னால audio-தான் கேட்க முடியல. play பண்ணும்போது fast forward போட்ட மாதிரி ஓடுதே :(
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த ராகம்...பாடலும்தான் :)
ReplyDeleteநன்றி ஜீவா....
சரியில்லா சுட்டியை சுட்டியதற்கு நன்றி கவிநயா, இப்போது வேறு ஒரு தளத்திற்கான சுட்டியை சேர்த்திருக்கிறேன். அங்கிருந்து இந்தப் பாடலைக் கேட்கலாம்.
ReplyDeleteஇப்ப கேட்க முடிஞ்சது. நன்றி ஜீவா!
ReplyDeleteவாங்க மௌலி சார்!
ReplyDelete//இப்ப கேட்க முடிஞ்சது. நன்றி ஜீவா!//
ReplyDeleteநல்லது கவிநயா மேடம்.
இப்பதான் டாக்டர்கிட்ட சொன்னேன், என்னை அவர்களே, இவர்களேன்னு கூப்பிட வேண்டாம், நான் ரொம்ப சின்னப் பொண்ணுன்னு (நிஜம்ம்ம்மா :) நீங்களும் வேற என்னை மேடம் மேடம்னு சொல்றீங்க :( அவ்ளோ மரியாதையெல்லாம் வேணாமே...
ReplyDelete:-))
ReplyDeleteவயதால் பெரியவங்களுக்கு மட்டும் தான் மரியாதை கொடுக்க வேண்டும் என்றில்லையே...!
ReplyDeleteஇருப்பினும் நீங்கள் சொல்வது புரிகிறது!
வாங்க ஜோ,
ReplyDeleteபார்த்தீங்கள் உங்கள் பேரின் மகத்துவத்தை!
வருகைக்கு நன்றி!
:-)
சின்னக் குழந்தைகளைத் தாலாட்டும் பொழுது கூடத் தாய்மார்கள், தங்கள் தோளில் சார்த்தி, 'ஜோ,ஜோ' என்று இந்தப்பக்கமும், அந்தப்பக்கமும் அசைந்து தாலாட்ட, குழந்தை அயர்ந்து தூங்கி விடும். அந்த 'ஜோ,ஜோ' வார்த்தைக்கு அவ்வளவு மகிமை. கண்ணனும், ராமனும் கைக்குழந்தையாகும் பொழுது கேட்க வேண்டுமா!..
ReplyDeleteபக்தர்கள் டோலோற்சவம் ஆடி,பாடி
தொட்டிலிட்டு இறைவனை பாவனையாய் தூங்க வைக்கும்
அழகே அழகு!
உங்கள் பதிவும், தேர்ந்தெடுக்கும் அழகும் அருமையிலும் அருமை!
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
அருணா சாய்ராமின் அற்புதக் குரலில் அருமையான பாடல். ராமன் உறங்கி விடப் போகிறான்:-)
ReplyDeleteபாடலை இட்டமைக்கு நன்றி.
வாங்க ஜீவி, தங்கள் கனிவான சொற்களுக்கு நன்றி!
ReplyDeleteகுழந்தையும் தெய்வம் குணத்தில் - இல்லை, குணங்களுக்கு அப்பாற்பட்டு விளங்கும் மாண்பை எப்படிச் சொல்வது, எவ்வளவு வியப்பது, யானறியேன்!
டோலோற்சுவத்தின அழகை விவரித்திருந்தீர்கள், நன்றி!
வாங்க கெக்கே மேடம்,
ReplyDeleteஅருணா சாய்ராம் அவர்களின் குரல் நயம் இந்தப்பாடலுக்கு இன்னமும் அழகாக பொருந்துகிறது.
//ராமன் உறங்கி விடப் போகிறான்:-)//
ஆகா, நன்றாக உறங்கட்டும், காலையில் அவனுக்கு முன் எழுந்து சுப்ரபாதம் பாட வேண்டாமா?
:-)
நீங்கள் கொடுத்த அருணா சாயிராம் சுட்டியில் ஒரு 17 வினாடி மட்டுமே
ReplyDeleteசாம்பிள் ஜோ ஜோ ராமா பாட்டு தருகிறார்கள்.
