Monday, November 05, 2007

ரமணரிடம் சில கேள்விகள்

முன்பொருமுறை திருமதி பிக்காட் என்கிற ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் ரமணாசரமம் வந்திருந்தார். அங்கு ரமண மகரிஷியை சந்தித்து அவரிடம் உணவு முறைகளை பற்றி சில கேள்விகளை எழுப்பினார். அப்போது நடந்த சுவையான உரையாடல் இங்கே, தமிழில்:

பிக்காட்: ஆன்ம ஞானம் பெற விழையும் சாதகனுக்கு எந்த வகையான உணவினை பரிந்துரைக்கிறீர்கள்?
ரமணர்: சாத்வீக உணவு - அதுவும் குறைந்த அளவில்.
பிக்காட்: சாத்வீக உணவு என்றால் என்ன சொல்ல முடியுமா?
ரமணர்: ரொட்டி, பழம், காய், பால் போன்றவை...
பிக்காட்: வட இந்தியாவில் சிலர் மீன்களை உண்கிறார்களே, அது சரியா?
(இந்த கேள்விக்கு பதிலேதும் இல்லை)
பிக்காட்: ஐரோப்பியர்களான எங்களுக்கு எங்கள் ஒருவித உணவு பழகிவிட்டது. அதை மாற்றினால், உடலும் அதனால் மனமும் சக்தியிழந்து விடுகிறது. உடல் நலம் பேணுவது அவசியம் அல்லவா?
ரமணர்: நிச்சயமாக. உடல் சக்தியிழக்கையில், வைராக்கியம் என்னும் சக்தியை மனம் பெறுகிறதே!
பிக்காட்: ஆனால், நாங்கள் மனவலிமை இழக்கிறோமே?
ரமணர்: மனவலிமை என்று எதைச் சொல்கிறீர்கள்?
பிக்காட்: உலகத்தின் பந்தங்களில் இருந்து விடுபடும் சக்தியினை சொல்கிறேன்.
ரமணர்: உண்ணும் உணவைக் கொண்டே மனம் வளர்கிறது. அதனால் உணவு சாத்வீகமாக இல்லாவிட்டால் அதனால் மனமும் பாதிக்கப்படுகிறது.
பிக்காட்: நிஜமாகவா, அப்படியென்றால், நாங்கள் எப்படி சாத்வீக உணவுக்கு வழக்கப்படுத்திக்குள்ளது.
ரமணர்: ( அருகில் இருக்கும் இவான்ஸ்-வெண்ட்ஸ் என்பவரைக் காட்டி ) நீங்கள் எங்கள் உணவை உண்ணுவதால், ஏதேனும் சங்கடம் இருக்கிறதா?
இவான்ஸ்-வெண்ட்ஸ்: இல்லை, ஏனெனில் அது எனக்கு பழகிவிட்டது.
பிக்காட்: பழக்கம் இல்லாதவர்களுக்கு என்ன சொல்வீர்கள்?
ரமணர்: பழக்கம் என்பது சூழ்நிலைக்கேற்ப தன்னை தயார் செய்து கொள்வதுதான். இங்கே மனம் தான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது. மனம் சில வகையான உணவுகளை சுவையானதாகவும், நல்ல உணவாகவும் நினைத்துக் கொண்டு இருக்கிறது.
பிக்காட்: புலால் உணவுக்காக உயிர்கள் கொல்லப்படுகிறதல்லவா?
ரமணர்: யோகிகளுக்கு அஹிம்சையே தலையாய கொள்கை.
பிக்காட்: செடிகளுக்கும், அதில் காய்க்கும் காய், பழங்களுக்கும் உயிர் இருக்கிறது அல்லவா?
ரமணர்: நீங்கள் உட்கார்ந்திருக்கும் மேடைக்கும்தான் உயிர் இருக்கிறது!
பிக்காட்: நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புலால் அற்ற உணவுக்கு பழகிக் கொள்ளலாமா?
ரமணர்: அதுவே வழி.

