Saturday, June 14, 2008

சாமியே சரணம் ஐயப்பா! : ஜேசுதாஸ் & ஒக்கேனக்கல்

இறைவனை பிரார்த்திப்பது நமது மனித இனத்திற்கே கிடைத்த பெரும் பேறு. அந்தப் பேறு கிட்டி இருப்பினும், அவனை என்ன கேட்பது? ஒரு வரம் கேட்பின், அவன் வேறெதையும் எதிர்பார்ப்போனோ? துன்பம் நேருங்கால் அதைத் துடைக்குமாறு கிடைக்கலாம். நல்ல பண்பு பெற்று நல்வாழ்வு வாழும்போது, நாதன் அருள் இருந்து, நற்செயல்களேயே செய்யும் போது, வேறெந்த துன்பமும் அண்டாதபோது வேறென்ன கேட்கலாம்? நம் அருகில் இருப்பவர்கள் நலமுடன் வாழ வேண்டலாம். ஏன் இந்த உலகமே நலமாக வாழப் பிரார்த்தனை செய்யலாம்.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் வரிகளில்:

உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி வீசட்டும்
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!


இங்கே ஒருவர் சபரி ஐயப்பனை என்ன வரம் கேட்கிறார் பாருங்கள்:

எடுப்பு

என்ன வரம் கேட்பேன் நானே

என் மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே,

என்ன வரம் கேட்பேன் நானே?

புகழை நான் வேண்டவா, பொருளை நான் வேண்டவா,

நல்ல பண்பை நான் வேண்டவா,

இவை யாவும் கலந்த நீ ஈசன் மகனல்லவா!

என்ன வரம், வேறென்ன கேட்பேன் நானே,

மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே...!

தொடுப்பு

வானத்தில் நானிருந்தால் மேகமாக ஆகணும்

சபரிமலை மேல் தவழ்ந்து மழையாகப் பொழியணும்

கடலுக்குள் நான் பிறந்தால் முத்துக்கள் சேர்க்கணும்

முத்துக்கள் கோர்த்து வந்து ஐயனுக்கு சூட்டணும்,

மனிதனாகப் பிறந்து விட்டேன், எப்படி நான் வாழணும்?

இசை என்னும் மந்திரக்கோலால் மதங்களை நான் சேர்க்கணும்.

மதங்கள் எனும் மலைகள், ஆதி எனும் தடைகள் கடந்திட

ஐயன் உன் அருளினை நான் பெறணும்.

(என்ன வரம், வேறென்ன வரம் ...)

முடிப்பு
பறவையாக நான் பிறந்தால், கருடனாக ஆகணும்

திருவாபரணப்பெட்டி மேலே காவலுக்குப் போகணும்

மலராக நான் பிறந்தால், கமலமாகப் பூக்கணும்

ஐயன் பாதகமலம் சேர்ந்து சரணாகதி வேண்டணும்

காற்று மண்டலத்தில் எங்கும் உன் புகழைப் பாடணும்

பேரசை என்றபோதும் ஐயன் இதை நிறைவேற்றணும்:

மரணம் வரும் தருணம் வரையில் இசைப்பயணம்

தொடர்ந்திட அடியவன் நின் திருவடி சரணமே!

(என்ன வரம், வேறென்ன வரம் ...)

என்ன வரம் கேட்பேன் நானே?


சாமியே சரணம் ஐயப்பா!

இன்னொரு விஷயம்:
சென்ற ஏப்ரல் மாதத்தில், ஒக்கேனக்கல் பிரச்சனை சூடாகி, விஷமிகளின் வன்மச் செயலால் நம் மனம் புண்பட்டபோது, ஜேசுதாஸ் அவர்களுக்கு பங்களூர் ராம் சேவா மண்டலியில் கச்சேரி. கச்சேரியில் கன்னடர்களுக்கு மிகவும் விருப்பமான கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடலைப் பாடி முடித்த கையோடு, அவர்களுக்கு நல்லதொரு அறிவுரையும் வழங்கினாரே பார்க்கலாம்! நீங்களே கேளுங்கள்:

ஜேசுதாஸ்-அறிவுரை

34 comments:

 1. அருமையான பாடல், ஜீவா. எழுதியவர் யார்?

  //இசை என்னும் மந்திரக்கோலால் மதங்களை நான் சேர்க்கணும்.//

  இதை ஜேசுதாஸ் அவர்கள் பாடுதல் பொருத்தமாக இருக்கிறது :)

  அறிவுரையை இனிமேல்தான் கேட்க வேண்டும்...

