ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்
- யஜீர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.5
கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் ஆகும். அவரவர் கர்மா அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது.
தமிழ் இலக்கியத்தில் இது ஊழ் அல்லது ஊழ்வினை என்று குறிப்பிடப்படுகிறது. திருவள்ளுவர் 'ஊழ்' (ஊழிற் பெரு வலி யாவுள?) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். இளங்கோவோ 'ஊழ்வினை' என்ற சொல்லை கையாள்கிறார்.
இந்து சமயத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று மறுபிறவி.
ஒருவரின் இறப்பிற்குப்பின், அவரது ஆத்மா முன்பிறவிகளின் மொத்த கர்மாவின் பதிவுகளுடன் அடுத்த உலகுக்குச் செல்கிறது. அங்கு தன் கர்மாவுக்கான பயன்களை அறுவடை செய்தபின், இந்த உலகுக்கு திரும்புகிறது. எப்படி கர்ம வினைகள் ஒருவருடைய செயலின் தேர்வின் அடிப்படையில் அமைகிறதோ, அதுபோலவே, அதனாலேயே, மறுபிறவியும் அவரவர் தேர்ந்தெடுப்பதுதான்
- யஜீர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.6
ஒருவருடைய கர்மாவானது முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல் முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை மோட்சம் அல்லது முக்தி என வழங்கப்படுகிறது.
குறிப்பு: இப்பகுதிகள் தமிழ் விக்கிபீடியாவில் இருந்து மீள்விக்கப்பட்டது.
இப்பகுதிகள் தமிழ் விக்கிபீடியாவில் இருந்து மீள்விக்கப்பட்டது.
ReplyDeleteஇது விக்கிப்பீடியாவின் கர்மா. :-)
வாங்க வடுவூரார்!
ReplyDeleteஒரு சூத்திரன் தன் சூத்திர கடமையை செவ்வனே செய்தால் அடுத்த பிறவியில் பிராமனன் என்னும் உயர்ந்த குலத்தில் பார்பனாக பிறக்க முடியுமா ?
ReplyDelete- சூத்திரன்
:-) எனக்குத் தெரியவில்லை அனானி நண்பரே...!
ReplyDeleteஅடுத்த பிறவி என்றொன்று ஏற்படக் கூடாது என்பதுதான் யாராக பிறந்தாலும், அவரின் நோக்கமாக இருக்க வேண்டும்.
பிறவிச் சுழலில் இருந்து மீள எந்தக் குலத்தில் பிறந்தால் என்ன?
உயர்வென்றும் தாழ்வென்றும் பிறந்த குலத்தால் அல்ல.
மற்றொரு அனானி நண்பரிடம் இருந்து வந்திருக்கும் மறுமொழி -
ReplyDeleteமட்டுறுத்தப்பட்டபின்:
அய்யா,
முடியும்,தாரளமாக முடியும். ****...*** பாவங்களையும் செய்யாமல் இருந்தால் கண்டிப்பாக முடியும்.முயன்று பாருங்க.
//இது விக்கிப்பீடியாவின் கர்மா. :-)//
ReplyDeleteசொல்ல மறந்து விட்டேனே - இது விக்கிபீடியாவுக்காக எழுதியதுதான்!
//பாவங்களையும் செய்யாமல் இருந்தால் கண்டிப்பாக முடியும்.முயன்று பாருங்க.//
ReplyDeleteகுல உயர்வு தாழ்வு சொல்லுதலும் பாவம்தான்!
அவரவரின் அடுத்த பிறவி அவரவர் செய்யும் பாவ புண்ணியங்களைப் பொறுத்தே அமையும். நன்று. ஏழு பிறவிகளில் ஒன்று தானெ மனிதப் பிறவி. மனிதனாகப் பிறந்தவன் அடுட்த்து மனிதனாகப் பிறக்க முடியுமா ?? என்ன இருந்தாலும் அடுத்த பிறவி அமையாமல் பிறவாமல் முக்தி அடைய வேண்டும்.
ReplyDelete//ஏழு பிறவிகளில் ...//
ReplyDeleteபிறவிகளின் எண்ணிக்கைக்கு ஏழென்ற கணக்கேதும் இல்லை, எண்ணிலடங்கா பிறவிகளும் எடுக்க வேண்டி இருக்கலாம்.
ஒருவர் செய்த வினைப்பயன் ஏழு தலைமுறைகளுக்கும் தொடரலாம் என்று சொல்லுவார்கள். அதுவே ஏழு பிறவி எனவும் மருவி இருக்கலாம். அல்லது ஏழு வகையான பிறவிகள் என்பதாகவும் இருக்கலாம்.