13 comments:

  1. ரமணர் புலால் உணவு உண்ணுவது பாவம் உண்ணாமல் இருப்பது புண்ணியம் என்று சொல்லாமல் கருணை அடிப்படையில் அணுகி இருக்கிறார்.

    நன்று !

    ReplyDelete
  2. அதுமட்டுமல்ல கோவி, இதை யோகிகளுக்கு மட்டும்தான் ரமணர் சொல்கிறார் எனவும் நாம் தப்பித்துக் கொள்ளலாம் ;-)

    ReplyDelete
  3. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    அதுமட்டுமல்ல கோவி, இதை யோகிகளுக்கு மட்டும்தான் ரமணர் சொல்கிறார் எனவும் நாம் தப்பித்துக் கொள்ளலாம் ;-)
    //

    யோகிகளுக்கு சொல்லி இருப்பதால் அது யோகிகளுக்கு மட்டும் தானா ?

    போகிகளுக்கு சகலமும் வயிறார்பணமா ?
    :)

    ReplyDelete
  4. jeeva,

    //செடிகளுக்கும், அதில் காய்க்கும் காய், பழங்களுக்கும் உயிர் இருக்கிறது அல்லவா?//

    I have this question in mind always. but I could not get further answers from Ramanar. Konjam vilakkama solla mudiyuma ?

    ReplyDelete
  5. கோவி,
    போகரும் யோகியானாரே!
    :-)

    ReplyDelete
  6. சதாங்கா,

    //I have this question in mind always. but I could not get further answers from Ramanar.//

    Ramanar is indirectly answering the question here, that its useless to talk about consuming plants here. Just like its how useless it is to consider that a stone slab has life - Although in a sense its true at the atomic level, its irrelevant here.

    "Eating Satvic foods and staying away from rajasic and thamsaic foods is essential for spiritual development" is the message from all the Realized Souls!

    ReplyDelete
  7. ரமணரின்
    ஒரு அற்புதமான உரையாடலை எடுத்துச் சொன்னதற்கு எத்தனை பாராட்டினாலும்
    போதாது.
    இந்த உடல் அன்ன மயம். அத்தகைய அன்னம் தான் நாம் எவ்விதச் செயல்களைச்
    செய்கிறோம், எவ்வித எண்ணங்களால் நமது மனம் நிறைந்துள்ளது என்பதற்கு முதற்
    காரணமாம்.
    மனதை த்தூய வழிகளில் செலுத்திட அன்னம் சாத்வீக மாக இருத்திடல் வேண்டும். அதன் காரணமாகவே நம்மில் பலர் பூண்டு, வெங்காயம், சுரைக்காய், போன்றவற்றை தவிர்க்கின்றனர்.

    ரமணரின் வாழ்க்கையில் இருந்து மேன்மேலும எழுதி ஆன்மீகத்தொண்டாற்ற வேண்டும்.

    சூரிய நாராயணன்.
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  8. கோசங்களில் முதலானதான அன்னமயகோசம் பற்றி அழகாக சொல்லி பதிவுக்கு மெருகூட்டியதற்கு நன்றி சூரி சார்!

    இந்த பதிவின் கீழே Labels பகுதியில் 'ரமணர்' என்றொருக்கும். அதை அழித்தினால், இதர பதிவுகளையும் ஒரே பக்கத்தில் காட்டும், படித்துச் சொல்லவும்.

    ReplyDelete
  9. ரமணாஸ்ரமம், திருவண்ணாமலை, மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலருகே அவரது நினைவகம் இங்கெல்லாம் சில தடவை சென்றிருக்கிறேன். ரமணரது புத்தகங்களில் சிலவற்றை நுனிப்புல் மேய்ந்திருக்கிறேன். ரமண மகரிஷி பற்றி ஆழ்ந்த அறிவு தேவையோ என மனதில் ஒரு மூலையில் சிறு வேர் அடிக்கடி அடிக்கடி தென் படுகிறது. என்ன நடக்கும் பார்க்கலாம் - பொறுத்திருந்து

    ReplyDelete
  10. //ரமண மகரிஷி பற்றி ஆழ்ந்த அறிவு தேவையோ என மனதில் ஒரு மூலையில் சிறு வேர் அடிக்கடி அடிக்கடி தென் படுகிறது.//
    அதுவே பெரும் பாக்கியம் சீனா சார்.

