Sunday, June 08, 2008

படத்தில் இருப்பது என்ன? (விடையுடன்)

படத்தில் இருக்கும் பொருள் என்னவென்று சொல்லுங்க பார்க்கலாம்?
(வினாவுக்கான விடை வெளியிடப்பட்டு விட்டது,
இடுகையின் இறுதியில் சென்று பார்க்கவும்!)



ஏதோ உருண்டையாய் ரெண்டும் இருக்குது

ஏதோ பலப்பல கூர்முனைகள் கொண்டிருக்கு;

உந்தன் பொருளை குதிகுதியில் குத்திடும்

எந்தன் பெயரென்ன சொல்லு.

(முதல் இரண்டு அடிகள் அதைப் பார்த்து நாம் சொல்கிறோம்,
அடுத்த இரண்டு அடிகள் நம்மைப் பார்த்து அது சொல்கிறது!)


(படத்தை பெரிதாக பார்க்க அதன் மேல் அழுத்தவும்)

விடை:
படத்தில் இருக்கும் இரண்டு பந்துகளும் 'Dryer Balls'.
தோய்த்த துணிகளை உலர வைக்கும், உலர் இயந்திரங்களில் (dryer machines) இவற்றைப் பயன்படுத்தலாம்.
இவற்றின் பயன் என்னவென்றால், துணிகள் மிகவும் சுருங்கி, வதங்கி விடாமல், மெத்தென்று இருக்க உதவிடும்.
இவற்றை, துணிகளை உலர வைக்கும்போது, அவற்றோடு சேர்த்து அந்த இயந்திரத்தில் விட்டு விடலாம்.
இதே பயன்பாடுக்காக, Fabric Softner, dryer sheets போன்றவை இருந்தாலும், அவற்றிலுள்ள வேதியல் பொருட்களால், தீங்கே.
அதற்கு மாற்றாக, இயற்கையாக துணிகளை மெத்துன்று வைக்கை இவை உதவுகிறது.
இவை பற்றி மேலும் அறிய இங்கே பார்க்கவும்.

அது சரி, கொடியில் துணிகளை உலர்த்தி, சூரிய வெளிச்சத்தில்
காய வைக்கமால், இதென்ன வேலை என்கிறீர்களா, அதுவும் சரியே!

வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள்!

29 comments:

  1. தெரியும், ஆனா தெரியாது. நீங்களே சொல்லிடுங்க ஜீவா! இப்படி பரீட்சையெல்லாம் வைக்கிறதா இருந்தா முன்னாடியே சொல்லிடணும்! (நான் பாட்டுக்கு மட்டம் போட்டுருப்பேன் இல்ல?)

    ReplyDelete
  2. வாங்க கவிநயா,
    தேர்வு என்றால் என்ன ஒவ்வாமையா?
    தேர்வாகக் கொள்ள வேண்டாம்.
    ஏதோ ஒரு பொருள் என, உங்களுக்குத் தோன்றைவற்றையும் நாலு வரியில் எழுதிப்போடலாமே...
    வாசகர்கள் முயற்சிக்கிறார்களா பார்ப்போம்!

    ReplyDelete
  3. அட, எந்தப் பதிவ வாசித்து பின்னூட்டம் போடலாம் என்று பார்த்தாலும், கவிநயா வந்திருக்காங்க.

    நான் கொஞ்சம் லேட் ஜீவா. இருந்தாலும் முயற்சிக்கிறேன்.

    "மசாஜர்" எனது பதில்.

    ReplyDelete
  4. வாங்க சதங்கா,
    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் அல்லவா!
    மசாஜர் இல்லை. ஆனால் இதுபோன்று மசாஜ் செய்வதற்குமான பொருட்கள் உண்டென ஒத்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  5. சதங்கா சொல்வது போல உள்ளங்கையில் வைத்து பிசையும் stress ball போலத்தான் எனக்கும் தோன்றுகிறது.

    ReplyDelete
  6. வாங்க ராமலஷ்மி,
    அப்படித்தோன்றுவதற்கான காரணம் புரிகிறது!
    விரைவில் விடையை வெளியிடுகிறேன்.
    இன்னும் சிலரும் விடை சொல்ல முயல்கிறார்களா பார்ப்போம்!

