என்னங்க, கேள்வியே ஒரு மாதிரி பண்ணுதா? நீங்கள் இன்னும் இரண்டு மாதத்தில் இறக்கப்போகிறீர்கள் என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள்?
ரேண்டி பாஷ் - பல்கலைக்கழக பேராசிரியர் - ஜீரண உறுப்புகளில் புற்று நோயினால் தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவர் - தனது கடைசி பல்கலை உரையில் என்ன சொல்கிறார் பார்ப்போமா?
கேள்விக்கான விடையை படத்தில் 4:10 முதல் 4:18 வரை கேட்டீங்களா?
உரையின் முழுநீளக் காட்சிப்படம் (முழுநீளம் : 76 நிமிடம் 26 நொடி)
நன்றே செய், அதையும் இன்றே செய்!
பின்குறிப்பு:
ரேண்டி பாஷின் தற்போதைய உடல்நிலை
தெரிஞ்சுபோச்சுன்னா....கொஞ்சம் நல்ல பதிவுகளா எழுதுவேன்:-))))
ReplyDeleteஜோக்ஸ் இருக்கட்டும். இங்கே ஒரு தோழியின் தோழிக்கு ப்ரெயின் ட்யூமர் ஆப்பரேஷன் நடந்துச்சு போன வாரம்.
நேத்து மறுபடி ஸ்கேன் செஞ்சபிறகு சொல்ராங்களாம்,இன்னும் பல இடத்தில் பரவி இருக்கு. அதிகபட்சம் ஒரு வருசமாம்(-:
இப்ப படம் பார்க்கமுடியாது... இருந்தாலும் பெரிசா ஒன்னும் செய்ய முடியாது என்பதால் எப்போதும் போல் வாழ்வேன்.
ReplyDeleteவாங்க மேடம்,
ReplyDeleteஉங்கள் தோழியின் தோழிக்கு உடல்நிலை முன்னேற என் பிரார்தனைகள்...
வாங்க வடுவூரார், நீங்கள் எப்போதும் நன்றே செய்வீர்கள் என்பதறிவேன் - அதனால் எப்போதும் போலவே இருக்கவும்!
ReplyDeleteஒரு திருத்தம் - அவருக்கு வந்திருப்பது மூளைப்புற்று நோயல்லை - Pancreatic Cancer - இடுகையிலும் இப்போது திருத்தியுள்ளேன்.
ReplyDeleteவைத்திருக்கும் பொறுப்புக்களை எல்லாம் தகுந்தவர்களிடம் அளித்துவிட்டு முழு மூச்சாக செளந்தர்ய லஹரி பதிவினை முடிக்க முயலுவேன். :-)
ReplyDelete//பதிவினை முடிக்க முயலுவேன். :-)//
ReplyDelete:-)
நான் படிக்க முயலுவேன்!
இறந்த பிணத்தைப்பார்த்து இறக்கப்போகும் பிணங்கள் ஒப்பாரி வைக்கின்றன என்று பட்டிணத்தார் தானே சொன்னார்?
ReplyDeleteஅதே தான் இதுவும், எல்லாம் 2 மாதம், 2 வருடம், 20 வருடம் என மாறுமே ஒழிய ... மரணம் சாஸ்வதமானது, 2 மாதம் கெடுனா மட்டும் மாற்றியா யோசிக்க போறாங்க!
நான் கொஞ்சம் முயற்சி செய்து நான்கைந்து யோனிப்பதிவுகள் போட்டு சூடானா இடுகைகளில் வர முயற்சிக்கலாம்! :-))
வாங்க வவ்வால்,
ReplyDelete//இறந்த பிணத்தைப்பார்த்து இறக்கப்போகும் பிணங்கள் ஒப்பாரி வைக்கின்றன //
இந்த காட்சிப் படம் இறப்பைப் பற்றியதல்ல.
வாழ்வைப்பற்றியது, அர்த்தமுள்ள வாழ்வைப்பற்றியது.
அந்த சூடான இடுகைப் பகுதியை அவங்க இன்னும் எடுக்கலைன்னு உங்கப் பின்னூட்டம் மூலமா தெரியுது!
பிறக்கும் தேதி அளவிற்கு
ReplyDeleteஇறக்கும் தேதி தெரியவரின் மனிதர் மனம் எத்துணை வேறுபட்ட நிலையில் செயல்படும் என்பது அதிசயமாகவும் புதிராக இல்லாவிடினும் புதிதாக இருக்கும். மனதிலே உள்ள positive and negative emotions
அந்த காலகட்டத்தில் தானாகவே வெளிப்பட்டு ஒன்றுகொன்று நடத்திடும் போராட்டம் இருக்கிறதே ! அதை அனுபவிப்பவர் மற்றவருக்கு எடுத்துச் சொல்லும் மன நிலையில் கூட அப்போது இருப்பது துர்லபமே. உதாரணமாக தூக்கு தண்டனை தேதி குறிப்பிடப்பட்டு மறு நாள் இத்தனை மணிக்கு இறந்து விடுவோம் என்ற நிலையில் இருப்போர் மூளையின் செயல்பாடுகள் துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும் மன நிலைகள் எதிர்கொள்ளும் உணர்வுகள் அந்த அளவிற்கு ஆராயப்பட்டிருக்கின்றனவா எனத்தெரியவில்லை. கான்ஸர் போன்ற டெர்மினல் நிலையில் இருக்கும் அதிகம் நபர்கள் ஒரு some sort of self repentence, depressioந், ஆகிய நிலைகளுக்கும் உந்தப்படுகிறார்கள்.