    ReplyDelete
  11. ஜீவா,

    அசைவம் என்பது கடுமையான Toxic விளைவுகளை ஏற்படுதக்கூடியது. அசைவ உணவு வாயிலாக இரத்த ஓட்டத்தில் உட்புகும் Toxins and aminiacids மூளையில் விரும்பத்தகாத மின் அதிர்வுகளை உருவாக்கி சிந்தனைக் குவிப்பை Mind agitations ஏற்படுத்தும்.

    ஆன்ம விசாரணைக்கு சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான எண்ணங்கள் நிரம்பிய மனம் அவசியம்.

    உடல் வெளிப்படுத்தப்படும் சம்பவங்கள் + அனுபவங்களின் தொகுப்பே மனம் எனும் வடிவில்லா வஸ்துவை வடிவமைக்கிறது.

    மனிதன் உணரும் நான்கு நிலைகளான
    1) Waking State,
    2)Dreaming state,
    3) Deep Sleep State,
    4) Blissful state

    இதிலே ஆழ்ந்து உறங்கும் நிலையில் மனிதர்களிடையே எந்த பேதமும் இல்லை.

    ஆழ்ந்த உறக்கத்தில் மனம் செயல்பாட்டில் இல்லாததால் சுற்றி நடப்பது எதுவும் அறியாத நிலையில் சாட்சியாய் நன்கு உறங்கினேன் எனும் ஆத்மாவை அறியாத மடமை Bliss ஆனந்தம் மட்டுமே
    இருக்கிறது.

    கனவு நிலையில் கனவில் தான் திடீர் என்று பிச்சைக்காரனாக மாறி, காட்டில் புலிதுரத்த கண்மூடி உடல் உறக்கத்தில் இருந்தாலும் மனம் தீவிரமாக செயல்படுவதால் வியர்த்து விறுவிறுத்து எழுந்து ஸ்ஸ்ஸ்...அப்பா கனவுதானா... என்று கனவிலே செல்வத்தைப் பறித்துப் பிச்சைக்காரனாக்கிய காரணகர்த்தாவை எதிர்கொள்ளத் தயாராகிறது.

    விழிப்புநிலையில் மனம் மனிதனைப் படுத்தும் பாடு? ஐயோ பாவம்! தன் மனதின் அடிமை மனிதன்! தான் எனும் ஈகோவின் ஹை பர்பார்மன்ஸ் வென்யூ இந்த மனம். ஈகோ வெளிப்படுத்தும் அனைத்து பேத, குரோத, சுயநல, கயமைத்தனம் அனைத்தும் விழிப்பு நிலையில் மனிதனை மனம் வழிநடத்தும் குரூரம்.

    ஆன்ம விசாரம் என்பது முழுக்க முழுக்க மனிதன் தன் மனதுடன் உரையாடுவது. மெடிட்டேஷன் மூலம் மனதுடன் படிப்படியாக உரையாடி உரையாடி தனக்குள்ளிருந்து தன் செயல்கள், சிந்தனைகளில் வெளிப்படும் தனது ஈகோவை மெள்ளக் கரைப்பது என்பதே ஆன்ம விசாரம்.

    முதலில் மனிதனை மனம் வழிநடத்துகிறது என்பதை ஏற்க வேண்டும்.

    வழிநடத்தும் மனம் சிறந்த பண்புகளைக் கொண்டிருக்க வேணும்.

    மனம் உடலை விட நுட்பமானது. Mind is Subtler than Body.
    The subtler controls the Grosser.
    Body is grossest!

