இயற்கையின் அழகே அழகு...
ரம்யமான இந்த நீர் வீழ்ச்சியின் பெயர் என்ன?
எங்கே இருக்குன்னு சொல்லுங்க பார்க்கலாம்!
இன்னொரு படமும் சேர்த்திருக்கிறேன்:
படங்களை பெரிதாக பார்க்க, படத்தை அழுத்தவும்.
புதிருக்கான விடை:
ஜோக் அருவி (Jog Falls, கன்னடம்:ಜೋಗ ಜಲಪಾತ ),
கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்த அருவி, இது இந்தியாவில் உள்ள பத்து உயரமான அருவிகளில் ஒன்றாகும்.
இது ஷராவதி ஆறிலிருந்து 253 மீட்டர் உயரத்தில் இருந்து விழுகிறது.
அருவியின் அகலம் 1550 அடி.
இந்த அருவியானது கெருசொப்பெ அருவி எனவும் ஜோகதகுன்டி அருவி எனவும் அழைக்கப்படுகிறது. (கெருசொப்பெ வில் இருந்து 18 மைல்)
அருவி நான்காக பிரிந்து வருகையில், நான்கு பெரிய பகுதிகளுக்கு நான்கு பெயர்களும் உண்டு: ராஜா, ராணி, ராக்கெட், ரோரர் (Roarer)
ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை சீசன் காலம். சென்று பார்க்க ஏற்ற தருணம்.
பெங்களூரில் இருந்து 379 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மிக அருகே
உள்ள ரயில் நிலையம் - ஷிமோகா. (104 கிலோமீட்டர்)
மேலதிக விவரங்களுக்கு ஆங்கில விக்கிபீடியா
மூன்றாவது படம் அருமை.
ReplyDeleteஏதாவது clue கொடுங்க ஜீவா ...
இது கூட தெரியாதா. இந்தியால தான் இருக்கு
ReplyDeleteபாப்பா பவன் சொன்னது சரிதான், இந்த க்ளூ போதுமா சதங்கா?
ReplyDeletethis is not in india..it can't be in india..look at that guard rail..in india it is impossible to have something like that...
ReplyDeleteChallakudi??
ReplyDeleteநிறைய இடங்களில் அதுபோல பாதுகாப்பு கம்பிகளை நான் பார்த்திருக்கிறேன் அனானி அவர்களே,
ReplyDeleteசந்தேகமே வேண்டாம், இந்தியாதான்!
Challakudi, இல்லைங்க, கேரளாவில் வேறு எங்கும் இல்லைங்க.
ReplyDeleteChallakudi படத்தை இங்கே பார்க்கலாம்.
மேலும் ஒரு படம் சேர்த்திருக்கிறேன், பாருங்க!
ReplyDeleteகர்நாடக ஜோக் நீர்வீழ்ச்சி , என்று நினைக்கின்றேன்....
ReplyDeleteஅன்புடன்
இரா .செந்தில் நாதன்
திரு.இரா.செந்தில் நாதன்,
ReplyDeleteஉங்கள் விடை சரியே!
வாழ்த்துக்கள் சார்.
வேறு யாராவது கண்டு சொல்கிறார்களா பார்க்கலாம்...
ஜோக் நீர்வீழ்ச்சியா?
ReplyDeleteஜோரா இருக்கு
துளசி மேடம் - சரியான விடையை நீங்களும் சொல்லிட்டீங்க,
ReplyDeleteடீச்சருக்கே கேள்வியாங்கறீங்களா?
:-)
என்ன வாசகர்களே,
ReplyDeleteவிடையை வெளியிட்டுடலாமா?
jog falls in karnadaka!காவிரியில் உள்ள அருமையான நீர்வீழ்ச்சி!
ReplyDeleteபடங்கள் அருமை நெட்டில் சுட்டதா, இல்லை உங்கள் காமிரா வண்ணமா? தொழில்முறை புகைப்படம் போல இருக்கு!
வவ்வால்,
ReplyDeleteஇப்போதுதான் புதிருக்கான விடையை வெளியுடுவதற்கு முன் உங்கள் விடையும் வந்துவிட்டது!
ஆனால், அருவி காவிரியில் இல்லை,
ஷராவதி ஆற்றில்.
//படங்கள் அருமை நெட்டில் சுட்டதா, இல்லை உங்கள் காமிரா வண்ணமா? தொழில்முறை புகைப்படம் போல இருக்கு!//
ReplyDeleteமின் அஞ்சலில் நண்பர் அனுப்பிய படங்கள் வவ்வால், அவருக்கு இந்த சமயத்தில் நன்றி!
புதிருக்கான விடையை கண்டுபிடித்த மூவருக்கும் (இரா .செந்தில் நாதன், துளசி கோபால், வவ்வால்) வாழ்த்துக்கள்.
ReplyDeleteபங்கு கொண்ட அனைவருக்கும் நன்றிகள்!
அட என்னங்க நீங்க.....நான் பதிவையே இப்பத்தான் பார்க்கறேன் அதுக்குள்ள விடையும் சொல்லீட்டீங்க...ஹிஹிஹிஹ்
ReplyDeleteஅட என்னங்க நீங்க.....நான் பதிவையே இப்பத்தான் பார்க்கறேன் அதுக்குள்ள விடையும் சொல்லீட்டீங்க...ஹிஹிஹிஹ்
ReplyDeleteஅட என்னங்க நீங்க.....நான் பதிவையே இப்பத்தான் பார்க்கறேன் அதுக்குள்ள விடையும் சொல்லீட்டீங்க...ஹிஹிஹிஹ்
ReplyDeleteஅட என்னங்க நீங்க.....நான் பதிவையே இப்பத்தான் பார்க்கறேன் அதுக்குள்ள விடையும் சொல்லீட்டீங்க...ஹிஹிஹிஹ்
ReplyDeleteஜீவா, பேபி
ReplyDeleteஇந்தியாவைவிட்டு வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதும் படிக்கும் காலத்திலும் ரொம்ப சுத்திப் பார்த்தது கிடையாது.
நல்ல ஒரு சுற்றுலாத் தலத்தை காட்டியமைக்கு நன்றி.
நான் போய் பார்க்கணும்னு நினைச்ச இடம். ஆனா குதிரை லாடம் வடிவத்துல இருக்கவும் marble fallsஓன்னு நினைச்சிட்டேன். அதுக்கும் போனதில்லை. ஆனா அதுவும் இந்த வடிவத்துல தான் இருக்கும்னு கேள்விபட்டிருக்கேன்.
ReplyDeleteமிக அழகான படங்கள்!
ReplyDeleteஆபிரிக்காவிலுள்ள விக்டோரியா அருவி என நினைத்தேன்.
பாரதத்தில் என்றதும் மிக மகிழ்ந்தேன்.