    ReplyDelete
  7. துணிகள் நன்றாகத் துவைப்பதற்காக வாஷின் மெஷினில் போடப்படும் பந்துகள் இவை.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  8. சிமுலேஷன் சார் சரியா விடையைச் சொல்லி விட்டார்.
    விடை விரைவில்!

    ReplyDelete
  9. //அட, எந்தப் பதிவ வாசித்து பின்னூட்டம் போடலாம் என்று பார்த்தாலும், கவிநயா வந்திருக்காங்க.//

    சரி, இனிமே நான் வரல :(

    ReplyDelete
  10. ஜீவா. எனக்குத் தெரியும். எங்கள் வீட்டில் ஏறக்குறைய ஒரு வருடமாகப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் நானும் நேரடியாகச் சொல்லாமல் ஒரு விடுகதையாகப் பதில் சொல்கிறேன்.

    எங்கள் வீட்டு கலிங்கமும் அம்பரமும் சவுக்காரத்தால் கசடு நீங்கிய பின்னர் நீரகற்றும் போது பயன்படுத்துகிறோம். சரி தானே?! :-)

    யாராவது அகரமுதலி பார்த்தால் என் விடையைக் கொண்டு சரியான விடையைச் சொல்லிவிடலாம்.

    நான் நேரடியாக விடை சொல்லாததால் இந்தப் பின்னூட்டத்தை உடனே வெளியிட்டுவிடுவீர்கள் என்று நினைக்கிறேன். :-)

    ReplyDelete
  11. //
    சரி, இனிமே நான் வரல :(//
    அச்சச்சோ!
    :-(

    ReplyDelete
  12. சரியே குமரன்,
    இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!
    விடுகதையை அவிழ்க்க யாரேனும் வருகிறார்களா பார்ப்போம்!

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. நீங்களும் சரியா சொல்லீட்டீங்க கவிநயா,
    குமரனின் விடுகதையில் இருந்து கண்டீர்களோ?

    ReplyDelete
  15. ஆமாம்! குமரனுக்கு நன்றி!

    இனிமே அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்புறமா எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாரும் வந்துட்டு போனப்புறம் வரேன்!

    ReplyDelete
  16. குமரன் சொன்னதுதான்!

    சலவை இயந்திரத்தில் துணி துவைக்கையில் அழுக்கு நீக்க துணையாக இருக்கும் என்று நினைத்து உபயோகிக்கும் scrubber!
    சரியா?

    ReplyDelete
  17. வாங்க ஜீவி ஐயா,
    விடை கிட்டத்தட்ட சரி!
    ஆனால், அதன் பயன் அழுக்கு நீக்க அல்ல!
    விரிவான விளக்கத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
  18. //இனிமே அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்புறமா எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாரும் வந்துட்டு போனப்புறம் வரேன்!//
    அட, இங்கே நிறைய பதிவுகளில், நான் தான் First!, என்கிற பெரும் போட்டியே இருக்கு,
    அதனால அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்திடாதீங்க.

    ReplyDelete
  19. வினாவுக்கான விடையை வெளியிட்டு விட்டேன்,
    இடுகையில் பார்க்கவும்.
    அனைவரின் வருகைக்கும் நன்றி!

    ReplyDelete
  20. ஆக துணிகளுக்கான மசாஜர்:))! வாங்கி விட வேண்டியதுதான். நல்ல தகவல்!

    ReplyDelete
  21. உங்களுடைய வலைப்பதிவுகளிலே முதன் முதலாக‌
    புதிராக ஒன்றுமே புரியாத வகையிலே
    ஏதோ கொடி, துணி, பந்து, ஊசி, உலருதல், வேதியல்
    என்று என்னென்னவோ சொல்லி
    .... ... சும்மா சொல்லக்கூடாது.
    ஒரு பத்து தரம் படித்தேன்.
    ஒண்ணும் புரியவில்லை தம்பி =
    எனக்கும்
    ஒண்ணும் புரியவில்லை தம்பி.
    ஜெனரேஷன் gap.
    எப்ப‌டியும் உங்க‌ள் ப‌திவில் ஓரிரு வார்த்தைக‌ளைச்
    சேர்த்து ஒரு பின்னோட்ட‌ம் த‌ர‌வேண்டும். அது தானே இப்ப‌ ம‌ர‌பு !ஃபாஷ‌ன்.