//மனிதனாகப் பிறந்தவன் அடுத்து மனிதனாகப் பிறக்க முடியுமா ?? //
இல்லாவிட்டால், பிறவிச் சுழலில் இருந்து விடுபட வழியில்லை. ஏனெனில் மற்ற உயிரினங்களுக்கு உயர் ஞானம் பெற்று உய்யும் வழி ஏதும் இல்லை.
கர்மா, நல்லதாக இருந்து பலனுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லைனு
ReplyDeleteஏற்றுக் கொண்டால் கொஞ்சமாவது பிறவிகளிலிருந்து விடு படலாம்
என்று தானே கேள்விப்படுகிறோம்.
இதைப் பயிற்சி முறையில் கொண்டு வருவதுதான் கஷ்டமாக இருக்கிறது.:((
வாங்க வல்லிசிம்ஹன்,
ReplyDeleteபலனைப்பற்றி சொல்லி இருக்கீங்க.
நாம நிறைய பேர், "பலனை எதிர்பார்க்காம செயலை செய்யணும்" என்று சொல்லி இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம்.
பலனை எதிர்பார்க்காம செயலை செய்ய இயலாததுதான். அப்படி சொல்லப்படவும் இல்லை!
செயலுக்குப்பின் கிடைக்கும் பலனில் திளைத்து, இந்த பலன் என்னால்தான் கிட்டியது என்ற இறுமாப்பு கொள்ளக்கூடாது. மாறாக, பலனைக் கொடுத்தது இறைவன், அவனின் கருவியாக நான் செயல்பட்டேன் என்று கொள்ள வேண்டும்.
ஸ்வாமி தயானந்த சரஸ்வதி ஒரு அழகான உதாரணத்தை சொல்லுவார்:
உங்கள் மகன் உங்களுக்கு மாதாமாதம் பணம் அனுப்புகிறான் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதை பெற்றுக்கொள்ளும் தபால்காரனிடமோ அல்லது வங்கிக் காசாளரிடமோ மாதாமாதம் நன்றி சொல்லிக் கொண்டு இருப்பதில்ல. உங்கள் மகனுக்குத்தான் நன்றி சொல்வீர்கள். இவர் ஒரு கருவிதான்.
அதே போலத்தான் ஒவ்வொருவரின் செயல்களின் பலனும். அவற்றுக்கான இயக்குனர், இறைவன். பலனுக்கு நன்றி அவனுக்கு சேர வேண்டியது.
இப்போது சொல்லுங்கள், இதிலென்ன கடினம்?
//அவரவர் கர்மா அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. //
ReplyDeleteகர்மா, விதிப்பயன் இதற்கெல்லாம் சொல்வது சரியா ?
ஒரு பெண் நான்கு பேரால் பலாத்காரம் செய்யபடும் போது செய்பவர்களின் செயலை பாவம் என்று வைத்துக் கொள்வோம், அதற்கான தண்டனையை அவர்கள் பெற்றே தீரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதில் பாதிக்கப்படும் பெண் முற்பிறவியில் பாவம் செய்தவள் என்பீர்களா ?
கோ.வி,
ReplyDeleteஒருவர் அடையும் துன்பம் எல்லாவற்றுக்கும் அவர் செய்த பாவங்கள்தான் காரணமா என்று கேட்கிறீர்கள், இல்லையா?
அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
இன்பமும் துன்பமும் இரண்டுமே நம்மால் நடப்பதல்ல. எதனால் இப்படி நடந்தது என்பதை விளக்குவதல்ல கர்மா வின் விளக்கம். நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குவது மட்டுமே.
மேலும் தர்ம சாஸ்திரங்களை நான் மேற்கோள் காட்டவில்லை. தர்ம சாஸ்திரங்கள் எப்படி ஒருவர் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல் மட்டும்தான். அவற்றில் எல்லாமே அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
கோ.வி,
ReplyDeleteஏற்கனவே வந்த மறுமொழிகளையும் அவற்றுக்கு நான் அளித்த பதில்களையும் முழுதாக படித்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். படித்திருந்தால் இப்படி திசை திருப்பும்
முயற்சியில் ஈடுபட்டிருக்க மாட்டீர்கள்.
அதற்கான விளக்கத்தை நான் கொடுத்த பின்பும் உடும்புப் பிடியாக நான் சொல்லாததை சொல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் உங்களை என்ன செய்வது?
உங்கள் கருத்துக்களைக் கொண்டு மற்றவர் எழுத்துக்களில் சாயம் பூச வேண்டாம். அதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்காவிட்டாலும், மறுபடியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
ஜீவி,
ReplyDeleteமன்னிப்பு ?
