விருத்தம் பாடி பின்னர் தொடர்ந்து கிருதியினைப் பாடுவது நமது இசையில் ஒரு மரபு.
அதன்படி இங்கொரு விருத்தமும், பாடலும் பார்ப்போமா?
விருத்தம் ஒருவரால் இயற்றப்பட்டிருக்க, தொடர்ந்து வரும் உருப்படியோ இன்னொருவரால் இயற்றப்பட்டிருக்கும். இரண்டுக்கும் இடையே பாடகரால் நெய்யப்படும் தொடர்புதான் இருக்கிறதே, அது இயற்கையானது போலவே அமைந்திருப்பின், அது கேட்பவரை வியப்பின் விளிம்பிற்கு இட்டுச்செல்லும்!
அப்படிப்பட்ட ஒரு பாடலை இங்கு திருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிடக் கேட்கலாம். முதலில் பாடும் விருத்தமானது, திருப்பாணாழ்வாரால் இயற்றப்பட்டது. இந்த செய்யுள் உட்பட, பாணரின் பத்து செய்யுள்கள் நாலயிர திவ்ய பிரபந்தத்தினில் அடங்கும். "கொண்டல் வண்ணனை, கோவலனை, வெண்ணை உண்ட வாயனை" என கண்ணனை விளித்த பெருந்தகையாளார் இவர்.
கண்ணன் வெண்ணை உண்பான் சரி, ஆனால், அவன் ஏழு உலகங்களையும் உண்டது எப்போது?
ஆகா, பரம்பொருளாய் எங்கெங்கும் நிறைந்திருப்பதைத் தான் அன்று கண்டாளோ அன்னை யசோதை.
எழில் நிறை நீல மேனியனின் வடிவழகு எல்லையில்லாமல் எங்கும் நிறைந்து பரம்பொருளாக நிரவி இருக்கிறது.
இப்போது இந்த ஆலமரத்திலை பாலகன் அழகில் லயித்திட, என் நெஞ்சமெல்லாம் அவன் நீலமேனி அழகும் நிறைந்திட,
ஐயோ, அண்ட சாரசரங்களெல்லாம் அதே கருநீல நிறத்தினில் என் நெஞ்சமெல்லாம் நிறைந்திடுதே!,
அம்மம்மா, விண்மீன்களெல்லாம் என்னுள்ளே மின்னிடுதே. இந்த விந்தையை என்னென்று சொல்ல!
விருத்தம்:
இயற்றியவர் : திருப்பாணாழ்வார்
இப்படி ஒரு உணர்ச்சி வெள்ளத்தில் நிறைத்திட்ட இந்த பாலகனை, தாலேலோ என தாலாட்டுப் பாடி தூங்கச் செய்யும் பேறினையும் பெறாதா நெஞ்சென்ன நெஞ்சே?
(ஒலிப்பதிவில், ஒலி அளவு குறைவாக உள்ளது, கணிணியில் ஒலியினைக் அதிகரித்துக் கேட்கவும்)
இப்போது தொடரும் கிருதி விருத்தத்தோடு, எப்படி அருமையாக இணைகிறது பாருங்கள்!. தமிழ்த் தியாகராஜர் என தமிழ் இசை ரசிகர்களால் போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியது. குறிஞ்சி ராகம் என்ன அழகாய் பொருந்துகிறது, தாலாட்டுப் பாடல்களுக்கு!
பாடல்:
ராகம்: குறிஞ்சி
தாளம்: திச்ரஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
எடுப்பு
கண்ணே என் கண்மணியே கண்ணனே கண் வளராய்
மண்ணுலகில் என் வாழ்வு வளம் பெற வந்துதித்த (கண்ணே)
தொடுப்பு
குயிலிசை குழலோசை உன் கொஞ்சு மொழிக் கிணையாமோ
கொண்ட மன சஞ்சலங்கள் பஞ்சாய்ப் பறந்திடுமே
தாலோ தாலேலோ....
முடிப்பு
தேடாத என் நிதியே திகட்டாத் தெள்ளமுதே
வாடாத மென் மலரே மனத்துள் இனிக்கும் தனித்தேனே

ஆலமாமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான், அரங்கத்து அரவின் அணையான்
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும்
எழில் நீல மேனி...முடிவில்லதோர் எழில் நீல மேனி ஐயோ...
