அன்பே ஆருயிரே
இமைக்கும் ஈசனருளே
உவகையே ஊனே உயிரே
எனதுயிரே ஏகாந்தச்சிரிப்பே
ஐம்புலன் ஆள்வாயே
ஒருமையே ஓம்காரமே
ஔவையின் தமிழே
கட்டிக் கரும்பே கனிமுத்துப் பாப்பா,
செல்வமே உனை சீராட்டிடுவேனே!
தங்கச் சுடரே தங்கமே தங்கம்
பிஞ்சுக் கிள்ளையின் பூந்தளிர் மேனியே
வெற்றி முரசே
யாதும் உனதே யாவையும் நீயே
ரம்மிய இசையே ரீங்கராத் தென்றலே
விடியலின் புதுமையே விந்தையின் முந்தையே
மழலை மொழியே மாசறு ஒளியே
ஞானமாய் எங்கும் நிறையும்
நாதன் அருளில் பூரணமாய் திகழ்வாயே!
உனக்காக இங்கே நிலாப்பாட்டு ஒன்றினை, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தினார் உருவாக்கியுள்ளனர்.
இன்னும் பல பாடல்களும், கதைகளும், பயிற்சிகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது, பார்க்கவும்!
நன்றி : தொடுப்புக்கு.
ReplyDeleteநல்லாயிருக்கு ஜிவா....அங்கும் போய் பார்க்கிறேன்.
ReplyDeleteதொடுப்பில் அசைபடமும் பாடலும் நன்றாக உள்ளது அல்லவா குமார்.
ReplyDeleteபாருங்கள் மதுரையம்பதி, நன்றாக உள்ளது.
ReplyDeleteகுழந்தைகளுக்கான நல்ல பதிவு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு.ஜீவி.
ReplyDeleteமழலைச்செல்வங்களுக்கான சுட்டி /நன்றாக இருக்கிறது. இதுபோன்று ஆங்கிலத்தில்
ReplyDeleteபல வலை தளங்கள் இருக்கும்போது, ஏன் தமிழில் இல்லையென்ற என் குறைதனைத் தீர்க்கும் வகையில் நீங்கள் குறிப்பிட்ட பதிவு அமைந்துள்ளது. மேன்மேலும் தமிழ் மொழிப்பயிற்சி மட்டும் அல்லாது நமது தமிழ் பண்பினையும் தமிழர் மரபினையும் எடுத்துச்சொல்லும் வகையாக ஒரு வலை அமைதல் அவசியம். தங்களைப்போன்று மென்பொருள் வல்லுனர் இது குறித்து முயற்சி செய்தால் இது இயலும். உதாரணமாக கீழ்க்கண்ட வலைக்குச்சென்று பார்க்கவும்.
http://www.indianchild.com/index.htm
இது என்னுடைய வலைப்பதிவான
http://thesilentzonewithin.spaces.live.com
ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
தங்கள் பதிவு வழக்கம்போல ஜொலிக்கிறது.
உயிர், மெய் எழுத்துக்களைக்கொண்ட சொற்கதம்பம் மணம் வீசுகிறது.
வாழ்த்துக்கள். ( க் உண்டா இல்லையா என்ற வாதம் இப்போது கொடி கட்டிப்
பறக்கிறது தமிழ் நாட்டிலே)
.எது சரி, எது தவறு என
வாதம் செய்தே நாம் இலக்கை வதம் செய்துவிட்டோம் எனவும் தோன்றுகிறது.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு: வாய்க்கால் கரையோரம் ஒரு தெம்மாங்கு பாட்டு ஒரு கிழவன் பாடுகிறான்.
கேட்க வாருங்கள்:
http://arthamullavalaipathivugal.blogspot.com
//மேன்மேலும் தமிழ் மொழிப்பயிற்சி மட்டும் அல்லாது நமது தமிழ் பண்பினையும் தமிழர் மரபினையும் எடுத்துச்சொல்லும் வகையாக ஒரு வலை அமைதல் அவசியம்.//
ReplyDeleteநிச்சயமாக ஐயா.
ஜீவா. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மகளையும் உடன் வைத்துக் கொண்டு இந்தத் தளத்திலிருக்கும் இளையோர்களுக்கான பாடப்பக்கங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்கள் இங்கே பதிவில் சொல்லியிருக்கிறீர்கள். இப்படி அடிக்கடி சொன்னால் அதனால் பலரும் பயன்பெறுவார்கள் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஅப்படியா குமரன், நானும் இந்தப் பதிவிடும்போது உங்களை நினைத்துக்கொண்டேன்!
ReplyDeleteபாப்பா மட்டுமா எல்லாரும் உயிர் மெய்யில் உருகினோம்..உபயோகமான பதிவு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷைலஜா மேடம்.
ReplyDeleteநல்ல பாட்டு ..இணைப்பும் சென்று பார்க்கிரறேன்.நன்றி.
ReplyDeleteவாங்க கயல்விழி மேடம்.
ReplyDelete