Saturday, July 14, 2007

தரமான பதிவுகள் எங்கே?

பதிவுகள் பல ரகம், பதிவுகளில் பல தரம்!

பதிவர்களின் பல ரகம், பதிவர்களின் பல தரம்!



சூடான பதிவாகி பலர் படிக்கும் பதிவாக பிரபல பாதிவாகிடும் பதிவுகள் எப்படி இருக்கின்றன? தரம் எப்படி என்றால், சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.

கவனத்தை திசை திருப்ப, பலரையும் தம் பதிவுக்கு வரவழைக்க, பதிவர்கள் பலவற்றையும் எழுதிவதில், நிறைய மோசமான பதிவுகளாகத் தான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட மோசமான பதிவுகளுக்கு காரணம் யார்?

நாம், நாமேதான்!

நல்ல தரமான பதிவுகள் இல்லாமைதான்!

நல்ல தரமான பதிவுகள் கிடைக்கும்போது, அவற்றை கொள்ள வாசகர் வட்டம் காத்திருக்கிறது. அதே சமயம், அவை இல்லாதபோது, கிடைப்பதைப் படிப்போம் என்ற வகையில், மோசமான பதிவுகளையும் படிக்கும் நிலைக்கு தள்ளப் படுகின்றனர் வாசகர்.

பதிவர்களே, பதிவர் என்ற நிலையிலிருந்து எழுத்தாளர் என்கிற நிலைக்கு உயர முயலுங்கள்!

பொறுப்புள்ள எழுத்தாளர் என்கிற நிலைக்கு உயர நல்ல தரமான பதிவுகளை தாருங்கள்!

களைகள் ஆங்காங்கே இருப்பது இயல்பு. களைகளை களைவது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் நாம் நல்ல பயிரை வளர்ப்போம்!

20 comments:

  1. பொஸ்தவமெல்லம் போட்டு இருக்கிரத பார்த்த மூ.மூத்த பதிவர் போல தெரியுது, நல்லபதிவெல்லாம் ஏன் வரலைனு தெரிஞ்சுகிட்டே ஏன் வரலைனு ஒரு பாட்டம் பிலாக்கனம் பாடினா ஆச்சா? நீங்களே எத்தன பதிவை உங்கள் அறிமுக வட்டம் தாண்டி போய் படிச்சு இருப்பிங்க,எல்லாருமே வலைப்பதிவில் வலது கால் ,கைனு வைத்த நாலது முதலா ஒரு வட்டம் உருவாக்கிகொண்டு அந்த வட்டாரத்திலே தான் கொட்டாரம் அடிக்குறாங்க அப்புரம் எங்கே புதுசா நல்ல பதிவு வரும், புதுசா வரவனும் அவனுக்கு கிடைக்கிற நொட்டன்ங்கை உபச்சாரம் கண்டு , வலைப்பதிவில் கோலோச்சும் கும்மி டம்மிகளைப்பார்த்து நாமும் இதையே பண்ணி நல்ல பேரு வாங்கிட்டு போய்டலாம்னு திசை மாறிடுறாங்க!

    அவனும் எத்தனை பதிவ தான் யாருமே படிக்காம (நன்றாக இருந்தும்) போட்டுக்கிட்டு இருப்பான் , யாருமே இல்லாத டீ கடைல யாருக்கு டீ ஆற்றுவான் அவன் கடமை உணர்ச்சிக்கும் ஒரு அளவு இருக்கிறதே!

    முதலில் இந்த பின்னூட்ட மறுமொழி திரட்டி வசதியை தூக்கணும் சார் அப்போ தான் பின்னூட்ட போதைக்கு அடிமையாக தேவையான அளவில் ,உள்ளடக்கத்தில் பதிவு போடுவாங்க ,அடிக்கடி அவங்க மூஞ்சு (பதிவு) முகப்பில் தோன்ற வேண்டும் என்று பலர் அடிக்கும் கோமாளீ கூத்துகள் தாங்கலை!