எதற்கு ? நான் சொல்லி இருப்பது உங்களுக்கு விளங்க வில்லையோ ? நீங்கள் குலதாழ்ச்சி / உயர்சி சொல்லல் பாவம் என்று சொல்லி இருப்பது குறித்துதானே சொல்லி இருந்தேன். குலம் உயர்வு / தாழ்வு விதிப்பயனால் அமைவது போலவும் அதை வெளிப்படையாக சொல்வது பாவம் என்பது போல் உங்கள் பதில் புரிந்தது. குலம் தாழ்ச்சி / உயர்ச்சி சொல்வதை பாவம் என்று சொல்லாமல், அவ்வாறு சொல்வதையே கண்டிக்கிறேன் என்று சொல்லி இருந்தால் நான் அதை குறிப்பிட்டு இருக்கப் போவதில்லை. நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்வது என் நோக்கம் அல்ல. நான் சொல்லி இருப்பது உங்கள் பதிலுக்கான பின்னூட்டம் தான். எவ்வளவோ இழிவுகளை புனிதமென்று கடைவிரிப்போர் பலர் இருக்கையில் நான் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் ? ஏன் உங்கள் பதிவுகளை படித்ததும், அதற்கான எதிர்வினை ஆற்றியதும் கூட *பாவம்* என்றும் அதிலிருந்து நான் விடுபட்டு புன்னியம் தேடிக் கொள்ள மன்னிப்பு கோரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ ? தெளிவாக சொல்லுங்க நான் எதிர்வினை/ மறுமொழி பதில்களை உங்கள் இடுகைக்கு இடுவதை நிறுத்திக் கொள்கிறேன்.
ஜீவா. நீங்கள் இந்த இடுகையிலோ பின்னூட்டத்திலோ எங்குமே கர்மாவின் அடிப்படையில் தான் சாதி/வருணம் வருகிறது என்று சொல்லவே இல்லை. வினைப்பயன்கள் இருக்கும் வரை மறுபிறவிகள் வந்து கொண்டே இருக்கும் என்ற கருத்தினைத் தான் விக்கிபிடியாவில் இருந்து எடுத்து இட்டிருக்கிறீர்கள். சூத்திரன் என்று கையெழுத்து இட்டுக் கொண்ட அனானி பின்னூட்டம் இந்த இடுகையில் சொல்லாத கருத்தினைச் சொன்னதாக திசை திருப்பியது. அது போட்டு வாங்கும் பின்னூட்டம். இந்த மாதிரி பின்னூட்டங்கள் பல எனக்கும் வருவதுண்டு. அந்த மாதிரி - நான் சொல்லாததைச் சொல்வது போல் திசை திருப்ப முன்னிகையாக இடப்படும் பின்னூட்டங்கள் வந்தால் - கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு சிந்தித்து அவர்கள் அடுத்து எங்கே செல்வார்கள் என்பதையும் சிந்தித்து அதற்கும் பதில் சொல்ல முயல்வதுண்டு. இந்த மாதிரி பின்னூட்டங்களும் அதன் அடிப்படையில் உங்கள் இடுகையே வினைப்பயன் அடிப்படையில் தான் சாதி/வருணம் வருகிறது என்று சாயம் பூசும் இடுகைகளும் வரத்தான் செய்யும். அந்த சாயம் பூசும் இடுகைகளைக் கண்டு இங்கே வரும் நண்பர்கள் நீங்கள் சொன்னதையும் சொல்லாததையும் படித்து அறிந்து கொள்வார்கள். நீங்கள் சொல்லாததைச் சொன்னதாகப் புரிந்து கொள்வார்களோ என்ற திகைப்பு வேண்டாம். இவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு இனி மேல் ஒற்றை வரியில் உங்கள் கருத்தை மறுமொழியாகச் சொல்லாமல் இந்த கொக்கி போடும் பின்னூட்டங்கள் எதற்காக வருகின்றன என்று கொஞ்சம் சிந்தித்து மிகத் தெளிவாக ப்ரிஎம்ப்ய்டாகச் (preempt) சொல்லிவிடுங்கள்.