    நேற்று அருகாமையில் NRI
    நடத்தும் ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன்.
    க்ளாசிக் குடும்பம். non refundable deposit Rs.10 lacs. Rs.7000 p.m.
    பல அம்மா அப்பாக்கள் தனி டூ பெட் ரூம், கிச்சன், தனி செல், தனி டி.வி. ஃஃஃஃபோன்
    தனி இன்டர்னெட் வசதிகளுடன் இருக்கிறார்கள்.
    ஒருவரிடம் கேட்டேன்.எப்படி இருக்கிறது லைஃப் என்றேன்.
    எங்களை எல்லாம் எவரி டே காலைலே ட்ரையர் லே போட்டு உலர்த்தி இப்படி போட்டு விடுகிறார்கள். ஒரு குறையும் இல்லை என்றார். ஒரு dry humour
    அவர் பேச்சில். ஒரு கொடியில் வேட்டி, பான்ட், ச்ர்ட் எல்லாவற்றையும் உலர்த்திக்கொண்டிருந்தார். நான் கேட்டேன்:
    "அது சரி, கொடியில் துணிகளை உலர்த்தி, சூரிய வெளிச்சத்தில்
    காய "வைக்க இங்கே யாரும் உதவிக்கு இல்லையா உங்களுக்கு? என்றேன். அவர் பதில் சொன்னார்: " இதென்ன வேலை என்கிறீர்களா, அதுவும் சரியே!" ஆனால்,இது ஒன்று தான் என‌க்கு வேலை என்றார்.
    என‌க்கு பொறாமையாக‌ இருந்த‌து. என்னை இங்கே சேர்த்துக்கொள்வார்க‌ளா என்றேன்.
    ஒரு தினுசா என்னைப் பார்த்தார். பின் சொன்னார்:
    யூ ஆர் டூ ய‌ங் டு ஜாயின் ஹிய‌ர்.
    என்றார்.
    என‌க்கு இன்று வ‌ய‌து 67.

    என்ன‌ ஒன்றுமே புரிய‌வில்லையே என்கிறீர்க‌ளா ?
    goto 8
    begin

    சுப்பு ர‌த்தின‌ம்.
    த‌ஞ்சை.
    http://

    ReplyDelete
  22. நல்ல வேளை... பதில் வெளியானபிறகு பதிவுக்கு வந்தேன்.... தெரிந்து கொண்டேன்....

    ReplyDelete
  23. இந்த க்ளாஸிக் குடும்பத்தை வலையில் பார்த்தேன். வாழை இலை போட்டுச் சாப்பாடு பார்த்ததும்..... மனசு ஹைய்யான்னு ஆட்டம் போட்டது.

    மேல்விவரம் நம்பகமானவரிடம் இருந்து கிடைக்கணுமேன்னு ஒரு யோசனை.

    சுப்பு ரத்தினம் சாருக்கு நன்றி.

    துண்டு போட்டுரலாமா? :-))))

    ReplyDelete
  24. ////அட, எந்தப் பதிவ வாசித்து பின்னூட்டம் போடலாம் என்று பார்த்தாலும், கவிநயா வந்திருக்காங்க.//

    சரி, இனிமே நான் வரல :(//

    அட அடா, என்னங்க கவிநயா, சோக ஸ்மைலி போட்டுருக்கீங்க. நீங்க வந்தது சந்தோசம் எனும் அர்த்தத்தில் அல்லவா எழுதினேன்.

    ReplyDelete
  25. //உங்களுடைய வலைப்பதிவுகளிலே முதன் முதலாக‌
    புதிராக ஒன்றுமே புரியாத வகையிலே//
    அப்போ, இதுவரை எழுதியது எல்லாம் நல்லா புரிகிற மாதிரி இருந்தது போல, நல்லது!
    இதுதானோ வஞ்சகப் புகழ்ச்சி! ;-)

    ReplyDelete
  26. வாங்க ச்சின்னப்பையன்!, வந்திட்டீங்கல்லே!