    ReplyDelete
  2. :-)

    //உங்கள் அறிமுக வட்டம் தாண்டி போய் படிச்சு இருப்பிங்க//
    வட்டம் தாண்டி படிக்க வேணும்ன்னு அவசியம் இல்லை.
    அதே சமயம் தரமான எழுத்து இருந்தால் அவை எந்த வட்டத்தில் யார் இருந்தாலும் அவரை இழுக்கும்!

    நான் எந்த வட்டத்திலேயும் இல்லை, அதற்காக வருத்தப்படவும் இல்லை!
    கும்மி, டம்மி களை பற்றி குறை சொல்லவும் இல்லை.

    //அடிக்கடி அவங்க மூஞ்சு (பதிவு) முகப்பில் தோன்ற வேண்டும் என்று பலர் அடிக்கும் கோமாளீ கூத்துகள் தாங்கலை!
    //
    கோமாளி கூத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால்தான் அவை பிரபலமாகிறது. அதற்கு மாற்று தரமான பதிவுகள்தான்.

    ReplyDelete
  3. வவ்வால்:
    //வட்டம் தாண்டி படிக்க வேணும்ன்னு அவசியம் இல்லை.
    அதே சமயம் தரமான எழுத்து இருந்தால் அவை எந்த வட்டத்தில் யார் இருந்தாலும் அவரை இழுக்கும்!
    //
    நான் எழுதியதை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். வேண்டுமென்றே எல்லாவற்றையும் படிக்க வேண்டுமென்ற 'அவசியம்' இல்லை.
    கூடாது என்றில்லை.

    பின்னூட்டம் இல்லாவிட்டால் யாரும் படிப்பதில்லை என்று கொள்ள வேண்டியதில்லை. உங்கள் பெயரின் மறுபக்கம் போன்ற பதிவுகளை முன்பே படித்திருக்கிறேன். இப்போது கடல் நீர் மின்சாரம் பற்றிய பதிவு நல்ல பதிவு.

    தரமான எழுத்துக்களின் அவசியம் எப்போதுமே உண்டு. அதனை மீண்டும் நினைவு படுத்தவே இந்த பதிவு! யாரையும் மோசமான பதிவெரன்று புறம் தள்ள அல்ல.

    ReplyDelete
  4. வணக்கம் ஜீவா,

    உங்களைப் போல் பலர் கவலையில் இருக்கிறார்கள். விரைவில் விருபா தளத்தில் வலைப்பதிவுகளைத் திரட்டும் வசதி செய்து தரவுள்ளோம், ஆனால் இங்கு தேர்ந்தெடுத்த தரமான பதிவுகளை இடுவோருடைய பதிவுகள் மட்டுமே சேர்ப்பதாகவும், குறிப்பாக தங்கள் அடையாளங்களை வெளிப்படையாக தருபவர்களின் பதிவுகள் மட்டுமே விருபா தளத்தில் திரட்டப்படும். அதாவது அனானிகள், பெயரில்லாதவர்கள், முகத்தை மூடிக்கொண்டிருப்பவர்கள் இங்கு சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள். ஒரு முறை சேர்க்கப்பட்டவர்களின் பதிவுகளும், பின்னூட்டங்களும் கூட மீண்டும் மீண்டும் கவனத்திலெடுக்கப்பட்டு தடம் மாறுவோர், சுட்டிக்காட்டப்பட்டு, அதன் பின்னரும் அவர்கள் தரமான நிலைக்கு வராத நிலையில், இணைக்கப்பட்டுள்ள அனைத்து பதிவாளர்களின் பொதுக்கருத்திற்கு ஏற்ப நீக்கப்படுவார்கள்.

    எழுத்தாளர்களாக அறியப்பட பலரே முதலில் இணைக்கப்படவுள்ளார்கள். நாம் விரைவில் பல வலைப்பதிவாளர்களுடன் இது தொடர்பில் தொடர்பு கொள்ளவிருக்கிறோம். அப்போது உங்களோடும் தொடர்பு கொள்கிறோம்.

    ReplyDelete
  5. ஜீவா!
    அரிசிக்குள் கல் தேடிய காலம் போய் , கல்ளுள் அரிசி தேடுகிறோம்.
    மாற்றம் வருமென நம்புகிறேன்.