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரை கோவி.கண்ணனின் இடுகை உங்கள் இடுகையின் மேல் சாயம் பூசும் முயற்சி போல் தோன்றினாலும் அது அப்படி இல்லை; அவர் காலம் காலமாக மீண்டும் மீண்டும் சொல்லி வரும் கருத்தை இன்னொரு முறை சொல்ல ஒரு வாய்ப்பாக உங்கள் இடுகை அமைந்து விட்டது என்று தான் சொல்வேன். வினைப்பயனையும் கர்மா என்ற கான்செப்டையும் ஏற்றுக் கொள்பவர்கள் எல்லாம் அதன் அடிப்படையில் தான் சாதி/வருணம் இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதில் அவருக்கு மிக உறுதியான நம்பிக்கை உண்டு. அப்படி இல்லை; வினைப்பயனை ஏற்றுக்கொள்ளும் பெரும்பாலோனோர் அதற்கும் சாதிக்கும் தொடர்பு இல்லை என்பதைத் தான் கருத்தாகக் கொண்டிருக்கிறார் என்பதை அறியும் அளவிற்கு அப்படிப்பட்ட கருத்தினை உடையவர்களை அவர் இன்னும் காணவில்லை; அப்படி ஒரு சிலரைக் காணும் போதும் அவர்கள் அந்தக் கருத்தினை உடையவர் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. இப்போது இட்டிருக்கும் மறுப்போடு விட்டுவிடுங்கள். எதுவும் வருந்த வேண்டாம். மீண்டும் சொல்கிறேன். இது உங்கள் மேல் சாயம் பூச முயல்வதைப் போல் எனக்குத் தோன்றவில்லை - அவர் கருத்தைச் சொல்லும் வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கிறார். அவ்வளவு தான்.
குமரன்,
ReplyDeleteமிகுந்த அக்கறையுடனான நீண்ட மறுமொழிக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சியும் கூட.
கோவியார் தன் கருத்தை மட்டும் சொல்வதில் எந்த உறுத்தலும் இல்லை. தனக்கு வேண்டியவற்றை மட்டும் வெட்டி எடுத்து - அவர் செய்த செயல் ஒரு பொறுப்புள்ள பதிவர் செய்த செயலாகத் தோன்றவில்லை. அதுதான் வருத்தம் அளித்தது.
To : Thiru Sujatha Rangarajan
ReplyDeleteDear Sir,
Hindu concepts of transmigration of soul, rebirth can be used to justify or rationalise the unfairness of life on earth. God' dharma or ethics is incomprehensible to our human logic. Good people
suffer needlessly while evil people flourish and die
peacefully. so it seems. In Astrology, the fifth house
denotes prevoius births or purva punya sthanam.
And our current life and events are based on tallying
the good/bad things we had done in prevoius births.
Only if we can understand or accept such logic can we
justify or rationalise life's contradictions and
unfairness.
Hope you must have read Razor's Edge by your favourite
author Somerset Maughaum, based on Ramanar and India.
It is his most important work. Pls re-read Larry's
experiences and inferences again. About Godliness
and human life and soul.
Also R.K.Narayan's auto-biography "My Days" and
semi-autobiographical novel "English Teacher" are
important books about tranmigration of soul. he says he
established contact with his late wife (who passed
away in 1939) ; and he is not unscientific.
Astrology, as in weekly predictions or sun-signs are
generalised and can be quite inaccurate. Only a
correct interpretation of horoscope can give accurate results
and analysis. The character of an individual, his
strenghts and weakness, biases , health, appearance
,etc can be predicted accurately in our Indian
methods. Pls try to meet Thiru.A.M.R of Kumudam
jodhidam for a discussion. Or you can enquire about
his merits and accomplishments with your contacts at
Kumudam office, etc. You may be in for a surprise.
I am from a DK background, but now an ametuer
astrologer ; and can understand many facets or life
and humans better now.
more later
Sincerely Yours
Athiyaman
Chennai
karma is not based on any caste or creed.One who sow paddy reaps paddy not wheat. Unselfishness and a work with no expectation lead to good karma.Nish kaamya karma.This makes our mind clean, as clean as nature.So death liberates all our parts body both visible and non visible into brahman,the Supreme Nature as milk mixed with milk,there we cannot find any difference.So there is no rebirth or separation.
ReplyDeleteKaamya Karma makes our mind always separated from nature and it cannot mix with the nature and re birth exist based on the mind what it expects. Caste is not nothing for Brahman,the Supreme Nature.
"மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை" என அகஸ்தியர் கூறுவதும் இதுவே!
ReplyDeleteமறுபிறவி http://sagakalvi.blogspot.com/2011/12/blog-post_30.html
Hello, I enjoy reading through your article. I like to
ReplyDeletewrite a little comment to support you.
Thanks for a marvelous posting! I seriously enjoyed reading it,
ReplyDeleteyou're a great author. I will always bookmark
your blog and definitely will come back at some point.
I want to encourage one to continue your great job, have a nice evening!
I love it when folks come together and share views. Great site, continue the good work!
ReplyDelete