Sunday, May 04, 2008

பண்டரிபுரம் போகாதீங்க, பூதமிருக்கு அங்கே!


பக்திமான் சந்த் துக்காராமின் இந்த அபங்கம், வஞ்சகப் புகழ்ச்சியில் கண்ணனைப் பாடுகிறது.

விட்டல் உறையும் பண்டரிபுரம் போக வேண்டாம், போக வேண்டாம் என்று சொல்வார்கள்.

ஆம், அங்கே செல்ல வேண்டாம், தயவு செய்து செல்ல வேண்டாம்.

அங்கே பெரியதொரு பூதம் இருக்கிறது.

பண்டரிபுரம் சென்றவர்கள் திரும்பியதே இல்லை. அந்த பூதம் அவர்களை அப்படியே சாப்பிட்டு விடுகிறதாம்!.


துக்காராம், இதையெல்லாம் கேட்பவரா என்ன, அவரது கிருஷ்ண ப்ரேமைதான் அளவிடற்கரியதே!

துக்காராம், துணிந்து பண்டரிபுரம் சென்றார்.

எல்லோரும் பயந்தது போலவே, துக்காராமும் திரும்பவில்லை.

ஆனால், என்ன, துக்காராம் இந்த நிலையில்லா உலகுக்கு திரும்பிடவில்லை.

பாண்டுரங்கன் பதமெனும் உயர்நிலையை அடைந்தபின்,

இந்த உலகும் ஒரு பொருட்டோ?

-----------------------------------------------------

பாடல் : பண்டரிசே பூத மோடே
மொழி : மராத்தி
ராகம் : சந்ரகௌன்ஸ்
பாடுபவர் : ரஞ்சனி, காயத்ரி

பண்டரி சே பூத மோடே

ஆல்யா கேல்யா தடபி வாடே

பஹூ கேதலிச ராணா

பகஹே வேடே ஹோய மானா


தீதே சவுனகா கோணி

கேலே நஹி ஆலே பரதோணி

துக்கா பண்டரி சே கேலா

புண்ஹ ஜன்ம நஹி ஆலா




----------------------------
தொடர்புடைய சுட்டிகள்:
துக்காரம்.காம்
ரஞ்சனி-காயத்ரி.காம்
விட்டல விட்டல: தி.ரா.ச அவர்களின் பதிவு

10 comments:

  1. என் தந்தையை நினைவுட்டிய பதிவு..
    என் தந்தை நிறைய அபங்க் பாடுவார்.

    பகிர்ந்தமைக்கு நன்றி ஜீவா!

    ReplyDelete
  2. அப்படியா திரு.மௌலி,
    தகவலினால் மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  3. நன்றி ஜீவா. நல்லதொரு பாட்டு. பாடகிகள் எல்லாக் கச்சேரிகளில் பாடுகிறார்கள் இந்த அபங்கத்தை. பக்தியின் உச்ச நிலைதான் அபங்கம். ஸ்வாமிஹரிதாஸ் கிரி அவர்கள் மிக அருமையாக பாடுவார் அபங்கங்களை.

    ReplyDelete
  4. வாங்க தி.ரா.ச சார்,
    சமீபத்தில் இங்கு துக்காராம் கணபதி மஹராஜ் அடலாண்டா வந்திருந்தபோது, அவர் நாமதேவர் ஹரிகதை ஒன்றை வழங்கிட, அதிலிருந்து நாமதேவர், துக்கராம், அபங்கம் பற்றி ஓரளவு அறிந்து கொள்ள இயன்றது.

    ReplyDelete
  5. //இங்கு துக்காராம் கணபதி மஹராஜ் அடலாண்டா வந்திருந்தபோது//

    அட அட்லாண்டா வந்திருந்தாரா?? இவர நேர்ல கேக்கணும்னு ஆசை...

    அழகான அபங்.....கேக்க கேக்க மனசு சிலிர்க்குதே.........!பாட்டால் பக்தி செய்ய முடிந்தவர்கள் புண்யம் செய்தவர்கள் ஜீவா...!

    ReplyDelete
  6. வாங்க ராதா மேடம்!
    ஆம், சுமார் ஆறு மாதம் முன்பு அட்லாண்டா வந்திருந்தார். இரண்டு, மூன்று இடங்களில் அன்பர்கள் சத்சங்கமாய் திரண்டிருக்க, அவர் ஒரு வாரஇறுதியை பயனுள்ளதாக்கினார்.
    அவர் சொல்லச்சொல்ல, கேட்க கேட்க மெய்சிலிர்பாய் இருந்தது. தமிழில் பொருளும், பாட்டும், மாராத்தி அபங்கமும் சேர்ந்த காலட்சேபம் அருமையாக இருந்தது!

    ReplyDelete
  7. //துக்காராம் கணபதி மஹராஜ் அடலாண்டா வந்திருந்தபோது//

    அட, நேரே கேட்கணும்னு ரொம்ப நாள் ஆசை, எப்போ முடியுமோ???

    ஆனால் உண்மையிலேயே பண்டரிபுரத்தில் பூதம் தான், திரும்பி வர மனசும் இருக்கிறதில்லை, அதுவும் பாண்டுரங்கனைத் தொட்டுக் கும்பிட முடியும் என்பதும் ஒரு கூடுதல் அனுபவம், நன்றி பகிர்தலுக்கு.

    ReplyDelete
  8. //அட, நேரே கேட்கணும்னு ரொம்ப நாள் ஆசை, எப்போ முடியுமோ???//
    சீக்கிரமே கிட்டட்டும் மேடம், கோபல கிருஷ்ணனுக்கு கொஞ்சம் அவல் கொடுங்கள் போதும்!

    பண்டரிபுரத்து பூதம் இடுப்பில் இரண்டு கையையும் வைத்துக்கொண்டு ஒரு கால் மேல் இன்னொரு காலை போட்டுக்கொண்டு நின்று, புன்னகைத்தால், யாருக்குத்தான் திரும்பி வர மனம் வரும்?

    நேரில் கண்டறியும் பேறு இல்லை எனக்கு. தங்களைப் போன்ற பெரியோர்கள் அவ்வப்போது வந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டால், அதுவே பேறு.

    ReplyDelete
  9. பண்டரிபுரம் போகவேண்டும் என்ற ஆசையை தூண்டிவிடுகிறது அந்தப் பாடல்.

    ReplyDelete
  10. ஆகா, பாண்டுரங்கன் உங்களையும் பிடித்துக்கொண்டானா வேளராசி!

    ReplyDelete