  ReplyDelete
 2. வாங்க கவிநயா,
  பாடலை யார் எழுதியது எனத் தெரியவில்லை. ஜேசுதாஸ் அவர்களுக்காகவே எழுதப்பட்ட பாடலாகவும் இருக்கலாம்!
  இறுதி வரிகளும் அதனை உறுதிப்படுத்துகின்றன!

  ReplyDelete
 3. // என்ன வரம் கேட்பேன் நானே
  என் மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே,

  என்ன வரம் கேட்பேன் நானே? //

  க‌டைசி வ‌ரிக‌ளைக் கேட்குப்பொழுது க‌ண்க‌ள் நீர்க்குள‌மாயின‌.

  இசை தேச‌, ம‌த‌, கால‌, இன‌ வேறுபாட்டினுக்கு அப்பாற்ப‌ட்ட‌து.
  இசையின் பூர‌ண‌த்வ‌த்தை உண‌ர்ந்த‌ ஞானிக‌ள் உலக வாழ்க்கையின் அனித்யத்தையும் கண்டுள்ளனர். ‌

  அவ‌ரில் ஒருவ‌ர் நாகூர் அனிபா
  அவ‌ர் ஒரு பாட‌லில் சொல்லுவார்:

  " ஆண்ட‌வ‌னே ! நீ இதுவ‌ரை த‌ந்த‌திற்கே
  ந‌ன்றி சொல்ல‌ என‌து வாழ்வில் இனி நேர‌மில்லை.
  அத்துணை த‌ந்துவிட்டாய்!
  இனியும் நான் என்ன‌ கேட்க‌ ? "

  ////மரணம் வரும் தருணம் வரையில் இசைப்பயணம்

  தொடர்ந்திட அடியவன் நின் திருவடி சரணமே!

  (என்ன வரம், வேறென்ன வரம் ...)///

  "அசையா நிலை நான் வ‌ந்த‌பின்னே
  இசையால் எனைக் க‌ட்டி எடுத்துச் செல்லுங்க‌ள்.

  அழாதீர்க‌ள். அன்புடன் (ஆனந்த) பைர‌வியில் ஒரு
  ராகம் பாடி எனை அனுப்பி வையுங்க‌ள்."
  என‌ எழுதி வைத்துள்ளேன்.

  ந‌ட‌க்குமா ? தெரிய‌வில்லை.

  சுப்பு ர‌த்தின‌ம்.
  த‌ஞ்சை.

  ReplyDelete
 4. வாங்க சுப்புரத்தினம் ஐயா,
  பிரிந்து கிடக்கும் நம்மை இசை இணைக்கும் பாலமாக அமைவதில் வியப்பில்லை. அதை தக்கபடி பயன்படுத்திக்கொள்ளும் கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

  ஆனந்த பைரவியில் இராகமா? நல்லது. அதை எழுதச் செய்தவனும் அவனே என்றிருக்க, அதை நடத்திடவும் அவனே பார்த்துக்கொள்வான்!

  ReplyDelete
 5. பாட்டு அருமை. கடைசி வரை பாடலை எழுதியது யாரென்றே தெரிவிக்க வில்லையே! படிப்பவர்கள் தலையைப் பிய்த்துக்கொள்ளட்டும் என்று கட்டுரையாளரின் தந்திரமோ?

  ReplyDelete
 6. //கட்டுரையாளரின் தந்திரமோ?//
  எனக்கு தெரியலைங்களே!
  தெரிந்தவர்கள் யாராவது வந்து சொன்னால் நல்லது!

  ReplyDelete
 7. ஐயப்பா பற்றி அளித்தக் கருத்தெல்லாம்
  மெய்யப்பா! இஃதேபோல் மென்மேலும் -செய்யாப்பா!
  சிந்தித்தேன் விட்டயிடம் தேடிவரும் சிற்றெறும்பாய்
  வந்தத்தை வாசிப்பார் மகிழ்ந்து!

  குறிப்பு:-
  தேன்சிந்தி விட்ட இடம் என்று கூட்டிப்பொருள் கொள்ளவும்.

  ReplyDelete
 8. வாங்க அமுதா,
  வெண்பாவில் விளித்தமைக்கு நன்றி.
  தேன் சிந்தி விட்ட இடம் அருமை!
  தேன் இன்பம் அது தேங்கிக் கிடக்குது பரவெளி எங்கும். பயன் பட்டார் ஒருசிலரே என்றாலும், பேரின்பம் எனச்சொல்லி வைத்தாரே.
  சொன்னதெல்லாம் ஒவ்வொன்றாய் எடுத்து தருவேன், அத்தேன் தரும் சுவை தேவிட்டா இன்பம் எனச்சொல்லி.

