தூய நற்குரு துணை அருளை நாடு நெஞ்சமே!
குரு மலரடிய தேடு நெஞ்சமே!
தேடிடும் கலை அன்பொடு
தெளிவித்த என் ஈசன்
பாடும் என் நாவில் இசையாய்
படிபவர் என் குருநாதார்
பூவென யான் மலரவும்
போற்ற மணம் தந்தவர்
திரியென இருந்த மதி
தீபமாய் ஒளிர வைத்தார்
விதையென தளிராய் இருந்தேன்
விதைத்திட தளிர்த்தேன் மலர்ந்தேன்
ஆதாரம் குருவே பணிந்தேன்
அனைத்தும் உனக்கு அர்பணித்தேன்
தூய நற்குரு துணை அருளை நாடு நெஞ்சமே!
குரு மலரடிய தேடு நெஞ்சமே - பாவன குரு...!
---------------------------------------
இந்த பாடலை KJ யேசுதாஸ் பாடிட இங்கே கேட்கலாம்
ராகம் : ஹம்சாநந்தி
கூடவே, குரு பெருமை பற்றி கபீரன்பன் தன் பதிவில் என்ன சொல்கிறார் பார்ப்போமா?
சுட்டுங்கள் இங்கே:
அழகான பாடல். இராகம் ஹம்ஸா நந்தி. சரிசெய்து விடவும். யேசுதாஸ் இதே ராகத்தில் பாவனகுரு பவன புராதீஷம் என்ற ஸ்வாதி திருநாள் கிருதியையும் பாடியுள்ளார்
ReplyDeleteஆஹா, தவறை திருத்தி விட்டேன், கபீரன்பரே! சுட்டியதற்கு நன்றிகள்!
ReplyDelete"பாவன குரு" பற்றி தமிழில் குறிப்புகள் அதிகம் இணையத்தில் இல்லை. தெரிந்தவதர்கள் பதிவிடலாம்.