சாந்தி நிலவ வேண்டும். உலகிலே
சாந்தி நிலவ வேண்டும்,
ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்.
காந்தி மகாத்மா கட்டளை அதுவே
கருணை, ஒற்றுமை, கதிரொளி பரவி
சாந்தி நிலவ வேண்டும்!
உலகில் சாந்தி நிலவ வேண்டும்
கொடுமை செய் தீயோர்,
மனமது திருந்த நற்குணம் அது புகட்டிடுவோம்!
மடமை அச்சம் அறுப்போம் - மக்களின்
மாசிலா நல்லொழுக்கம் வளர்ப்போம்!
திடம் தரும் அகிம்சாயோகி
நம் தந்தை ஆத்மானந்தம் பெறவே
கடமை மறவோம், அவர் கடன் தீர்ப்போம்
களங்கமின்றி அறம் வளர்ப்போம்!
(சாந்தி நிலவ வேண்டும்)
எங்கும் சாந்தி, எங்கும் சாந்தி, எங்கும் சாந்தி!
சங்கீத கலாநிதி திருமதி. டி.கே.பட்டம்மாள் அவர்களின் அன்பான குரலில் கேட்கலாம் இந்த பாடலை.
கூடவே, அவரது பேட்டியையும் கேட்கலாம்:
பாடலை எழுதியது - மிருதங்க வித்வான், சேதுமாதவ ராவ் அவர்கள். மகாத்மா உயிர் நீர்த்தபோது இந்தப் பாடலை எழுட, திருமதி DKP அவர்கள் பாடி, மிகவும் புகழ்பெற்ற பாடல் இது.
இராகம் : திலாங் (ஹரிகாம்போஜி ஜன்யம்)
பேட்டியின் முதல் பகுதி இங்கே.
எங்கு அமைதி நிலவுகிறதோ
எங்கு போர் மடிகிறதோ
எங்கு அன்பே ஆள்கிறதோ
அவ்விடமே புண்ணிய பூமி!
ஆம், சாந்தி நிலவ வேண்டும்.
நன்று ஜீவா. நல்லதொரு பணி செய்திருக்கிறீர்கள். நன்றி. பாடலும் பேட்டியும்தான் எனது கணினியில் கேட்க இயலவில்லை.
ReplyDeleteஅப்படியே 'வைஷ்ணவ ஜனதோ தேரே கஹியே' பாடலையும் போடுங்களேன் ஜீவா.
ரகுபதி ராகவ ராஜாராம் பாடலும் இருந்தால் போடுங்கள் ஜீவா.
ReplyDelete'ரகுபதி ராகவ ராஜாராம்' பாடலும், 'வைஷ்ணவ ஜனதோ தேரே கஹியே தோ' பாடலும் காந்திஜிக்கு பிடித்தமான பாடல்கள்.
வாங்க மதுமிதா மேடம்,
ReplyDeleteரகுபதி ராமனை இன்னொரு இடுகைக்கு அழைத்துக் கொள்கிறேன்!
மிக நல்ல இடுகை ஜீ! டிகேப வின் பாடலைக்கேட்டு மகிழ்வுற்றேன். மதுமிதா சொல்லியிருப்பது போல் ரகுபதி பாடலையும் இடுங்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க அமுதா, மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteஅப்படியே ஆகட்டும்!
எத்துணை அழகான வரிகள். அவ்வரிகளுக்கு டிகேப உயிரூட்டியுள்ளார். இதுபோல் உயிரோட்டமுடைய பாடல்களைத் தங்களின் வலையில் தருவது மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDeleteஅருமையான பாடலைக் கேட்டு அகமகிழ்ந்தேன். நன்றி, ஜீவா.
ReplyDeleteI am not able to read the tamil script since it is not clear. Is there any way to make it readable.
ReplyDeletehariharan.vaidayanathan@gmail.com
Sir,
ReplyDeletePlease make sure that your browser's encoding is set to UTF-8. (View->Encoding-UTF-8)
If that doesn't work, You might need a unicode Tamil font on your machine. What is the OS on your machine? Windows XP comes with Latha font, so should be good. If its Windows 2000, you might have to enable indic scripts from Regional and Language Options, in Control Panel.
See:
http://en.wikipedia.org/wiki/Help:Multilingual_support_(Indic)
Let me know if you need more info,
Thanks.
அன்பு நண்பரே ! இன்று தான் பார்த்தேன் தங்களின் பதிவை..மிகவும் அருமை ! தொடர்ந்து எழுதுங்கள்.நல்வாழ்த்துக்கள் ஐயா !
ReplyDelete