Wednesday, March 26, 2008

சேவை செய்யும் என்னை மறந்துவிடாதே! : தியாகராஜர்

சேவை செய்யும் என்னை மறந்துவிடாதே!

ஸ்ரீ தாயார் துணைவா, ஸ்ரீ தியாகராஜரால் போற்றப்பட்டவனே!

உன்னை உபசரிக்க பலர் இருப்பதால்
உன் அருள் வேண்டி
உன் புகழை பாடிக் கொண்டிருக்கும்
என்னை மறந்துவிடாதே!

உன் வாயிலிலே நிலையாக வாயு மைந்தன் உள்ளான் என்றாலும்,

உன் தம்பியர் உன்னுடன் சேர்ந்துள்ளனர் என்றாலும்,

உன் ஏகாந்தத்திற்காக ஜானகிதேவி காத்திருக்கிறார் என்றாலும்,

ஸ்ரீ தாயார் துணைவா, தியாகராஜரால் போற்றப்படுபவனே,

உன்னை உபசரிக்க இப்படியெல்லாம் பலர் இருந்தாலும் என்னை மறந்துவிடாதே!

-----------------------------------------------------------------------
இராகம்: பைரவி
தாளம்: ரூபகம்
இயற்றிவர்: தியாகராஜர்
மொழி: தெலுங்கு

பல்லவி
உபசாரமு ஜேஸேவா ருன்னாரனி மரவகுரா

அனுபல்லவி
க்ருப காவலெனனி நே நீ
கீர்தினி பல்குசுனுண்டக (உபசாரமு...)

சரணம்
வாகிடனே பதிலமுக வாதாத்மஜுடுன்னாடனி
ஸ்ரீகருலகு நீ தம்முலு சேரியுன்னாரனி
ஏகாந்தமுனனு ஜானகி யேர்படியுன்னதனி
ஸ்ரீகாந்த பருலேலனி ஸ்ரீதியாகராஜ வினுத (உபசாரமு...)

------------------------------------------------------------------
வயலினில் பைரவி ஆலாபனை:
upacharamu-violin-...


பத்மஸ்ரீ கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் செவி இனிக்கும் அமுதக் குரலில்:
upacharamu-kjj.mp3



சஞ்சய் சுப்ரமணியம் பாடிட இங்கு கேட்கலாம்.

இந்தப் பாடலின் பைரவி ஆலாபனையை நாதஸ்வர வாசிப்பில் இங்கு கேட்டு நாத மழையினில் நனையலாம்.

12 comments:

  1. பைரவியில் ஒரு வர்ணமோ, கீதமோ, கீர்த்தனையோ அல்லது
    தமிழ்பாடலோ எதுவானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
    அலுக்கவே அலுக்காது.
    என்னுடைய அம்மா இந்த உபசார மூலனு பாட்டைப் பாடும்போதெல்லாம் நான்
    ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர் சொல்லியிருக்கிறேன். என் அம்மாவின் க‌டைசி நிமிட‌ங்க‌ளில் இந்த கீர்த்தனை பாடு என்று சொல்ல,அதையும் என் த‌ங்கை பாடி என் அம்மாவின் ஆன்மாவினை ராம‌னிட‌ம் சேர்த்திருக்கிறாள் !

    ச‌மீப‌த்தில் ஒரு ப‌திவாள‌ர் த‌ன் க‌விதைக்கு பாட‌ச்சொல்ல‌, அதை நானும்
    பைர‌வி என்று நினைத்து பாடிவிட்டேன். என் த‌ங்கை (அவ‌ள் ஒரு பாட‌கி)
    என்னைப் புர‌ட்டி எடுத்துவிட்டாள். என்ன‌ ! பைர‌வின்னு சொல்லிட்டு, ஹுசேனி
    முகாரி எல்லாம் க‌ல‌ ந்துட்டேன்னு. கொஞ்ச‌ம் கீழே போனாலும் ஹுசேனி ஆகிடும்.
    ம‌த்ய‌ம‌த்திலே முகாரி ஆகிடும்.

    பைர‌வி ராக‌த்தில் ஒரு கீர்த்த‌னை என்றாலே தியாக‌ப்பிரும்ம‌த்தின் இ ந்த‌க்கீர்த்த‌னை
    தான் எல்லோருக்கும் நினைவு வ‌ரும். பாட‌வும் செய்வார்க‌ள்.
    தியாக‌ராஜ‌ர் உள‌ம் உருகி நின்ற‌ காட்சி இது.
    சொல்லிக்கொண்டே போக‌லாம். இது ஒரு poetic ecstasy .

    சுப்பு ர‌த்தின‌ம்.
    த‌ஞ்சை.

    ReplyDelete
  2. ஆகா, முத்துசாமி தீக்க்ஷிதரின் இறுதி நாளில் மீனாக்க்ஷி மேமுதம் பாடியதுபோல உள்ளது!
    ஹூசனியும், முகாரியும் அப்போ ரொம்ப பக்கத்திலேயே இருக்காங்கன்னு சொல்லுங்க!

    மிகவும் உருக்கமான பாடல், அதுவும் பைரவியில், பின் சொல்லவா வேண்டும்!. வாய் மூடி, செவி தீட்டி செவ்வனே காதில் தேனைப் பாய்ச்ச வேறென்ன வேண்டும்?

    ReplyDelete
  3. எனக்கு மிகப் பிடித்த ராகம்.

    சும்மா இருக்கையில் இந்த ராகத்தை பாடுவதாக நினைத்துப் பாடிக்கொண்டிருப்பேன்....ஆனா இப்போத்தான் தெரியுது நான் பைரவின்னு நினைச்சு முகாரி, ஹுசைனின்னு ஒரு ராகமாலிகையே பாடியிருக்கேன்னு :).