    ReplyDelete
  6. முயற்சி வெற்றி அடைய, விருபா தளத்திற்கு வாழ்த்துக்கள்!

    தரமான பதிவுகள் ஓரிடத்தில் திரட்டி கிடைக்கப் பெற்றால் நலமே!

    ReplyDelete
  7. வாங்க யோகன்,
    கல்லைக் காட்டிலும் அரிசியின் எண்ணிக்கை குறைந்ததே கவலை!

    ReplyDelete
  8. வவ்வால்:

    நானெல்லாம் தரமான பதிவிடுவதாக கனவிலும் நினைப்பதில்லை, என் பதிவையும் படித்ததாக சொன்னதற்கு நன்றி!

    ReplyDelete
  9. //நானெல்லாம் தரமான பதிவிடுவதாக கனவிலும் நினைப்பதில்லை, என் பதிவையும் படித்ததாக சொன்னதற்கு நன்றி! //

    படிக்கும் வாசகர்களுக்கு நிச்சயம் அவற்றின் நல்ல தரம் தெரிந்திருக்கும்!
    வருகைக்கும், தங்கள் கருத்துப் பரிமாற்றங்களும் பல நன்றிகள்.

    ReplyDelete
  10. நான் கடந்த ஒரு வருடமாக பதிவுகளை படிக்கிறேன். 40% நல்ல பதிவுகள் வருகிறது.சமீப காலமாக அது குறைந்துள்ளது. நல்ல பதிவுகளை படிப்போரும் பின்னுட்டம் இடுவதில்லை (நானும் தான், சோம்பேறித்தனம்). (நான் பதிவதெ இல்லை, வெறும் வாசகனாக உள்ளேன்).இது விரைவில் மாறும் என எதிர்பார்க்கிறென்.

    ReplyDelete
  11. //சமீப காலமாக அது குறைந்துள்ளது. நல்ல பதிவுகளை படிப்போரும் பின்னுட்டம் இடுவதில்லை//

    பின்னூட்டம் இடுவது, பதிவரை ஊக்கபடுத்துகிறது என்றாலும், அந்த அளவிற்கு எதிர்பார்க்காமல் இருப்பது வேண்டும்!

    ஏனென்றால், இதுவே, பின்னூட்டத்திற்காகவே பதிவு எழுதுவதை ஊக்கபடுத்து ஆகிறது!

    ReplyDelete
  12. விருபா சொல்லியது போல் ஒரு மாற்று வந்தால் நல்லது தான்.
    விருபாவுக்கு Advance வாழ்த்துக்கள்.
    சில பதிவுகள் நன்றாக இருந்தாலும்,வெளியிடப்படும் பின்னூட்டத்தால் அங்கு போவது தவிர்க்கப்படுகிறது.திரு டோண்டுவின் பதிவில் ஒரு அனானி சொல்லிக்காட்டியிருக்கிறார்.
    பலர் வந்து நல்ல பதிவுகள் வரும் போது களைகள் கண்ணுக்குத்தெரியாமல் போகக்கூடும்.
    நல்லவற்றை எதிர்பார்ப்போம்.

    ReplyDelete
  13. வடுவூர் குமார்:
    //
    சில பதிவுகள் நன்றாக இருந்தாலும்,வெளியிடப்படும் பின்னூட்டத்தால் அங்கு போவது தவிர்க்கப்படுகிறது.திரு டோண்டுவின் பதிவில் ஒரு அனானி சொல்லிக்காட்டியிருக்கிறார்.//

    சொல்வது சரிதான் சார்.

    நல்ல பதிவுகள் பெருக வேண்டும்!

    ReplyDelete
  14. ஜீவா ..

    நீங்கள் சொல்வது சரிதான்... தரமான பதிவுகள் மிகவும் அரிதாகத்தான் கானக்கிடைக்கின்றன.

    நல்ல பதிவுப்பூக்கள் பூத்துக்குலுங்கினால் நலம்.

    அன்புசிவம்

    ReplyDelete
  15. மாற்று பக்கம் போய் பாருங்கள்.. கிடைக்கலாம்.