    உடலே ஒரு மனிதனின் செயல்பாடுகளை வெளிஉலகிற்கு கண்ணில் படும்விதமான செய்கைகளைச் செய்வது,

    எனவே மனம் நல்ல குணாதிசயங்களுடன் ஆரோக்கியமாக இருத்தல் அவசியம்.

    உணவுக்கட்டுப்பாடு அசைவம் தவிர்ப்பது, உணர்வுகளைத் தூண்டும் வெங்காயம், பூண்டு, தீவிரமான வாசனை உடைய பழங்கள் தவிர்த்தல் ஆன்ம விசாரத்திற்கு அவசியம்!

    Body is just made up of Matter எனும் பெரிய மேட்டரை உணர வேண்டும்! உடலளவில் மட்டுமே வாழ்தலால் ஆன்ம விசாரணையை முழுமையாகச் செய்யவே முடியாது!

    Who am I? நான் யார்? எனும் பேருண்மையை உணர உணவுக்கட்டுப்பாடு மிக அவசியம்!

    ReplyDelete
  12. வருக ஹரிஹரன்,

    நேர்த்தியாக விளக்கியதற்கு நன்றி.

    உயர் ஞானம் வேண்டி நின்றார்பின் வேறொன்று கொள்வாரோ?
    அன்பே சிவம் என்றுணர்ந்தார்பின்
    உயிர் வதையில் ஈடுபடுவாரோ?
    உயிர்களிடத்தில் அன்பு கொண்டாலே
    தெய்வம் உண்மெயென்ற உணர்வினைத் தானாக தந்திடுமென்றோ
    பாரதி அப்படிச்சொன்னான்!

    ReplyDelete
  13. Please go thorugh this post and my answers as well..

    http://umaiyanan.blogspot.com/2007/12/blog-post_30.html

    சைவ உணவின் தாத்பரியம் மதரீதியானதோ,சமய ரீதியானதோ அல்ல;அது அன்பின் வழி வந்தது.
    தன் இருப்புக்காக,வாழ்வுக்காக இன்னொரு உயிரைக் கொல்லக் கூடாது என்ற என்ற உலகலாவிய அன்பின் வழி வரும் நெறியே,சைவநெறி.சாதாரணமாக தன் உணவுக்காகவே இன்னொரு உயிரைக் கொன்று புசிக்கும் ஒரு மனிதன் உலகின் எந்த உயிரின் மேலும் அன்பு செலுத்துபவனாக இருக்கமுடியாது,எனவேதான் வள்ளுவர்
    தன்னூன் தான்பெருக்க மற்றுயிரைக் கொல்வானை எங்ஙணம் ஆளும் அருள்? எனக் கேட்டார்.
    மற்ற உயிரைக் கொல்லும் ஒரு மனிதனிடம் அருள் இருக்கமுடியாது என்ற பொருள்.
    /////////
    அதாவது ஒரு உயிரைக்கொன்று நான்குபேர் சாப்பிடலாம். ஆனால் நீ சாப்பிடும் சோற்றைப் பார். ஒவ்வொரு பருக்கையும் ஓர் உயிர்
    ///////////
    எல்லாமே உயிர்தான் - நெற்பயிர் உள்பட-என்பது விதண்ட வாதமே ஒழிய மனத்தின் பாற்பட்ட வாதமல்ல.
    நிணமண்டலம் (ரத்தம்) செயல்படும் உடலமைப்பைக் கொண்டவைகளே உயிர்கள்.
    அவற்றின் வாழ்க்கை முறையும் மனித உயிரின் வாழ்க்கை முறையை ஒத்தது;அவற்றைத் துன்புறுத்தாமல்-கொல்லாமல்-விட்டால் அவை இனப்பெருக்கம் செய்து மனிதனைப் போலவே அன்புசெலுத்தி வாழும் இயல்பு கொண்டவை;அவற்றின் வாழ்வும் அன்பும்,துயரும் மனித உயிரைப் போலவே வெளிப்படையானவை.
    ஒரு நெற்பயிர் இன்னொரு நெற்பயிருடன் காதல் புரிந்து,குழந்தை நெற்பயிரை உருவாக்குவதில்லை;மனிதனோ.மற்ற ஏதாவது ஒரு காரணியோ நெல் விதையை விதைத்து செயல்படுத்தினால் மட்டுமே பயிர் வளர்கிறது,எனவே இயற்கையின் அமைப்பில் அவை 'உண்மையான' உயிர்களின் - ஆடு,மாடு மற்றும் மனிதன் போன்ற உயிர்கள் உட்பட- உணவுக்காகப் படைக்கப்பட்டவை.
    அவையும் உயிர்தான்,அவற்றைக் கொன்றுதான் நீ தின்கிறாய் என்பது,புலால் உண்பவர்களின் நொண்டிச் சாக்கு.
    /////////
    எங்கள் சாப்பாடு உனக்கு வாந்தி வருமளவுக்கு அருவருப்பாக இருப்பதாக நினைப்பதும் அதை வெளிப்படையாக சொல்வதும்
    /////////
    புலால் உணவாளிகள் இதை மறுத்து வாதம் செய்வதும் மேற்சொன்ன காரணம் கொண்டே,ஏனெனில் நான் தின்பதால் நீ அதை அருவறுக்கக் கூடாது என்ற ஈகோ தான் காரணம்.
    தெருவில் வண்டியில் அடிபட்டு, ரத்தமும் சதையுமாக அரைந்து கிடக்கும் ஒரு உயிரியின் பால் வரும் அருவருப்பே,சைவ உண்வாளி புலாலைப் பார்த்தால் வரும் அருவருப்பு...அது புரிந்து கொள்ளப் பட வேண்டியதே...
    //////////
    இந்தியா என்றால் வாய்ப்பிருக்கிறது. இங்கு கல்யாணம் ஆகி தனி வீடு போனால்தான் அசைவம் சாப்பிடுவதை குறைக்க முடியும் போலிருக்கிறது.
    ////////////