எனது வகுப்புகளில் நான் என் மாணவர்களுடன் EMOTIONAL INTELLIGENCE (EQ ) பற்றி விவாதிக்கும்போது
இது குறித்து பேசியிருக்கிறேன்.
பெளதீக நிலைதனை விடுத்து ஆன்மீக நிலையில் இந்தப் பொருளை விவாதிக்கும்போது மனம் இன்னும் சீராக ஒருவித objective நிலையில் இருக்கலாம். இந்த உடல் ஒரு ஆவரணம் தான். இது இறப்பது கால ஓட்டத்தின் ஒரு மைல் கல்லே எனவும் அடுத்த மைல் கல் வரும்போது இன்னொரு உடலில் ,இப்பொழுது இந்த உடலில் பரிணமித்திருக்கும் ஆன்மா இருக்கும் என்பது புரிந்தாலும் மனம் ஒத்துக்கொள்ளாது.
ஆகவேதான் வைராக்கியத்தை ஆட்கொள்ளவேண்டும். இந்த உடல் நமை நீங்கும் நாளை நாமே எதிர்கொள்ளவேண்டும் என ஞானமார்க்கத்தினைச் சார்ந்த சாங்கியர்கள் கூறுவர்.
சுப்புரத்தினம்.
தஞ்சை.
இது பத்தின ஒன்னு நானும் 1 போட்ருக்கேன் டைம் இருந்த பாருங்க
ReplyDeletehttp://athisha.blogspot.com/2008/02/blog-post_05.html
முன்னே எங்கள் ஊரில் சினிமா போஸ்டரில்
ReplyDelete"இப்படம் இன்றே கடைசி", என்று சிறிய போஸ்டர் ஒட்டி நாளை படம் மாறுவதை தெரிவிப்பார்கள்.
நான் தினமும் காலை எழுந்ததும் அப்படி நினைத்துக்கொண்டுதான் தொடங்குகிறேன்.
நீங்கள் சொன்னதும் தோன்றுவது--பேப்பரில் செய்தியாக வரவும், வீட்டில் ஃப்ரேம் செய்து மாலை போட்டு வைக்கவும் ஒரு நல்ல லேடஸ்ட் போட்டோ எடுத்துவைத்துக்கொள்வேன்.
சகாதேவன்
//ஆகவேதான் வைராக்கியத்தை ஆட்கொள்ளவேண்டும்.//
ReplyDeleteநல்ல வார்த்தை சொன்னீர்கள் சுப்புரத்தினம் ஐயா.
வாங்க சகாதேவன்,
ReplyDeleteபோட்டோ மட்டும் பேசாது போனவர் சிறப்பை -
ஆகவே செய்யவேணும் ஆக்கம் அதனை - பின்னர்
போட்டோவும் பேசுமே போனவர் உயர்வை.
I happend 2 come across this on Youtube but it is need not be within 2 months..may be get delayed but let us pray for that... this guy is awesome very postive about the life.
ReplyDeleteHi Vino,
ReplyDeleteஅந்த கடைசி உரை நடந்தது செப்டம்பரில்.
இப்போது ஆறு மாதமாகிவிட்டது.
Medical advances are keeping him alive. He deserves it for right attitude above anything else!
By the way, write us a post on Raja or Rahman, will you?
வாங்க அதிஷா,
ReplyDeleteஉங்க ஜென் கதை பார்த்தேன், படித்தேன்.
ஏன் ஏதேனும் வித்தியாசமா செய்ய வேண்டுமா என்ன? ம்ம்ம்ம்.. எனக்கு கொஞ்சம் செயல்களை தள்ளிப்போடற தன்மை உண்டு. அதனால ஒத்துக்கிட்ட வேலைகள் செய்யாம இருக்கோமா ன்னு பாத்து செய்துவிட முயற்சிப்பேன். மத்தபடி எப்போ வேணா கிளம்ப ரெடிதான்.
ReplyDeleteஇதையே ஆங்கில மடல் குழு ஒன்றில் 7-8 வருஷம் முன்னால் கேட்க மக்கள் ஒரே அதிர்ச்சி ஆயிட்டாங்க. ஏன் அதிர்ச்சி ஆறாங்கன்னு நானும் அதிர்ச்சி ஆயிட்டேன்!
வாங்க திவா.
ReplyDeleteஏதும் வித்யாசமா செய்ய வேண்டாம்!
//ஏன் அதிர்ச்சி ஆறாங்கன்னு நானும் அதிர்ச்சி ஆயிட்டேன்!//
:-)