    ReplyDelete
  16. வாங்க அன்புசிவம்,
    பூத்துக் குலுங்கும் பதிவுகள் செய்வோம், நல்ல தோர் வீணை போலே.

    சிறில் அலெக்ஸ்,
    மாற்று அறிமுகத்திற்கு நன்றி!
    தற்போது சஃபாரி உலாவியில் அந்த தளத்தில் ஒன்றும் தெரியவில்லை!
    ஐஇ யில் முயன்று பார்க்கிறேன், பின்னால்!

    ReplyDelete
  17. Anonymous8:54 AM

    பின்னூட்டம் மயக்கம் வவ்வாலை எப்படி பாடாய் படுத்திகிறது என்பதறியுங்கள் - அவர் வலைத் தளத்தை பார்த்து.

    பதிவுகள் பல பயனுள்ளதாக இருந்தாலும்!

    ReplyDelete
  18. //பின்னூட்டம் மயக்கம் வவ்வாலை எப்படி பாடாய் படுத்திகிறது என்பதறியுங்கள் - அவர் வலைத் தளத்தை பார்த்து.//
    பார்த்தேன் அனானி! :-)

    ReplyDelete
  19. உண்மைதான் எங்கை பாத்தாலும் அரிவாளோடையும் கத்தி பொல்லோடையும் திரியிறாங்க. அதை விட ஏதோ மொக்கை பதிவு கும்மி என்றெல்லாம் வேறு. பாக்கவே பயமாக இருக்கிறது. அதை விட ஓரே சுடலைக்கதை. அதாவது ஒரே சுடுகாட்டு வாசனை. காலை வேலைக்கு போய் அதாவது 9 மணிக்கு போய் 3 மணிக்கு வந்து பிற்பாடு மாலை 5 மணிக்கு போய் இரவு 10 மணி பதினொருமணிக்கு வாற நான் எனக்குள் இருக்கும் மறுபக்கத்தை காட்ட முயன்றால் எங்கே பார்த்தாலும் வெட்டும் குத்துமாய். சீ என்றாகிறது மனசு. கொஞ்ச நாளைக்கு வலைப்பூ பக்கமே வராமல் இருக்கலாம் மாதிரி தோன்றுகிறது. என்ன நடந்தது ஏது நடக்கிறது ஒன்றுமே புரியவில்லை. எல்லோருமே குழந்தைப்பிள்ளைத்தனமா செயல்படுறாங்க. மனசுக்கு கஸ்டமா இருக்கு. இப்பிடி எழுதினவங்களா இப்பிடி எல்லாம் திட்டிறாங்க பேசிறாங்க என நினைக்கும் போது இந்த எழுத்துலகத்தின் மீது பயம் வருகிறது. நிறைய எழுதியிட்டனோ. வேலைக்கு நேரமாகிறது. இன்று சனிக்கிழமை இனி வர இரவு எப்பிடியும் சாமம் ஒரு மணி 2 மணியாகும். பேய்கதை என்று அதுகளையும் படிச்சிட்;டன். காரை யாரும் லிவ்ற் மறிக்காது விட்டால் அதுவே போதும்.

    ReplyDelete
  20. வாங்க நளாயினி, உங்க பதிவினைப் பார்த்தேன்,

    நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டு நல்ல பதிவுப் பயிரினை வளர்க்கும் உங்களைப் போன்றோர் பதிவுலகுக்கு மிகவும் தேவை.



    என்னக்கேட்டால், தமிழ்மணம், தேன்கூடு போன்ற பொதுத் திரட்டிகளில் நேரம் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும்.



    நல்ல தரமான பதிவுகள் என்று கருதும் பதிவுகளை நான் Google Reader இலேயே படித்து விடுவது உண்டு. இதனால், கவனம் அதிகமாக சிதறுவதில்லை. நீங்களும் அந்த வழியை பின்பற்றினால், இது போன்ற குழந்தைத் தனமான பதிவர்களில் அனத்தலில் இருந்து தப்பிக்கலாம்!

    ReplyDelete