    இது தன் குறைபாடுகளுக்கு மற்ற காரணிகளைத் தேடும் மனோபாவம்.இக்காலத்தில் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் சைவ உணவைத் தேடிக் கொள்ளலாம்.
    90 களின் கடைசியில் நான் சவூதி அரேபியாவில் இருந்தபோது கூட நான் சைவ உணவாளியாக வாழ முடிந்தது;சவூதியிலேயே வாழ முடியும் போது லண்டன் போன்ற நகரில் முடியாது எனச் சொல்வதும் நொண்டிச் சாக்கின் பாற்பட்டதே.

    மற்ற செரிமானம் தொடர்பான வாதங்கள் கவைக்குதவாதவை.

    31 December 2007 07:15
    --------------------------------------------------------------------------------

    அறிவன் /#11802717200764379909/ said...
    டிஸ்கி:
    ///////////
    அவன் அப்படி செய்வது தான் ஆச்சாரமானவன் (பார்ப்பனன் அல்லன்) என்ற சுய திருப்திக்காக செய்து கொள்வதுதான்
    ///////////

    பிராமணர்கள் தான் சைவ உணவாளிகள்,ஆசாரமானவர்கள் எனச் சொல்வதும் ஒரு மாயையே..
    சாம,அதர்வண வேதங்களில் யாக முறைகளில் கன்றீன்ற பசுவின் மடியை(பால் காம்புகளை) அரிந்து வேள்வி செய்யும் முறைகளை விவரிக்கும் கொலைகாரப் போக்கு விவரிக்கப் பட்டிருக்கிறது..

    /////////
    சைவம் மட்டும் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கும் நண்பன்..
    /////////

    அதில் பெருமை இருந்தால் புரிந்துகொள்ளப் பட வேண்டியதே அன்றி,இகழ்ந்து பேசப்பட வேண்டிய ஒன்றல்ல.

    ReplyDelete