சென்ற வெண்பா
முயற்சியைத் தொடர்ந்து அடுத்த முயற்சி:
இந்த முறையும் தலைப்பும் ஊக்கமும் வாஞ்சிநாதன் அவர்களிடம் இருந்தே:
ரோஜாப்பூ மல்லிகை ஆன கதைரோஜாவை மல்லிகை என்றழைத்தால் மாறிடுமா
ரோஜாவின் வாசனை? வாசனையும் நாதன்
தருவித்த போது மலர்கொண்ட நாமத்
தினாலல்ல பூவின் மணம்!
படமும் பாவும் சூப்பர்!
ReplyDeleteமலர்கொண்ட ரோஜாவே, மணம் வேசும் ரோஜாவே!
வாங்க ரஜிதா!
ReplyDeleteவெண்பா அருமை வியக்கின்றேன் என்னருமை
ReplyDeleteநண்பா நவில்கின்றேன் நாலுவரி -பண்பாய்
மணமில்லா ரோசாவும் மல்லிகைக் கொப்போ?
கணமேனும் சிந்திப்பீர் கண்டு! ---அகரம்.அமுதா
வாழ்த்துக்கள் வெண்பாவில்!
ReplyDeleteஎன்பால் கொண்ட அன்பால்
தந்தமைக்கு நன்றிகள்!