எழில் நீல மேனி அம்மா...
நிறை கொண்டதென்
நெஞ்சினையே...நெஞ்சினையே... நெஞ்சினையே...
கண்ணா...கண்ணா...
தாலேலோ...
தா லே லோ...
தாலேலோ...
இப்படி ஒரு உணர்ச்சி வெள்ளத்தில் நிறைத்திட்ட இந்த பாலகனை, தாலேலோ என தாலாட்டுப் பாடி தூங்கச் செய்யும் பேறினையும் பெறாதா நெஞ்சென்ன நெஞ்சே?
கண்ணே என் கண்மணியே! |
(ஒலிப்பதிவில், ஒலி அளவு குறைவாக உள்ளது, கணிணியில் ஒலியினைக் அதிகரித்துக் கேட்கவும்)
இப்போது தொடரும் கிருதி விருத்தத்தோடு, எப்படி அருமையாக இணைகிறது பாருங்கள்!. தமிழ்த் தியாகராஜர் என தமிழ் இசை ரசிகர்களால் போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியது. குறிஞ்சி ராகம் என்ன அழகாய் பொருந்துகிறது, தாலாட்டுப் பாடல்களுக்கு!
பாடல்:
ராகம்: குறிஞ்சி
தாளம்: திச்ரஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
எடுப்பு
கண்ணே என் கண்மணியே கண்ணனே கண் வளராய்
மண்ணுலகில் என் வாழ்வு வளம் பெற வந்துதித்த (கண்ணே)
தொடுப்பு
குயிலிசை குழலோசை உன் கொஞ்சு மொழிக் கிணையாமோ
கொண்ட மன சஞ்சலங்கள் பஞ்சாய்ப் பறந்திடுமே
தாலோ தாலேலோ....
முடிப்பு
தேடாத என் நிதியே திகட்டாத் தெள்ளமுதே
வாடாத மென் மலரே மனத்துள் இனிக்கும் தனித்தேனே
தாலோ தாலேலோ....
உங்கள் ரசனையுடன் கூடிய விளக்கங்கள் அருமை என்றால்,
ReplyDeleteஅந்த பிரேம் போட்ட அழகு ஆலிலைக் கண்ணனின் கொஞ்சும் அழகு கண்ணைவிட்டு அகல மாட்டேன் என்கிறது...
//உங்கள் ரசனையுடன் கூடிய விளக்கங்கள் அருமை என்றால்,//
ReplyDeleteவாருங்கள் ஜீவி,
இந்த ரசனையெல்லாம் தங்கள் எழுத்தைப் படித்ததால் வந்தது போலும்! நன்றி!
//அந்த பிரேம் போட்ட அழகு ஆலிலைக் கண்ணனின்//
இந்த தஞ்சாவூர் ஓவியத்தை தேடிக்கொண்டு இருந்தேன், இப்போதுதான் கிடைத்தது.
//அண்ட சாரசரங்களெல்லாம் அதே கருநீல நிறத்தினில் என் நெஞ்சமெல்லாம் நிறைந்திடுதே!,அம்மம்மா, விண்மீன்களெல்லாம் என்னுள்ளே மின்னிடுதே. இந்த விந்தையை என்னென்று சொல்ல!//
ReplyDeleteரசித்து ருசித்து வர்ணித்திருக்கிறீர்கள் :)
கட்டை விரலை வாயில் வைத்துக் கொண்டிருக்கும் கண்ணன் வெகு அழகு! தாலாட்டின் இனிமையில் மனமும் கண்ணும் சொக்குகிறது!
அல்ப்ராக்ஸ் சாப்பிடாமயே அபாரமா தூக்கம் வரதே !
ReplyDeleteசுகமோ சுகம்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com
வாங்க கவிநயா,
ReplyDeleteஆலிலைக் கண்ணனின் அழகே அழகுதான்!
வாங்க சுப்புரத்தினம் ஐயா,
ReplyDeleteகண்ணன் சுகத்தில் திளைப்பது ஒரு யோகம் - அதைக்
கண்டவர் அடைந்திடக் கிடைப்பது அனு போகம்!
மெல்லிய தாலாட்டுச் சுகத்தில் திளைக்க வச்சிட்டீங்க ஜீவா!