  ReplyDelete
 9. என் மாமா ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது அவர் யோகி ஒருவர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டதாக சொன்னார். இவர் உங்க ஆசீர்வாதம் போதும் என்றாராம். ஏன் என்று கேட்டேன். "அவருக்கு நமக்கு என்ன வேண்டும் என்று தெரியும். அவர் தங்க மலையை கொடுக்க தயாரா இருக்கும் போது நாம் இரும்பு காசு கேட்டாப்போல ஆயிடும்ன்னு" பதில் சொன்னார்!

  @அமுதா
  அருமையான வெண்பா!

  ReplyDelete
 10. வாங்க திவா!
  //அவர் தங்க மலையை கொடுக்க தயாரா இருக்கும் போது நாம் இரும்பு காசு கேட்டாப்போல ஆயிடும்ன்னு//
  :-)

  ReplyDelete
 11. யேசுதாஸின் குரலில் இந்தப்பாடலை கேட்க நாளெல்லாம் தவமிருக்கலாம். அதிலும் சில கச்சேரிகளில் "இசையென்னும் மந்திரக்கோலால்..." என்ற வரிகளுக்குப்பிறகு ஒரு சிரிய பாஸ் கொடுப்பார் பாருங்கள் தெய்வ சந்நிதானம் எதுவென அப்போது தெரியும்...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. //என்ற வரிகளுக்குப்பிறகு ஒரு சிரிய பாஸ் கொடுப்பார் பாருங்கள் தெய்வ சந்நிதானம் எதுவென அப்போது தெரியும்.//
  வாங்க கிருத்திகா.
  ஆகா, நீங்கள் பெற்ற இன்பம் உங்கள் வரிகளில் ஒளிர்விடுகிறது.

  ReplyDelete
 13. மீண்டும் இன்றொரு முறை ஜெசுதாஸின் என்னவரம் கேட்பேன் நானே! பாடலைக்கேட்டேன். மீண்டும் மீண்டும் கேட்கலாம்போலுள்ளது. தொலைபேசியில் பதிவு செய்துகொண்டேன்! நன்றி!

  ReplyDelete
 14. "இசையென்னும் மந்திரக்கோலால் மதங்களைநான் சேர்க்கணும்" ஆஹா! என்ன அருமையான வரிகள்!

  ReplyDelete
 15. ஆமாங்க அமுதா, மிகவும் அழகான வரிகள், நானும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!

  ReplyDelete
 16. இசையென்னும் மந்திரக்கோலால் மதங்களைச் சேர்க்கணும் என்றெழுதாமல் மதங்களைநான் சேர்க்கணும் என்றெழுதி இவ்வரிய பணியை இறைவனிடம் வேண்டிப்பெறும் அப்பண்பை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இப்பாடலுக்கு ஜேசுதாஸின் குரல் உயிரூட்டுவதென்னவோ உண்மை. நான் நினைக்கிறேன் தேனையெடுத்துக் கடகடன்னு குடிச்சிட்டுப் பாடியிருப்பாரோ?

  ReplyDelete
 17. //நான் சேர்க்கணும்...//
  ஜேசுதாஸ் அவர்கள் இந்தப்பாடலைப் பாடுவது மட்டும் சிறப்பல்ல, ஜேசுதாஸுக்காவே எழுதப்பட்ட பாடல்போல் இருப்பது இன்னமும் சிறப்பு!
  அப்புறம், கேழே கொடுத்துள்ள அவரது அறிவுரையே கேட்டீர்களா மேடம், அன்பு வேண்டும், அன்பால் நாம் அனைவரும் இணைய வேண்டும், கன்னடராய், தமிழராய், நாம் அன்பில் இணையும் சகோதரராய் வாழ வேண்டும் என்கிறார்!

  ReplyDelete
 18. ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

  "கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
  போராளியின் வெற்றிப்பேரிகை"

  http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

  அன்புடன்,
  விஜய்
  கோவை

  ReplyDelete
 19. ஆம்! ஆம்! கேட்டேன். மிக அருமை

  ReplyDelete
 20. கொஞ்சும் குரலால் குழல்யாழின் இன்னிசையை
  மிஞ்சியெ ஜேசுதாஸ் மிளிர்கின்றார்! -இங்கவரின்
  இன்குர லைப்பதி வேற்றி இசைபெற்றார்
  என்தோழர் ஜீவா இசைந்து!