    ReplyDelete
  27. //
    துண்டு போட்டுரலாமா? :-))))//
    வாங்க துளசி மேடம், கூடவே இரண்டு யானை பொம்மையும் எடுத்து வைக்கச் சொல்லிடலாம்!

    ReplyDelete
  28. வஞ்சகப் புகழ்ச்சியா ! என‌க்குத் தெரிந்த‌வ‌ரை
    வஞ்சப் புகழ்ச்சி என்றால் புகழ்வது போல் பழிப்பது.
    நான் சொல்லிய‌தில் வ‌ஞ்ச‌க‌மும் இல்லை. புக‌ழ்ச்சியும் இல்லை.
    உள்ள‌தை உள்ள‌ப‌டி தான் சொன்னேன்.
    எப்ப‌டி இருப்பினும் வ‌ஞ்ச‌ப்புக‌ழ்ச்சி என்றால் என்ன‌ என்ப‌த‌ற்கு
    சில‌ உதார‌ண‌ங்க‌ள். இவையும் என் சிற்ற‌றிவுக்கு எட்டிய‌ வ‌கையில் தான்.

    முத்தொள்ளாயிரம்

    10. வஞ்சப் புகழ்ச்சி

    இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன் எனது
    நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று-அஞ்சொலாய்!
    சொல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்குச்
    சொல்லும் பழியோபெரிது

    ஆறாம் திருமுறை பாடல் எண் : 6

    சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
    செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்
    புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்
    பொறியிலியேன் தனைப்பொருளா ஆண்டு கொண்டு
    தனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித்
    தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி
    மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே
    யென்றென்றே நானரற்றி நைகின் றேனே

    (பொழிப்புரை :
    சினந்து பிறரைத் திருத்த முற்படும் சிறுமையின் மேம்பட்ட பருத்த
    உடலை உடைய சமணர்களாகிய பொல்லாத அறிவினை உடையவர்கள்
    காட்டிய தீவினைகளில் அழுந்தினேனாய் விளை நிலங்களை அழித்து
    அவ்விடத்தில் அசோகமரத்தை வளர்த்துப் பாதுகாக்கும்
    நல்வினையில்லேனாகிய என்னையும் ஒரு பொருளாக ஏற்று அடிமை
    கொண்டு மகளிரைப் பற்றிய எண்ணத்தை யான் நினையாதவாறு நீக்கி
    இரக்கத்திற்கு அடிப்படையான அறவழியை எனக்கு வழங்கி என்
    மனத்தை நல்வழியில் திருத்தும் மழபாடி வயிரத்தூணே என்று நான்
    அரற்றி நைகின்றேன் .)

    இன்னுமே விளக்கம் சொல்ல‌
    என்னாலியலாது என்பதனால்,
    அகரம் அமுதா அவர்கள்
    அருகில் இருந்தால்
    உடன் வரவும் .உத‌வி த‌ர‌வும்.
    இவ்வ‌ணியின் பொருளினை
    எளிய ஒரு வெண்பாவில்
    ஐய‌மின்றி விள‌க்கிட்டால்,
    ஓல்டு மேன் நான்
    ஓடிப்போய் விடுவேன்.


    சுப்பு ர‌த்தின‌ம்.
    த‌ஞ்சை.


    நான் முன்னாடியே சொன்னேன். அனாவ‌சிய‌மா வ‌ம்புலே மாட்டிகிடாதீங்க‌ன்னு.
    கேட்டா தானே !

    மீனாட்சி பாட்டி.

    ReplyDelete
  29. அங்கே முதலை வாய் அகப்பட்டுத் தவித்த யானை குரல் கேட்டு
    மஹா விஷ்ணு போல இவர் இங்கு என்னைத் தப்பிக்கச் செய்திருக்கிறார்.
    வஞ்சப்புகழ்ச்சி பற்றி ஒரு க்ளாசிக் எக்ஸாம்பிள் பார்க்க‌
    இந்த வலைக்கு வந்து பின்னோட்டம் படிக்கவும்.

    http://menakasury.blogspot.com

    சுப்பு ர‌த்தின‌ம்.

    ReplyDelete