    "யாரோ, இவர் யாரோ என்ன பேரோ, அறியேனே" அப்படின்னு எம் எஸ் பாடுவதை கேட்டிருப்பீர்கள்ன்னு நினைக்கிறேன்....அதில ஆரம்பத்துல அம்மா ராகம் பாடி ஆரம்பிப்பாங்க..
    சுட்டியிருந்தா போடுங்க...

    ReplyDelete
  4. //என் அம்மாவின் க‌டைசி நிமிட‌ங்க‌ளில் இந்த கீர்த்தனை பாடு என்று சொல்ல,அதையும் என் த‌ங்கை பாடி என் அம்மாவின் ஆன்மாவினை ராம‌னிட‌ம் சேர்த்திருக்கிறாள் !//

    சூரி சார் எப்பேர்ப்பட்ட புண்யாத்மா உங்கள் தாய். அந்திம காலத்தில் முழு நினைவுடன், ராம நாமத்தை கர்ண மந்திரமாக கேட்டுக் கொண்டே.....அடாடா.....நினைக்கவே சிலிர்க்கிறது.

    ReplyDelete
  5. சூரி ஐயா வந்தாலே ஏதோ இருக்கும் என்ற மார்க் கிடைத்துவிடுகிறது.
    இந்த ராகங்கள் தான் பிடிபடமாட்டேன் என்கிறது.

    ReplyDelete
  6. http://movieraghas.blogspot.com/2007/10/bhairavi.html

    பைரவி என்று ஹிந்துஸ்தானி க்ளாசிகல் சொல்வது நமது சிந்து பைரவி.
    இது பற்றிய மேல் விளக்கங்களை எனது வலைப்பதிவில் காணலாம். ஒரு பழைய பதிவு. நீங்கள் வந்திருக்கிறீகள்.

    என்றைக்கு சிவ கிருபை வருமோ..ஏழை..என் மன சஞ்சலம் ஆறுமோ "
    எனக்கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். அது முகாரி.

    ஆடும் வரை அவர் ஆடட்டும் என மஹாராஜபுரம் இங்கே பாடுகிறார் கேளுங்கள். இது ஹுசேனி.

    http://www.musicindiaonline.com/p/x/j4Q2EN_u_9.As1NMvHdW/

    க்ருஷ்ணன் கலய சகி.. நித்யஸ்ரி பாடுவது முகாரி.
    http://www.musicindiaonline.com/p/x/TJy2pF5o8S.As1NMvHdW/

    பைரவிக்கும் முகாரிக்கும் ஹுசேனிக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை தெரிந்துவிட்டால் கர்னாடிக் சங்கீதத்தில் 90 விழுக்காடு தெரிந்துவிட்டது என்று
    காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளலாம்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://movieraghas.blogspot.com
    http://arthamullavalaipathivugal.blogspot.com

    ReplyDelete
  7. வாங்க மதுரையம்பதி. பைரவி தங்க்ளுக்கு பிடித்த ராகமா, நல்லது!
    சூரி சாரின் பைரவி பதிவை பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்!

    அருணாசலக் கவியாரின்
    யாரோ இவர் யாரோ என்ன பேரோ
    பாட்டுக்கான சுட்டி இங்கே. சுட்டியில் பைரவி ஆலாபனையைக் கேட்டு உருகலாம்!

    ReplyDelete
  8. வாங்க குமார்,
    //சூரி ஐயா வந்தாலே ....//
    இல்லையா பின்னே!

    ReplyDelete
  9. //என் அம்மாவின் க‌டைசி நிமிட‌ங்க‌ளில் இந்த கீர்த்தனை பாடு ... ராம‌னிட‌ம் சேர்த்திருக்கிறாள் !//

    கொடுத்து வைத்தவர்!

    //இந்த ராகங்கள் தான் பிடிபடமாட்டேன் என்கிறது.//

    என்னுடன் கல்லூரியில் என்னுடன் அறையில் தங்கி படித்த நண்பர் சினிமா பாட்டெல்லாம் பாடிக்காட்டி இது இந்த ராகம் அப்படி சொல்லி கொடுக்க முயற்சி செய்தார்.. எனக்குத்தான் பிடிபடவில்லை. அதனாலென்ன. கேட்க நல்ல இருந்தா போதும் .

    ReplyDelete
  10. சுப்புரத்தினம் ஐயா,
    என்றைக்கு சிவை கிருபை வருமோ...அருமையான பாடல் - ரஞ்சனி/காயத்ரி பாடிக் கேட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். கீழ் ஸ்தாயியை தொடும் இடங்கள் நன்றாக நினைவிருக்கிறது.

    ReplyDelete
  11. வாங்க திவா, ஆம் அவர் கொடுத்து வைத்தவர். முத்தான பிள்ளைகளையும் கொடுத்து வைத்தவர்!

    இராகங்கள் பிடிபடுவது கேட்டக்கேட்கத்தான் பிடிபடும் என்பதால்தான், இதுபோல பதிவு முயற்சிகள்!

    ReplyDelete
  12. Sankshepa Ramayanam as revealed to Sage Valmiki by Sage Naradha in exactly One Hundred Slokas is a sacred text. Sriman Singaperumal koil Maadapoosi Ramanujacharya has translated this grantha text into the then Manipravala Tamil Text in 1923.
    I am again translating this into the present form of Tamil, without losing the original fervour of the Tamil Translation.
    This is a daily paarayanam.
    Started from 28th March 2008
    http://pureaanmeekam.blogspot.com
    Those interested are advised to read it from the first page onwards.
    Subbu rathinam.
    thanjsai.

    ReplyDelete