  ReplyDelete
 21. திரும்பித் திரும்பி வரும்தேனீ போல
  விரும்பி விரும்பி சுவைத்திடும் அன்பர்
  அகரம் அமுதா அவர்களின் இன்சொலில்
  பாரில் நிறைந்தது தேன்.

  - சரியாக இருக்கா மேடம்?

  ReplyDelete
 22. ஆஹா! எதைச்சொல்ல? ஆர்ப்பரித்தேன் உம்கவியில்;
  பாகாய் இனிக்கும் பழச்சாறாய்ப் பாங்குடனே
  செய்த கவியாலென் சிந்தைக் குவகைசெய்தீர்;
  செய்வீர் இதுபோல் சில!

  ReplyDelete
 23. அதென்ன? பாரில் நிறைந்தது தேன்!?

  ReplyDelete
 24. //அதென்ன? பாரில் நிறைந்தது தேன்!?//
  பாரெங்கும் நிறைந்தது தேன் - எனச்சொல்ல வந்தேன்!

  ReplyDelete
 25. நன்று! நன்று! நான் தான் கவனிக்கத் தவறிவிட்டேன்.

  ReplyDelete
 26. என்ன ஆச்சு ஜீ!

  "வாரம் இரண்டிடுகை வார்த்திடுவீர்" என்றேநற்
  கோரிக்கை வைக்கின்றேன் கொள்!

  ReplyDelete
 27. என்ன ஆச்சு ஜீ!

  "வாரம் இரண்டிடுகை வார்த்திடுவீர்" என்றேநற்
  கோரிக்கை வைக்கின்றேன் கொள்!

  naanum thaan.
  subbu rathinam.
  thanjai.
  http://arthamullavalaipathivugal.blogspot.com

  ReplyDelete
 28. வாரத்திற்கு ஒன்று போதெமென அல்லவா நானிருந்தேன்! நேரமும் அருளும் இருந்தால், நிறையும், முயல்கிறேன்.

  ReplyDelete
 29. //"வாரம் இரண்டிடுகை வார்த்திடுவீர்" என்றேநற்
  கோரிக்கை வைக்கின்றேன் கொள்!//

  நானும் :)

  ReplyDelete
 30. நல்லது, இப்போதொன்று இட்டிருக்கிறேன்!

  ReplyDelete
 31. வாங்க பொன்வண்டு, நீங்க நினைச்ச ஜீவ்ஸ் நானில்லை, இருப்பினும் நன்றி!

  ReplyDelete
 32. பக்தியால் ஞானத்தை காட்டுவதில் முன்னிற்பது இன்று சபரிமலையிலே கோயில் கொண்டுள்ள
  ஜோதிஸ்வருபன் தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமியே

  தூய பழக்கம், எல்லோரயும் ஐயப்ப சாமியாக பார்ப்பது, எல்லோரும் ஒரே
  மாதிரி உடை, மலை அணிவது எல்லோரும் சமம் ஆகிவிடுகிறார்கள்.
  18 படி ஏறி அய்யப்பன் என்ற ஒரே நினைவோடு வரவேண்டும். அப்போதுதான் காணமுடியும்.

  அங்கே காண்பது மகர ஜோதியை. எல்லாம் வல்ல இறைவனை ஜோதியாக காண
  நம்மை நாம் தயார் படுத்திகொள்வதே சபரிமலை யாத்திரை.

  குருவை பணித்து அவர் வழி காட்டுதலில் இறைவனை காண பயண படவேண்டும்.
  இதுவே சபரிமலை பயணத்தில் முக்கியமானது.

  குரு சாமியை சந்தித்து மாலை அணிந்து விரதம் காக்க வேண்டும். குரு வழி காட்ட
  மலை ஏறி ஜோதி ஸ்வ்ருபனை காணலாம்


  திருவடி தீக்ஷை(Self realization)

  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
  இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  http://sagakalvi.blogspot.com/  Please follow

  (First 2 mins audio may not be clear... sorry for that)
  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo  Online Books
  http://www.vallalyaar.com/?p=409


  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

  ReplyDelete
 33. Such a lovely soul touching song and lyrics. Where can I download this song? Or which album is this song so that I can purchase? All I get online is the concert link. Can someone give me the original song album? Thanks!!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails