சென்ற பதிவில் அருந்ததி என்பவர் ஸ்மார்த்தம் பற்றி விரிவாக எழுதும்படி கேட்டிருந்தார். மேலும் விக்கிபீடியாவிற்கும் கட்டுரை ஒன்று தேவைப்படுகிறது. ஆகவே, இதோ இங்கே எனக்கு தெரிந்தவற்றை கோர்த்து விடுகிறேன்.
ஸ்மார்த்தம் என்பது பழங்காலம் தொட்டே இருந்து வரும் இறைவழிதான் என்றாலும், ஆதி சங்கரர் தான் சீர்தூக்கி ஒரு புதுமுகத்தைக் கொடுத்தார். தனித்தனியாய் அவரவர்க்கு உகந்த இஷ்ட தேவதைகளை வணங்கிக் கொண்டு தனித்தனிப் பிரிவாய் கிடந்தவர்களை அழைத்து, இதோ உங்களுக்கெல்லாம் பொதுவானதொரு ஷண்மதம் என அதற்கான முறைகளை சீர்படுத்தினார். இதன் படி சிவன், சக்தி, திருமால், கணேசர், சூரியன் மற்றும் முருகன்் என்ற அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்கலாம். பொதுவாக இந்த முறையினை பின்பற்றுவர்களுக்கு ஸ்மார்த்தர் என்று இந்நாளில் வழங்கப்படுவாதால், இந்த வழிமுறையை 'ஸ்மார்த்தம்' என்றே வழங்கலாம். இந்த வழியில்் எல்லா வழிகளையும் ஏற்றுக் கொள்ளும், இலகுவான வளைந்து கொடுக்கும் தன்மையை ஏற்படுகிறது. இன்று இந்து மதம் என்று நாமெல்லாம் பொதுவாக சொல்லும் ஒரு பொது முகம் உருவாகுவதற்கு இந்த வழிதான் தான் வித்து.
தத்துவப்படி ஸ்மார்த்தர்களுக்கு ஆதி சங்கரரின் அத்வைதம் தான் அடித்தளம். அதாவது இறைவன் ஈஸ்வரனும், நம் ஜீவனும் உண்மையில் முழுதிலும் பிரம்மமே. மாயையினால் சிக்குண்டதால், ஈஸ்வரன் வேறு ஜீவன் வேறு என்பதாகத் தெரிகிறது. உயர் ஞானம் கிட்டுமாயின், இந்த வேறுபாடு தெளிந்திடும்.
முக்தி அடைவதற்கு ஒரே பாதை ஞான யோகம்தான் என்பது பெரும்பாலான ஸ்மார்த்தர்களின் நம்பிக்கை. அறிவின் தேடலாலும், குண்டலினி அல்லாத யோக முறையினாலும். குருவின் ஆசியுடன் தொடங்கப்படும் இந்த யோக நெறியில் த்யானிப்பவர், தன்னையே ப்ரம்மமாக நினைவில் நிறுத்தி, மாயையின் தளையில் இருந்து விடுபட முயல்வார். இவர்களின் தீர்கமான, முடிவான இலக்கானது, நானும் அந்த ப்ரம்மமாக இருக்கிறேன் என்று உணர்வதுதான். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் எதெல்லாம் அஞ்ஞானம் (அவித்யயை) என்பதை உணர்ந்து தோற்ற மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.
முக்தி அடைதலுக்கு வெறும் மந்திரங்களை ஓதுவதாலாலோ, உயிர் பலி கொடுப்பதாலோ அல்லது தன்னையே வருத்தி நூறு உபவாச நோன்புகள் இருப்பதாலோ அடைந்து விட முடியாது. மறைகளை படித்து உணர்வதும், ப்ரம்மத்தின் பிம்பத்தினை தன்னுள் கண்டுணர்வதும், த்யானத்தினாலும் அஞ்ஞானம் அகன்றிட வழி வகுக்கும்.
ஞானம் அடைதலுக்கு ஞான யோகமே வழி என்றாலும் அந்த சித்தி கிட்டுவதற்கு மூன்று முன்பாதைகளையும் சொல்கிறார்கள். அவையாவன: பக்தி யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம்.
ஸ்மார்த்தர்களின் அன்றாட செயல்பாடுகள்:
1. ஸ்நானம்
2. சந்தியாவந்தனம்
3. ஜபம்
4. பூஜை
5. உபாசனை
6. அக்னிஹோத்ரம் அல்லது அக்னிகிரையம்
இவை தவிர அமாவாசை தர்பணம் மற்றும் ஸ்ரார்தம் செய்வதும் இவர்கள் வழக்கம்.
இவர்கள் வழி செல்லும் மறைகள்:
வேதங்கள், அவற்றின் உபநிஷதங்கள், ஸ்மிருதி, புராணங்கள் மற்றும் இதிகாசங்கள்
மேலும் விவரம் அறிய இந்த தளங்களைப் பார்க்கவும்:
* ஆதி சங்கரர் - அத்வைதம்
* அத்வைத வேதாந்தம்
* சிருங்கேரி சாரதா பீடம்
* சங்கர சம்பிரதாயம்
* இந்து மதத்தின் நான்கு பிரிவுகள்
* ஸ்மார்தர்களின் ஷண்மதம்
* ஸ்மார்த்தம்
மிக சுருக்கமாக, ஆனால் எல்லாவற்றையும் இணைத்து அழகாகச் சொல்லிவிட்டீர்கள்...நன்றி.
ReplyDeleteவாங்க மதுரையம்பதி!
ReplyDeleteஉங்களுக்கு நெருடலில்லாமல் பட்டதே மகிழ்ச்சி!
@ஜீவா நெருடலான பகுதியை சாமர்த்தியமாக அளித்ததற்கு நன்றி.
ReplyDeleteநான் நினைத்தேன் SMART ஆக இருப்பவர்கள் ஸ்மார்த்தர் என்று
வாங்க தி.ரா.ச, அதிலும் Capital ஸ்மார்ட் ஆனவர்கள் போலும்!
ReplyDelete//SMART ஆக இருப்பவர்கள் ஸ்மார்த்தர்//
ReplyDeleteஆனாலும் நீங்க ஓவர் ஸ்மார்ட்டா இருக்கீங்க திராச. :-)
இப்போது தான் பார்த்தேன், விரிவான விளக்கங்களுக்கு நன்றிகள்!
ReplyDeleteஅருமை ஜீவா.. இப்போதுதான் நான் நிறைய விஷயங்களைக் கேள்விப்படுகிறேன்.. லின்க்கை நூல் பிடித்துச் சென்று படித்துக் கொண்டிருக்கிறேன்.. எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றிகள்..
ReplyDeleteவருகை நல்வரவாகுக! படித்துக் சொல்லவும் பலருக்கும்!
ReplyDeleteதமிழர் மறை வலைப்பதிவு கண்டு தாங்கள் அனுப்பிய செய்தி படிக்க மகிழ்ந்தேன்.
ReplyDeleteதங்களது வலைப்பதிவிலே ஸ்மார்த்தம் பற்றி எழுதியதும் படித்தேன். அனாதியான (அதாவது ஆரம்பம் என்று ஒன்று இல்லாதது) இந்து மதம் ஆகும். வேதங்களை முன்னிறுத்தி இருப்பதால், இதற்கு வைதீக தர்ம்ம என்றும் பெயர் உண்டு. இவ்வாறான வைதீக தர்மத்தினை ஆறு வகையாக ப்பிரித்து ஓர் ஒழுங்கினை நிலை நாட்டியவர் ஆதி சங்கரர் ஆவர். ஆதி சங்கரர் தனது தத்துவத்தை அத்வைதம் என வர்ணித்தார். அது இரண்டல்ல, ஒன்றே என்பதே இத்தத்துவம். அந்த ஒன்றும் நீதான். தத் த்வம் அஸி . என்பது வேத வாக்கியம். இந்த வேத வாக்கியத்தை குரு முகமாக கற்று ப்புரிந்த பின்னே சீடன் ஆத்ம விசார மூலமாக அஹம் பிரஹ்மாஸ்மி ( நான் பிரும்ம மாக இருக்கிறேன்) என உணர்கிறான். இந்த உணர்ந்த நிலை தனை த்தான் ஸ்மார்த்தம் எனப்படுவதாகும். பிற்காலத்தில் இதனுடன் பல்வேறு புற வழிபாடுகள், புற ஒழுங்கினையும் அக ஒழுங்கினையும் இணைப்பதற்கான் வழி முறைகள் தோன்றின.
தங்கள் வலைப்பதிவினை ப்பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி.
Suryanarayanan S.
Please also visit another of my blog (which could also be of interest to you)
http://pureaanmeekam.blogspot.com
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சார்!
ReplyDeleteநல்ல பதிவு ஜீவா!
ReplyDeleteஸ்மார்த்தம் என்ன என்று சொல்லிவிட்டு, அது வேறெதுவும் இல்லை, இன்றைய இந்து மதம் தான் என்றும் பொதுவுடமையாக்கி விட்டீர்!
சும்மா பன்ச் பதிவு!
:-)
ReplyDeleteவருகைக்கு நன்றி சங்கர்!