ReplyDeleteபொதுவா ஐயோ என்ற சொல் கவலையைக் குறிக்கும்!
ஆனாப் பாசுரத்தில் ஆழ்வார் ஏங்கி உருகும் போது வரும் சொல்லாகக் கையாளுகிறார். அதை நித்யஸ்ரீ அழகாக் கையாளுகிறார்கள்!
//தேடாத என் நிதியே திகட்டாத் தெள்ளமுதே
வாடாத மென் மலரே மனத்துள் இனிக்கும் தனித்தேனே//
தேடாத நிதி = பாபநாசம் சிவன் அவர்களிடம் நான் வியந்து போவது இந்தச் சொற்கட்டு தான்! வரி, இசை இரண்டிலும் புலமை மிகவும் அரிது! பாபநாசம் சிவன், தமிழ் தழைக்க வந்த பெருந்தகையே தான்!
வாங்க KRS,
ReplyDeleteஆமாமில்லே! உருக்கமும், ஏக்கமும், வியப்பும், ஆனந்தமும் அந்த ஐயோவில் வெளிப்படுகிறது.
பாபநாசம் சிவன் அவர்கள் சொற்கட்டுகளில் குறிப்பாக, வினைத்தொகைகளும், பண்புத்தொகைகளும் என்னைக் கவரும். அவர் பாடல்கள் நமக்கு தமிழ் சொல்லித்தரும்
பாடநூல்கள்!
சந்தத்துக்கு ஒரு சிறந்த பாடல்!
ReplyDeleteநித்யஸ்ரீயின் உருக்கமும் குழைவும் மேலும் மெருகூட்டுகிறது இதற்கு!
அருமையான இசை இன்பம் தந்தமைக்கு மிக்க நன்றி!
வாங்க ஐயா,
ReplyDeleteநித்யஸ்ரீ, மற்றும் யேசுதாஸ் - நான் முதன்முதலில் தமிழிசை கேட்டு அதன் மூலம் மரபிசை கேட்க தூண்டுகோலாய் விளங்கியவர்கள்
யான் பெற்ற இசை இன்பத்தினை இன்றைக்கு பகிர்ந்து கொள்கிறேன் என்றால் அதற்கு இவர்கள்தான் மூலமுதல்!
"மென் மலரே மனத்துள் இனிக்கும் தனித்தேனே"
ReplyDeleteVSK ஐயா, நீங்கள் ரசித்துச் சொன்னது போலவே, இந்த இடத்தில் பாடல் சந்தத்தின் இனிமை சகல புவனமும் இனித்திடும்!
ஆரபியில் ஒரு விருத்தத்துடன் ஒரு பாடல் கேட்க
ReplyDeleteதங்கள் உற்றம் சுற்றம் எல்லோருடனும்
உங்களைக் காண
பிருந்தாவனத்தில் ஓர் நந்த குமாரன்
காத்திருக்கிறான்.
http://movieraghas.blogspot.com
ஆரபியில் ஒரு தில்லானா இருந்தால்
கைமாத்தா கொடுங்களேன்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
அருமையான தொகுப்பு சுப்புரத்தினம் ஐயா.
ReplyDeleteதிருப்பணாழ்வாரின் "கொண்டல் வண்ணனை..." விருத்தமும், தொடர்ந்து வரும் 'ஸ்ரீரங்கநாதன் குருசேவை காண உயர்ஞானம் வந்து சேரும்..' பாடலும், பக்திப் பரவசத்திற்கு இட்டுச் செல்கிறது.
திருப்பாணாழ்வார் பாடலுக்குத் தங்களின் பொருள் விளக்கம் மிக அழகாகவும் அழுத்தமாகவும் இருப்பது கண்டு இன்புற்றேன். மகிழ்ச்சி ஜிவா அவர்களே! -அகரம்.அமுதா
ReplyDeleteவாங்க அகரம்.அமுதா,
ReplyDeleteதங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.
i dont know how to post my comments in tamil but your tanjore paintings are really gud .... i really liked use rich vibrant colors in the painting keep it up !
ReplyDeletethese paintings are also really gud it might help you also Tanjore Paintings
Welcome Dear lover of the Tanjore Paintings!
ReplyDelete