Sunday, March 23, 2008

கே ஆர் எஸ் - கேடு கெடுத்தவர்

பதிவர் KRS - கே.ஆர்.எஸ் -
அவரைப் பற்றி நான் சொல்லும் ஏதும் புதிதாய் இருக்காது.
குன்றிலிட்ட விளக்கினை அறியாதவரும் உண்டோ?

கே ஆர் எஸ் - ஆம், கேடு கெடுத்தவர் - இவர்
ஆன்மீகத்திற்கு வரும் கேட்டினைக் கெடுத்தவர்.
எப்படி என்கிறீர்களா, இப்படித்தான்:

அண்ணல் இவர் பதிவில்தான் எத்தனை வகை -
எனினும் எதிலும் குன்றாது சுவை.
தாலாட்டும் பாடுவார் - துயில்
எழுப்பலும்
பாடுவார்.
அரங்கன் பதிவு மட்டுமல்ல ,
சிவராத்திரிப் பதிவும் இவரிடம் உண்டு.
இவர் பதிவுகளில்
ஆழ்வார் பாசுரம் ஏதும்
ஆச்சரியமல்ல - தியாகப் பிரம்மமே
தமிழில்
பாட்டிசைக்கும்போது!
திருமால் பாடல்களை தொகுப்பார் - அவன்
மருகன் முருகன் பாடல்களை வகுப்பார்.

இவர் வாசகர் வட்டத்தினை தன்பக்கம்
வசமாக கவர்ந்திழுக்கும் காந்தம்!
கவர்ச்சியான தலைப்புகளால்
வந்து விழுமே ஒராயிரம் பின்னூட்டம்!

புராணக் கதைகளோடு சேர்த்து
புதிரும் போடுவார் - உடன் வாசகரைத்
தேடவும் வைத்து தன்பக்கமே திருப்பிடுவார்.
இந்தக் கண்ணபிரானும் உன்னைத்
தேடவைத்தது என்னபிரானே?

புராணப்பதிவு மட்டுமல்ல,
புதுமைகளும் படைப்பவர்.
சீர்திருத்தம் தேவையென
சீர்குரல் கொடுப்பவர்.
சமூக விழிப்புணர்வை
சலிக்காமல் சொல்பவர்.
சிகுவையும் நகையும் சிந்தனையும்
சீராய்ப்பெற்ற செம்மல்.

ஆதவனாய் ஒளிவிடும் ரவிசங்கர்,
வாழ்க வளமுடன் - எங்கள்
பதிவுலக நெஞ்சங்களிலெல்லாம்.
சிறப்புகள் பல பெற்று ஒளிர்விட
எங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கே!

9 comments:

  1. மிக அருமையாகச் சொன்னீர்கள் ஜீவா. உங்களை நான் வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  2. ஜீவா சார் ! நீங்க சொல்றதெல்லாம் சரி, ஆனா
    இவருக்கு என்னாச்சு சமீபத்திலே ?
    ஒண்ணும் புரியவில்லை..
    புரிஞ்சுக்கிற வயசும் போயிடுத்து.

    God bless him.

    ஒரு ஒன்டர் கர்னாடிக் kid
    பார்க்கவும்.
    http://movieraghas.blogspot.com

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  3. வாங்க மதுரையம்பதி.

    ReplyDelete
  4. வாங்க சுப்புரத்தினம் சார்.
    KRS, தன் குறைகளை மட்டுமே கேட்டுந்தார்...
    எனக்குப் பட்டவை நிறைகள் மட்டுமே!
    தாங்கள் விருப்பப்பட்டால் தங்கள் ஆதங்கங்களை ரவிசங்கருக்குத் தெரியப்படுத்தலாம். அவரும் அவைகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்!

    ReplyDelete
  5. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஜீவா. ஒளிவிடும் ஆதவனாய்த் தான் ஆன்மிக பதிவுலகில் இரவிசங்கர் ஒளிர்கிறார். இரவிசங்கராய் அவர் இருக்க குமரசந்திரனாய் அடியேன் இருப்பதில் எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும். :-)

    சுப்புரத்தினம் ஐயா. ஜீவா சொன்னதைப் போல் தங்கள் மனத்தில் இருப்பதை இரவிசங்கரிடம் நேரடியாகச் சொல்லுங்கள். அவரது மின்னஞ்சல் முகவரி வேண்டுமென்றால் சொல்லுங்கள். தருகிறேன்.

    ReplyDelete
  6. வாங்க குமரன், இந்தப் பதிவிற்கு தாங்களும் ஒரு தூண்டில்!

    ReplyDelete
  7. ஜீவா..
    இப்ப தான் உங்கள் மின்னஞ்சலும் இப்பதிவும் பார்த்தேன்! மிக்க நன்றி அன்பு மொழிகளுக்கு!

    யாராச்சும் குற்றமும் நாடி-ன்னா எல்லாரும் குணமே நாடிச் சொல்லுறாங்க! :-))
    ஹூம்! "குருவாய்" வருவாய் அருள்வாய் குகனே!

    ReplyDelete
  8. இத்தனை அன்பும் அக்கறையும் உள்ள நட்பு வட்டம் அமைய என்ன புண்ணியம் செய்தேனோ?
    குலம் தரும் என்பது இது தானோ?
    நேயம் சத்ஜன சங்கே சித்தம்
    தேயம் தீன ஜனாயச வித்தம்
    என்ற ஆதிசங்கரர் ஸ்லோகம் தான் நினைவுக்கு வருது!

    ReplyDelete
  9. //யாராச்சும் குற்றமும் நாடி-ன்னா எல்லாரும் குணமே நாடிச் சொல்லுறாங்க! :-))//
    குணம் இருந்தால் போதும் போலும் - குற்றங்கள் தானா மறைஞ்சிடும் போல!
    :-)

    ReplyDelete