அதற்குள்ளேயே ராமன் தூங்கிப்போய்விட்டதால் மேலே டிஸ்டர்ப்
பண்ணக்கூடாது என்று ஆடியோவை நிறுத்திவிட்ட்டார்கள் போலும்.
எனினும், ம்யூசிக் இன்டியா ஆன்லைன் ல் இதே ரீதி கெளள ராகத்தில், ஆனால்,
துரித காலத்தில் பாம்பே ஜெயஸ்ரீ பாடுவது கேட்கமுடிகிறது.
உங்களது தமிழாக்கத்தை நீலாம்பரியில் பாடஇயலுமா ?
அல்லது ஆனந்த பைரவியில் ?
முயற்சி செய்யவேண்டும்.
தியாகராசர் மன்னிப்பாராக.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
இனிமையான பாடலுக்கு அருமையான இசையுடன் அளித்து மகிழ்த்தியமைக்கு மிக்க நன்றி திரு..ஜீவா.
ReplyDeleteஇப்ப கேட்டா தூங்கிடுவேன் போல இருக்கு! அப்புறமா கேக்கிறேன்.
ReplyDeleteபாப்புலரான பாட்டுக்களை சொல்லி அதேதான் இன்ன ராகம் ன்னு சொல்லி இருக்கிறது என்னை மாதிரி ஆசாமிக்கு வசதி! நன்றி!
வாங்க சுப்புரத்தினம் ஐயா.
ReplyDeleteநீங்க குறிப்பிட்ட பாடலின் சுட்டி இங்கே. துரித காலம். பாம்பே சகோதரிகள் பாடுகிறார்கள். அருணா சாய்ராம் பாடியது போல இருந்தால் இன்னமும் பொருத்தமாக இருக்கும். அந்த தளத்தில் நிறைய முறை அதே பாடலையே கேட்டால், சாம்பிளுக்குத்தான் கேட்க முடியும் போலும்.
நீலாம்பரியும் பொருத்தமாக இருக்கும் என நினக்கிறேன். 'உய்யால லோலா...' என பாலமுரளி சார் பாடுவாரே, அது போல.
நன்றிகள், எல்லாவற்றுக்கும்.
தங்கள் வருகை, மகிழ்ச்சியைத் தருகிறது VSK ஐயா.
ReplyDeleteவாங்க திவா, நன்றி.
ReplyDelete//பாப்புலரான பாட்டுக்களை சொல்லி அதேதான் இன்ன ராகம் //
நான் ராகங்களை கற்றுக் கொள்வதும் இப்படித்தான் திவா. அதனால, அப்படியே சொல்கிறேன்! :-)
ஒரு சின்ன முயற்சி . அவ்வளவு தான்.
ReplyDeleteஒரு முப்பத்து ஐந்து மார்க் வந்தாலே அதிகம் தான்.
http://www.youtube.com/watch?v=x6XCROWk0T4
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
PS: One and two words here and there i've tried to modify anticipating your permission.
நீலாம்பரின்னு நான் நினைச்சிட்டு இருக்கேன்.
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=x6XCROWk0T4
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
நன்றி சுப்புரத்தினம் ஐயா,
ReplyDeleteஏனோ தெரியவில்லை - யூட்யூபில் சக்கரம் சுழன்று கொண்டே இருக்குறது, பாடல் தொடங்குவதாகத் தெரியவில்லை. சில மணி நேரம் கழித்து முயன்று பார்க்கிறேன்.
சுப்புரத்தினம் ஐயா,
ReplyDeleteஃபையர்பாக்ஸில் சக்கரம் சுழன்றுகொண்டேதான் இருந்தது, அப்புறம் சாஃபாரியில் முயன்றதும், பார்க்க/கேட்க இயன்றது, அதனால்தான் தாமதம்.
பாடல் நீலாம்பரியில் அருமையாக வந்துள்ளது.
ராமா.....
தாலேலோ....
என்கிற இடங்களும் அழகாகவும், மனதிற்கு இதம் அளிப்பதாகவும் உள்ளது.
பாடலுக்கு ஏற்றாற்போல், தாங்கள் கை அசைப்பும், தாலாட்டுவதுபோலவே உள்ளது, மிக்க நன்றி!
ஐயா, பாடல் மிகவும் இனிமை. அனுபவித்துப் பாடியிருக்கிறீர்கள். மிக்க நன்றி!
ReplyDelete